நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Monday, March 8, 2010

மகள் தினம்!


மகளிர் தினம்.....என் மகளின் தினம்......இன்று அவளின் பிறந்த நாள்.எப்பவும் போல் இந்த முறையும் பரீட்சை நேரம்...சம்ஸ்கிருதம் பரீட்சை.ஒரே அழுகை.என்னை ஏம்மா இன்னிக்குப் பெத்தே?ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் வேற வேற ரூம்லே இருப்பதனாலே என்னாலே செலிப்ரேட் பண்ண முடிலை...பார்ட்டி வைத்தாலும் யாரும் வர ரொம்ப யோசிக்கிறாங்க....பரீட்சை இருக்கே....இப்படி ஒரே அழுகை....

எப்பவும் சொல்லணும்னு நினைச்ச விஷயத்தை இன்னிக்குச் சொல்லலாம்னு "குட்டிம்மா.....அம்மா பிறந்த நாளுக்கு வீட்டில் அக்கா தங்கை தம்பிகளுக்கு ஐந்து பைசா மிட்டாய் வாங்கக் கூட வழியில்லாம இருந்துருக்குடா....பிறந்தநாளுக்கு புது ட்ரெஸ் என்பதெல்லாம் சினிமாலதாண்டா பார்த்திருக்கோம்..உனக்கு என்ன இல்லை?புது ட்ரெஸ், டெய்ரி மில்க் .....இன்னும் நீ ஆசைப்பட்டதெல்லாம் கிடைச்சுருக்கு....பரீட்சை முடியட்டும் ....என்னைக்கு நினைக்கிறியோ அன்னைக்கு செலிப்ரேட் பண்ணலாம்...சரியா?.........அப்படீன்னு கேட்ட போது...
"இப்புடீல்லாம் கஷ்டப் பட்டுருக்கீங்களாம்மா"அப்படீன்னு கேட்டுக்கிட்டே விட்ட ஒரு சொட்டுக் கண்ணீரில் எனக்குப் புரிந்தது....என் மகளுக்குப் புரிந்த வாழ்வியல்.

44 comments:

நட்புடன் ஜமால் said...

நெகிழ்வாய் ...

வாழ்த்துகள்!

Unknown said...

மகளுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்களை சொல்லி விடுங்கள். என்னை பொறுத்தவரை நமது பிறந்தநாள் தான் உண்மையில் நமது அன்னையர் தினம்.

வாழ்த்துக்கள் மேடம்!

காமராஜ் said...

உங்களுக்குக் கிடைக்காத புதுத்துணிகள்,உங்களுக்கு கிடைக்காத டைரிமில்க்,இப்படி வசதிகளோடு தொலைதூரத்திலிருந்து வரும்
அன்பையும் பட்டியலில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
வைசுவுக்கு என் அன்பைச் சொல்லுங்கள்.
அப்றம் பெண்கள்ந்தினம்.
வீட்டுக்குள் இருக்கும் பெண்ணை அவரவர் மதித்தாள் போதும்.தனியே கொண்டாட அவசியமில்லை.அதற்கும் வாழ்த்துக்கள்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

உங்கள் மகளுக்கு பிறந்தநாள் மற்றும் பள்ளிப்பரிட்சைக்கும் வாழ்த்துக்கள் :)
வாழ்வியல் பாடம் நடத்திய உங்களுக்கு ஒரு பூங்கொத்து :)

ஜெய்லானி said...

எல்லா நலன்களும் பெற்று நீண்ட நாள் வாழ , பிறந்த நாள் வாழத்துக்கள்.

அண்ணாமலையான் said...

வாழ்த்துக்கள்..

மாதவராஜ் said...

ஆஹா.... வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள்.

Rajeswari said...

வாழ்த்துக்கள்

பெசொவி said...

உங்கள் மகளுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். உங்களுக்கு இனிய மகளிர் தின வாழ்த்துகள்.
(மகளிர் தினத்தை ஒட்டிய என் பதிவைப் படிக்கவும் :
http://ulagamahauthamar.blogspot.com/2010/03/blog-post_07.html )

Anonymous said...

அன்புடன் அருணா..,அன்பான அம்மாவும் கூட...எத்தனை பக்குவமாய் குழந்தைக்கு விஷயத்தை எடுத்து சொல்லி உணர்த்தியிருக்கீங்க...வாழ்த்துக்கள் உங்கள் இருவருக்கும்.....

சந்தனமுல்லை said...

வாழ்த்துகள் - மகளின் தினத்துக்கு! எங்க அம்மா பெரிம்மா எனக்கு சொன்ன மாதிரியே நீங்க ஃபீலிங்ஸ் காட்டினது சரிதான்..ஆனா சொன்ன வாக்கை காப்பாத்திட்டு எங்களுக்கு அப்டேட் பண்ணனும் ஓக்கே.. :-))

Prathap Kumar S. said...

நெகிழ்வாக இருந்தது...
மகளிர் தின வாழ்த்துக்கள்...

மாதேவி said...

மகளுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

எம்.எம்.அப்துல்லா said...

எல்லா வளமும்,நலமும் பெற இறைவனை வேண்டுகின்றேன்.

வெள்ளிநிலா said...

எல்லா வளமும்,நலமும் பெற இறைவனை வேண்டுகின்றேன்.- :)

அன்பேசிவம் said...

உங்களுக்கும், மகளுக்கும் எனது வாழ்த்துக்கள் பூங்கொத்துடன். அழகான புரிதல். :-)

லெட்ஸ் செலிப்ரேட்

ப்ரியமுடன் வசந்த் said...

வாழ்த்துகள்...!

பிரின்ஸ் ஸ்கூல்ல மட்டுமில்ல வாழ்க்கையிலும்...நீங்க டீச்சர்தான்...

கார்க்கிபவா said...

வாழ்த்துகள் டீச்சர்

தமிழ் அமுதன் said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...!

சாந்தி மாரியப்பன் said...

மகளின் தின நல்வாழ்த்துக்கள். நெகிழ்வாய் இருந்தது.

அம்பிகா said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

கண்மணி/kanmani said...

ஆஹா பொண்ணு பேரைச் சொல்லியிருக்கலாமில்ல...அருணா
ஓகே குட்டி மெனி மோர் ஹாப்பி ரிடர்ன்ஸ் ஆப் த டே

இன்னைக்குப் பிறக்க நீ குடுத்து வச்சிருக்கனும்டா செல்லம்.உலகமே கொண்டாடுதே:)))))))))

pudugaithendral said...

செல்லத்துக்கு எங்கள் வாழ்த்துக்கள்.

நம்ம பர்த்டேவெல்லாம் ஞாபகப்படுத்தி கொசுவத்தி சுத்த வெச்சிட்டீங்களே அருணா.

ராமலக்ஷ்மி said...

மகள் (பிறந்த)தினம்!

தலைப்பே அருமை. உங்கள் கண்மணிக்கு என் இனிய வாழ்த்துக்களைச் சொல்லிடுங்கள்!

க.நா.சாந்தி லெட்சுமணன். said...

உங்க மகளுக்கு பிறந்த தின வாழ்த்துக்கள்.பதிவு அழகு

Priya said...

உங்கள் மகளுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

*இயற்கை ராஜி* said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

தேவன் மாயம் said...

எப்பவும் சொல்லணும்னு நினைச்ச விஷயத்தை இன்னிக்குச் சொல்லலாம்னு "குட்டிம்மா.....அம்மா பிறந்த நாளுக்கு வீட்டில் அக்கா தங்கை தம்பிகளுக்கு ஐந்து பைசா மிட்டாய் வாங்கக் கூட வழியில்லாம இருந்துருக்குடா....பிறந்தநாளுக்கு புது ட்ரெஸ் என்பதெல்லாம் சினிமாலதாண்டா பார்த்திருக்கோம்..உனக்கு என்ன இல்லை?புது ட்ரெஸ், டெய்ரி மில்க் .....இன்னும் நீ ஆசைப்பட்டதெல்லாம் கிடைச்சுருக்கு....பரீட்சை முடியட்டும் ....என்னைக்கு நினைக்கிறியோ அன்னைக்கு செலிப்ரேட் பண்ணலாம்...சரியா?.........அப்படீன்னு கேட்ட போது...///


நல்ல வாழ்க்கைக்குத் தேவையான அட்வைஸ்!! வாழ்த்துக்கள்!

Rajan said...

மேடம் ! பாப்பாவுக்கு என் சார்பா ஒரு ஸ்கூட்டி பெப் வாங்கிக் கொடுத்துடுங்க ! மாஸ்குல ராஜன்ஸ் கிப்டுன்னு எழுத மறந்துடாதீங்க !

அன்புடன் நான் said...

உங்க குழந்தைக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..... உங்களுக்கு பாராட்டுகள்.

வினோத் கெளதம் said...

மகளிர் தின வாழ்த்துக்கள்

Magia da Inês said...

Olá, amiga!
Para você...
"...um mundo mais feminino, mais rosado e sensibilizado...
mais equilibrado e perfumado..."
Feliz Dia das Mulheres!...
Beijinhos.
Itabira - Brasil

ஹுஸைனம்மா said...

விடுமுறையில/ பரிட்சை சமயத்துல பிறந்த நாள் வருதுன்னா, பசங்களுக்கு ரொம்ப வருத்தம்தான்!!

பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!

அன்புடன் அருணா said...

நட்புடன் ஜமால்
anto
முத்துலெட்சுமி/muthuletchumi
ஜெய்லானி
அண்ணாமலையான்
மாதவராஜ்
Rajeswari
பெயர் சொல்ல விருப்பமில்லை
தமிழரசி
நாஞ்சில் பிரதாப்
மாதேவி
எம்.எம்.அப்துல்லா
வெள்ளிநிலா ஷர்புதீன்
முரளிகுமார் பத்மநாபன்
கார்க்கி
ஜீவன்(தமிழ் அமுதன் )
அமைதிச்சாரல்
அம்பிகா
புதுகைத் தென்றல்
ராமலக்ஷ்மி
க.நா.சாந்தி லெட்சுமணன்.
Priya
இய‌ற்கை
தேவன் மாயம்
ராஜன்
சி. கருணாகரசு
வினோத்கெளதம்
Magia da Inês
ஹுஸைனம்மா
உங்கள் அனைவரின் வாழ்த்துக்களுக்கும் பூங்கொத்துக்கும் நன்றி!

அன்புடன் அருணா said...

சந்தனமுல்லை said....
/ஆனா சொன்ன வாக்கை காப்பாத்திட்டு எங்களுக்கு அப்டேட் பண்ணனும் ஓக்கே../
கண்டிப்பா அப்டேட் பண்றேன் முல்லை!

அன்புடன் அருணா said...

காமராஜ் said...
/வைசுவுக்கு என் அன்பைச் சொல்லுங்கள்./
சொல்லியாச்சு!
/அப்றம் பெண்கள்ந்தினம்.
வீட்டுக்குள் இருக்கும் பெண்ணை அவரவர் மதித்தால் போதும்.தனியே கொண்டாட அவசியமில்லை.அதற்கும் வாழ்த்துக்கள்./
உண்மைதான் ...நன்றி வாழ்த்துக்கு.

அன்புடன் அருணா said...

பிரியமுடன்...வசந்த்
/பிரின்ஸ் ஸ்கூல்ல மட்டுமில்ல வாழ்க்கையிலும்...நீங்க டீச்சர்தான்.../
இதுக்கு ஊரெல்லாம் வாங்குற திட்டு போதாதுன்னு நீங்க வேற!

அன்புடன் அருணா said...

கண்மணி/kanmani said...
/ஆஹா பொண்ணு பேரைச் சொல்லியிருக்கலாமில்ல...அருணா/
வைஷ்ணவி!
/இன்னைக்குப் பிறக்க நீ குடுத்து வச்சிருக்கனும்டா செல்லம்.உலகமே கொண்டாடுதே:)))))))))/
அதேதான் நான் சொலறதும் கண்மணி!!

அமிர்தவர்ஷினி அம்மா said...

தாமதமான இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் குட்டிப்பூ வைஷ்ணவி!

நீங்கள் சொன்ன வார்த்தைகள் சிம்ப்ளி க்ரேட்.

சில விஷயங்களை நம்ம குழந்தைகளுக்கு சொல்லி வளர்க்கறதுதான் சரி.

அன்புடன் அருணா said...

கருத்துக்கு நன்றி அமித்தம்மா!

Thamira said...

மகளின் தின வாழ்த்துகள்.

(ஹைய்யய்யோ.. நான் உங்களை இவ்ளோ நாளு யூத்துன்னுல்லா நினைச்சுட்டேன். நீங்க ராமலக்ஷ்மியக்கா செட்டா? சரியாப்போச்சு, மேடம்.. ஹிஹி)

அன்புடன் அருணா said...

ஆதிமூலகிருஷ்ணன் said...
/(ஹைய்யய்யோ.. நான் உங்களை இவ்ளோ நாளு யூத்துன்னுல்லா நினைச்சுட்டேன். நீங்க ராமலக்ஷ்மியக்கா செட்டா? சரியாப்போச்சு, மேடம்.. ஹிஹி)/
அட! இதுவேறயா! யூத்துலேயே ப்ரின்சிபலாகிட்டேன்னு நினைச்சீங்களா???ஹி...ஹி!

Sanjai Gandhi said...

அடடா.. மிஸ் பண்ணிட்டேனே.. தாமதமான இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் கண்ணா..

உங்க போட்டோ காப்பியாக்கா? :)

Anonymous said...

வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!

அன்புடன் அருணா

Post a Comment

வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!

அன்புடன் அருணா