நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Tuesday, March 2, 2010

கடவுள் யார் பக்கம்????

நேற்றும் இன்றும்
விதம் விதமான
வேண்டுதல்களோடு விடிந்தன.

ஒற்றைப் புழு மாட்டி
மீனுக்குத் தூண்டிலிட்டு
பெரிய மீனுக்கான வேண்டுதலில்
அவனும்

இன்னிக்கு மட்டும் தூண்டிலில்
மாட்டி விட்டுராதே என்று
மீனும்................

இன்னிக்கு கெடா வெட்டிச்
சாமி கும்பிடுறேன் என் புள்ளையைக்
காப்பாற்று என
அவனும்
இன்னிக்கு ஒருநாள்
என்னைத் தப்பிக்க விட்டுரு என
கெடாவான ஆடும்.........

மழை தண்ணியில்லாமே
எம்பயிரெல்லாம் வாடுதே
மழை கொடுப்பான்னு
அவனும்.........
நல்லா உப்பு வெளைஞ்சுருக்கு
நாளை வரை மழை
வராமப் பார்த்துக்கோன்னு
இவனும்...........

நாளை தெரியும்
கடவுள் யார் பக்கம்னு?????

48 comments:

ஜீவன்சிவம் said...

முரண்பாடுகள் நல்லாயிருக்கு

Anbe Sivam said...

kavidhai romba azhaga irukunga aruna!!

+Ve Anthony Muthu said...

//நாளை தெரியும்
கடவுள் யார் பக்கம்னு?//

ஆம்..!

பழமைபேசி said...

இதானே வாழ்க்கை.... விடியலை நோக்குவோம்!

புலவன் புலிகேசி said...

நல்ல சிந்தனை..கையக் குடுங்க..வாழ்த்துக்கள் அருணா

sri said...

Lovely thoughts! While I ponder the topic, I understand it in this way. There is a balance in everything aruna, its the same energy that creates rain or draught and that balance would be maintained, the more the man shifts the balance the more unnatural yet balancing act prevails. The whole universe is under single conciousness, so what we pray for ? that which is good not to one but to entire Universe. While the fish is eaten by a shark or goat by a tiger - the balance is maintained, for the energy merely changes forms to complement the nature. But mass hunting of fishes from ocean cannot create that and we as community have to face whatever the balancing act is. too wierd huh ?

*இயற்கை ராஜி* said...

//நாளை தெரியும்
கடவுள் யார் பக்கம்னு?////


mmmm...

பூங்கொத்து:-)

KarthigaVasudevan said...

நல்லா இருக்கு அருணா...கடவுள் யார் பக்கம்? யாரோட வேண்டுதல் நிறைவேறுதோ ,அவங்க பக்கமோ?!

ஜெய்லானி said...

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை.

KParthasarathi said...

It is indeed difficult even for God to satisfy the conflicting prayers of His devotees.It is an interesting thought of yours and amazing how such ideas come up in your mind.Great going.Keep it up

Anonymous said...

அட ஆமாம் இதை புரிஞ்சிக்காமல் கடவுளை திட்டுகிறேன் தினமும் நான்....

எம்.எம்.அப்துல்லா said...

நன்று

:)

சிவாஜி சங்கர் said...

:)

Karthik said...

good one..:)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:) ஆமா யாருக்க்கு அன்னிய தேதியில் என்ன தரனும்ன்னு வச்சிருக்காரோ அவங்கபக்கம்..

ஹுஸைனம்மா said...

சின்ன வயசுல, விவசாயியும், குயவனும் மழை வேணும், வேண்டாம்னு வேண்டின கதை படிச்சது ஞாபகம் வருது.

பா.ராஜாராம் said...

டீச்சர்,

கிரேட்!

சசிகுமார் said...

மிகவும் ரசித்து எழுதியுள்ளீர்கள் சுவாரஸ்யமான பதிவு, உங்கள் புகழ் மென்மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

வினோத் கெளதம் said...

நல்லா இருக்குங்க..

அம்பிகா said...

ஒரே விஷயம், இருவேறு வேண்டுதல்கள்,
வேண்டுதல்கள் எல்லமே ஏன் நிறைவேறுவதில்லை என இப்போது புரிகிறது.
அருமை.

அன்புடன் அருணா said...

வாங்க...வாங்க ஜீவன்சிவம் ,Anbe Sivam முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

Anonymous said...

அருமை.

காமராஜ் said...

கடவுள் யார்பக்கமும் இருக்கட்டும்.இயற்கையும் அதுகொடுக்கும் மழையும் மண்ணின் பக்கமே.கடவுளெல்லாக்காலங்களிலும் கட்சிமாறிக்கொண்டே இருப்பார்.பெரிய்ய விக்கிரமாக, பழய்யநாட்காட்டியின் மிச்ச அட்டையாக.கவிதைகள் ஒருக்காலும் கட்சி மாறாது.அதனுள் டன் கணக்கில் மனிதாபிமானம் குழைந்துகிடக்கும். மனிதாபிமானக் கவிதை.கொத்துக் கொத்தாகப் பூ.

அன்புடன் அருணா said...

பழமைபேசி said...
/இதானே வாழ்க்கை.... விடியலை நோக்குவோம்!/
நன்றி பழமைபேசி!
வாழ்த்துக்கு நன்றி புலவன் புலிகேசி!

அன்புடன் அருணா said...

நனறி Antony!,
பூங்கொத்து வாங்கீட்டேன் இயற்கை!

அன்புடன் அருணா said...

KarthigaVasudevan said...

/ யாரோட வேண்டுதல் நிறைவேறுதோ ,அவங்க பக்கமோ?!/
யார் பக்கம் போவதுனனே கடவுளு்க்கே சிக்கல்!நன்றி கார்த்திகா!

ஜெய்லானி said...
/நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை./
நன்றி ஜெய்லானி...முதல் வருகை+கருத்துக்கு் நன்றீ!

அன்புடன் அருணா said...

Srivats said...
/ too wierd huh ?/
ThanksSri for that nice and elaborate comment!
Not at all weird!It's 100% true!You must have learnt about food chain....The unidirectional flow of energy!!

அன்புடன் அருணா said...

KParthasarathi said...
/It is indeed difficult even for God to satisfy the conflicting prayers of His devotees/
Rightly said Sir!

அன்புடன் அருணா said...

ஸ்மைலிக்கு நன்றி எம்.எம்.அப்துல்லா !
Sivaji Sankar !
Karthik !

அன்புடன் அருணா said...

தமிழரசி said...
/ அட ஆமாம் இதை புரிஞ்சிக்காமல் கடவுளை திட்டுகிறேன் தினமும் நான்..../
அச்சோ...இனிமே திட்டாதீங்க தமிழரசி!

Becky said...

Hi Aruna,
I came across your blog through Indiblogger :) I can't read Tamil, but am interested in the culture. Was wondering if I might be able to contact you (in English) somehow? I also live in Jaipur...

Best regards,
Becky

அன்புடன் அருணா said...

முத்துலெட்சுமி/muthuletchumi said...
/ :) ஆமா யாருக்க்கு அன்னிய தேதியில் என்ன தரனும்ன்னு வச்சிருக்காரோ அவங்கபக்கம்../
அச்சோ....நன்றி முத்துலட்சுமி.

ஹுஸைனம்மா said...
/சின்ன வயசுல, விவசாயியும், குயவனும் மழை வேணும், வேண்டாம்னு வேண்டின கதை படிச்சது ஞாபகம் வருது./
அட ஆமா!

நன்றிங்க பா.ராஜாராம் !

அன்புடன் அருணா said...

நன்றி சசிகுமார்
நன்றி வினோத்கெளதம்
நன்றி அம்பிகா

அன்புடன் அருணா said...

காமராஜ் said...

/கடவுளெல்லாக்காலங்களிலும் கட்சிமாறிக்கொண்டே இருப்பார்.பெரிய்ய விக்கிரமாக, பழய்யநாட்காட்டியின் மிச்ச அட்டையாக./
அட! இது நல்லாருக்கே!

/மனிதாபிமானக் கவிதை.கொத்துக் கொத்தாகப் பூ./
வாங்கீட்டேன் கொத்துக் கொத்தாகப் பூ!.நன்றி!

அன்புடன் அருணா said...

thanx Becky!

ராமலக்ஷ்மி said...

அருமையான கவிதை அருணா.

மரா said...

கவிதை பிடிச்சிருக்கு....பூங்கொத்து புலிகேசிகிட்ட கொடுத்துடுறேன் :)

புலவன் புலிகேசி said...

இந்த வார டரியலில் இந்தப் பதிவை அறிமுகப் படுத்தியுல்ளேன் அருணா....

தேவன் said...

இயல்பு, அழகு !

அன்புடன் அருணா said...

அட! டரியலில் அறிமுகமா???
அதானே பார்த்தேன் ..புலவன் புலிகேசி பக்கத்துலேருந்து நிறைய பேர் வந்துருக்காங்களேன்னு.....நன்றிங்க!

கலகலப்ரியா said...

புடிங்க பூங்கொத்து...

ப்ரியமுடன் வசந்த் said...

செங்கல் சூளை கதை ஞாபகம் வருது கிருஷ்ண பரமாத்மாதான் கண்ணதொறக்கணும்...

Becky said...

Hi Aruna,

If you add me as a contact on Indiblogger, I will message you... :)

Best,
Becky

"உழவன்" "Uzhavan" said...

நல்ல கவிதை. இந்த மாதிரி நேரத்தில் கடவுள் யார் பக்கம்? :-))

அன்புடன் அருணா said...

மயில்ராவணன் said...
/ கவிதை பிடிச்சிருக்கு....பூங்கொத்து புலிகேசிகிட்ட கொடுத்துடுறேன் :)/
வாங்கீட்டேன்!

அன்புடன் அருணா said...

நன்றி தேவன்!
நன்றி கலக்கல் பிரியா!!

அன்புடன் அருணா said...

நன்றி பிரியமுடன்...வசந்த்!

அன்புடன் அருணா said...

"உழவன்" "Uzhavan" said...
/நல்ல கவிதை. இந்த மாதிரி நேரத்தில் கடவுள் யார் பக்கம்? :-))/
அதானே கேள்வியே!

Post a Comment

வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!

அன்புடன் அருணா