அண்ணாவுக்குக் கல்யாணம்
முன் யோசனையுடன் முன் ரூம்
அண்ணா அண்ணிக்கும்
எழுதிக் கொடுக்கப் பட்டது...
தம்பிக்குக் கல்யாணம்
சமயோசிதமாய்ப் பின் ரூம்
தம்பிக்கும் மாலினிக்குமாய்
பத்திரப் படுத்தப் பட்டது....
ஒன்றும் சொல்லாமல்
அம்மாவும் அப்பாவும்
ஹாலுக்கு
இடம் பெயர்ந்து
கொண்டார்கள்.........
ஹாலிலிருந்து
பாட்டி வீடு ரெண்டு படும்படிக்
கத்திக் கொண்டே
பூனையை விரட்டி
மாடிப்படிக்கு அடியில்
குடி கொண்டாள்..............
பாட்டியும் அப்பாவும்
அடுத்தடுத்து படத்துக்குள்
நுழைந்து பொட்டும் பூவும்
வைத்துச் சாமியாகிப்
போனார்கள்
அதற்கப்புறமான அதிகாலையில்
யாரும் சொல்லாமலேயே
அம்மா அமைதியாக
மாடிப்படிக்குக் கீழே
முகம் மறைத்துக் கொண்டாள்
எல்லோருக்கும் பொதுவான
வீடு மட்டும் எப்போதும் போல
கலைந்து கொண்டேயிருந்தது........
45 comments:
அருணா உங்களீன் மீன்களும் மீனாக்களும்! இந்த வார டரியலில்...
கரெக்ட் அருணா .என் வீடும் இப்படி மாறி என் வீடு இல்லாமல் போய்விட்டது .
இழப்பின் வலி வரிகளில்
நல்லா சொன்னீங்க
பிரின்ஸ் கலைந்தே கொண்டே இருக்கும் வீடுகளில் உறவுகளின்நிலை வலியோடு பதியப்பட்டிருக்கு
:(
:( படிக்கவே கஷ்டமா இருக்கு. அதை விட நேத்து வரை "என்" வீடா இருந்தது, ஒரே நாள் ஆர்ப்பாட்டத்துக்கு அப்புறம் "அம்மா வீடு" ஆகிடுது!! :O
பாட்டியும் அப்பாவும்
அடுத்தடுத்து படத்துக்குள்
நுழைந்து பொட்டும் பூவும்
வைத்துச் சாமியாகிப்
போனார்கள்
........... எவ்வளவு எதார்த்தமாய் உங்கள் கவிதையில்........
படித்ததும் மனதில் ஒரு சோக பெருமூச்சு.
அருமை. ’கலைந்துகொண்டே இருக்கும் வீடுகளின்’ ரசிகன் நான்.
வாழ்வின் எதார்த்தம். படித்து முடித்தவுடன் சோகம் அப்பிக் கொள்கிறது.
கலைந்து கொண்டேயிருக்கும் வீடுகள் கனக்க வைத்து விட்டது மனதை வழக்கம் போலவே. அருமை அருணா.
பூங்கொத்து...
//பாட்டி வீடு ரெண்டு படும்படிக்
கத்திக் கொண்டே
பூனையை விரட்டி
மாடிப்படிக்கு அடியில்
குடி கொண்டாள்//
உங்க பாட்டிக்கு ஒரே பையன் போல.. :))
எழுத்துக்கு பூங்கொத்து
சொல்லப்பட்ட கருத்து :(
நல்லாயிருக்கு..!;)
மிகவும் அருமை, அருணா!
ரொம்பவும் இயல்பான வரிகள் ! அழகாக மனதில் பதிகின்றன ..... பொறாமையுடன் வாழ்த்துகள் !
அன்பின் ராஜன் ராதா மணாளன்
//எல்லோருக்கும் பொதுவான
வீடு மட்டும் எப்போதும் போல
கலைந்து கொண்டேயிருந்தது........//
அருணா,
அருமையான கவிதை.
ஆனாலும் ஒரு சந்தேகம். பொதுவான (கூட்டுக் குடும்பம்) வீட்டை இப்ப வலைவீசித் தேடும்படியா இல்ல ஆகிப்போச்சி.
புலவன் புலிகேசி said...
/அருணா உங்களீன் மீன்களும் மீனாக்களும்! இந்த வார டரியலில்.../
மீண்டும் டரியலிலா!!!???நன்றி புலிகேசி!
//:( படிக்கவே கஷ்டமா இருக்கு. அதை விட நேத்து வரை "என்" வீடா இருந்தது, ஒரே நாள் ஆர்ப்பாட்டத்துக்கு அப்புறம் "அம்மா வீடு" ஆகிடுது!! :O//
நல்லா யோசிச்சுட்டு சிரிப்பான் போட்டுட்டாங்களே!
உங்கள் வலி புரிகிறது பத்மா..........
மனத்தைக் கனக்க வைக்கிறது
அருமையான கவிதை அருணா.
ஆங்காங்கே வலிகள் தென்பட்டாலும், வாழ்க்கை அடுத்தடுத்த படிகளுக்கு நகர்ந்துகொண்டேதான் இருக்கிறது.
வாழ்வின் மாற்றங்களை ரொம்ப எதார்த்தமாகச் சொல்லி விட்டீர்கள்.வீடே ரெண்டு படும் படிக்கு பூனையை விரட்டிய பாட்டியின் குரல் ஒலித்தபடியே இருக்கிறது. க்ளாஸ்
arumai
ரூமிலிருந்து
ஹாலுக்கு
பின்
மாடிப்படிக்கு
அடியில்
அதன் பின்
போட்டோவுக்குள்
இதுதான்
மனித வாழ்வின்
பயணமோ?
நன்றி அண்ணாமலையான்!
நன்றி பிரியமுடன்...வசந்த் !
Porkodi
/ :( படிக்கவே கஷ்டமா இருக்கு. அதை விட நேத்து வரை "என்" வீடா இருந்தது, ஒரே நாள் ஆர்ப்பாட்டத்துக்கு அப்புறம் "அம்மா வீடு" ஆகிடுது!! :O/
அட....இதுவும் கூட ஒரு கலையும் வீடுதான்.நன்றி பொற்கொடி.
//நல்லா யோசிச்சுட்டு சிரிப்பான் போட்டுட்டாங்களே!//
ராஜ நடராஜன் ஐயா, ஏன் சிரிப்பான் மேல கோவம்? அதை போடலேன்னா என்ன உணர்வு/உணர்ச்சில சொல்றேன்னு படிக்கறவங்களுக்கு புரியாதுன்னு ஒரு தோணல். (என் எழுத்து மேல அம்புட்டு நம்பிக்கைங்கறேன்..)
அற்புதம். அருமை.
அருமைங்க அருணா
இழப்புகளை கொண்டே வீடும் தன் முகத்தை மாற்றிக்கொண்டே வருகிறது
வீர்யமான எதார்த்தங்க அருமை அருமை
நிறைய சொல்லனும்னு ஆசை தான் நேரமின்மை :(
மாதவராஜ் said...
/ அருமை. ’கலைந்துகொண்டே இருக்கும் வீடுகளின்’ ரசிகன் நான்./
ஆஹா! நன்றி! கிளிஞ்சலில் வந்த போதே புரிந்து கொண்டேன்.நன்றி அதற்கும் மேலும் ஒருமுறை!
:-(
நன்றி சுல்தான்
நன்றி ராமலக்ஷ்மி
முகிலன் said...
/பூங்கொத்து.../
வாங்கீட்டேன் முகிலன்!
முகிலன் said...
/ உங்க பாட்டிக்கு ஒரே பையன் போல.. :))/
ஒரு பையன் உள்ள பாட்டிக்கெல்லாம் இதுதான் கதியா முகிலன்????
நட்புடன் ஜமால் said...
/ எழுத்துக்கு பூங்கொத்து/
வாங்கீட்டேன் ஜமால்!
நன்றி கோபிநாத்!
நன்றி முல்லை
ராஜன் said...
/பொறாமையுடன் வாழ்த்துகள் !/
அட! இதுக்கெல்லாமா பொறாமைப்படுவது ராஜன்?
சத்ரியன் said...
/ஆனாலும் ஒரு சந்தேகம். பொதுவான (கூட்டுக் குடும்பம்) வீட்டை இப்ப வலைவீசித் தேடும்படியா இல்ல ஆகிப்போச்சி./
அதுசரி! இருக்கற ஒண்ணு ரெண்டும் இப்படி ஆகிடுச்சோ!
ராஜ நடராஜன் said...
/ நல்லா யோசிச்சுட்டு சிரிப்பான் போட்டுட்டாங்களே!/
சமயங்களில் சோகத்தை இப்படிச் சிரிப்பான் போட்டுத் தீர்க்க வேண்டியதுதான்!
valiyai azhagai solgiradhu ungal kavithai :)
நன்றி திகழ்!
நன்றி சுந்தரா!
நன்றி காமராஜ்!
நன்றி இயற்கை!
நன்றி மதுமிதா!
நன்றி இராமசாமி கண்ணன்!
பாலா said..
/வீர்யமான எதார்த்தங்க அருமை அருமை
நிறைய சொல்லனும்னு ஆசை தான் நேரமின்மை/
நன்றி பாலா! இவ்வ்ளோ சொன்னதே பெரிது பாலா...எல்லோருக்கும் உள்ள நேரமின்மை புரிகிறது.
நன்றி கார்த்திக்!
நன்றி Princess!
அன்பு அன்புடன் அருணா,
அழகான, ஆழமான கவிதை. வலி நிறைந்து மிதக்கும் இந்த வீடு, தன் நடைமுறையில் மாற்றங்களையும், வழியையும் ஒரு குடும்ப உறுப்பினர் ஆக்கி இருக்கிறது போல. பழகிய மனிதர்களை போல பரஸ்பரம் கைகுலுக்கி கொள்கிறார்கள் வலியுடன். ரொம்பவும் எதார்த்தமாக எழுதப்பட்ட இந்த கவிதை மடிப்புகளுக்குள் இருக்கும் ஆயிரம் கதைகளுக்கும் மேலான விஷயங்கள் நிறைய கதவுகளை திறந்து கொண்டே இருக்கும்.
வாழ்த்துக்களுடன், பூங்கொத்தும் அருணா!
அன்புடன்
ராகவன்
உணர்ந்ததும் உணர்த்தியதும் அருமை. ஆர்பாட்டங்களுக்கு பிறகு தாய் வீடும் புகுந்த வீடும் நமக்கு ஒன்றாகி விடுகிறது தோழி
ராகவன் said...
அன்பு அன்புடன் அருணா,
/அழகான, ஆழமான கவிதை. வலி நிறைந்து மிதக்கும் இந்த வீடு, தன் நடைமுறையில் மாற்றங்களையும், வழியையும் ஒரு குடும்ப உறுப்பினர் ஆக்கி இருக்கிறது போல. பழகிய மனிதர்களை போல பரஸ்பரம் கைகுலுக்கி கொள்கிறார்கள் வலியுடன். ரொம்பவும் எதார்த்தமாக எழுதப்பட்ட இந்த கவிதை மடிப்புகளுக்குள் இருக்கும் ஆயிரம் கதைகளுக்கும் மேலான விஷயங்கள் நிறைய கதவுகளை திறந்து கொண்டே இருக்கும்./
நான் எழுதும் போதுகூட நினையாத பல விஷயங்களைச் சொல்கிறது உங்கள் பின்னூட்டம்!நன்றி ராகவன்!
Pradeepa Kumaresan said...
/உணர்ந்ததும் உணர்த்தியதும் அருமை./
நன்றி ப்ரதீபா!
உங்களுக்கு பெரிய பூங்கொத்து. இப்பத் தான் உங்க எழுத்தை படிக்க ஆரம்பிக்கிறேன் அருணா. வலிமையும் துடியும் நிரம்பிய வார்த்தைகள். வாழ்த்துக்கள்.
இந்தாங்க பூங்கொத்து....
யதார்த்தத்தின் வரிகளில் சில நிமிடங்கள் தொலைந்துபோனேன். நன்றிங்க அருணா!
http://padmahari.wordpress.com
Post a Comment
வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!
அன்புடன் அருணா