நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Friday, January 22, 2010

நிமிடத்தில் கடவுளாகலாம்!!----1

வாழ்வு எல்லோருக்குள்ளும் எப்படி எப்படியெல்லாமோ புகுந்து வெளி வருகிறது.அன்று எனக்கும் புதுமாதிரியாகப் புகுந்து வெளிவந்தது.

ஸ்கூட்டியில் போய்க் கொண்டிருந்தேன்.பச்சை விளக்குக்காக நின்றிருந்தேன்.....விர்ரென்று வேகமாக வந்து சடக்கென்று ப்ரேக் அடித்து கோட்டைத் தாண்டி நிறுத்தியது ஒரு இன்னோவா....." கொஞ்சம் கூடப் பொறுப்பில்லாத ஜென்மங்கள்.....ஏன்தான் இப்படி எல்லாவற்றிலும் அவசரமோ?" என்று மனதுக்குள் திட்டித் தீர்த்தேன்.ஜன்னலுக்கு வெளியே எட்டிப்ப்பார்த்த ஒரு இளைஞன் "ஷிட்"என்றவாறே பொறுமையிழந்து கைக்கடிகாரத்தைப் பார்த்தான்.

எங்கிருந்தோ ஓடி வந்தது அந்தக் குட்டிப் பொண்ணு......உடம்புக்குப் பொருந்தாத ஒரு ஸ்வெட்டர்.ஒரு அழுக்குக் குல்லா......பெரிய வால் போன்ற ஒரு குடுமியுடைய குல்லா அணிந்திருந்தது.ரத்தச் சிவப்பில் லிப்ஸ்டிக் வேறு.முகம் முழுவதும் கருப்பாக அழுக்குத் திட்டு.....
ஒரு பெரிய இரும்பு வளையத்தை முன்னால் போட்டு தன் உடம்பை அதனுள் விட்டு எடுத்து,ஒரு கையை உள் நுழைத்து மீண்டும் உடம்பை வெளியில் எடுத்துன்னு விதவிதமான விததை காட்டி விட்டு உடனே காசுக்காக கையேந்தியது........

அந்த இன்னோவா இளைஞன் அழகாக பல்வரிசையைக் காட்டி அந்தக் குட்டிப் பொண்ணைப் பார்த்து ரொம்ப ஸ்நேஹத்துடன் சிரித்தான்.ஏதோ பணம் கொடுக்கப் போகிறான் என நினைத்தேன்.ஊஹும் கொடுக்கவில்லை.

நான் காசு கொடுக்கவா வேண்டாமா......ஸ்கூட்டியை ஆஃப் செய்து பர்ஸைத் திறந்து எடுப்பதற்குள் பச்சை விழுந்து விடுமோ...என்று நினைப்பதற்குள் பச்சை விழுந்தே விட்டது..............

நான் ரோட்டைக் கடந்து பழங்கள் வாங்க ஸ்கூட்டியை நிறுத்தினேன்
இன்னோவா அதே வேகமான குலுக்கலுடன் நின்றது.....அவசரமாக ஆப்பிள் ஒருகிலோவை வாங்கி விறு விறுவென ரோட்டுக்கு மறுபக்கம் கடந்து அந்தக் குட்டிப் பொண்ணு கையில் கொடுத்து விட்டு தலையை லேசாகத் தட்டிவிட்டு மீண்டும் பளிச் சிரிப்புடன் நடந்தான்..........

அடடா....நிமிடத்தில் கடவுளாகும் வித்தை எனக்கு வரவில்லையே????

40 comments:

ப்ரியமுடன் வசந்த் said...

எங்க பிரின்ஸ் ஜெய்ப்பூர்ல நடந்ததா?

காசு பணம் குடுத்து உதவுறதுக்கு பதிலாக இதுபோன்று உண்ண பழங்கள் வாங்கி கொடுங்கள் என்கிறீர்கள்

ரை..ரைட்..!

அன்பேசிவம் said...

அருணா மேடம் முகம் தெரியாத அந்த நண்பருக்கு ஒரு பூங்கொத்து பார்சல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்.......

sury siva said...

இறைவன் இல்லை என்பது இல்லை.
இங்கே ஒரு இன்னோவாவில் இருக்கிறானே !
இனிய மனம் படைத்தவர் எவராயினும்,
இதமாய் உள்ளே இருப்பானே !!

சுப்பு ரத்தினம்.
http://vazhvuneri.blogspot.com

காமராஜ் said...

அருணா இன்னோவா அளவுக்கு
ஒருகிலோ ஆப்பிள் பழம்,
ஸ்கூட்டி அளவுக்கு
கொஞ்சம் இந்தியப்பணம்,
சைக்கிளில் போவோருக்கு ஒரு உச்,
அதுவும் இல்லாதாருக்கு
கொஞ்சம் கலக்கம்.
இதெல்லாம் அந்தந்த நேரத்தில் தீர்ந்துபோகும் தீராதது எல்லோரையும் கவனிக்கச் சொல்லும் படைப்பு.
நான் படைப்பாளி பக்கம்.
வனவாசம் முடிந்ததா.
சாத்தூர் வந்தீர்களாமே ?

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

நல்ல உள்ளங்களில் கடவுள் வாழ்கிறார் என்கிறீர்கள். பகிர்வுக்கு நன்றி.அருணா.

Priya said...

முகம் தெரியாத அந்த இன்னோவா இளைஞனுக்கு என்னோட வாழ்த்துக்கள்!!!

cheena (சீனா) said...

அன்பின் அருணா

கடவுளாகும் வித்தை அனைவருக்கும் தெரியும் - அவ்வித்தை நடைபெறும் விதம் மட்டும் மாறும் தன்மை உடையது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் கடவுளாகிறார்கள் - அது வெளியே தெரியாது.

நல்ல இடுகை - நல்வாழ்த்துகள் அருணா

சாத்தூர் பக்கம் வந்தீர்களா - அருகே தானே மதுரை இருக்கிறது - வரும் போது வாருங்கள்

வேலன். said...

இளைஞனுக்கு ஒரு பூங்கொத்து - காட்சியை கண்முன் நீறுத்திய உங்களுக்கு ஒரு பூங்கொத்து...
வாழ்க வளமுடன்,
வேலன்.

புலவன் புலிகேசி said...

//பொண்ணு கையில் கொடுத்து விட்டு தலையை லேசாகத் தட்டிவிட்டு மீண்டும் பளிச் சிரிப்புடன் நடந்தான்..........

அடடா....நிமிடத்தில் கடவுளாகும் வித்தை எனக்கு வரவில்லையே????//

இப்புடித்தான் நெறைய பேரு இருக்குற கடவுளை விட்டுட்டு இல்லாத கடவுள கோயில்ல தேடிகிட்டிருக்காங்க..

ராமலக்ஷ்மி said...

அந்த இளைஞன் வாழ்க!

நிமிடத்தில் கடவுளாகலாம்-1 என்பதிலிருந்தே இன்னும் சொல்லப் போகிறீர்கள் எனத் தெரிகிறது. தொடருங்கள் அருணா.

கோபிநாத் said...

நல்லதொரு பகிர்வு...அந்த இளைஞனுக்கு வாழ்த்துக்கள் ;)

Rajeswari said...

nice...

S.A. நவாஸுதீன் said...

மனதுக்கு நிறைவைக் கொடுக்கும் நல்லதொரு பகிர்வு.

அன்புடன் அருணா said...

பிரியமுடன்...வசந்த் said...
/எங்க பிரின்ஸ் ஜெய்ப்பூர்ல நடந்ததா?/
ஆமாமா வசந்த்.நன்றி

முரளிகுமார் பத்மநாபன் said...
/அருணா மேடம் முகம் தெரியாத அந்த நண்பருக்கு ஒரு பூங்கொத்து பார்சல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்......./
அடுத்த தடவை பார்க்கும் போது கொடுத்துவிடுகிறேன் முரளிகுமார்!

மாதேவி said...

அந்த இளைஞரை வாழ்த்துவோம்.

சிறுவர்களாக இருக்குமிடத்து பணம் கொடுப்பதிலும் உணவு கொடுப்பது சிறந்ததே பணம் என்பது தீயவழியில் செல்லவும் வழிவகுக்கலாம்.

ஆ.ஞானசேகரன் said...

இதயத்தோடு தொட்ட பகிர்வுக்கு நன்றிங்க அருணா

KParthasarathi said...

Nijamaaga nadandhudha?Illai,karpanaiyaa?Eppadi irundhaalum manadhai romba thottuvittadhu.
Mikka nandri

ஹுஸைனம்மா said...

எதிர்பாராத சமயத்தில், எதிர்பாராதவரிடத்திலிருந்து, அதுவும் நாம் சிலசமயம் ஒரு எள்ளலோடு பார்ப்பவர்களிடமிருந்து வரும் எதிர்பாராத நல்லதிர்ச்சிகள் பாடம் படிப்பிக்கும்!!

அன்புடன் அருணா said...

நன்றி சூரி, முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
நன்றி ஜெஸ்வந்தி,
நன்றி பிரியா!

அன்புடன் அருணா said...

காமராஜ் said...
/நான் படைப்பாளி பக்கம்./
ரொம்ப நன்றிங்க...
/வனவாசம் முடிந்ததா./
எழுதாமல் இருக்க முடிவில்லை....:)
/சாத்தூர் வந்தீர்களாமே ?/
ஆமாமா....ஒரு திருமணத்தி்காக...மூன்றே நாட்கள்:)

Muruganandan M.K. said...

நல்லதை நினைத்தால் உடனே செய்துவிட வேண்டும். நல்ல கருத்து. பதிவிற்கு நன்றி

அன்புடன் அருணா said...

cheena (சீனா) said...
/ அன்பின் அருணா
சாத்தூர் பக்கம் வந்தீர்களா - அருகே தானே மதுரை இருக்கிறது - வரும் போது வாருங்கள்/
அடுத்தமுறை வரும்போது கண்டிப்பாக முயற்சி செய்கிறேன்....கருத்துக்கு நன்றி சார்.

சிநேகிதன் அக்பர் said...

சிந்தாமல் சிதறாமல் பார்த்ததை அப்படியே தந்துள்ளீர்கள்.

கவிதையாக இருக்கிறது.

அன்புடன் அருணா said...

பூங்கொத்துக்கு நன்றி வேலன்!
நன்றி கோபிநாத்!
நன்றி Rajeswari!
நன்றி புலவன் புலிகேசி !
நன்றி S.A. நவாஸுதீன் !

லெமூரியன்... said...

ச்சே...! எல்லார் மனசும் எப்போவுமே இப்படியே இருந்த எவ்ளோ நல்ல இருக்கும்..!
படித்து முடிக்கும் பொது ஒரு இனம் தெரியாத சந்தோசம் மனதில் குடி கொள்கிறது
ப்ரின்சி மேடம்..!

அன்புடன் அருணா said...

ராமலக்ஷ்மி said...
/ நிமிடத்தில் கடவுளாகலாம்-1 என்பதிலிருந்தே இன்னும் சொல்லப் போகிறீர்கள் எனத் தெரிகிறது. தொடருங்கள் அருணா./
ஆமாம் ராமலக்ஷ்மி தொடர்வேன்.நன்றி!

அன்புடன் அருணா said...

நன்றி மாதேவி!
நன்றி ஆ.ஞானசேகரன் !
நன்றி Dr.எம்.கே.முருகானந்தன்!
நன்றி அக்பர்!

அன்புடன் அருணா said...

KParthasarathi said...
/ Nijamaaga nadandhudha?Illai,karpanaiyaa?Eppadi irundhaalum manadhai romba thottuvittadhu.
Mikka nandri/
நிஜம்மா நடந்ததுதான் சார்!கருத்துக்கு நன்றி!

ஹேமா said...

அருணா...மனிதம் சாகவில்லை.அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்துகொண்டுதான் இருக்கிறது.தலை வணங்கி வாழ்த்துகள் தோழி.

கண்ணகி said...

பார்த்தான். கொடுத்தான்....சென்றான். பதிந்தான் எங்கள் மனசில். உங்களால்.

sri said...

If this is true, I wanna give a big vear hug to that guy who did that, very heartening! :)

அன்புடன் அருணா said...

லெமூரியன்... said...
/ ச்சே...! எல்லார் மனசும் எப்போவுமே இப்படியே இருந்த எவ்ளோ நல்ல இருக்கும்..!
படித்து முடிக்கும் பொது ஒரு இனம் தெரியாத சந்தோசம் மனதில் குடி கொள்கிறது
ப்ரின்சி மேடம்..!/
பார்க்கும் போது எனக்கும் அப்படியே லெமூரியன்!

மணிவண்ணன் வெங்கடசுப்பு said...

கடவுளை கடவுள் என்று உணர்த்தக்கூட ஒரு கடவுள் தேவைப்படுகிறார்... :)

அன்புடன் அருணா said...

கண்ணகி said...
/ பார்த்தான். கொடுத்தான்....சென்றான். பதிந்தான் எங்கள் மனசில். உங்களால்./
வாங்க கண்ணகி....முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

Sanjai Gandhi said...

ஹிஹி

இப்படிக்கு
கடவுள்.. :))

Jaleela Kamal said...

அருனா தலைப்பே அசத்தலா இருக்கு, நிமிஷத்தில் கடவுளாகலாம்.

நல்ல பகிர்வு,

ஆம் இது போல் பிச்சை எடுப்பவகளுக்கு. நாம் காசு கொடுக்காமல் ஏதாவது சாப்பிட வாங்கி கொடுத்தால் ஒரு வேளை வயிறாவது நிறைந்ததே என்று. நமக்கு ஒரு மனதிருப்தி

(பதிவு திருட்டு பகுதியில் வந்து பதிவு போட்டமைக்கு மிக்க நன்றி)

அன்புடன் அருணா said...

நாளைப்போவான் said...
/கடவுளை கடவுள் என்று உணர்த்தக்கூட ஒரு கடவுள் தேவைப்படுகிறார்... :)/
அருமையா சொன்னீங்க நாளைப்போவான்!

அன்புடன் அருணா said...

SanjaiGandhi™ said...

/ ஹிஹி

இப்படிக்கு
கடவுள்.. :))/
வாங்க கடவுள்.....வந்து ரொம்ப நாளாச்சு!

அன்புடன் அருணா said...

Jaleela said...
/அருனா தலைப்பே அசத்தலா இருக்கு,/
நன்றி Jaleela !

அன்புடன் அருணா said...

வாழ்த்துக்கு நன்றி ஹேமா!

Post a Comment

வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!

அன்புடன் அருணா