நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Saturday, February 14, 2009

காதலினால் தோற்கப் போகும் காதல்...........


அளவற்ற அமிர்தமும் விஷமாகும் போது
அளவற்ற நேசமும் தானே விஷமாகும்
எதிர்பார்ப்புகளின்றி இருக்கமுடியாமல்
மனம் காதலிடம் தோற்றுப் போய்
அனிச்சையாய் கொஞ்சம் விலகிப்
போய் நின்று கொண்டது......

நிசப்தம் அலறுகிறது காதுக்குள்
சப்தம் மௌனமாக இருக்கிறது
வானம் புள்ளியாய்த் தன்னைச்
சுருக்கிக் கொண்டது.........

மழை அழ மறந்து
சிரித்துக் கொண்டிருந்தது....
காற்று பறக்க மறந்து
நடந்து சென்றது....

நிபந்தனையற்ற அன்புக்குக்
கனவை மட்டுமல்ல
காதலையும் கூடக்
காணிக்கையாக்கி
விடவேண்டியதுதான்

இவ்வாறு நினைத்த மாத்திரத்தில்
உருவாகிய சுனாமி
அழித்துப் போன உலக
வரை படத்தில் மனமும்
இணைந்து கொண்டது.....

இதயத்தின் மூலை முடுக்கெல்லாம்
மனதைத் தேடிப் பார்த்துச் சலித்து
இல்லாத மனம் ஏற்படுத்திய
வெற்றிடம் ரணகளமாகியது........

வெற்றிடங்கள் நிரப்பும்
வித்தையை அறிந்தால்
தெரிந்தால் சொல்லிப் போங்கள்
என வருவோர் போவோரிடம்
கெஞ்சிக் கொண்டிருந்தது மனம்......

தோள்களின் இருபக்கமும்
தடவிப் பார்த்துக் கொண்டேன்.....
தேவதைச் சிறகுகள் ஒன்றும்
முளைத்திருக்கவில்லை...................

63 comments:

கார்த்திகைப் பாண்டியன் said...

//அளவற்ற அமிர்தமும் விஷமாகும் போது
அளவற்ற நேசமும் தானே விஷமாகும்//
//நிபந்தனையற்ற அன்புக்குக்
கனவை மட்டுமல்ல
காதலையும் கூடக்
காணிக்கையாக்கி
விடவேண்டியதுதான்//
ரொம்ப நல்லா இருக்கு.. வாழ்த்துக்கள்..

கார்க்கிபவா said...

/வெற்றிடங்கள் நிரப்பும்
வித்தையை அறிந்தால்
தெரிந்தால் சொல்லிப் போங்கள்
என வருவோர் போவோரிடம்
கெஞ்சிக் கொண்டிருந்தது மனம்.//

:((((..

சி தயாளன் said...

//எதிர்பார்ப்புகளின்றி இருக்கமுடியாமல்
மனம் காதலிடம் தோற்றுப் போய்
அனிச்சையாய் கொஞ்சம் விலகிப்
போய் நின்று கொண்டது......//

:-(((((

அருமை...எப்படி இப்படியெல்லாம்....

ராமலக்ஷ்மி said...

நல்ல கவிதை அருணா.

//நிபந்தனையற்ற அன்புக்குக்
கனவை மட்டுமல்ல
காதலையும் கூடக்
காணிக்கையாக்கி
விடவேண்டியதுதான்//

தலைப்பை அர்த்தப் படுத்தும் ஆழமுள்ள வரிகள்!

//தோள்களின் இருபக்கமும்
தடவிப் பார்த்துக் கொண்டேன்.....
தேவதைச் சிறகுகள் ஒன்றும்
முளைத்திருக்கவில்லை....//

அழகாய் முடித்தும் இருக்கிறீர்கள்.

வாழ்த்துக்கள்.

Mohan R said...

'வெற்றிடங்கள் நிரப்பும்
வித்தையை அறிந்தால்
தெரிந்தால் சொல்லிப் போங்கள்
என வருவோர் போவோரிடம்
கெஞ்சிக் கொண்டிருந்தது மனம்......

தோள்களின் இருபக்கமும்
தடவிப் பார்த்துக் கொண்டேன்.....
தேவதைச் சிறகுகள் ஒன்றும்
முளைத்திருக்கவில்லை...................'

இந்தாங்க பூங்கொத்து பிடிங்க...

*இயற்கை ராஜி* said...

//இதயத்தின் மூலை முடுக்கெல்லாம்
மனதைத் தேடிப் பார்த்துச் சலித்து
இல்லாத மனம் ஏற்படுத்திய
வெற்றிடம் ரணகளமாகியது//
nalla eluthiyirukeenga.

*இயற்கை ராஜி* said...

//இதயத்தின் மூலை முடுக்கெல்லாம்
மனதைத் தேடிப் பார்த்துச் சலித்து
இல்லாத மனம் ஏற்படுத்திய
வெற்றிடம் ரணகளமாகியது//
பூங்கொத்து இந்தாங்க:)

கவி அழகன் said...

உங்கள் கவிதை மிகவும் நன்றாக உள்ளது. தொடருங்கள்! நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்!

அன்புடன் அருணா said...

நன்றி ...கார்த்திகைப் பாண்டியன்...
அன்புடன் அருணா

அன்புடன் அருணா said...

’டொன்’ லீ said...
//:-(((((
அருமை...எப்படி இப்படியெல்லாம்....//
அதானே எப்பிடி இப்பிடில்லாம்???
நன்றி....
அன்புடன் அருணா

அன்புடன் அருணா said...

ராமலக்ஷ்மி said...
//தலைப்பை அர்த்தப் படுத்தும் ஆழமுள்ள வரிகள்!
அழகாய் முடித்தும் இருக்கிறீர்கள்.//
ரொம்ப நன்றிங்க....உங்ககிட்ட இருந்து பாராட்டுக்கள் ரொம்ப சந்தோஷமாயிருக்கு..
அன்புடன் அருணா

அன்புடன் அருணா said...

இவன் said...
//இந்தாங்க பூங்கொத்து பிடிங்க...//
கொடுங்க...கொடுங்க....வாங்கிக்கிறேன்...
அன்புடன் அருணா

காமராஜ் said...

அருணா மேடம்
காதலர் தினத்துக்கான மிகப்பெரிய
compliment, உங்களது கவிதை.
நிபந்தனையற்ற அன்புக்கு
காதலை என்ன இந்த உலகத்தைக்கூட
அடகு வைக்கலாம், வேண்டாம் விட்டுவிடலாம்.
கவிதை, கவிதை.

புதியவன் said...

//நிசப்தம் அலறுகிறது காதுக்குள்
சப்தம் மௌனமாக இருக்கிறது
வானம் புள்ளியாய்த் தன்னைச்
சுருக்கிக் கொண்டது.........
//

அழகான முரண்...

//தோள்களின் இருபக்கமும்
தடவிப் பார்த்துக் கொண்டேன்.....
தேவதைச் சிறகுகள் ஒன்றும்
முளைத்திருக்கவில்லை...................//

முடித்ததும் வெகு அழகு...

இது என் சங்கப்பலகை said...

அன்புடன் அருணாவுக்கு.,
இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடத்தில் தேடினால் எப்படி கிடைக்கும் தேவதையின் சிறகுகள்.
உங்கள் தோள்களில் தேடாதீர்கள்..அது உங்கள் எழுதுகோலில் முளைத்திருக்கிறது.
வெங்கட்.தாயுமானவன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//நிசப்தம் அலறுகிறது காதுக்குள்
சப்தம் மௌனமாக இருக்கிறது//

நீதிக்கு தண்டனை
அநீதிக்கு விடுதலை
?????!!!!!

ஆதவா said...

நல்லா இருக்குங்க.... சிலவரிகள் ரொம்ப அருமையா இருக்கு...


நிசப்தம் அலறுகிறது

மழை அழ மறந்து
சிரித்துக் கொண்டிருந்தது....



தோள்களின் இருபக்கமும்
தடவிப் பார்த்துக் கொண்டேன்.....
தேவதைச் சிறகுகள் ஒன்றும்
முளைத்திருக்கவில்லை...................


வித்தியாசமான வரிகள், கற்பனை வீச்சு மிகுந்த கவிதை,... வாழ்த்துக்கள்நல்லா இருக்குங்க.... சிலவரிகள் ரொம்ப அருமையா இருக்கு...


நிசப்தம் அலறுகிறது

மழை அழ மறந்து
சிரித்துக் கொண்டிருந்தது....



தோள்களின் இருபக்கமும்
தடவிப் பார்த்துக் கொண்டேன்.....
தேவதைச் சிறகுகள் ஒன்றும்
முளைத்திருக்கவில்லை...................


வித்தியாசமான வரிகள், கற்பனை வீச்சு மிகுந்த கவிதை,... வாழ்த்துக்கள்நல்லா இருக்குங்க.... சிலவரிகள் ரொம்ப அருமையா இருக்கு...


நிசப்தம் அலறுகிறது

மழை அழ மறந்து
சிரித்துக் கொண்டிருந்தது....



தோள்களின் இருபக்கமும்
தடவிப் பார்த்துக் கொண்டேன்.....
தேவதைச் சிறகுகள் ஒன்றும்
முளைத்திருக்கவில்லை...................


வித்தியாசமான வரிகள், கற்பனை வீச்சு மிகுந்த கவிதை,... வாழ்த்துக்கள்

Anonymous said...

//நிபந்தனையற்ற அன்புக்குக்
கனவை மட்டுமல்ல
காதலையும் கூடக்
காணிக்கையாக்கி
விடவேண்டியதுதான்//

அளவற்ற அன்புக்கு நிபந்தனை விதிக்கும்போதுதான் காதலும் காணிக்கையாகி விடுகிறது..கவிதை சூப்பர் அருணா மேடம் :-)

Karthik said...

//தோள்களின் இருபக்கமும்
தடவிப் பார்த்துக் கொண்டேன்.....
தேவதைச் சிறகுகள் ஒன்றும்
முளைத்திருக்கவில்லை...................

Brilliant!
:)

பாச மலர் / Paasa Malar said...

காற்று நடந்து சென்ற வரிகள்..அருமை அருணா..

தலைப்பு..கருத்து..எல்லாமும்தான்..

அன்புடன் அருணா said...

பூங்கொத்துக்கு நன்றி இயற்கை....
அன்புடன் அருணா

அன்புடன் அருணா said...

வாங்க கவிக் கிழவா!!!முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி...
அன்புடன் அருணா

கார்க்கிபவா said...

ஏங்க வெறும் ஸ்மைலி போட்டா பதில் சொல்ல மாட்டிங்களா??????????????????

அன்புடன் அருணா said...

காமராஜ் said...
//நிபந்தனையற்ற அன்புக்கு
காதலை என்ன இந்த உலகத்தைக்கூட
அடகு வைக்கலாம்//

உண்மைதாங்க....அதுக்கு விலையிருக்கா என்ன??
அன்புடன் அருணா

அன்புடன் அருணா said...

கார்க்கி said...
//ஏங்க வெறும் ஸ்மைலி போட்டா பதில் சொல்ல மாட்டிங்களா??????????????????//
சே...சே ...அப்பிடில்லாம் இல்லீங்க...வெறும் ஸ்மைலிக்கு வெறும் ஸ்மைலி போடலாமா?இல்லை ஸ்மைலியோட பதில் போடலாமா?இல்லை ஸ்மைலி இல்லாம பதில் போடலாமா?இல்லை ஸ்மைலி.....சரி விடுங்க...பெரிய பதிலா போட்டாச்சு...ok va?
anbudan aruNaa

butterfly Surya said...

நல்லாயிருக்கு.. வாழ்த்துகள்.

உலக சினிமா பற்றிய தளத்தை பார்த்து நிறை {அ}குறை சொல்லவும்

மேவி... said...

"அளவற்ற அமிர்தமும் விஷமாகும் போது
அளவற்ற நேசமும் தானே விஷமாகும்"
இல்லைங்க .... சில நேரத்தில் மருந்து யாக கூட மாறும்

"மழை அழ மறந்து
சிரித்துக் கொண்டிருந்தது....
காற்று பறக்க மறந்து
நடந்து சென்றது...."
காதல் வந்த இதெல்லாம் சகஜம் ங்க ......

கவிதை நல்ல இருக்கு ......

அன்புடன் அருணா said...

புதியவன் said...
//அழகான முரண்...//
//முடித்ததும் வெகு அழகு...//

உங்கள் பின்னூட்டமும் அழகு புதியவன்.

அன்புடன் அருணா said...

ஆதவா said...
//நல்லா இருக்குங்க.... சிலவரிகள் ரொம்ப அருமையா இருக்கு... //
நன்றி ஆதவா....வருகைக்கும்,வாழ்த்துக்கும்!!!

அன்புடன் அருணா said...

இனியவள் புனிதா said...
//அளவற்ற அன்புக்கு நிபந்தனை விதிக்கும்போதுதான் காதலும் காணிக்கையாகி விடுகிறது..கவிதை சூப்பர் அருணா மேடம் :-)//

நன்றி புனிதா...அடிக்கடி வாங்க...
அன்புடன் அருணா

அன்புடன் அருணா said...

Thank U for that brilliant comment Kaarthik!!

அன்புடன் அருணா said...

நன்றி பாசமலர் வருகைக்கும் கருத்துக்கும்....அடிக்கடி வாங்க..

அன்புடன் அருணா said...

இது என் சங்கப்பலகை said...
//தேவதையின் சிறகுகள்.
உங்கள் தோள்களில் தேடாதீர்கள்..அது உங்கள் எழுதுகோலில் முளைத்திருக்கிறது.//

ரொம்பப் பெருமையாக இருக்கிறது இப்படிப் பின்னூட்டம் படிப்பதற்கு...தகுதியுடையவைதானா? என் எழுத்துக்கள் என்றும் தோன்றுகிறது.....நன்றி...
தாயமானவன்.

Divya said...

Wow..........kavithai romba nalla irukuthunga Aruna :))

//தோள்களின் இருபக்கமும்
தடவிப் பார்த்துக் கொண்டேன்.....
தேவதைச் சிறகுகள் ஒன்றும்
முளைத்திருக்கவில்லை...................//

Intha lines romba romba nallaruku:))

Dinesh C said...

hmmm.. very interesting.... enna matter akka?

MSK / Saravana said...

//தோள்களின் இருபக்கமும்
தடவிப் பார்த்துக் கொண்டேன்.....
தேவதைச் சிறகுகள் ஒன்றும்
முளைத்திருக்கவில்லை................... //
awesome..


இது என் சங்கப்பலகை said...
//தேவதையின் சிறகுகள்.
உங்கள் தோள்களில் தேடாதீர்கள்..அது உங்கள் எழுதுகோலில் முளைத்திருக்கிறது.//
ரிப்பீட்டேய்..

சந்தனமுல்லை said...

நல்ல கவிதை அருணா!

//வெற்றிடங்கள் நிரப்பும்
வித்தையை அறிந்தால்
தெரிந்தால் சொல்லிப் போங்கள்
என வருவோர் போவோரிடம்
கெஞ்சிக் கொண்டிருந்தது மனம்......//


ஹ்ம்ம்..நல்லா எழுதியிருக்கீங்க...

Poornima Saravana kumar said...

////அளவற்ற அமிர்தமும் விஷமாகும் போது
அளவற்ற நேசமும் தானே விஷமாகும்////

எப்படீங்க இப்படி எல்லாம்??

Poornima Saravana kumar said...

//வெற்றிடங்கள் நிரப்பும்
வித்தையை அறிந்தால்
தெரிந்தால் சொல்லிப் போங்கள்
என வருவோர் போவோரிடம்
கெஞ்சிக் கொண்டிருந்தது மனம்......
//

நல்லா எழுதி இருக்கீங்க:)

அன்புடன் அருணா said...

Divya said...
//Wow..........kavithai romba nalla irukuthunga Aruna :))
.//
வாங்க திவ்யா....உங்க கதைகளை விடவா????

அன்புடன் அருணா said...

Dinesh C said...
//hmmm.. very interesting.... enna matter akka?//
ada என்னப்பா நீ வேற...மேட்டர் ஒண்ணுமில்லைப்பா...ஒண்ணும் எழுதலையாப்பா? ரொம்ப நாளாச்சே??
அன்புடன் அருணா

அன்புடன் அருணா said...

Saravana Kumar MSK said...
//awesome..//
thanxpa

Anonymous said...

//தோள்களின் இருபக்கமும்
தடவிப் பார்த்துக் கொண்டேன்.....
தேவதைச் சிறகுகள் ஒன்றும்
முளைத்திருக்கவில்லை...........//

அடடா. ம்ம்ம்...அருமை.

அன்புடன் அருணா said...

T.V.Radhakrishnan said...
//நீதிக்கு தண்டனை
அநீதிக்கு விடுதலை
?????!!!!!//

அட இது நல்லாருக்கே??? நன்றி....

அன்புடன் அருணா said...

வண்ணத்துபூச்சியார் said...
//நல்லாயிருக்கு.. வாழ்த்துகள்.
உலக சினிமா பற்றிய தளத்தை பார்த்து நிறை {அ}குறை சொல்லவும்//
வாங்க வண்ணத்துப் பூச்சியார்!!!முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி...வர்றேன்...சீக்கிரம்...
அன்புடன் அருணா

அன்புடன் அருணா said...

MayVee said...
//"அளவற்ற அமிர்தமும் விஷமாகும் போது
அளவற்ற நேசமும் தானே விஷமாகும்"
இல்லைங்க .... சில நேரத்தில் மருந்து யாக கூட மாறும் //

ஆமாமா...ரொம்ப சரி...மேவீ

அன்புடன் அருணா said...

Poornima Saravana kumar said...
//எப்படீங்க இப்படி எல்லாம்??//

அடப் போங்க உங்க எழுத்தை விடவா???

அன்புடன் அருணா said...

சூர்யா ஜிஜி said...
//அடடா. ம்ம்ம்...அருமை.//
வாங்க வண்ணத்துப் பூச்சியார்!!!முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

அன்புடன் அருணா said...

சந்தனமுல்லை said...
//நல்ல கவிதை அருணா!
ஹ்ம்ம்..நல்லா எழுதியிருக்கீங்க...//

நன்றி சந்தனமுல்லை...

வினையூக்கி said...

//நிசப்தம் அலறுகிறது காதுக்குள்
சப்தம் மௌனமாக இருக்கிறது
வானம் புள்ளியாய்த் தன்னைச்
சுருக்கிக் கொண்டது.........
//

//தோள்களின் இருபக்கமும்
தடவிப் பார்த்துக் கொண்டேன்.....
தேவதைச் சிறகுகள் ஒன்றும்
முளைத்திருக்கவில்லை...................//

அருமை மேடம்... நான் தான் 50 வது பின்னூட்டமா!!!

ராமலக்ஷ்மி said...

அருணா, இன்று இந்தக் கவிதை யூத்ஃபுல் விகடன் இணைய தளத்தில் வெளியாகியுள்ளது கண்டேன். மனமார்ந்த வாழ்த்துக்கள்!

தேவன் மாயம் said...

தொடர் பதிவுக்கு வரவும்

தேவன் மாயம் said...

\\தலைப்பு என்னன்னு கேக்கிறீங்களா? சும்மா டமாசு!!!! இஃகி!! இஃகி!!இஃகி!!\\

இப்படி ஒரு தலைப்பா!

அன்புடன் அருணா said...

ஆமாமா வினையூக்கி....நீங்கதான் 50வது...நன்றி...

அன்புடன் அருணா said...

ராமலக்ஷ்மி said...
//அருணா, இன்று இந்தக் கவிதை யூத்ஃபுல் விகடன் இணைய தளத்தில் வெளியாகியுள்ளது கண்டேன். மனமார்ந்த வாழ்த்துக்கள்!//

அட அப்பிடியா?நானே இப்போதான் பார்த்தேன்...
நன்றி...ராமலக்ஷ்மி..

அன்புடன் அருணா said...

thevanmayam said...
//தொடர் பதிவுக்கு வரவும்//
\\தலைப்பு என்னன்னு கேக்கிறீங்களா? சும்மா டமாசு!!!! இஃகி!! இஃகி!!இஃகி!!\\

அச்சச்சோ இப்பிடில்லாமா தொடர்பதிவு இருக்கு???

priya said...

வணக்கம் அருணா. உங்கள் புதிய நட்பு நான். காதலினால் தோற்கப்போகும் காதல்..... மிக அழகான தலைப்பு, தலைப்புக்கேற்ற கவிதை. உங்கள் கவிதையினால் எங்களை தோற்கடித்து விட்டீர்கள். தொடரட்டும் உங்கள் கவிதை ஊற்று. என்னையும் உங்கள் பதிவில் சேர்த்துக்கொள்ளுங்கள். நன்றி.

priya said...

வணக்கம் அருணா. உங்கள் புதிய நட்பு நான். காதலினால் தோற்கப்போகும் காதல்..... மிக அழகான தலைப்பு, தலைப்புக்கேற்ற கவிதை. உங்கள் கவிதையினால் எங்களை தோற்கடித்து விட்டீர்கள். தொடரட்டும் உங்கள் கவிதை ஊற்று. என்னையும் உங்கள் பதிவில் சேர்த்துக்கொள்ளுங்கள். நன்றி.

priya said...

அன்பு அருணா! உங்கள் புதிய நட்பு நான். காதலினால் தோற்கப்போகும் காதல்.......... அருமை, அற்புதம். உங்கள் கவிதையினால் எங்களை தோற்கடித்து விட்டீர்கள்.

அன்புடன் அருணா said...

priya said...
//வணக்கம் அருணா. உங்கள் புதிய நட்பு நான்.. என்னையும் உங்கள் பதிவில் சேர்த்துக்கொள்ளுங்கள். //

வாங்க வாங்க புதிய நட்பே....கண்டிப்பா ...இதோ உங்களையும் சேர்த்துக்கிட்டேன்

மோகன் said...

அருணா...வலிகளை சுவையாக வரைந்திருக்கிறீர்கள்....

மோகன் said...

அருணா....http://naanirakkappokiraen-aruna.blogspot.com/ ..முதல்முறை உங்கள் தளத்திற்கு வந்திருக்கிறேன்..உங்கள் URL
ஒரு புதிரா(தா)க இருக்கிறது...
'நான் இருக்கப்போகிறேன்' : அதீத நம்பிக்கை...
'நான் இறக்கப்போகிறேன்' : அவநம்பிக்கை...
'நான் இரக்கப்போகிறேன்' : தன்நம்பிக்கை..

இதில் யார் நீங்கள்??????

Gowripriya said...

நிசப்தம் அலறுகிறது காதுக்குள்
சப்தம் மௌனமாக இருக்கிறது
வானம் புள்ளியாய்த் தன்னைச்
சுருக்கிக் கொண்டது.........

அருமை அருமை

Post a Comment

வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!

அன்புடன் அருணா