நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Wednesday, December 31, 2008

இலக்கில்லாத இனிய பயணம்.........


இலக்கில்லாத இனிய பயணம்...
எப்போதும் போல வருடக் கடைசியில் ஒரு ரிவியு...
என்ன சாதித்தோம் இந்த வருடத்தில்????
ம்ம்ம்ம்....கனவுகளை நோக்கி ஒரு சில அடி முன்னேற்றம்...
நட்புச் சிறகில் சில இறகுகளின் சேர்ப்பு.
சில முயற்சிகளின் முட்டுக் கட்டை.
சில உழைப்புகளின் வெற்றி சில..... இழப்புக்கள் சில...
சந்தோஷமாக வானில் சிறகடித்த நேரம் சில....
கண்ணீர்த் துளிகள் கன்னம் வருடிய நேரம் சில....
இன்னும் கொஞ்சம் உழைத்திருக்கலாமோ?
இன்னும் கவனமாக இருந்திருக்கலாமோ?
அந்தத் தப்பைத் தவிர்த்திருக்கலாமோ?
இன்னும் கொஞ்சம் அன்பைக் கொட்டியிருக்கலாமோ?
இன்னும் கொஞ்சம் கோபம் குறைத்திருக்கலாமோ?
இன்னும் கொஞ்சம் பொறுப்புடன் நடந்து கொண்டிருக்கலாமோ?
இன்னும் நிறைய இன்னும்கள்.....
ஒரு வருடத்தின் இறுதியில் மட்டும் இந்தக் கணக்கெடுப்பு ஏன்?
இதுவே ஏன் ஒவ்வொரு மாதத்தின் இறுதி நாளிலும்,
வாரத்தின் இறுதி நாளிலும்,
ஏன் ஒரு நாளின் இறுதியிலும் இந்தக் கணக்கெடுத்திருக்கலாமே?
வருடத்தின் இறுதிக்கு ஏன் அத்தனை மரியாதை?

ம்ம்ம்ம்ம் அப்பிடில்லாம் கணக்கெடுத்திருந்தால் இப்பிடியா இருந்திருப்போம்?
இந்நேரம் எங்கேயோ போயிருக்க மாட்டோமா?

உயிர்ச் சேதமில்லாத
குண்டு வெடிக்காத
இயற்கை சீறாத
அமைதியான
புது வருடம்
அன்றி வேறொன்று
வேண்டிலன்.....
அமைதியான புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!!!

43 comments:

சி தயாளன் said...

வழமை போல் எதிர்பார்ப்போம் அமைதியான புத்தாண்டை...

இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள் அருணா

அன்புடன் அருணா said...

'டொன்' லீ said...
//வழமை போல் எதிர்பார்ப்போம் அமைதியான புத்தாண்டை...

இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள் அருணா//

நன்றி 'டொன்' லீ.....உங்களுக்கும் வாழ்த்துக்கள்.
அன்புடன் அருணா

Karthik said...

சூப்பர்ப் மெஸேஜ்! சூப்பர்ப் கவிதை!

புத்தாண்டு வாழ்த்துக்கள்!
:)

அமிர்தவர்ஷினி அம்மா said...

உயிர்ச் சேதமில்லாத
குண்டு வெடிக்காத
இயற்கை சீறாத
அமைதியான
புது வருடம்
அன்றி வேறொன்று
வேண்டிலன்.....
அமைதியான புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!!!

நன்றி , புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

அமிர்தவர்ஷினி அம்மா said...

ஒரு வருடத்தின் இறுதியில் மட்டும் இந்தக் கணக்கெடுப்பு ஏன்?
இதுவே ஏன் ஒவ்வொரு மாதத்தின் இறுதி நாளிலும்,
வாரத்தின் இறுதி நாளிலும்,
ஏன் ஒரு நாளின் இறுதியிலும் இந்தக் கணக்கெடுத்திருக்கலாமே?

ம் யோசிக்க வேண்டிய விஷயமாத்தான் படுது, செய்துடுவோம்.

தமிழ் said...

இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள்

geevanathy said...

/////இன்னும் கொஞ்சம் உழைத்திருக்கலாமோ?
இன்னும் கவனமாக இருந்திருக்கலாமோ?
அந்தத் தப்பைத் தவிர்த்திருக்கலாமோ?
இன்னும் கொஞ்சம் அன்பைக் கொட்டியிருக்கலாமோ?
இன்னும் கொஞ்சம் கோபம் குறைத்திருக்கலாமோ?
இன்னும் கொஞ்சம் பொறுப்புடன் நடந்து கொண்டிருக்கலாமோ?
இன்னும் நிறைய இன்னும்கள்.....////

நடைமுறை உண்மைகள்
முயலல்கள்,தவறல்கள்தானே வாழ்வினை சுவாரிஷ்யமாக்குகின்றன...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் அருணா அவர்களே உங்கள் குடும்பத்தினருக்கும் சேர்த்து....


சரி எப்ப எங்க வீட்டுக்கு டைனோர் வரும்?? பிள்ளையிடம் கேட்டுச்சொல்லுங்கள்.....

அன்புடன் அருணா said...

Thank You karthik.
அன்புடன் அருணா

அன்புடன் அருணா said...

அமிர்தவர்ஷினி அம்மா said...
//ம் யோசிக்க வேண்டிய விஷயமாத்தான் படுது, செய்துடுவோம்.//

ம்ம்ம்...யோசிங்க...நான் கூட யோசிச்சுக்கிட்டுதான் இருக்கேன்...
அன்புடன் அருணா

அன்புடன் அருணா said...

திகழ்மிளிர் said...
//இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள்//
நன்றி...உங்களுக்கும் வாழ்த்துக்கள்
அன்புடன் அருணா

அன்புடன் அருணா said...

தங்கராசா ஜீவராஜ் said...
//நடைமுறை உண்மைகள்
முயலல்கள்,தவறல்கள்தானே வாழ்வினை சுவாரஸ்யமாக்குகின்றன...//

உண்மைதான் தங்கராசா.
அன்புடன் அருணா

அன்புடன் அருணா said...

தங்கராசா ஜீவராஜ் said...
//இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் அருணா அவர்களே உங்கள் குடும்பத்தினருக்கும் சேர்த்து....
சரி எப்ப எங்க வீட்டுக்கு டைனோசர் வரும்?? பிள்ளையிடம் கேட்டுச்சொல்லுங்கள்.....//

கண்டிப்பாகக் கேட்டுச் சொல்கிறேன்.
நன்றி...உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் வாழ்த்துக்கள்....
அன்புடன் அருணா

தாரணி பிரியா said...

புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் அருணா மேடம்

Thamira said...

எங்கே போனாலும் ஒரே சிந்தனை மயமாக இருக்குது, வாத்துகளும் கூட, சே.. வாழ்த்துகளும் கூட.... உங்களுக்கு எனது வாழ்த்துகள்.!

KARTHIK said...

//
உயிர்ச் சேதமில்லாத
குண்டு வெடிக்காத
இயற்கை சீறாத
அமைதியான
புது வருடம்
அன்றி வேறொன்று
வேண்டிலன்.....
அமைதியான புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!!! //

நம்ம எல்லாரோட எதிர்பார்ப்பும் இதுதான்

இனிய புத்தாண்டு நல்வாழ்துக்கள் VP.

Anonymous said...

//இன்னும் நிறைய இன்னும்கள்.....//

Nalla irukunga kov.

Happy new year

Muruganandan M.K. said...

"இன்னும் கொஞ்சம் உழைத்திருக்கலாமோ?
இன்னும் கவனமாக இருந்திருக்கலாமோ? "
ஆம் நாம் ஒவ்வெருவரும் எம்மை நாமே மறுபார்வை பார்த்தல் அவசியமே. புத்தாண்டு வாழ்த்துக்கள்.

அன்புடன் அருணா said...

தாரணி பிரியா said...
//புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் அருணா மேடம்//

நன்றிம்மா.....உங்களுக்கும் வாழ்த்துக்கள் தாரணி பிரியா....
அன்புடன் அருணா

Anonymous said...

மனம் நிறைந்த இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!!!

அன்புடன் அருணா said...

தாமிரா said...
//எங்கே போனாலும் ஒரே சிந்தனை மயமாக இருக்குது, வாத்துகளும் கூட, சே.. வாழ்த்துகளும் கூட.... உங்களுக்கு எனது வாழ்த்துகள்.!//
வருடக் கடைசியிலாவது சிந்திக்க வேண்டாமா? நல்ல வேளை ...வாழ்த்து அனுப்பினீங்க....வாத்தை வைத்து என்னா பண்ண?
உங்களுக்கும் வாழ்த்துக்கள்.
அன்புடன் அருணா

அன்புடன் அருணா said...

கார்த்திக் said...
//நம்ம எல்லாரோட எதிர்பார்ப்பும் இதுதான்
இனிய புத்தாண்டு நல்வாழ்துக்கள் VP.//

நன்றி கார்த்திக்.உங்களுக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
அன்புடன் அருணா

அன்புடன் அருணா said...

Sri said...
//இன்னும் நிறைய இன்னும்கள்.....//
Nalla irukunga kov.
Happy new year//

Thank you Sri and same to you...
anbudan aruna

அன்புடன் அருணா said...

டொக்டர்.எம்.கே.முருகானந்தன் said...
//ஆம் நாம் ஒவ்வெருவரும் எம்மை நாமே மறுபார்வை பார்த்தல் அவசியமே. புத்தாண்டு வாழ்த்துக்கள்.//

ஆமாம் டாக்டர்...முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.
அன்புடன் அருணா

anujanya said...

நல்ல பதிவு அருணா. புத்தாண்டு வாழ்த்துக்கள் அனைவருக்கும்.

அனுஜன்யா

MSK / Saravana said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அக்கா..
:)

MSK / Saravana said...

ஒவ்வொரு வருடமும் ரிவியு சேம் தானா..??!!!

MSK / Saravana said...

நல்ல பதிவு அக்கா.. நிச்சயம் இந்த வருடம் இந்த மாதிரி சேம் ரிவியு இல்லாம, புதுசா வாழனும்.. :)

தமிழன்-கறுப்பி... said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் அருணா...

TamilBloggersUnit said...

happy newyear we invite you to join now in tamilbloggersunit

கோபிநாத் said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் அக்கா :))

Anonymous said...

இனிய புத்தாண்டு நல்வாழ்துக்கள் :)

மேவி... said...

"இந்நேரம் எங்கேயோ போயிருக்க மாட்டோமா?"

ஆமாம். சில நேரங்களில் சோகம் தென்றலை போல் வந்து, புயலை போல் சென்று விடுவது உண்டு.
ஆனால் நம்பிக்கை என்ற நுலே வாழவைத்து கொண்டு இருக்கின்றன.
என்ன செய்வது.
கடவுள் விட் சென்ற எச்ச மிச்சம் இந்த பூமி தானே.

அன்ய்வய்ஸ் . இனிய நியூ வருட வாழ்த்துக்கள்.

அன்புடன் அருணா said...

வாங்க அனுஜன்யா..உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
அன்புடன் அருணா

அன்புடன் அருணா said...

Saravana Kumar MSK said...
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அக்கா..
:)
நன்றி சரவணா...உங்களுக்கும் வாழ்த்துக்கள்....

//ஒவ்வொரு வருடமும் ரிவியு சேம் தானா..??!!!////நல்ல பதிவு அக்கா.. நிச்சயம் இந்த வருடம் இந்த மாதிரி சேம் ரிவியு இல்லாம, புதுசா வாழனும்.. :)//

என்னப்பா செய்ய ஒவ்வொரு வருடமும் வாழ்க்கை அதே அன்பு,சந்தோஷம்,கண்ணீர்,வெற்றி,உழைப்பு,முயற்சி,இழப்புகளுடன்தானே செல்கிறது....
அன்புடன் அருணா

அன்புடன் அருணா said...

உங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தமிழன் கறுப்பி.
அன்புடன் அருணா

அன்புடன் அருணா said...

Thank you TamilBloggersUnit...I've joined.
anbudan aruna

அன்புடன் அருணா said...

உங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் கோபி :))

அன்புடன் அருணா

அன்புடன் அருணா said...

Sri said...
//இனிய புத்தாண்டு நல்வாழ்துக்கள் :)//

ஓ நீங்க இந்த sriயா??? நான் அந்த sriயோன்னு நினைச்சேன்....Tank U...
anbudan aruna

+Ve Anthony Muthu said...

//இன்னும் கவனமாக இருந்திருக்கலாமோ?
அந்தத் தப்பைத் தவிர்த்திருக்கலாமோ?
இன்னும் கொஞ்சம் அன்பைக் கொட்டியிருக்கலாமோ?
இன்னும் கொஞ்சம் கோபம் குறைத்திருக்கலாமோ?
இன்னும் கொஞ்சம் பொறுப்புடன் நடந்து கொண்டிருக்கலாமோ?//

உண்மைதான். எவ்வளவுதான் வருத்தப்பட்டாலும், காலத்தின் பின்னோக்கி பயணித்து,
கடந்த காலத்தைச் சரி செய்யும் வல்லமை நம்மிடம் இல்லை.

வரும் காலத்தில் கவனம் காப்பதைத் தவிர.

மனம் நிறைந்த புத்தாணடு வாழத்துக்கள்!

தேவன் மாயம் said...

/ஆண்கள், அம்மாவைப்போல கொஞ்சம் மாறனும்னு நினைக்கிறேன்!!!//

ம்ம்ம் அப்பாடா ...நீங்களாவது ஒத்துக் கொண்டீர்களே..
அன்புடன் அருணா///

கொஞ்சம்தான் எழுதினேன்!!!
நிறைய நெஞ்சுக்குள்!!!

அன்புடன் அருணா said...

நன்றி அந்தோணிமுத்து....உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
அன்புடன் அருணா

அன்புடன் அருணா said...

thevanmayam said...
//ஆண்கள், அம்மாவைப்போல கொஞ்சம் மாறனும்னு நினைக்கிறேன்!!!//

ம்ம்ம் அப்பாடா ...நீங்களாவது ஒத்துக் கொண்டீர்களே..
அன்புடன் அருணா///

கொஞ்சம்தான் எழுதினேன்!!!
நிறைய நெஞ்சுக்குள்!!!//

ஓ பதிலை இங்கே எழுதி விட்டீர்களா??
நன்றி..
அன்புடன் அருணா

கோகுலன் said...

நல்ல ரவியூ தாங்க அருணா..

புதிய வருடம் எல்லலா வகையிலும் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்..

Post a Comment

வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!

அன்புடன் அருணா