நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-
அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -
என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,
இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.
இனி என்னைப் புதிய உயிராக்கி -
எனக்கேதும் கவலையறச் செய்து -
மதி தன்னை மிகத் தெளிவு செய்து -
என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.
Friday, December 26, 2008
அன்னிக்கு ஒரு நாள் எங்க வீட்டுக்குள் க்ராக்கடைல் வந்துச்சே!!!
அன்றொரு நாள் சமையலறையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன்.எங்க வீட்டுப் பெரிய செல்லம் அப்போ U.K.G படித்துக் கொண்டிருந்தாள்.
"மம்மீஈஈஈஈஈ"ன்ன்னு ஒரு அலறல்.கையிலிருந்ததெல்லாம் கீழே போட்டுட்டு ஓடிப் போய்ப் பார்த்தேன்.
"மம்மி மம்மி ஒரு க்ராக்கடைல் நம்ம வீட்டுக்குள்ளே வந்துருச்சும்மா" என்றபடி நடுங்கிக் கொண்டிருந்தாள்.க்ராக்கடைல் வராதும்மான்னு எவ்வ்ளோ சொன்னாலும் ஒரே அழுகை.
திடீரென்று ஓடிப் போய் அவளுடைய ஆங்கிலப் புத்தகத்தை எடுத்து வந்து அதில் மிகச் சரியாக முதலையைக் காட்டி "இதுதான் வந்தது "என்றாள்...எனக்கே கொஞ்சம் பயமாய்ப் போய் விட்டது.
"சரிம்மா வீட்டுக்குள்ளே வந்து அப்புறம் எங்கே போச்சு?"
"கட்டிலுக்கடியிலே போச்சும்மா" என்றாள்.
நானும் அர்த்தமில்லாமல் கட்டிலுக்கடியிலெல்லாம் தேடிப் பார்த்தேன்.கொஞ்ச நேரம் காலை மேலே தூக்கிக் கட்டிலில் வைத்துக் கொண்டு இருவரும் உட்கார்ந்திருந்த்தோம்....அவங்க வேற ஊரில் இல்லை.நான் வேற கரப்பான் பூச்சி வெட்டுக் கிளியெல்லாம் வீட்டுக்குள் வந்தால் விரட்டவோ அடிக்கவோ பயப்பட்டு டம்ளர் போட்டு மூடுற வகை வீரனியாக்கும் ( வீரனுக்குப் பெண்பால்)
ஒரு வழியாக என் பொண்ணு பார்த்த க்ராக்கடைலான ஒரு பல்லியைக் கட்டிலுக்கடியிலிருந்த்து விரட்டியப்புறம் நிம்மதியாகத் தூங்கப் போனோம் இருவரும் ........
at
3:11 PM
Subscribe to:
Post Comments (Atom)
45 comments:
ஹா..ஹா.
ச்சோ ச்ச்வீட்ட்!
மேம், என் ப்ளாக்கை கொஞ்சம் போய் பாருங்க.
:)
ஹை இங்கனயும் நாந்தான் முதல்ல
Your comment will be visible after approval. - அடாடா இதை கவனிக்கலையே சரி சரி
ஹா ஹா சின்ன சைஸ் முதலை :)
நான் அரனை இல்லாட்டி ஒணானா இருக்குமுன்னு நினைச்சுகிட்டே படிச்சேன். கடைசியில பார்த்தா பல்லி :)
எனக்கு கரப்பான், வெட்டிக்கிளி எல்லாம் பயமில்லை. ஆனா இந்த பல்லி மட்டும் பார்த்தாலே :(
//நானும் அர்த்தமில்லாமல் கட்டிலுக்கடியிலெல்லாம் தேடிப் பார்த்தேன்.//
நானும் அர்த்தமில்லாமல் நிஜமோனு நினச்சு படிச்சேன் (Lol):))
அட்டகாசம்.. :)
//திடீரென்று ஓடிப் போய் அவளுடைய ஆங்கிலப் புத்தகத்தை எடுத்து வந்து அதில் மிகச் சரியாக முதலையைக் காட்டி "இதுதான் வந்தது "என்றாள்...//
ச்சோ ச்வீட்.. அரண்டு போயீருப்பீங்களே..
//நான் வேற கரப்பான் பூச்சி வெட்டுக் கிளியெல்லாம் வீட்டுக்குள் வந்தால் விரட்டவோ அடிக்கவோ பயப்பட்டு டம்ளர் போட்டு மூடுற வகை வீரனியாக்கும் ( வீரனுக்குப் பெண்பால்)//
அம்புட்டு நல்லவங்களா நீங்க..!!!
ரொம்ப கூலான பதிவு.. i like it..
ஆகா.
பூங்கொத்து கொடுக்கிறோம்.
சிறு சுட்டிகளின் வார்த்தைகளின் அர்த்தம் - அதை அறியவேண்டுமெனில் மழலைமொழி தெரிந்திருக்க வேண்டும்.
அருமையான பதிவு. வாழ்த்துக்கள்.
Karthik said...
//ஹா..ஹா.
ச்சோ ச்ச்வீட்ட்!
மேம், என் ப்ளாக்கை கொஞ்சம் போய் பாருங்க.
:)//
ஓ.....பட்டாம்பூச்சி அவார்ட் எனக்கா?? ச்சோ ச்ச்வீட்ட்! கார்த்திக்.
அன்புடன் அருணா
நன்றி தாரணிப் பிரியா....பல்லின்னாலே எல்லோருக்கும் பயம்தான்.
அன்புடன் அருணா
தமிழ்நெஞ்சம் said...
//ஆகா.
பூங்கொத்து கொடுக்கிறோம்.//
பூங்கொத்துக்கு நன்றி தமிழ்நெஞ்சம்...
அன்புடன் அருணா
அன்புடன் அருணா,
முடிவு யூகிக்க முடிந்தாலும் நல்லா இருக்கு.
Saravana Kumar MSK said...
//நான் வேற கரப்பான் பூச்சி வெட்டுக் கிளியெல்லாம் வீட்டுக்குள் வந்தால் விரட்டவோ அடிக்கவோ பயப்பட்டு டம்ளர் போட்டு மூடுற வகை வீரனியாக்கும் ( வீரனுக்குப் பெண்பால்)//
//அம்புட்டு நல்லவங்களா நீங்க..!!!//
அட அம்புட்டு பயந்தாங்கொள்ளி நானு!!!
அன்புடன் அருணா
Saravana Kumar MSK said...
//ச்சோ ச்வீட்.. அரண்டு போயீருப்பீங்களே..//
பின்னே அரண்டு,மிரண்டு போயிட்டோமாக்கும்.
அன்புடன் அருணா
PoornimaSaran said...
//நானும் அர்த்தமில்லாமல் நிஜமோனு நினச்சு படிச்சேன் (Lol):))//
நன்றி பூர்ணிமா.
அன்புடன் அருணா
கோபிநாத் said...
;)))//
:)...நன்றி கோபிநாத்.
அன்புடன் அருணா
ஹாஹாஹா.... ச்ச்ச்ச்சோ ச்ச்ச்ச்வீட்....:-)))
அருமை.. அட்டகாசம்....
சூப்பருங்க.. காலத்தூக்கிவச்சு உக்காந்திருந்த காட்சியை நினைச்சுப்பார்க்கிறேன்.. ஆகா அற்புதம்.. :)
குழந்தைகளின் உலகம் இதுபோலவே நிறைய ஆச்சரியங்கள் நிறைந்தது... பாராட்டுக்கள் நல்ல பகிர்வு...
ஹி ஹி ஹி
:-):-):-)
ஆகா.... அக்கா அது முதலைய விட மோசமான பிராணி ஆச்சே... ;)))
"ஒரு வழியாக என் பொண்ணு பார்த்த க்ராக்கடைலான ஒரு பல்லியைக் கட்டிலுக்கடியிலிருந்த்து விரட்டியப்புறம் நிம்மதியாகத் தூங்கப் போனோம் இருவரும் ........ "
so sweet....
ha ha ha
he he he.....
anyways, aunty pls be careful with lizard because thy are supposed to be descendants of
crocodile....(i got 75 marks in science in 8th standard)
ச்சின்னப் பையன் said...
//ஹாஹாஹா.... ச்ச்ச்ச்சோ ச்ச்ச்ச்வீட்....:-)))//
வாங்க சின்னப் பையன்....முதல் வருகை...நன்றி
அன்புடன் அருணா
முத்துலெட்சுமி-கயல்விழி said...
//சூப்பருங்க.. காலத்தூக்கிவச்சு உக்காந்திருந்த காட்சியை நினைச்சுப்பார்க்கிறேன்.. ஆகா அற்புதம்.. :)//
அச்சச்சோ இப்பிடில்லாமா கற்பனை பண்ணிக்கிட்டு இருக்கிறது??
அன்புடன் அருணா
//வழியாக என் பொண்ணு பார்த்த க்ராக்கடைலான ஒரு பல்லியைக் கட்டிலுக்கடியிலிருந்த்து விரட்டியப்புறம் நிம்மதியாகத் தூங்கப் போனோம் இருவரும் ........ //
அப்ப பெரிய முதலைதான்.
:)))
Ha ha ha. Unmaya sollunga adhu modhalaya irundha neenga annaiku crocodile briyani dhaana senjirupeenga?
தங்கராசா ஜீவராஜ் said...
//குழந்தைகளின் உலகம் இதுபோலவே நிறைய ஆச்சரியங்கள் நிறைந்தது... பாராட்டுக்கள் நல்ல பகிர்வு...//
நிஜம்தாங்க...கருத்துக்கு நன்றி..
அன்புடன் அருணா
கிரி said...
//ஹி ஹி ஹி//
என்ன கிரி சிரிக்கிறீங்களா? அசடு வழியுதா?
எதுவானாலும் வருகைக்கு நன்றி.
அன்புடன் அருணா
கபீஷ் said...
//:-):-):-)//
வெறும் ஸ்மைலிதானா கபீஷ்?
அன்புடன் அருணா
சிம்பா said...
//ஆகா.... அக்கா அது முதலைய விட மோசமான பிராணி ஆச்சே... ;)))//
ஆமாமா சிம்பு....முதலையை விட பல்லிக்குத்தான் ரொம்ப பயம் எனக்கு சிம்பா....
அன்புடன் அருணா
ஹஹ்ஹா...ரசித்தேன்..ரொம்ப சுட்டி உங்க செல்லம்!
பல்லியாக இருக்கலாம் என்று யூகித்தாலும் சுவாரஸ்யம் குறையவில்லை. நல்ல பதிவு.
அனுஜன்யா
MayVee said...
(i got 75 marks in science in 8th standard)
Welcome to my blog Mayvee....
Thanx for that (marks)special added information..
anbudan aruna
கோவி.கண்ணன் said...
//அப்ப பெரிய முதலைதான்.
:)))//
:)) thanx கோவி.கண்ணன் ...
அன்புடன் அருணா
அருணா அக்கா, வணக்கம்
நம்ம வீடு தேடிவந்த அந்த வீராங்கனை யார் என்று பார்த்தா
//நான் வேற கரப்பான் பூச்சி வெட்டுக் கிளியெல்லாம் வீட்டுக்குள் வந்தால் விரட்டவோ அடிக்கவோ பயப்பட்டு டம்ளர் போட்டு மூடுற வகை வீரனியாக்கும்//
சின்னப்பிள்ளைத்தன்னமா,,,
க்ராக்கடைல் ல காட்டி அம்மாவ மிரட்டிச்சா பொண்ணு, நம்ம ஊர்ல இருக்க வேண்ண்டிய பொண்ணு,
வர்றனக்கா, நல்லத எழுதினாச் சொல்லுங்க
சந்தனமுல்லை said...
//ஹஹ்ஹா...ரசித்தேன்..ரொம்ப சுட்டி உங்க செல்லம்!//
வாங்க சந்தனமுல்லை....நன்றி..
அன்புடன் அருணா
Sri said...
//Ha ha ha. Unmaya sollunga adhu modhalaya irundha neenga annaiku crocodile briyani dhaana senjirupeenga?//
அச்சச்சோ ஷ்ரீ....உங்க வீட்டிலே எல்லா வகை பிரியாணியும் உண்டு போலிருக்கே???
அன்புடன் அருணா
அனுஜன்யா said...
//பல்லியாக இருக்கலாம் என்று யூகித்தாலும் சுவாரஸ்யம் குறையவில்லை. நல்ல பதிவு. //
நன்றி அனுஜன்யா...
அன்புடன் அருணா
சகாராவின் புன்னகை said...
//அருணா அக்கா, வணக்கம்
வர்றனக்கா, நல்லத எழுதினாச் சொல்லுங்க//
முதல் வருகைக்கு நன்றி...கண்டிப்பா சொல்றேன்மா...
அன்புடன்
அன்புடன் அருணா...வணக்கம்..
மண்சட்டியின்...மகிழ்வான நிமிடங்கள்..இவ்வலையில்.
கிடைத்தமைக்கு மிக்க மகிழ்ச்சி..
மண்சட்டி...யாரென்று உங்களுக்கும்..
தெரியும்.. கண்டுபிடிங்க பார்க்கலாம்...
அன்புடன் மண்சட்டி..அமீரகம்....
http://elangovan68.blogspot.com
அன்புடன் அருணா..
அருமையான கவிதைகள்..
அடிக்கடி..மண்சட்டியின் வருகை
அமைந்திட..வாழ்த்துகின்றேன்..
அன்புடன் மன்சட்டி
NAAN APPIDIYE "SHOCK" AAYITTEN......!!!!
Post a Comment
வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!
அன்புடன் அருணா