Click here to enlarge pic.
வேர்க்கிறதா உனக்கு...
வண்ணத்துப் பூச்சிகள்
அனுப்புகிறேன்.....
அந்த இறகுகளால்
விசிறிக் கொள் ....
குளிர்கிறதா உனக்கு
சூரியனை அனுப்புகிறேன்
இஷ்டப் படிக்
குளிர் காய்ந்து கொள்...
வலிக்கிறதா உனக்கு?
மயிலிறகுகளை உனக்குக்
கடன் தரும் மயில்களை
அனுப்புகிறேன்
அழுகை வருகிறதா உனக்கு?
வானம் மடித்து அனுப்புகிறேன்...
கண்ணீர் துடைக்கும்
கைக்குட்டையாய்
பயன் படுத்திக் கொள்......
தனிமை வாட்டுகிறதா உன்னை?
நட்சத்திரக் கூட்டம் அனுப்புகிறேன்...
இரவு முழுவதும் பேசிக் காலை
அனுப்பி விடு
கசக்கிப் பிழியும் துக்கத்தின்
வேதனையாஉனக்கு?
தயவு செய்து அது அத்தனையயும்...
என்னிடம் கொடுத்துவிட்டு...
பதிலுக்கு என் சந்தோஷத்தை
எடுத்துக்கொள்..!
மரண பயமா உனக்கு?
நான் எதுவும் செய்ய முடியாது..!
அந்த பயம் எனக்கும் உண்டு..!
ஏனென்றால் மரணத்தில்...
உன்னைப் பிரியும் அபாயம் உண்டு..!
40 comments:
ஆஹா... நல்ல கவிதை... முடிவு அபாரம்....ஓவியத்தை மனதில் கொண்டு படித்து பார்த்த போது... இறைவன் மனிதனுக்கு அல்லது பக்தனுக்கு சொல்லும் கவிதையோ என நினைத்தேன்....
shri ramesh sadasivam said...
//இறைவன் மனிதனுக்கு அல்லது பக்தனுக்கு சொல்லும் கவிதையோ என நினைத்தேன்....///
இறைவன் பக்தனுக்கு சொல்லும் கவிதையாகவே எடுத்துக் கொள்ளலாமே??வருகைக்கு நன்றி!
அன்புடன் அருணா
//மரண பயமா உனக்கு?
நான் எதுவும் செய்ய முடியாது..!
அந்த பயம் எனக்கும் உண்டு..!
ஏனென்றால் மரணத்தில்...
உன்னைப் பிரியும் அபாயம் உண்டு..! //
எல்லா கவிதைகளுமே அருமை..அருணா.
கலக்கிட்டிங்க:)
//இறைவன் பக்தனுக்கு சொல்லும் கவிதையாகவே எடுத்துக் கொள்ளலாமே??//
//ஏனென்றால் மரணத்தில்...
உன்னைப் பிரியும் அபாயம் உண்டு..!//
இறந்தால் இறைவன் சந்தோஷப்படதானே வேண்டும். இறந்தவர் இறையோடு ஒன்றாய் கலந்துவிடுகிறார்கள்ன்னுதானே சொல்லறாங்க..
அடிக்கடி இறப்பு பற்றியே... அவ்வ்வ்...
வாழும்போதாவது, இந்த "இறப்பு" மேட்டரை மறக்க மாட்டிங்களா அருணா?:P
வாவ்...அசந்து போனேன் உங்கள் கவிதை வரியில்...
ரசிகன் said...
அடிக்கடி இறப்பு பற்றியே... அவ்வ்வ்...
வாழும்போதாவது, இந்த "இறப்பு" மேட்டரை மறக்க மாட்டிங்களா அருணா?:P
அதுதானே????இறப்பை நோக்கித்தானே பயணமே.????ஆனாலும் மறக்க முயற்சிக்கிறேன் ரசிகன்....
அன்புடன் அருணா
ரசிகன் said...
//எல்லா கவிதைகளுமே அருமை..அருணா.
கலக்கிட்டிங்க:)//
நன்றி...நன்றி...
//இறந்தால் இறைவன் சந்தோஷப்படதானே வேண்டும். இறந்தவர் இறையோடு ஒன்றாய் கலந்துவிடுகிறார்கள்ன்னுதானே சொல்லறாங்க..//
அதுதானே? இதெப்படி எனக்குப் புரியாமல் போனது?
அன்புடன் அருணா
இனியவள் புனிதா said...
//வாவ்...அசந்து போனேன் உங்கள் கவிதை வரியில்...///
மிக்க நன்றி புனிதா!
அன்புடன் அருணா
நல்லா இருக்குங்க.
ஆனா, உங்க்க் யூஅரெல்தான் உதைக்குது. எதுக்கு நெகட்டிவ் திங்கிங்!
வாங்க ஆடுமாடு!!!!
கொஞ்சம் கஷ்டமாதான் இருக்கு இப்பிடிக் கூப்பிடுறதுக்கு....ஆனால் என்ன செய்வது உங்க பேர் அப்பிடி!!!
அதுதான் இப்போ அன்புடன் அருணா ஆகிட்டோமில்லே!!! URL மாத்திடுறேன் சீக்கிரமே!!!
//இறந்தால் இறைவன் சந்தோஷப்படதானே வேண்டும். இறந்தவர் இறையோடு ஒன்றாய் கலந்துவிடுகிறார்கள்ன்னுதானே சொல்லறாங்க..//
நானும் இதே காரணத்தை மனதில் கொண்டுதான்.... //இறைவன் மனிதனுக்கு சொல்லும் கவிதையோ என்று நினைத்தேன்// என்று சொன்னேன்.
அருமை :)
புரிகிறது புரிகிறது....இப்போ புரிந்தே விட்டது...நன்றி ரமேஷ்..
அன்புடன் அருணா
நன்றி....வினையூக்கி..
அன்புடன் அருணா
நல்ல கவிதை..
:)
http://msaravanakumar.blogspot.com/2008/07/blog-post_20.html
என்னுடைய இப்பவிதில் நீங்கள் இட்ட பின்னூட்டத்தை நீங்களே திருப்பி எடுத்து கொண்டதாய் அறிந்தேன்..
"This post has been removed by the author."
காரணம் என்னவோ??? நான் அறிந்து கொள்ளலாமா....
ஏதேனும் குறையிருப்பின் சுட்டி காட்டலாம்..
:)
ஒரு வழிபோக்கனாய் இங்கே வர நேர்ந்தது!! வீண்போகவில்லை!! மீண்டும் வருவேன்!
உங்க ஒரு பதிவில "நான் சுஜாதாவோ பாலகுமாரனோ இல்லை, ஏதோ எழுதறேன்னு சொல்லி இருக்கீங்க"........ உலக அறிமுகம் கிடைத்ததனால் அவர்கள் எழுத்து பேசப்படுகிறது!!! அவர்களுக்கு நீங்கள் ஒன்னும் குறைந்தவர் இல்லை என்று நினையுங்கள், இறுமாப்பில் இல்லை, தன்னம்பிக்கையில்!!!!
Saravana Kumar said...
http://msaravanakumar.blogspot.com/2008/07/blog-post_20.html
என்னுடைய இப்பவிதில் நீங்கள் இட்ட பின்னூட்டத்தை நீங்களே திருப்பி எடுத்து கொண்டதாய் அறிந்தேன்..
"This post has been removed by the author."
காரணம் என்னவோ??? நான் அறிந்து கொள்ளலாமா....
முதல்ல வருகைக்கு நன்றி!!!
ஒரே பின்னூட்டம் ரெண்டு தடவை பிரசுரம் ஆகியிருந்ததுப்பா ....வேற ஒண்ணுமில்லே!!!
அன்புடன் அருணா
Maddy said...
//ஒரு வழிபோக்கனாய் இங்கே வர நேர்ந்தது!! வீண்போகவில்லை!! மீண்டும் வருவேன்! //
வாங்க ....வாங்க....Always welcome...
//அவர்களுக்கு நீங்கள் ஒன்னும் குறைந்தவர் இல்லை என்று நினையுங்கள், இறுமாப்பில் இல்லை, தன்னம்பிக்கையில்!!!!//
நிச்சயம் உண்டு தன்னம்பிக்கை.....
அன்புடன் அருணா
//இறைவன் மனிதனுக்கு அல்லது பக்தனுக்கு சொல்லும் கவிதையோ//
ஆம் இறைவன் மனிதனுக்கு (அ) பக்தனுக்குச் சொல்லும் கவிதைதான்.
மிக நல்ல கவிதை.
வாழ்த்துக்கள்.
//ஒரே பின்னூட்டம் ரெண்டு தடவை பிரசுரம் ஆகியிருந்ததுப்பா ....வேற ஒண்ணுமில்லே!!!//
நல்லவேளை..
நான் ஏன் மீதோ அல்லது என் கிறுக்கல்கள் மீதோ ஏற்பட்ட கோபம் காரணமாக திருப்பி எடுத்துகொண்டீர்களோ என்று கருதிவிட்டேன்..
நன்றி.. :)
//ஒரே பின்னூட்டம் ரெண்டு தடவை பிரசுரம் ஆகியிருந்ததுப்பா ....வேற ஒண்ணுமில்லே!!!//
அப்படியெல்லாம் இல்ல..
ஒன்றே ஒன்றுதான் இருந்தது.. அதுவும் இப்போதும் திருப்பி எடுக்கப்பட்டுவிட்டது..
:(
என் பக்கத்திற்கு அவ்வப்போது வருபவர் நீங்கள்.. உங்கள் வருகை எனக்கு மிக முக்கியம்.. அதனால்தான்.. :)
// கசக்கிப் பிழியும் துக்கத்தின்
வேதனையாஉனக்கு?
தயவு செய்து அது அத்தனையயும்...
என்னிடம் கொடுத்துவிட்டு...
பதிலுக்கு என் சந்தோஷத்தை
எடுத்துக்கொள்..!
மரண பயமா உனக்கு?
நான் எதுவும் செய்ய முடியாது..!
அந்த பயம் எனக்கும் உண்டு..!
ஏனென்றால் மரணத்தில்...
உன்னைப் பிரியும் அபாயம் உண்டு..! //
இது தான் உங்க கவிதையின் 'ஹை லைட்'.......சூப்பர்ப்!!
J J Reegan said...
//இது தான் உங்க கவிதையின் 'ஹை லைட்'.......சூப்பர்ப்!!//
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ரீகன்....
அன்புடன் அருணா
அருமையான கவிதை வரிகள்.பாராட்டுக்கள்
தி.விஜய்
http://pugaippezhai.blogspot.com/
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி விஜய்...
அன்புடன் அருணா
அந்தோணி முத்து said...
ஆம் இறைவன் மனிதனுக்கு (அ) பக்தனுக்குச் சொல்லும் கவிதைதான்.
மிக நல்ல கவிதை.
வாழ்த்துக்கள்.
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி அந்தோணி.
அன்புடன் அருணா
//கசக்கிப் பிழியும் துக்கத்தின்
வேதனையாஉனக்கு?
தயவு செய்து அது அத்தனையயும்...
என்னிடம் கொடுத்துவிட்டு...
பதிலுக்கு என் சந்தோஷத்தை
எடுத்துக்கொள்..!//
படித்துவிட்டு ஒரு பெருமூச்சு சிறிதாக..
மனதுக்கு இதமானவை நிறையப்பெற்ற நல்ல கவிதை.
நல்ல சிந்தனை...
நர்மதா, தினேஷ்...நன்றி வருகைக்கும், வாழ்த்துக்கும்...
அன்புடன் அருணா
நல்ல கவிதை.
அனுஜன்யா
நன்றி அனுஜன்யா..
அன்புடன் அருணா
NALLA KAVITHAI VALTHUKAL
அழுத்தமான, அருமையான கவிதை
கவிதை உள்ளபடியே அருமை.,அருமை.படம் மிகப்பொருத்தம்.
புரிதலின் வரிகள்
அழகாக இருக்கின்றன
அருணா.. :)))
DPANI கூறியது...
//NALLA KAVITHAI VALTHUKAL//
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி...
அன்புடன் அருணா
சேவியர் கூறியது...
//அழுத்தமான, அருமையான கவிதை//
நன்றி சேவியர்..
அன்புடன் அருணா
ச.முத்துவேல் கூறியது...
//கவிதை உள்ளபடியே அருமை.,அருமை.படம் மிகப்பொருத்தம்.//
நன்றி முத்துவேல்....
அன்புடன் அருணா
நவீன் ப்ரகாஷ் கூறியது...
//புரிதலின் வரிகள்
அழகாக இருக்கின்றன
அருணா.. :)))//
வாங்க நவீன்.வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி....
அன்புடன் அருணா
Post a Comment
வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!
அன்புடன் அருணா