நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Saturday, June 28, 2008

நானும் என் கடவுள்களும்

Click here to enlarge Picture

Hearty thanks for the picture...

சின்ன வயசுல கடவுள் நம்பிக்கை ஒருவித பயத்தோடவே இருந்தது.

அப்பிடி செய்யாதே... இப்பிடி செய்யக் கூடாது, சாமி தண்டிக்கும் இந்த வார்த்தைகளில் இருந்து நானும் தப்பிக்கவில்லை.

அப்புறம் என் ஷெல்ப் சுவரில் என் இஷ்ட தெய்வங்கள் அவ்வப்போது மாறுவதுண்டு.

மாற்றங்களுக்குப் பெரிய Strategy எதுவும் இருந்ததில்லை.

துணைவன் படம் பார்த்த மறுநாள் முருகன் படமும்,
திருமால் பெருமை பார்த்த பின் பெருமாள் படமும்,
சபரிமலை ஐயப்பன் பார்த்தபின் ஐயப்பன் படமும்,
ஜீஸஸ் பார்த்த பின் கர்த்தர் படமும்,
அன்னை வேளாங்கன்னி பார்த்த பின் வேளாங்கன்னியுமாக...
மாறிய படியே இருந்திருக்கிறது என் இஷ்ட தெய்வங்களின் வரிசை.


பின் சில காலங்களுக்கு சாமியிடம் வெரும் வியாபாரம் மட்டுமே நடத்தியிருக்கிறேன்.

80% மேல மார்க் தந்து விடு உனக்கு, ஒரு மாலை,
காணாமல் போன பேனாவைக் கண்டுபிடித்துக் கொடு, உனக்கு ஒரு ரூபாய்,
லேட்டா வீட்டுக்குப் போறதுக்கு அம்மா திட்டக் கூடாது, ஒரு விளக்கு.
இந்த ரேஞ்ச்லேதான் இருக்கும்.

இப்போ கொஞ்சம் மனது விரிந்து எண்ணங்கள் தெளிந்து கடவுள் உண்டு ...
அதற்கு கெட்டது செய்யவே தெரியாதுன்னும் நல்லது மட்டும்தான் செய்யும்னு தெளிவு வந்துருக்கு....

ரொம்ப எளிமையான வரிகளில் சொல்லணும்னா...

எனக்குக் கடவுள் உண்டு ஆனால் அதற்கு மதமும் பெயரும் கிடையாது! (இது என் நட்பின் பேட்டியிலிருந்து சுட்டது)

பின்னே நமக்கு நடக்கிற கெட்டதற்கெல்லாம் காரணம்...???

அட நாம் தாங்க!!!

அதுக்குப் போய் வீணாக் கடவுள் மேல பழியைப் போட்டுக்கிட்டு!!!!

26 comments:

வினையூக்கி said...

அருமையா சொன்னீங்க

Vijay said...

தனிமனித கஷ்டங்களை தனிமனித தவறுகளுக்கு காரணமாக காணும்போது இந்த கருத்து எற்றுக்கொள்ள தக்கதே. ஆனால் ஒரு சில பொது அழிவுகள் நிகழும்போது இந்த காரணம் அவ்ளோவா சரியா வராது..நிறைய லிங்க் (ஒட்டு (அ) சப்பைகட்டு) போட வேண்டி இருக்கு.(உங்க சீஸன் சினிமா சாமி சேன்ச் மாதிரி.."தசாவதார" பாதிப்பா கூட இருக்கலாம் என் பதில். :P)

Anonymous said...

பின் சில காலங்களுக்கு சாமியிடம் வெரும் வியாபாரம் மட்டுமே நடத்தியிருக்கிறேன்.80% மேல மார்க் தந்து விடு உனக்கு ஒரு மாலை,காணாமல் போன பேனாவைக் கண்டுபிடித்துக் கொடு உனக்கு ஒரு ரூபாய்,லேட்டா வீட்டுக்குப் போறதுக்கு அம்மா திட்டக் கூடாது ஒரு விளக்கு இந்த ரேஞ்ச்லேதான் இருக்கும்.


Haa haa. Erakkuraya naanum ippadi thaan ka panni irukken. Aana naaanum ippo nalla payana maritten. Also 50 post adichadhukku vaazthukkal :)

Aruna said...

வினையூக்கி said...
அருமையா சொன்னீங்க...

Thank U vinaiyuukki!
anbudan aruna

Aruna said...

.Vijay said... //(உங்க சீஸன் சினிமா சாமி சேன்ச் மாதிரி.."தசாவதார" பாதிப்பா கூட இருக்கலாம் என் பதில். :P)//

அட..அப்பிடியா இன்னும் தசாவதாரம் பார்க்கலையேப்பா!!
அன்புடன் அருணா

Aruna said...

ஸ்ரீ said...
//Haa haa. Erakkuraya naanum ippadi thaan ka panni irukken. Aana naaanum ippo nalla payana maritten. Also 50 post adichadhukku vaazthukkal :)//

வாழ்த்துக்கு நன்றி!
நல்ல பையனா மாறினதுக்கு வாழ்த்துக்கள்
அன்புடன் அருணா

Jackiesekar said...

கடவுள் என்பது ஒரு சக்தி அதற்க்கு உருவம் கிடையாது . அதே போல் நாம் கண்ணுக்கு எதிரில் தெரியும் ஒரே சக்தி சூரியன்தான் என்பேன் சற்றே யோசித்துபாருங்கள் தெரியும்

ரசிகன் said...

//நமக்கு நடக்கிற கெட்டதற்கெல்லாம் காரணம் ?அட நாம் தாங்க!! அதுக்குப் போய் வீணாக் கடவுள் மேல பழியைப் போட்டுக்கிட்டு!!!! //

அட...நெசதானுங்க:). என்னாமா யோசிக்கறாய்ங்கய்யா:)

ரசிகன் said...

//நமக்கு நடக்கிற கெட்டதற்கெல்லாம் காரணம் ?அட நாம் தாங்க!! ! //

கூடவே நடக்கற நல்லது & கெட்டதுக்கெல்லாம்ன்னு மாத்தியிருந்தா பொருத்தமாயிருக்கும்ன்னு தோனுது:)

Aruna said...

jackiesekar said...
//கடவுள் என்பது ஒரு சக்தி அதற்க்கு உருவம் கிடையாது . அதே போல் நாம் கண்ணுக்கு எதிரில் தெரியும் ஒரே சக்தி சூரியன்தான் என்பேன் சற்றே யோசித்துபாருங்கள் தெரியும்///

Sure.... u r rite jackiesekar.
anbudan aruna

Aruna said...

ரசிகன் said... அட...நெசதானுங்க:). என்னாமா யோசிக்கறாய்ங்கய்யா:)

அட அப்பிடியா??


கூடவே நடக்கற நல்லது & கெட்டதுக்கெல்லாம்ன்னு மாத்தியிருந்தா பொருத்தமாயிருக்கும்ன்னு தோனுது:)

அதுவும் சரிதான் ரசிகன்!
அன்புடன் அருணா

ramesh sadasivam said...

என்னைப் பொறுத்தவரை நன்மை தீமை இரண்டுக்குமே இறைவன் தான் காரணம். மகிழ்ச்சியாய் இருக்கும் போது, நிமமதியாக இருக்கும் போது இறைவனுக்கு நன்றி சொல்வேன்.... மனம் புண்பட்டு விட்டால்.. பாவம் கடவுள்.. செம திட்டு வாங்குவார்...கீதையை பத்து ஆண்டுகளுக்கு முன் படித்ததிலிருந்து நான் இப்படித் தான்... எதற்குமே நாம் பொறுப்பல்ல இறைவனே பொறுப்பு என நினைக்கும் போது மனதின் பாரங்கள் குறைந்து விடுவதை நான் உணர்ந்திருக்கிறேன். என் தரப்பில் என் மீது குற்றம் இல்லாத படி செயல் பட வேண்டும் என்கிற அக்கறை மட்டும் தான்..என் பிளாகில் நான் இறைவனுக்கு எழுதிய கடிதத்தை படிக்கவும்.. தங்களுக்கு பிடிக்கும் என நினைக்கிறேன்.

Aruna said...

//எதற்குமே நாம் பொறுப்பல்ல இறைவனே பொறுப்பு என நினைக்கும் போது மனதின் பாரங்கள் குறைந்து விடுவதை நான் உணர்ந்திருக்கிறேன். //


ரொம்ப சரியாகச் சொன்னீர்கள்..உங்களின் கடவுளுக்கு ஓர் கடிதம் படித்தேன்..நிரம்பவும் பிடித்திருந்தது.
அன்புடன் அருணா

Anonymous said...

நல்ல நடை உங்களுக்கு வாய்த்திருக்கிறது. விஷயத்தை உங்கள் பார்வையிலிருந்து தெளிவாய் வைக்கும் விதம் நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.

Aruna said...

சேவியர் said...
நல்ல நடை உங்களுக்கு வாய்த்திருக்கிறது. விஷயத்தை உங்கள் பார்வையிலிருந்து தெளிவாய் வைக்கும் விதம் நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள்//

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சேவியர்!
அன்புடன் அருணா

Unknown said...

வாழ்த்துகள் அருணா அக்கா..!! :-)

Sateesh said...

//பின்னே நமக்கு நடக்கிற கெட்டதற்கெல்லாம் காரணம்...???

அட நாம் தாங்க!!!
//
இல்லைங்க அந்த கெட்டதுக்கும் கடவுள் தான் காரணம்....
'அன்பே சிவம்' பாணியில சொல்லனும்னா... "ஏன்னா நானும் கடவுள் நீங்களும் கடவுள்"...

Aruna said...

//'அன்பே சிவம்' பாணியில சொல்லனும்னா... "ஏன்னா நானும் கடவுள் நீங்களும் கடவுள்"//

அட இது கூட நல்லா இருக்கு.....
அன்புடன் அருணா

தினேஷ் said...

தெளிவான, உயர்ந்த, கடவுளை மற்றும் மனிதனை உண்மையிலே மதிக்கிற சிந்தனை...

உங்கள் நல்ல சிந்தனைக்கும், எண்ணத்திற்கும் & எழுத்துக்கும் தலைவணங்குகிறேன்...

வணக்கத்துடன்,
தினேஷ்

Aruna said...

தினேஷ் said...
//தெளிவான, உயர்ந்த, கடவுளை மற்றும் மனிதனை உண்மையிலே மதிக்கிற சிந்தனை...

உங்கள் நல்ல சிந்தனைக்கும், எண்ணத்திற்கும் & எழுத்துக்கும் தலைவணங்குகிறேன்...//

அழகிய பின்னூட்டத்திற்கு நன்றி....
அன்புடன் அருணா

anujanya said...

அருணா,

நல்ல கருத்து. அழகாக எழுதுகிறீர்கள். அந்தப் படம் மிக மிக அழகு.

அனுஜன்யா

sri said...

//கடவுள் என்பது ஒரு சக்தி அதற்க்கு உருவம் கிடையாது . அதே போல் நாம் கண்ணுக்கு எதிரில் தெரியும் ஒரே சக்தி சூரியன்தான் என்பேன் சற்றே யோசித்துபாருங்கள் தெரியும்//

We are surrounded by sakthi - energy - look at the rain - the life giving water is gods form, look at the wind blowing gently to cool off - its god form too. As much as we need the warmth of the sun we need other energies too :) and god is present in everything in everdetail from ant to whales - and us ? we are also combination of all these energies and so god is present is us :) - aahaa thathuvam solliyaachu

அன்புடன் அருணா said...

அனுஜன்யா said...
அருணா,
//நல்ல கருத்து. அழகாக எழுதுகிறீர்கள். அந்தப் படம் மிக மிக அழகு. //
நன்றி அனுஜன்யா!!!

அன்புடன் அருணா said...

Srivats said...
//aahaa thathuvam solliyaachu//

ரொம்ப உண்மையான தத்துவம்...புரிந்தது....

நிகழ்காலத்தில்... said...

விஜய்\\ஆனால் ஒரு சில பொது அழிவுகள் நிகழும்போது இந்த காரணம் அவ்ளோவா சரியா வராது\\

சரியா வரும். அதில் சந்தேகம் இல்லை

ரமேஷ் சதாசிவம்\\எதற்குமே நாம் பொறுப்பல்ல இறைவனே பொறுப்பு என நினைக்கும் போது மனதின் பாரங்கள் குறைந்து விடுவதை\\

தவறான மன நிலை.
நம் தவறுகளை திருத்திக்கொள்ளும் வாய்ப்பை இழந்து விடுகிறோம்.
அனைத்துக்குமே நாம் பொறுப்பு என சிந்தனைப்பார்வையோடு இருந்து பாருங்கள்
பின் புரியும்

praveen said...

தவறான மன நிலை.
நம் தவறுகளை திருத்திக்கொள்ளும் வாய்ப்பை இழந்து விடுகிறோம்.
அனைத்துக்குமே நாம் பொறுப்பு என சிந்தனைப்பார்வையோடு இருந்து பாருங்கள்
பின் புரியும். thank you pa.

Post a Comment

வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!

அன்புடன் அருணா