நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Tuesday, February 19, 2008

நீயும், நானும்,நம் கோபங்களும்.....

உன் கோபமும்
என் கோபமும்
யாரை என்ன செய்து விட முடியும்?
சரியாகப் போடாத சாலைகளுக்காக அரசாங்கம் மேல்
உன் கோபம்...
போட்ட சாலைகளை குப்பைக் கூடமாகிய மக்கள் மேல்
என் கோபம்..
மரம் நட்டு பராமரிக்காத அரசாங்கம் மேல்
உன் கோபம்...
மரம் வெட்டி வருமானம் பார்க்கும் மக்கள் மேல்
என் கோபம்..
தேவைக்குத் தண்ணீர் தராத அரசாங்கம் மேல்
உன் கோபம்...
சொட்டுப் போடும் குழாயை சரி செய்யாத மக்கள் மேல்
என் கோபம்..
சாதி,இனம்,மதம் இவற்றை முன் வைத்தே ஜெயிக்கும் அரசாங்கம் மேல்
உன் கோபம்...
சாதி,இனம் ,மதம் என்றே வாழ்ந்து வரும் மக்கள் மேல்
என் கோபம்..
சாலை விதிகளை மீறும் மக்கள் மேல்
உன் கோபம்..
சாலை விதிகளை மீறுபவனிடம் கையேந்தும் காவலன் மீது
என் கோபம்..
உன் கோபமும்
என் கோபமும்
யாரை என்ன செய்து விட முடியும்???

10 comments:

Dreamzz said...

ithula ethu naanga? ethu neega :)

nalla kavidhai :)

C.N.Raj said...

Aruna,

Ungal Kavithaiyum,
En Paraattum,
Thiruntha ventiya Samuthaayathaip patri Ungal Kavithai,
Samuthaya Akkarai konda Ungalukku
En Paraattu....!

Take a look at my new Mokkai article,if time permits.

C.N.Raj

நிவிஷா..... said...

சமுதாய விழிப்புணர்வு கவிதை
நல்லா இருக்கு

நட்போடு
நிவிஷா

ரசிகன் said...

என்னாச்சு அருணா?...ஏன் இந்த புலம்பல்...
ஜாலியா படிக்க வந்தா ,இங்க
ஊர்ல இருக்குற எல்லாரையும் திட்டுறதை கேக்க எங்களுக்கு கோபம்
இந்த உண்மையை சொன்னா, எங்க மீது உனக்கு கோபம்
உன் கோபமும்
என் கோபமும்
யாரை என்ன செய்து விட முடியும்???
இது எப்டியிருக்கு.?ஹிஹி:)))))))))
இது சும்மா..

உண்மையிலேயே கவிதையில் பொதிந்துள்ள அவலங்களை,எடுத்துரைக்கும் சமுகப் பற்று நல்லா இருக்குப்பா.. வாழ்த்துக்கள்..

ரசிகன் said...

//சாதி,இனம் ,மதம் என்றே வாழ்ந்து வரும் மக்கள் மேல்
என் கோபம்..//

பாயிண்ட்...keepit up.

பாச மலர் / Paasa Malar said...

யாரோ எப்டியோ போகட்டும் நம்ம நல்லா நடப்போம் அருணா..

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish said...

உண்மை தான் கோபங்கள் என்ன செய்துவிடமுடியும்!

கோபங்கள் அழகு :))

மஞ்சூர் ராசா said...

நம் இருவரின் கோபமும் நியாயமானது தான்.

ஆனால் யாருக்கு புரிய போவுது. அல்லது புரிஞ்சிதான் என்னத்தெ செய்ய போறாங்க.

பின்குறிப்பு: கோபம் உடல் நலத்திற்கு கேடு.

N Suresh said...

சில நொடிகள்
கோபத்தை கட்டுக்குள் வைத்திருந்தால் சிறைகளின் கூட்டுக்குள்
இருந்திருக்கமாட்டார்கள் பலர்!

கோபப்படாமல் இருந்திருந்தால்
மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியிடம்
இந்தியாவிற்கான சுதந்திரத்தீ
ஜனித்திருக்காது


வாழ்த்துகள் அருணா

என் சுரேஷ்

Anonymous said...

எனக்கும் கூட
கோபம்தான்.

என் மேல்...
மட்டுமே...

Post a Comment

வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!

அன்புடன் அருணா