உன் கண்களில் நட்சத்திரப் பூக்கள் பார்த்து
எத்தனை நாளாச்சு?
நட்சத்திர வானம் பார்த்தும்தான்
எத்தனை நாளாச்சு?
உன்னோடு சிரித்துப் பேசி
எத்தனை நாளாச்சு?
என் வீட்டு ஜன்னலில் நிலவு எட்டிப் பார்த்தும்தான்
எத்தனை நாளாச்சு?
உன் கையோடு கைகோர்த்து
எத்தனை நாளாச்சு?
மழையோடு வானவில் பார்த்தும்தான்
எத்தனை நாளாச்சு?
உன்னோடு சண்டை போட்டு
எத்தனை நாளாச்சு?
இடியோடு மின்னலும்தான் பார்த்து
எத்தனை நாளாச்சு?
17 comments:
ஆமாம்.
நிஜம்தான்.
வேறென்ன சொல்ல...
பழகிக்கணும் பேத்தி.
nice kavidhai akka :)
naanum puthu post pottu irukken. etti paarunga
natpodu
nivisha
சூப்பர் கவிதை.
பதிவு தலைப்பு மாறியிருக்கு. நன்றி
வாழ்த்துக்கள்.
அன்புடன்
சிவராமன்
மங்களூர்
//மழையோடு வானவில் பார்த்தும்தான்
எத்தனை நாளாச்சு?
உன்னோடு சண்டை போட்டு
எத்தனை நாளாச்சு?
இடியோடு மின்னலும்தான் பார்த்து
எத்தனை நாளாச்சு?//
en US vandhuteengalo?
;)
ada.. 3rd naan :)
oops 4 th naan
Kavithai is so nice Aruna!
============
உன் கண்களில் நட்சத்திரப் பூக்கள் பார்த்து
எத்தனை நாளாச்சு?
=========
கண்களில் நட்சத்திரப் பூக்களைப் பார்த்திருந்தால், எத்தனை நாளாச்சு என்ற கேள்விக்கான ஆயுள் குறைந்துவிடும்
==========
மழையோடு வானவில் பார்த்தும்தான்
எத்தனை நாளாச்சு?
==========
மழையே சுகம், அதோடு வானவில்லும் கண்டிருந்தால், மனதைக் காப்பது கடினம்தான்
======
உன்னோடு சண்டை போட்டு
எத்தனை நாளாச்சு?
=======
அதைச் சொல்லுங்க. எல்லோரிடமும் சண்டைபோட்டுவிடமுடியுமா? அதீத அன்பும் நெருக்கமும் எங்கே இருக்கிறதோ அங்கே மட்டும்தானே சண்டை போடமுடியும்?
=========
இடியோடு மின்னலும்தான் பார்த்து
எத்தனை நாளாச்சு?
===========
இதையேதான் சொன்னேன், இடி என்பதை மின்னல் வென்றுவிடுகிறதே எப்போதும் வாழ்வில்...
அவ்வ்வ்வ்வ்.....
இம்புட்டு கேள்வியா?..
அருணா பொண்ணு..,உங்க வீட்டுல காலண்டர் இல்லியா?..:P
கண்களில் நட்சத்திரங்கள் - நட்சத்திர வானம்
சிரித்து பேச - ஜன்னலில் நிலவு பார்க்க
கையோடு கை - மழையோடு வானவில்
உன்னோடு சண்டை - இடியோடு மின்னல்
மிக அருமையான உவமைகள்!!! இரசித்தேன் அன்புடன் அருணா :))
அன்புள்ள அருணா...
மிகுந்த அழகுடன் இந்த பதிவு மிளிர்கிறது. மழையோடு வானவில், இடியோடு மின்னல், ஜன்னலில் நிலவு, நட்சத்திர வானம் - இவையெல்லாம் எப்போதும் எங்கேனும் இருந்துகொண்டேதான் இருக்கிறது. ஆனால், அதை ஆழ்ந்து பார்க்கும் பார்வை இருப்பதே பெரிய வரம்.
உங்கள் வார்த்தைகள் அதைச்சொல்கின்றன. வாழ்த்துக்கள்.
நேரமிருந்தால் என் தளத்திற்கும் வாருங்களேன்...
ஹை அருணா
இப்போதான் உங்க பிளாக் பார்த்தேன்.
அருமையான எழுத்து நடை.ஆனாலும் சோகம் அதிகம்.
தவிர்க்கலாம்.
நிறைய எழுதுங்கள்.சந்தோஷம் தானே வரும்.
இயற்கை அழகும் உணர்வும் ஒன்றிய ஒரு கவிதை...நல்லாருக்கு அருணா..
//சாம் தாத்தா said...
பழகிக்கணும் பேத்தி.//
பழகிக்கறேன் சாம் தாத்தா!
//நிவிஷா..... said...
nice kavidhai akka :)
naanum puthu post pottu irukken. etti paarunga//
நன்றி நிவிஷா!இதோ உங்க வீட்டுக்கு வந்துகிட்டே இருக்கேன்!
//மங்களூர் சிவா said...
சூப்பர் கவிதை.
பதிவு தலைப்பு மாறியிருக்கு. நன்றி
வாழ்த்துக்கள்.//
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி, சிவா!
Dreamzz said...
//மழையோடு வானவில் பார்த்தும்தான்
எத்தனை நாளாச்சு?
உன்னோடு சண்டை போட்டு
எத்தனை நாளாச்சு?
இடியோடு மின்னலும்தான் பார்த்து
எத்தனை நாளாச்சு?//
en US vandhuteengalo?
அப்பிடியா?இதெல்லாம் யு.எஸ் லே கிடையாதா??ஆனாலும் கூட கவிதையெல்லாம் நல்லா எழுதுறீங்க!
அன்புடன் அருணா
//ரசிகன் said...
அவ்வ்வ்வ்வ்.....
இம்புட்டு கேள்வியா?..
அருணா பொண்ணு..,உங்க வீட்டுல காலண்டர் இல்லியா?..:P//
நிஜம்தான் ரசிகன்! இன்னும் எங்க வீட்டுக்கு தமிழ் காலண்டர் வரவில்லை!!!
அன்புடன் அருணா
வருகைக்கும் ,வாழ்த்துக்கும் நன்றி அம்மு,டெல்பின்,பாசமலர்,சதீஷ்!
கண்மணி said...
//ஆனாலும் சோகம் அதிகம்.
தவிர்க்கலாம்.
நிறைய எழுதுங்கள்.சந்தோஷம் தானே வரும்.//
எனக்கு என்னமோ சோகம் சுகமாக எழுத வருகிறது கண்மணி!!!
நித்யகுமாரன் said...
மழையோடு வானவில், இடியோடு மின்னல், ஜன்னலில் நிலவு, நட்சத்திர வானம் - இவையெல்லாம் எப்போதும் எங்கேனும் இருந்துகொண்டேதான் இருக்கிறது. ஆனால், அதை ஆழ்ந்து பார்க்கும் பார்வை இருப்பதே பெரிய வரம்.//
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி! நித்யகுமார்.நிஜம்மாவே இது வரம்தான்!இதோ உங்க வீட்டுக்கு வந்துகிட்டே இருக்கேன்!
அன்புடன் அருணா
அழகாக உள்ளது.வாழ்த்துக்கள்
Post a Comment
வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!
அன்புடன் அருணா