நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Friday, February 1, 2008

இன்று முதல் அன்புடன் அருணா!

ஒரு வழியாக ஒரு முடிவுக்கு வந்துட்டேன்.என் ப்ளாக் பெயரை மாற்றி விடலாம் என்று ...இது இந்த மாற்றம் என்னைத் தவிர மற்றவர்களுக்காக....முதல் முதல் பெயரைச் சொன்னவுடனே "பெயரை மாத்து இல்லைன்னா உன் பேச்சு கா" என்று வாரிய சேகரனுக்காகவும்,

"ஏன் இந்தப் பெயரை வைத்தாய்" என்று தினம் என்னை வதைக்கும் அந்தோணி முத்துவுக்காகவும்,

ப்ளாக் பெயரை மாற்றுங்க என்று 4 முறை கமென்ட் பண்ணிய,//இந்த 'வலைப்பூ'வின் தலைப்பை படிக்கும் போது ஆமாய்யா போய்சேரத்தானே போறோம் என்னத்துக்கு அதை இதை செஞ்சிகிட்டு என்ற சலிப்பு மனோபாவம்தான் ஏற்படுகிறதே தவிர நீங்கள் சொலவது போல ஆணவத்தை ஒன்றும் அழிப்பதாக தோன்றவில்லை :(// என்று சலித்துக் கொண்ட மங்களூர் சிவாவுக்காகவும்,


//ஒரு எட்டு பாத்துட்டுப் போலாம்ன்னு வந்தாப் பதிவு தலைப்பே மிரட்டுதுங்களே// என்று மிரண்ட தேவ்-க்காகவும்,

அப்புறம் இந்த தலைப்பை மாத்தீடுங்களேன் ப்ளீஸ் என்று கெஞ்சிய நிலாவுக்காகவும்,

//எல்லோரும்தான் இறக்கப் போகிறோம்-ஒருநாள்,அதை நித்தமும் சொல்லிக் கொண்டிருக்க வேண்டுமா என்ன??????// என்று கேட்ட அறிவனுக்காகவும்,

//பலர் உங்களின் வலைப்பூவின் தலைப்பை மாற்ற வேண்டும் என்பதற்கு காரணம் அது உங்களின் உள்ளத்தை எல்லோரும் அறிந்திருப்பதாலும் நீங்கள் யாராக இருந்தாலும் அன்பு உள்ளம் கொண்ட நீங்கள் நீண்ட நாள் வாழ வேண்டும் என்ற அன்பால் தான்.// //இறந்துகொண்டேயிருக்கிறேன் மீண்டும் பிறந்து கொண்டேயிருக்க//என்று புதுமையான விளக்கம் சொல்லும் என்சுரேஷ்க்காகவும்,


//அப்புறம் அருணா உங்களுக்கு ஒரு ரகசியம் சொல்லறேன்..
எல்லாரும் தான் இறக்க போறோம்.. ஆனா பிறந்து இறக்கும்
அந்த இடை வெளி இருக்கு பாருங்க, அதுல வாழலாம் :)
நம்ம சந்தோஷமா இல்லன கூட அடுத்தவங்களை சந்தோஷ படுத்தின,
நம்ம மனசுக்கு நிம்மதியாசும் கிடைக்கும்..// என்று நல்ல ஐடியா கொடுத்த ட்ரீம்ஸ்க்காகவும்,


//என்ன மேடம் இப்படி ஒரு தலைப்பு குடுத்திருக்கீங்க. மாத்துங்க முதல்ல// என்று கட்டளையிட்ட ஸ்ரீக்காகவும்,


// (என்ன ஒரு பேருடா சாமி. பேரக் கேட்டாலே சும்மா அலறுவானுவ)//
//இந்த அருணா இருக்கே, பேருதான் அப்படியே தவிர, அதுக்கிட்டப் பழகிப் பாத்தா வாழணும்ங்கற ஆவல்தான் வரும். அது ரொம்ப, ந்ல்ல பிள்ளைப்பா, பேருக்கோசரம் அதை இப்படிப் போட்டு வார வேணாம் கண்ணுங்களா.//என்று எனக்கு சப்போர்ட் பண்ணும் சாம் தாத்தாவுக்காகவும்,


//ப்ளாக் பெயரை இப்படியா வைப்பது.... ஏனுங்க இந்தக் கோபம்?// என்று கேட்ட தமிழ் நெஞ்சத்திற்காகவும்,//


அடப்பாவமே... ஏனுங்க அருணா.. புதுசா இருக்கே உங்க பேருன்னு உங்க வலை வீட்டுக்கு வந்தாக்கா.. இப்பிடியா வெல்கம் போட்டு வச்சி பயம்புறுத்தறது..// என்று பயந்து கொண்ட ரசிகனுக்காகவும்,


//நான் குட்டிபாப்பாவா இருக்கலாம், இங்க இதுல நாந்தான் குரு,எனக்கு குருதட்சிணை வேணும் குருதட்சிணை என்ன தெரியுமா? உங்க ப்ளாக் தலைப்பை மாத்துனா அதுதான் எனக்கு குருதட்சிணை.மாத்துவீங்களா? இல்ல குட்டி பாப்பா பேச்செல்லாம் கேக்கறதான்னு விட்றுவீங்களா?// என்று குருதட்சிணை கேட்ட நிலாக் குட்டிக்காகவும்,

குருதட்சிணையாக பெயரை மாற்றி விடலாம் என்று நினைத்து இன்று முதல் ""நான் இறக்கப் போகிறேன் அருணா" "அன்புடன் அருணா"வாக பெயர் சூட்டப் படுகிறது.....பெயர் சூட்டும் விழாவுக்கு அனைவரும் வருக வருக என்று அன்புடன் அழைக்கிறேன்.....
அன்புடன் அருணா

26 comments:

நிலா said...

குட்டிப்பாப்பாவுக்கு குருதட்சினை கொடுத்த அன்புடன் அருணா ஆண்ட்டிக்கு நன்றி :P

வினையூக்கி said...

பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்

நிலா said...

இப்ப எப்படி ஜம்முன்னு இருக்கு பாருங்க. பிடிங்க பூங்கொத்தை.....

நிவிஷா..... said...

சூப்பர். பெயர் maathinathuku nanri.

natpodu
nivisha

Dreamzz said...

WOWWWWW! Super!
thirumba firt miss a?

கோபிநாத் said...

சூப்பர்...வாழ்த்துக்கள் "அன்புடன் அருணா" :))


அப்புறம் ஒரு சின்ன சந்தோகம் உங்க கீபோர்டுல என்டர் கீ இல்லவே இல்லையா! ? ;))

Unknown said...

வாழ்த்துக்கள்....

ஒரு பன்ச் ....

யானைக்கு தும்பிக்கை,

மனிதனுக்கு நம்பிக்கை,

அன்புடன் அருணா... அழகுதான்,

நம்பிக்கை அருணா ...
ரொம்ப பொருந்தும்...

http://thirumagal1965.blogspot.com/ said...

வாழ்த்துக்கள் "
அன்புடன் -அருணா"
:))

:(

http://thirumagal1965.blogspot.com/ said...

வாழ்த்துக்கள் "அன்புடன் அருணா" :0

ரசிகன் said...

ஹேய்..புதுப் பேரா?...சூப்பரா இருக்கு.. புது அடையாளத்தோட,பழைய அருணாவா கலக்குங்க.. வாழ்த்துக்கள்...

Aruna said...

பேரரசன் said...
//அன்புடன் அருணா... அழகுதான்,

நம்பிக்கை அருணா ...
ரொம்ப பொருந்தும்...//

அட இது கூட நல்லாதான் இருக்கு!!!!
வருகைக்கும்,வாழ்த்துக்கும்,நன்றி
அன்புடன் அருணா

Aruna said...

வருகைக்கும்,வாழ்த்துக்கும்,நன்றி வினையூக்கி!!
அன்புடன் அருணா

Aruna said...

கோபிநாத் said...
//சூப்பர்...வாழ்த்துக்கள் "அன்புடன் அருணா" :))
அப்புறம் ஒரு சின்ன சந்தேகம் உங்க கீபோர்டுல என்டர் கீ இல்லவே இல்லையா! ? ;))//

வருகைக்கும்,வாழ்த்துக்கும்,நன்றி
அதானே அதைத்தான் தேடிக் கொண்டு இருக்கிறேன்
அன்புடன் அருணா

Aruna said...

நிவிஷா.....ரசிகன்....,
வருகைக்கும்,வாழ்த்துக்கும்,நன்றி
அன்புடன் அருணா

Aruna said...

Dreamzz said...
//WOWWWWW! Super!
thirumba firt miss a?//

Thanx dreams!வர வர ரொம்ப சோம்பேறியாகிட்ட ட்ரீம்ஸ்!!!
அன்புடன் அருணா

Aruna said...

நிலா குட்டி,
வருகைக்கும்,வாழ்த்துக்கும்,நன்றி
அன்புடன் அருணா

வாங்க வாங்க சாரு-சேகரன் உங்களை மீண்டும் சந்திப்பதில் சந்தோஷம்!!
அன்புடன் அருணா

பாச மலர் / Paasa Malar said...

அருணா,

இதுதான் அழகு..

சாம் தாத்தா said...

வாக்கிங் ஸ்டிக்கை ஊன்றிக்கொண்டு... தட்டுத் தடுமாறி வந்து சேரறதுக்குள்ள...

இத்தினி பேரா....?

எப்படியோ இந்தப் பொண்ணுக்கு நல்ல புத்தி வந்தா சரிடா ஆண்டவா...!

நல்லாயிரு அருணாக் கண்ணு.

மங்களூர் சிவா said...

பாராட்டுக்கள்

வாழ்த்துக்கள்

அன்புடன்

சிவராமன்
மங்களூர்

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish said...

இந்த பெயர் புன்னகைக்க வைக்கிறது அருணா :)) URL'அ கூட பெயர மாத்தலாமே!!!

நான் சாக விரும்புகிறேன் , ஏனெனில் said...

ப்ளாக் பெயரில் என்ன இருக்கிறது அருணா. நீங்கள் என்ன எழூதி இருக்கிறீர்கள்
என்பது தான் முக்கியம். வாழ்த்துக்கள்

Aruna said...

சிவா said...
பாராட்டுக்கள்
வாழ்த்துக்கள்

பாராட்டுகளுக்கும் வருகைக்கும் ரொம்ப நன்றி சிவா!பேரை மாத்தலைன்னா வரவே மாட்டீங்களோன்னு பயந்தே போயிட்டேன்!!
அன்புடன் அருணா

சாம் தாத்தா said...
//வாக்கிங் ஸ்டிக்கை ஊன்றிக்கொண்டு... தட்டுத் தடுமாறி வந்து சேரறதுக்குள்ள...
இத்தினி பேரா....?//

போங்க தாத்தா இவ்வ்ளோ லேட்டாவா வரது?
அன்புடன் அருணா


நன்றி பாசமலர்
அன்புடன் அருணா

sathish said...
இந்த பெயர் புன்னகைக்க வைக்கிறது அருணா :)) URL'அ கூட பெயர மாத்தலாமே!!!

சதீஷ்,அது எப்பிடி பண்ணுவது என்று தெரியவில்லை இல்லையென்றால் மாற்றி இருப்பேன்!
அன்புடன் அருணா

நான் சாக விரும்புகிறேன் , ஏனெனில் said...
ப்ளாக் பெயரில் என்ன இருக்கிறது அருணா. நீங்கள் என்ன எழூதி இருக்கிறீர்கள்
என்பது தான் முக்கியம். வாழ்த்துக்கள்

நீங்கள் சொல்வது சரிதான் "பெயரில் என்ன இருக்கிறது???
உங்கள் பெயர் கூட??? உங்களை குண்டு என்பதா? தொப்பை என்பதா?? குண்டுத் தொப்பை என்பதா? உங்களின் ப்ளாக் பெயர் எவ்வளோ கஷ்டம் கொடுக்கிறதோ அவ்வளோ சிரிப்பை வரவழைக்கிறது உங்களின் பெயர்!!!!

அன்புடன் அருணா

செந்தில்நாதன் செல்லம்மாள் said...

Ama, unga palaya blog peru enna????

செந்தில்நாதன் செல்லம்மாள் said...

Ama, unga palaya blog peru enna? naanga oorukku konjam pudhusu..

N Suresh said...

பழைய தலைப்பிலும்
புதிய தலைப்பிலும்
உண்மையே உள்ளது

பழையது - வருங்காலத்தை
வெளிச்சமிட்டுக் கொண்டிருந்தது

புதியது - இன்றைய உண்மையை
உணர்த்திக்கொண்டிருக்கிறது

இறந்துகொண்டே இருக்கிறேன்
என்ற உண்மை
மனிதனின் நிஜநிலை
அன்புடன் தான் என்று
முரசுகொட்டுகிறது!

நீடூழி வாழ்க
அன்புடன் வாழ்க

என் அன்பு தோழியே
நீ பல்லாண்டு வாழ்க

பாசமுடன்
என் சுரேஷ்

Unknown said...

watis the old name?

Post a Comment

வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!

அன்புடன் அருணா