நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Saturday, June 8, 2013

கதை சொல்லவும்...கேட்கவும்....!!

தேவதைக் கதைகளிலிருந்து
பறக்கும் கம்பளத்தையும்
வைரப் பொக்கிஷப் பேழைகளையும் 
சிறகு முளைத்த குழந்தைகளையும்
பேசும் கிளிகளையும்
சிரிக்கும் தவளைகளையும்
காணாமல் போன செருப்பையும்
பூசணிக்காய் ரதத்தையும்
ஏழு மலைகளையும்
ஏழு கடல்களையும் தாண்டி
ஒளித்து வைத்திருக்கும்
இளவரசனின் உயிரையும்
சுருட்டி எடுத்துக் கொண்டாயிற்று
கதை சொல்ல......

வீடியோ விளையாட்டுகளிலும்
தொலைக் காட்சியிலும்
கணினிக் கொண்டாட்டங்களிலும்
மூழ்கியிருக்கும் குழந்தைகளைத்தான்
மீட்டு எடுக்க முடியவில்லை
கதை கேட்க........ 

9 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

கற்றுக் கொடுத்தது நாம் தானே...?

வை.கோபாலகிருஷ்ணன் said...

//வீடியோ விளையாட்டுகளிலும் தொலைக் காட்சியிலும்
கணினிக் கொண்டாட்டங்களிலும் மூழ்கியிருக்கும் குழந்தைகளைத்தான் மீட்டு எடுக்க முடியவில்லை
கதை கேட்க........ //

இனி எப்போதுமே மீட்டு எடுக்க முடியப்போவது இல்லை என்பதே உண்மை. நல்ல பகிர்வு. பாராட்டுக்கள்.

இரசிகை said...

mm...:(

KParthasarathi said...

உண்மைதான் .காலம் மாறிவிட்டது.பாட்டி கதைகளை பூட்டி வைக்க வேண்டியது தான் :)

புதுகை.அப்துல்லா said...

ரொம்ம்ம்ம்ம்ப நாளைக்கு அப்புறம் நான் படித்த நல்ல கவிதை. அக்காவுக்குப் பூங்கொத்து :)

ராஜி said...

முடியும் அருணா! என்ன கொஞ்சம் மெனக்கெடனும்.., அந்த கணினியிலும், விடீயோ கேம்சுலயும், தொலைக்காட்சியிலயும் மூழ்கி போய் இருப்பது நாம்தான் தங்கச்சி! நாம முதல்ல வெளிவரனும். என் மக தூயா காலேஜ் போற பிள்ளையாயிட்டு.., என் அம்மா மாலை பள்ளி விட்டதும் சாதம் பிசைஞ்சு கையில் உருண்டை பிடிச்சு குடுத்து சொல்லும் கதையை பொய்யுன்னு தெரிஞ்சும் தம்பி தங்ககளோடு ரசிச்சு கேப்பா

Aravamudhan Srivatsan said...

factu factu factu

Ambal adiyal said...

வணக்கம் ..
அழகியதொரு விழிப்புணர்வுக் கவிதை .தொடர வாழ்த்துக்கள் தோழி .

மோகன் குமார் said...

அன்புள்ள அருணா மேடம் ,

வணக்கம் ! நலமா? தங்கள் மெயில் ஐ. டி இல்லாததால் உங்கள் பின்னூட்டத்தில் இதனை தெரிவிக்கிறேன்

வீடுதிரும்பல் ப்ளாகில் - "வாங்க முன்னேறி பார்க்கலாம் " என்ற பெயரில் வெளிவந்த தன்னம்பிக்கை கட்டுரைகள் இவ்வார இறுதியில் வெற்றிக்கோடு எனும் நூலாக வெளிவருவதை தாங்கள் அறிவீர்கள்.

இதில் தங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் ஒரு செய்தி - இத்தொடர் ப்ளாகில் வெளிவந்தபோது பின்னூட்டத்தில் நீங்கள் பகிர்ந்த உணர்வுகள் புத்தகத்தின் இறுதியில் வெளியாகிறது. இப்புத்தகத்தில் தங்கள் பங்களிப்பும் இருப்பது மகிழ்ச்சி.

(தேர்ந்தெடுக்கப்பட்ட சில பின்னூட்டங்கள் மட்டுமே பிரசுரமாகிறது என்பதையும் சொல்லத்தான் வேண்டும் )

பிரசுரிக்கப்பட்ட ஒரு புத்தகத்தில் நம் பெயரை பார்ப்பது ஒரு ஆனந்தம் தானே - அந்த ஆனந்தத்தை பகிரவே இந்த தகவல் !

தங்கள் அன்பிற்கும் நட்புக்கும் என்றும் நன்றி

மோகன் குமார்

Post a Comment

வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!

அன்புடன் அருணா