பான்கட் (Bhangarh)... சூரியன் உதிக்கும் முன்னும், சூரியன் மறைந்த பின்னும் அரசால் அனுமதி மறுக்கப்பட்ட ஒரு சிதிலமடைந்த சிறு நகரம்.
17-வது நூற்றாண்டின் முதல் பாதியில், 'பான்கட்'டில் அரண்மனை கட்ட முனைந்தார், ஆம்பர் கோட்டை மஹாராஜா மாதோ சிங். அதற்காக, அந்த இடத்தில் தியானம் செய்துகொண்டிருந்த பாபா பாலாநாத் என்ற துறவியிடம் அனுமதி கேட்டார், ராஜா.
அரண்மனை கட்ட அனுமதி தந்த அந்தத் துறவி, மன்னருக்கு ஒரு கண்டிஷனும் போட்டார். அதாவது, எந்தக் காரணத்தைக் கொண்டும் கட்டப் போகும் அரண்மனைகளின் நிழல், தான் தியானம் செய்யும் பூமியின் மேல் விழக் கூடாது என்றும், அப்படி விழுந்தால் அன்றோடு அனைத்தும் தரை மட்டமாகிவிடும் என்றும் சொன்னாராம். அதற்கு மன்னரும் கட்டுப்பட்டார்.
பின்னர், மன்னர் மாதோ சிங்கின் வழி வந்த பிந்தைய தலைமுறையினர், அந்த ஒப்பந்த விவகாரம் தெரியாமல், அரண்மணையின் நிழல் குறிப்பிட்ட இடத்தின் தரையில் படும்படியாக உயர்த்திக் கட்ட, அந்த சம்ராஜ்யம் ஒரே இரவில் தரைமட்டமாகியதாகியது என்கிறது ஒரு கதை.
*
மற்றொரு வரலாறு சொல்லும் கதை...
பாங்கட் கோட்டையின் மகாராணி ரத்னாவதி ராஜஸ்தானத்துப் பேரழகி. அவள் மீது மையல் கொண்ட சிங்கா சேவ்ரா எனும் ஒரு கொடிய தந்திரவாதி, அவளைத் தன்வசமாக்க முயற்சித்துக் கொண்டேயிருந்தான்.
ராணிக்கும் தந்திரவாதிக்கும் இடையில் நடந்த தாந்த்ரீக சண்டையில், அவன் அந்தப் பேரழகியைத் தன் மந்திர வலையில் வீழ்த்துவதற்கு முயற்சித்துக் கொண்டேயிருந்தான். ஆனால், ஒவ்வொரு முறையும் தோற்றுக் கொண்டேயிருந்தான். ஏனென்றால், ராணியும் தாந்த்ரீகக் கலைகளில் தேர்ச்சியடைந்தவள்.
ஒருநாள்.. ராணியின் வேலைக்காரி ராணிக்காக வாசனைத் தைலங்கள் வாங்குவதைக் கண்ட தந்திரவாதி, அந்த தைலத்தைத் தொட்டாலே ராணி மந்திரவாதியின் வசமாகும் ஒரு வித்தையை ஏவி விடுகிறான். இதைத் தெரிந்துகொண்ட ராணி, அந்த வாசனைத் தைலம் வைத்திருந்த கண்ணாடிக் குப்பியை பாறையாக மாற்றி அந்த மந்திரவாதி இருந்த குன்றின் மீது எறிகிறாள்.
அதைத் தடுக்க நினைப்பதற்குள் மந்திரவாதி மேல் உருண்டு விழுந்து தாக்கப்படுகிறான். உயிர் துறக்கும் நேரத்தில் தன் சக்தி அனைத்தையும் ஒருமுகப்படுத்தி, "நான் இறந்து விடுவேன்... ஆனாலும் ரத்னாவதி ராணியும் உயிரோடிருக்க மாட்டாள். அவள் மட்டுமல்ல... அவளைச் சார்ந்த யாரும் உயிரோடிருக்க மாட்டார்கள். அதுமட்டுமல்ல... இந்த சாம்ராஜ்யம், இந்தக் கோட்டை, அரண்மனை, வீதிகள், மக்கள்... அனைத்தும் ஒன்றுமில்லாமல் தரை மட்டமாகிவிடும். யாரும் நாளைச் சூரியனைப் பார்க்க மாட்டீர்கள்" எனச் சாபமிட்டுச் செத்துப் போனான்.
அதைப் போலவே மறுநாள் சூரியனை யாரும் பார்க்கவில்லை. அனைத்தும் ஓர் இரவுக்குள் தரமட்டமாகியதாகக் கதை.
*
இவை எல்லாவற்றையும் விட இப்போது, அந்தப் பகுதியைச் சுற்றி உலவுகின்றன பல கதைகள். சூரியன் மறைந்ததற்கு பிறகு அங்கே பழைய காலம் போலவே கடை வீதிகள் சுறுசுறுப்பாக வியாபாரம் நடைபெறுவதாகவும், அரண்மனை ராஜாங்க வேலைகள் நடைபெறுவதாகவும் சொல்கிறார்கள்.
பகலில் சுற்றிப் பார்க்க வருபவர்களாக இருந்தாலும், ஐந்து மணிக்கு மேல் அங்கே ஒருவர் கூடத் தங்குவதில்லை. ஐந்து கிலோ மீட்டர் சுற்றுவெளிக்குக் கடைகள் எதுவுமே இல்லை. இளைஞர்கள் வீம்புக்கு இரவுக்குத் தங்கி வந்து சொல்லும் கதைகள் ஆயிரம்.
நாங்கள் 'பான்கட்'டை பகலில் பார்த்து விட்டு வந்தோம்.
அங்கே... சிதிலங்களைப் பார்க்கும் போது கொஞ்சம் திகிலில் நடுக்கம் வந்ததும் நிஜம் தான்!
இத் யூத்ஃபுல் விகடனில்....
34 comments:
அருமையான பகிர்வுங்க நன்றி.
புதிய தகவல்களுடன் ஒரு அருமையான இடத்தை பற்றி பகிர்ந்தமைக்கு நன்றி.
Happy B'day.. :))
கோட்டையும் கதையும் அருமை..
மிக அருமையாக ஒரு வரலாற்றுத்தகவல் கொடுத்திருக்கிறீர்கள்.அதுவும் தகவலாக அல்ல ஒரு கதைகேட்ட மாதிரி இருக்கிறது.
இந்த ஊரு புராணங்களில் கூட கேள்வி பட்ட மாதிரி இருக்கே.. ம்.. பயந்துட்டே பாத்துட்டு வந்தீங்களா? :))
அழகான ஊராத்தான் இருக்கு..
nallaathaan irrukkubaaa unga gost story
வீம்புக்கு தங்கும் இளைஞர்கள் சொல்லும் கதைகள் இருந்தால் பகிருங்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள் டீச்சர்!
//வீம்புக்கு தங்கும் இளைஞர்கள் சொல்லும் கதைகள் இருந்தால் பகிருங்கள்//
ரிப்பீட்டு
ஏதோ பழைய சரித்திர நாவல் படிச்சமாதிரி இருக்கு அருணா!
கோட்டை என்றாலே பல கதைகளும் தொடரும் போலும்.
நன்றி இராமசாமி கண்ணண் !
நன்றி Chitra !
என்ன பிரச்சினை உங்கள் தளம் சரியாக தானே உள்ளது
சரியாக தானே உள்ளது
சுவாரஸ்யம்... இன்னும் நிறைய படங்கள் இட்டிருக்கலாம்..
நல்ல பகிர்வு வாழ்த்துகள் அருணா
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
Belated Birthday wishes ma'am! :)
படங்களுடன் பதிவு மிக அருமை அருணா. பகிர்வுக்கு நன்றி.
Saravana Kumar MSK said...
/ Happy B'day.. :))/
Thank you Saravana!
அமைதிச்சாரல்
skaamaraj
முத்துலெட்சுமி/muthuletchumi அனைவருக்கும் நன்றி!
நன்றி vinu !
ஈரோடு கதிர் said...
/வீம்புக்கு தங்கும் இளைஞர்கள் சொல்லும் கதைகள் இருந்தால் பகிருங்கள்/
அது இருக்கு நிறைய!
ஆஹா...வித்தியாசமான பதிவுங்க! இனி விடாம படிப்பேனே...நன்றி
வால்பையன் said...
/ பிறந்தநாள் வாழ்த்துக்கள் டீச்சர்!/நன்றி வால்!
Balaji saravana
ஹேமா
மாதேவி அனைவருக்கும் நன்றி!
சசிகுமார் said...
/என்ன பிரச்சினை உங்கள் தளம் சரியாக தானே உள்ளது
சரியாக தானே உள்ளது/
ஏதோ ஜாவா ஸ்க்ரிப்ட் கஷ்டப்படுத்தியது! சரியாகி விட்டது!நன்றி சசிகுமார்.
sollavaeeeeeeeeeee illai ok,[neengallae paattaaga padi kollavum he he ] happy birthday to you, hapy birth day to you, hapy hapy hapy happy birthday to youuuuuuuuuuuuuuuu dear suchi[gost story teller] and many more happy returns of the day.
இரவு தங்கிப்பாத்திருந்தா நாலு பேய்கதை எங்களுக்கு சொல்லியிருக்கலாம். வாய்ப்பை தவிர விட்டுட்டீங்களே!!! :)
ஆயிரத்தில் ஒருவன் படக் கதை மாதிரி இருக்குது போங்க
'மிகச்சிறந்த sharing button'- tell a friend sharing button for every posts in your blog
http://ramasamydemo.blogspot.com/2010/09/sharing-button-tell-friend-sharing.html
(u have an email post link icon and default sharing button. Instead of them place tell a friend button mentioned in the above link)
நாஞ்சில் பிரதாப் said...
/சுவாரஸ்யம்... இன்னும் நிறைய படங்கள் இட்டிருக்கலாம்../
சேர்த்தாச்சசு!சேர்த்தாச்சசு நாஞ்சில் பிரதாப் !
நன்றி ஆ.ஞானசேகரன் !
Karthik said...
/Belated Birthday wishes ma'am! :)/
Belated thanks karthik!
நன்றி ராமலக்ஷ்மி !
அருணா !தங்களின் பிறந்த நாளுக்கு, வாழ்த்துகளுடன் ஒரு பூங்கொத்து
பதிவுக்கு ஒரு பூங்கொத்து
Post a Comment
வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!
அன்புடன் அருணா