நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Thursday, July 29, 2010

இவை தேவதைகளின் காலம்!

முன்னால் கடந்து போகும் பேருந்தின் ஜன்னலின் வழி
கைவிரல்களை கூட சரியாக விரிக்காத குழந்தை ஒன்றின் கை தெரிந்து மறையும் நேரம் ......

தூண் மறைவிலிருந்து மெல்ல குண்டுக் கண்களும் பிஞ்சு விரல்களும்
வெளிப்படும் தருணம்....

பயணம் முழுக்க கவனம் சிதறிவிடாமல் கவனமாகப் பார்த்துக் கொள்ளும்
யாரென அறியாமலேயே முகம் பார்த்துச் சிரித்தும் முகம் மறைத்தும் அம்மாவின் தோளிலிருந்து எட்டிப் பார்த்துச் சிரிக்கும் நிமிடம்.....

தேம்பி அழுது கண்ணீருடன் இருக்கும் போது "பிடிச்சோ" என்றால் அணில் பல் காட்டிச் சிரிக்கும் நேரம்....

தயிர்க் கிண்ணத்துடன் முகம் முழுவதும் தயிர் அப்பிக் கொண்டு திரு திருவென முழிக்கும் நொடி........

குடித்த பால் வரைந்த மீசையுடன் சிரிக்கும் தருணம்.....
பொம்மையைக் கட்டிப் பிடித்துத் தூங்கும் நிமிடம்......
தனக்குத் தானே பேசிக் கொண்டு தர்பார் நடத்தும் காலம்......

இப்படி அது வேறோர் தனி உலகம்.இந்த தேவதைகளுக்கான உலகமும் தருணமும் தவறிப் போனால் திரும்பக் கிட்டாது.கொஞ்ச‌கால‌ம் தேவ‌தையாய் வாழ‌ வ‌ர‌ம் பெற்ற‌வ‌ர்கள்.....நமக்கான தேவதைக் காலங்களை வரமாகத் தந்தவர்கள்...சிறகு உதிர்ந்து மனிதர்களாகும் முன் பத்திரப் படுத்த வேண்டும் இந்த தேவதைத் தருணங்களை!!

34 comments:

Mugilan said...

பூங்கொத்து: உங்களுக்கும் தேவதைகளுக்கும்!

சாந்தி மாரியப்பன் said...

//இந்த தேவதைகளுக்கான உலகமும் தருணமும் தவறிப் போனால் திரும்பக் கிட்டாது.கொஞ்ச‌கால‌ம் தேவ‌தையாய் வாழ‌ வ‌ர‌ம் பெற்ற‌வ‌ர்கள்..//

அசத்தல் வரிகள்..

Unknown said...

குழந்தைகள் பூமியின் தேவதைகள்

Thamira said...

ரொம்ப நல்லாருக்கு. இன்னும் கொஞ்சம் நிதானமா செதுக்கினா பின்னும்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஆமாங்க சேமிக்கவேண்டிய அழகிய தருணங்கள்.

Thenral said...

Poogothukkal....!Romba nalla irukku.Naam izhakkum allathu gavanikka tavarum sila arumaiyana tarunankalin thoguppu.

Anonymous said...

ரசித்து பார்த்த தருணங்கள்
ரொம்ப நல்லா இருக்கு!

ஸ்ரீ.... said...

நல்ல எழுத்துக்களை வாசிக்கும் தருணங்களும் தேவதைக் கணங்களே! நன்றி.

ஸ்ரீ....

Chitra said...

யாரென அறியாமலேயே முகம் பார்த்துச் சிரித்தும் முகம் மறைத்தும் அம்மாவின் தோளிலிருந்து எட்டிப் பார்த்துச் சிரிக்கும் நிமிடம்.....

....cho chweet!!!!!!!!! வாசிக்கும் போதே..... மனதில் ஒரு சந்தோஷம்! மிக்க நன்றி!

வால்பையன் said...

//சிறகு உதிர்ந்து மனிதர்களாகும் முன் பத்திரப் படுத்த வேண்டும் இந்த தேவதைத் தருணங்களை!!/


ரொம்ப ரொம்ப சரி!

சுசி said...

//சிறகு உதிர்ந்து மனிதர்களாகும் முன் பத்திரப் படுத்த வேண்டும் இந்த தேவதைத் தருணங்களை!!//

என் சிறகுகள் உதிர்ந்து போகாமலே இருந்திருக்கலாம்னு இப்போவும் ஏக்கம் வருது மேடம்.

நேசமித்ரன் said...

தேவதைகள் வாழ்வை அழகாக்குகிறார்கள் தம் இருப்பொன்றிலேயே

ஹேமா said...

இதை எழுதும்போது நீங்களும் குழந்தையாய்,
தேவதையாய் மாறியிருந்திருப்பீர்கள் அருணா..உண்மைதானே !

Unknown said...

பூங்கொத்து...

Anonymous said...

Jayachandran. R
பூங்கொத்து

அன்புடன் நான் said...

கட்டுரை கவித்துவமா இருக்குங்க....
அந்த தருணம் நெகிழ்வானது.... நல்லாயிருக்கு.

அ.முத்து பிரகாஷ் said...

பிஞ்சு தேவதைகள் தேவதைகளல்ல ...கடவுளர்கள் ... அதை தாண்டியும் தான் ...

Deepa said...

A beautiful painting in words!!!
Lovely Aruna.

ஈரோடு கதிர் said...

தினமும் பார்க்கிறேன் எங்க பாப்பாவோட வெள்ளை மீசையை

அழகான பகிர்வு

vasu balaji said...

பொன்னான தருணங்களிவை. கண்முன் விரிந்த சொர்க்கம்.

VELU.G said...

நல்ல படைப்பு

sri said...

Hello!

Lovely! romba touchinga erundhudhu, just had a chance to konjify pakkathu veetu baby and I can totally relate to this. Super Aruna!

Srivats
Epdi erukeenga ?

அன்புடன் அருணா said...

Mugilan said...
/பூங்கொத்து: உங்களுக்கும் தேவதைகளுக்கும்!/
பூங்கொத்துக்கு நன்றி Mugilan!
நன்றி அமைதிச்சாரல் !
நன்றி கே.ஆர்.பி.செந்தில்!

Madumitha said...

ஆம். எல்லோர் வீட்லயும்
தேவதைத் தருணங்கள்
புகப்படத்தில் உறைந்து இருக்கின்றன.

அன்புடன் அருணா said...

ஆதிமூலகிருஷ்ணன் said...
/ரொம்ப நல்லாருக்கு. இன்னும் கொஞ்சம் நிதானமா செதுக்கினா பின்னும்./
நன்றி ஆதிமூலகிருஷ்ணன்! நேரமின்மையினால்தான் இந்த அவசரக் கோலம்!

நன்றி முத்துலெட்சுமி/muthuletchumi !
பூங்கொத்துக்கு நன்றி Thenral !

அன்புடன் அருணா said...

நன்றி Balaji saravana !
நன்றி ஸ்ரீ....
நன்றி Chitra

அன்புடன் அருணா said...

வாங்க வால்பையன் நன்றி!
சுசி said...
/என் சிறகுகள் உதிர்ந்து போகாமலே இருந்திருக்கலாம்னு இப்போவும் ஏக்கம் வருது மேடம்./
எனக்கும்!
நன்றி நேசமித்ரன் !

அன்புடன் அருணா said...

ஹேமா said...
/இதை எழுதும்போது நீங்களும் குழந்தையாய்,
தேவதையாய் மாறியிருந்திருப்பீர்கள் அருணா..உண்மைதானே !/
குழந்தையாய் உணர்ந்தது உண்மை!
பூங்கொத்துக்கு நன்றி முகிலன் !
பூங்கொத்துக்கு நன்றி Jayachandran. R!

அன்புடன் அருணா said...

நன்றி சி. கருணாகரசு!
நன்றி நியோ !
Thanx Deepa !

வேலன். said...

தேவதையாய் நானும் மாறிவிட ஆசை...
பழைய நினைவுகள் மனதில் நிழலாடுகின்றது.
புங்கொத்துக்களுடன் வாழ்க வளமுடன்,
வேலன்.

அன்புடன் அருணா said...

நன்றி ஈரோடு கதிர்!
வானம்பாடிகள் said...
/ பொன்னான தருணங்களிவை. கண்முன் விரிந்த சொர்க்கம்./
நன்றி சார்!எப்போவாது வர்றீங்க!
நன்றி VELU.G !

priya.r said...

படித்து முடித்த பிறகு சற்று நேரம் வேறு ஒரு இனிய உலகத்திற்கு சென்று வந்த நிறைவு ;
ம்ம் காலங்கள் தான் எவ்வளவு விரைவாக சென்று விடுகிறது பாருங்கள் !
போங்கள் அருணா ! எத்தனை தடவை தான் உங்களுக்கு பூங்கொத்து கொடுப்பது !
இந்த தடவை உங்கள் பேரை சொல்லி அந்த குட்டி தேவதைகளுக்கு கொடுத்து விடட்டுமா !

அன்புடன் அருணா said...

Srivats said...
/ Epdi erukeenga ? /
Thanx for the comment Sri!
I'm doing fine and how r u?

அன்புடன் அருணா said...

நன்றி Madumitha!
வேலன். said...
/ தேவதையாய் நானும் மாறிவிட ஆசை.../
எல்லோருக்கும்தான் இந்த ஆசை!நன்றி வேலன் சார்!

Post a Comment

வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!

அன்புடன் அருணா