நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Thursday, July 15, 2010

கலைந்து கொண்டேயிருக்கும் வீடுகள்....6

 எதிர்பாரா மழைக்கு
அடுப்படியில் ஒன்றும
முன்னறையில் ஒன்றுமாய்
பாத்திரம் வைத்துப்
பத்திரப் படுத்தியாயிற்று மழையை....

அதிசயிக்கும் மழையைச்
சபித்துக் கொண்டே
பின்கட்டுக்கு ஒரு சாக்கும்
முன் வாசலில் ஒரு சாக்கும்
போட்டு  மழைத் தண்ணியைத்
தடுத்தாயிற்று

இன்னும் மழையிலிருந்து தப்பிக்க
புத்தகப் பைகளும்
துணிமூட்டைகளும்
சோற்றுப் பாத்திரமும்
இடம் மாறிக் கொண்டேயிருந்தன.....

மழை கொஞ்சம் அடித்துப் பெய்ய...
கையில் கிடைத்த அண்டா குண்டா
எடுத்து ஓடி ஓடி இடம் மாற்றி
பூனைக் குட்டிக்கொரு
ஈரமில்லாஇடம் தேடி.....

 ரசிக்க முடியாத
மண்வாசனையுடன்....
கலைந்து கொண்டேயிருக்கும் வீடுகள்....

30 comments:

Anonymous said...

ம்ம்ம்ம் :-)

தமிழ் said...

/அடுப்படியில் ஒன்றும
முன்னறையில் ஒன்றுமாய்
பாத்திரம் வைத்துப்
பத்திரப் படுத்தியாயிற்று மழையை....

அதிசயிக்கும் மழையைச்
சபித்துக் கொண்டே
பின்கட்டுக்கு ஒரு சாக்கும்
முன் வாசலில் ஒரு சாக்கும்
போட்டு மழைத் தண்ணியைத்
தடுத்தாயிற்று
/

பூங்கொத்து

ராமலக்ஷ்மி said...

//பூனைக் குட்டிக்கொரு
ஈரமில்லாஇடம் தேடி.....//

ஓ! அழகு.

வழக்கம் போல அருமையான கவிதை அருணா.

Unknown said...

சிறு வயது கிராமத்து வாழ்வில் நடந்தவற்றை கண்முன் நிறுத்தியுள்ளீர்கள்.
மழை பூமிக்கான வரம் என்றாலும்.. ஏழைகளுக்கு பல சமயங்களில் சாபமும் கூட...

க‌ரிச‌ல்கார‌ன் said...

பூங்கொத்து

அம்பிகா said...

\\பூனைக் குட்டிக்கொரு
ஈரமில்லாஇடம் தேடி.....\\
அருமை. நிதர்சனம்... இன்னும் நிறைய சொல்லலாம்.
பூங்கொத்து.

பா.ராஜாராம் said...

நல்லாருக்கு டீச்சர்.

பெசொவி said...

குடிசை வாழ்வின் யதார்த்தம் மிக அருமையாய் மிளிர்கிறது.
வாழ்த்துகள், மேடம்!

SIVA said...

கனக்கும் விஷய்ங்களைக் கூட கவிதையாக்கத் தெரிந்திருக்கிறது. இதில் ஒரு மறைமுகச் செய்தியும் உண்டு. முன்பிருந்தை விட இப்போது நல்ல நிலையிலிருக்கிறார் கவிதை சொல்லி என்பது.

பூங்கொத்து கண்டிப்பாகத் தரலாம்.

ஹேமா said...

மழையோடு மனமும் அழும்.ஆனால் ரசிக்கும் பாத்திரங்களில் விழும் ஒழுக்கின் தாளம் தப்பாத சங்கீதம் !
பூங்கொத்து அருணா.

அன்புடன் நான் said...

கவிதை மனதை ஈரப்படுத்தியது ஒரு மழைநாளை நினைவுபடுத்தியது மிக்க பாராட்டுக்கள்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

அருமையான கவிதை

கமலேஷ் said...

ரொம்ப அருமையா இருக்குங்க...

priya.r said...

Nice:)

ஈரோடு கதிர் said...

கலைந்து போகும் வீடு.. கவலைதான்

அன்புடன் அருணா said...

நன்றி இனியவள் புனிதா !
பூங்கொத்துக்கு நன்றி திகழ் !
நன்றி ராமலக்ஷ்மி !

க ரா said...

இந்தாங்க பூங்கொத்து :)

Anonymous said...

நான் அனுபவித்த அந்தக் காலங்களிலும் சரி இப்போ நினைக்கையிலும் சரி,
கூரை பிளந்து வந்த அந்த மழைத்துளிகள் என்னை சோகப்படுத்தியது கிடையாது.
காற்று,வெயில்,வறுமை மாதிரி மழையும் எங்க மனசுக்கு பிடிச்ச தோழர்கள்
மள மளவென யாரையும் அனுமதி கேட்காமல்,உள்ளே வருவார்கள்.
எங்க சொந்தக்காரர்களும் உங்க சொந்தகாரார்களும் மழை யல்லவா ?
இருந்தாலும் இந்த காங்க்ரீட் வீட்டில் கணினி முன்னாள் உட்கார்ந்து கொண்டு
படிப்பதற்கு மழைபோலந்த கண்ணீரும் கேளாமல் வந்துவிடுகிறது அருணா.
காமராஜ்.

அன்புடன் அருணா said...

கே.ஆர்.பி.செந்தில் said...
/ மழை பூமிக்கான வரம் என்றாலும்.. ஏழைகளுக்கு பல சமயங்களில் சாபமும் கூட.../
100% உண்மை கே.ஆர்.பி.செந்தில்.

பூங்கொத்துக்கு நன்றி க‌ரிச‌ல்கார‌ன் !
பூங்கொத்துக்கு நன்றி அம்பிகா !

அன்புடன் அருணா said...

நன்றி பா.ராஜாராம் !
நன்றி பெயர் சொல்ல விருப்பமில்லை !

மதுரை சரவணன் said...

// ரசிக்க முடியாத
மண்வாசனையுடன்....
கலைந்து கொண்டேயிருக்கும் வீடுகள்....//

மிகவும் அருமை. வாழ்த்துக்கள்

அன்புடன் அருணா said...

பூங்கொத்துக்கு நன்றி SIVA !
பூங்கொத்துக்கு நன்றி ஹேமா !

அன்புடன் அருணா said...

நன்றி சி. கருணாகரசு
நன்றி T.V.ராதாகிருஷ்ணன்
நன்றி கமலேஷ்

bogan said...

கிரேட்.கரைந்து கொண்டே இருக்கும் வீடுகள் என்றால் இன்னும் பொருத்தமாக இருந்திருக்குமோ .

அன்புடன் அருணா said...

நன்றி priya.r !
நன்றி ஈரோடு கதிர் !

அன்புடன் அருணா said...

நன்றி இராமசாமி கண்ணண் !

ஆமாமா மழை எல்லாரது சொந்தக்காரங்கதான்!!! நன்றி காமராஜ்.!

அன்புடன் அருணா said...

நன்றி மதுரை சரவணன் !
நன்றி போகன் !

sakthi said...

nice

பிரம்மன்கவி என்கிற கிரிநாத் said...

ரொம்ப அருமையான கவிதை...

அன்புடன் அருணா said...

நன்றி sakthi !
நன்றி girinathg !

Post a Comment

வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!

அன்புடன் அருணா