முதல் தடவையா அந்தத் தப்பு பண்ணப் போகிறாள்..டேட்டிங்க்!
அம்மாவுக்குத் தெரியாமல் செய்யும் முதல் தப்பு.நேற்று அம்மா அப்பாவோடு வந்து பெண் பார்த்துவிட்டுப் பிடித்திருக்கிறது என்று சொல்லி விட்டுப் போனவரிடமிருந்து ஒரு போன் வந்ததும் நேரில் தனியாகச் சந்திக்கலாமா? எனக் கேட்டதும் கனவு போலிருந்தது.அவளையறியாமலே வருகிறேன் என்றாயிற்று.என்னவெல்லாம் பேச வேண்டும்,அவர்க்குப் பிடித்தவையெல்லாம் எனக்குப் பிடிக்குமா?எனக்குப் பிடித்ததெல்லாம் அவருக்குப் பிடிக்குமா?முக்கியமா மழையை.என் வாழ்வில் மழைக்குத் தனியிடம் உண்டென்பதையும் சொல்லவேண்டும்....இன்னும்...இன்னும்
"அம்மா மீனா வீட்டுக்குப் போயிட்டு வரேன்."
வெளியே வந்து பார்த்தாள். மழைமேகம் இருண்டிருந்தது.
"இருட்டுவதற்குள் வந்து விடு.மழை பெய்யும் போலிருக்கு.குடை எடுத்துட்டுப் போ"
அவசரமாய் குடையைத் துணிகளுக்கிடையில் ஒளித்து வைத்து விட்டு அம்மா பார்ப்பதற்குள் வெளியேறினாள்.
முதல் துளி கண்ணின் இமை முடிகளின் மேல் விழுந்தது.கண்களைச் சுருக்கி வானம் பார்தது மழையை அப்படியே குடித்து விடுபவள் போல மயக்கத்துடன் பார்த்தாள்.அப்படியே சட சடவென்று அடித்துப் பெய்ய ஆரம்பித்தது.மனம் முழுவதும் சொல்ல முடியாத ஆனந்தம் பரவியது.தன் வாழ்வை இணைத்து ஆரம்பிக்கப் போகும் இனியவரைப் பார்க்கப் போகும் போது மழையும் துணைக்கு வந்தது ரொம்பப் பிடித்திருந்தது.
மழை ராஜ்யத்தின் மஹாராணியைப் போலக் கை வீசி நடந்தாள்.தலையில் மழைக் கிரீடமும்,காதோரம் மழைப் பூவையும் சூடி அழகு படுத்திக் கொண்டாள். நனைவதைப் பற்றிக் கவலைப் படாமல்,கூந்தல் கலைவதில் கவனம் இல்லாமல் மழைத் தோழியுடன் ஒன்றியவாறு, நனைந்த மரங்களின் இலைகள்"மழை பெய்ததே" என்று கை தட்டிக் கொண்டிருந்ததை வேடிக்கை பார்த்தபடி "இங்கேதானே வரச் சொன்னார்".....அந்த பார்க் வாசலில் நின்றவாறு அவரை எங்கே காணோமென்று தேடினாள்.
ஊஹும்...காணோம்.
அங்கேயும் இங்கேயுமாய் பர பரவென்று கண்களை ஓடவிட்டதில் அகப்பட்டார்.....
ஹ்ம்ம்ம்...முழுவதுமாய் உடல் மறைத்த ஒரு ரெயின் கோட் அணிந்து தலையில் ஒரு துளி விழுந்து விடாமல் தொப்பி வைத்து ஒரு கடையின் கூட்டத்தில் கொள்ளைக் கூட்டத் தலைவன் போல நின்றிருந்தான்.
"என்னம்மா...மழைலே இப்பிடி நனைஞ்சுட்டு வந்துருக்கே...மழைக்கு ஒரு குடை கூடவா கிடைக்கலை.என்னைப் பார்த்தியா ஒரு சொட்டு மழை விழலை என்மேல....எப்புடி?" எனப் பெருமையா பார்த்தார்.
முதல் அத்தியாயத்திலேயே அவள் கதாநாயகன் மரித்துப் போனான்.
33 comments:
ரொம்ப நல்லாருக்குங்க. அடிப்படை ரசனைகளாவது ஒத்துப்போனால்தான் ஒரு தாம்பத்யம் உயிரோட இருக்கும்ன்னு சொல்லாம சொல்லீட்டீங்க. உங்களுக்கு மைசூர் பிருந்தாவனத்தையே கொடுக்கிறேன்..
அருமையாக எழுதி இருக்கீங்க... உங்களின் தனித்துவம் இடுகை முழுவதும்....
ஆமாம், என் கம்ப்யூட்டர் ஸ்க்ரீன் ல தான் ப்ரோப்லமா இல்லை, நீங்க போட்டதே அப்படித்தானா? எழுத்துக்கள், ரொம்ப சின்னதாக இருக்கேன்னு கேட்டேன்.
நல்லா இருக்குங்க..
நல்ல கதை அருணா...எதிர்பார்ப்பின் ஏமாற்றம் வெளிப்படுத்தும் கதை
அருணா நல்லா இருக்குங்க ..ஆனா இதுக்கு மாற்று கருத்தும் என்னிடம் உண்டு ...
ம்ம். தமிழ்நடையும், கதையும் அருமை. கடைசி வாக்கியம் மிக அழகு.
ஸ்ரீ....
தெரியாமல் டேட்டிங்க் கூப்பிட்டவன் மனதளவில் விருப்பம்கள் இல்லாததாலும் புரிதல்கள் இல்லாததாலும் மறைந்து போனான் என்பது தானே தாங்கள் சொல்ல வரும் செய்தி ;கதையின் முடிவில் சற்று மாற்று கருத்து இருந்த போதிலும் கதையின்ஆரம்பம் நன்றாக இருக்கிறது ;கதையின் நாயகி நாயகரின் பெயர்களை குறிப்பிடாமல் கதையை கொண்டு சென்ற விதம் வித்தியாசமாகவும் எதிர்பார்ப்புடனும் இருந்தது . இதற்காகவும் இதோ பூங்கொத்து !
பூங்கொத்து :-)
ம், நல்லாயிருக்கு.
madam auna...
an excellent presentation
about rain and women.
i leeave with this post today.
but the rain wil be remain with me all along the day
kamaraj
superb aruna mam!!!
நல்லாருக்குங்க...
பூங்கொத்து!!!
:)
அமைதிச்சாரல் said...
/உங்களுக்கு மைசூர் பிருந்தாவனத்தையே கொடுக்கிறேன்../
ரொம்ப நன்றி அமைதிச்சாரல்!!!
Chitra said...
/அருமையாக எழுதி இருக்கீங்க... உங்களின் தனித்துவம் இடுகை முழுவதும்..../
ரொம்ப நன்றி சித்ரா!
/ ஆமாம், என் கம்ப்யூட்டர் ஸ்க்ரீன் ல தான் ப்ரோப்லமா இல்லை, நீங்க போட்டதே அப்படித்தானா? /
கொஞ்சம் ப்லாகர்லே பிரச்னை சித்ரா...அதான்!
மிக அருமை... இப்படிதான் வேறுபடுகிறது.... மனதர்களின் ரசனை.
நன்றி வினோத்கெளதம் !
நன்றி புலவன் புலிகேசி !
பத்மா said...
/அருணா நல்லா இருக்குங்க ..ஆனா இதுக்கு மாற்று கருத்தும் என்னிடம் உண்டு .../
நன்றி பத்மா!மாற்றுக் கருத்து இருந்தால் சொல்லலாமே பத்மா!
நன்றி ஸ்ரீ....
ஆவ்வ் எனக்கு புரியலை. :(
பூங்கொத்துக்கு நன்றி priya.r!, அமுதா !!
நன்றி ஆறுமுகம் முருகேசன் !
அட்டண்டென்ஸ் :)
வருஷத்துக்கு ஒரு அட்டெண்டன்ஸ் தவறாமல் போட்டா போதும்னு நினைச்சிருக்கீங்களா அப்துல்லா!!???
நன்றி kamaraj!
நன்றி sakthi !
நன்றி நேசமித்ரன் !
தலைப்புக்கு நன்றிக்கா :)
நானும் எழுதறேன்.. ஆனால், கதை அல்ல. நிஜம் :)
நல்லாயிருக்குங்க
நன்றி சி. கருணாகரசு
Karthik said..../ஆவ்வ் எனக்கு புரியலை. :( /
அட!டியுப் லைட் கார்த்திக்!
SanjaiGandhi™ said...
/தலைப்புக்கு நன்றிக்கா :)/
நன்றிக்கு ஒரு நன்றி!
/நானும் எழுதறேன்.. ஆனால், கதை அல்ல. நிஜம் /
எழுதுங்க!எழுதுங்க!
அய்ய்ய்ய் டெம்பிளேட் மாற்றியாச்சி.... நல்லாயிருக்கு
//முதல் அத்தியாயத்திலேயே அவள் கதாநாயகன் மரித்துப் போனான்.//
ம்ம்ம்ம் பல நேரங்களில்.... பல இடங்களில் இப்படிதான்.....
வேற்றுமையில் வேர் பிடிப்பதுதான் வாழ்க்கை. பாஸிடிவும் நெகடிவுக்குமான ஈர்ப்புதான் காதல். உங்கள் கதையின் இறுதி வரி கொஞ்சம் அழுத்தமாகவே ஏமாற்றத்தைப் பதிவு செய்கிறது. மற்றபடி கதை அழகு.
அருமை
இதை இரண்டுவிதமாகவும் பார்க்கலாமே!
எதிர்பார்ப்புக்கள், ரசனைகள் எல்லாம் ஒரே மாதிரி இருந்தால் தான் காதல் வரும், வளரும் என்று சொல்வதே தவறு இல்லையா?
பதிவின் கடைசி வரி--ஆசைகள் எதிர்பார்ப்புக்கள் மரித்துப்போவதில் இருந்து தான் நிறையப்பேருக்கு அவர்களுடைய வாழ்க்கையே புதிதாகத் தொடங்குகிறது என்பது நாம் இங்கே கண்முன்னாலேயே பார்த்துக் கொண்டிருக்கும் யதார்த்தம் தானே!
நன்றி ஆ.ஞானசேகரன் !
நன்றி திகழ்!
ஆதிமூலகிருஷ்ணன் said...
/வேற்றுமையில் வேர் பிடிப்பதுதான் வாழ்க்கை. பாஸிடிவும் நெகடிவுக்குமான ஈர்ப்புதான் காதல். /
உண்மைதான்!
/உங்கள் கதையின் இறுதி வரி கொஞ்சம் அழுத்தமாகவே ஏமாற்றத்தைப் பதிவு செய்கிறது./
அது வேண்டுமென்றே திணிக்கப் பட்டது
எஸ். கிருஷ்ணமூர்த்தி said...
/ எதிர்பார்ப்புக்கள், ரசனைகள் எல்லாம் ஒரே மாதிரி இருந்தால் தான் காதல் வரும், வளரும் என்று சொல்வதே தவறு இல்லையா?/
ஆனாலும் ஒன்று போலிருக்கவேண்டும் என்னும் எதிர்பார்ப்பு இருக்கும்தானே!!!
/பதிவின் கடைசி வரி--ஆசைகள் எதிர்பார்ப்புக்கள் மரித்துப்போவதில் இருந்து தான் நிறையப்பேருக்கு அவர்களுடைய வாழ்க்கையே புதிதாகத் தொடங்குகிறது என்பது நாம் இங்கே கண்முன்னாலேயே பார்த்துக் கொண்டிருக்கும் யதார்த்தம் தானே! /
அதே !அதே யதார்த்தத்தைத்தான் தொட முயற்சித்தேன்.நன்றி!
Post a Comment
வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!
அன்புடன் அருணா