நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Friday, January 30, 2009

தொடர்பு எல்லைகளுக்கு அப்பால் .........



ஒரு நாளின் நடுநிசியில் தொடர்பு எல்லைகளுக்கு அப்பால் தூக்கியெறியப் படப் போகிறான் அவன்.....மரணம் அவனைக் காதலிக்கத் தொடங்கி விட்டது....இந்த விஷயம் தெரிந்த மறுநிமிடம் உடலும் மனமும் பர பரத்தது.அவன் உயிர் அதன் கூட்டுக்குள் சிறகை விரித்துச் சோம்பல் முறித்துக் கொண்டது.

இத்தனை நாள் வாழ்ந்த நாட்குறிப்பைத் திருப்பிப் பார்த்துக் கொண்டான்.குறிப்பிட்டுச் சொல்லும்படியான மைல்கற்கள் எதுவும் நினைவுக்கு வரவில்லை.சேகரித்த நட்புக்களும் உறவுகளும் எண்ணிக்கையில் ரொம்பவும் குறைவாகவே இருந்தது.பணக் கற்றைகள் அதனினும் குறைவாகவே இருந்தது.

இனி? அவனுக்கான மணித்துளிகள் இவை எவற்றைப் பற்றியும் கவலைப் படாமல் கரைந்து கொண்டே இருந்தன... 30 வருடங்களை இப்படி ஒன்றுமேயில்லாமலா கரைத்துவிட்டேன் என்று அவன் மனம் குற்றம் சாட்டியது...திடீரென்று முதல் வகுப்பு டீச்சர்,எப்பவும் சண்டை போடும் அருள்மதி,அழகாகச் சிரித்துப் பேசும் ஹெலென்,நண்பர்கள் கூட்டமாக நனைந்த மழை,12-ம் வகுப்பு பிரிவு விழா,முதல் இன்டர்வியு, முதல் காதல் இப்படியாக வாழ்வின் எல்லா முதலும் நினைவுக்கு வர..... இரண்டாவது எதுவுமே நினைவுகளின் விளிம்புகளில் எப்படி ஒன்றுமில்லாமல் கரைந்து போயின?இப்படி சம்பந்தமில்லாமல் மனம் தாவிக் கொண்டேயிருந்தது......

மனம்...... உடனடியாகச் சுவடுகளைப் பூமியில் பதிக்க குறுகிய காலத் திட்டம் போட்டது. முதல் வேலை மனம் சேகரிப்பா? பணம் சேகரிப்பா?உறைந்திருந்த உயிர் திடீரென்று விழித்துக் கொண்டது.
அதுவா? இதுவா?எல்லாமேவா?
நாளை முதலில் எதைச் செய்வது?
அப்பா அம்மாவைப் பார்த்து எத்தனை நாளாகிறது? ஒரு நடை ஊருக்குப் போய் விட்டு வரவேண்டும் .....என் கண்ணே....உன்னைத் தூக்கி முத்தமிட்டு எத்தனை நாளாகிறது?எங்கே என் மகன்??? கண்விழிக்கட்டும் உன்னைக் கன்னத்தோடு உரசி இறுக்கிக் கொள்கிறேன்....வாழ்க்கைத் துணை .....சரண்யா...உன்னைப் பெயர் சொல்லி அழைத்துத்தான் எத்தனை நாளாகிறது??? நாளை பார்....உன்மேல் அன்பு மழை கொட்டப் போகிறேன்....என நினைத்துக் கொண்டான்

சில மணித்துளிகளுக்கான இந்த இரவல் உயிரைக் காலன் திருப்பிக் கேட்டுக் காவல் காக்கிறானே????ஏன் எல்லோரும் தூங்கிக் கொண்டேயிருக்கிறார்கள்??? காலத்தின் அருமை புரியவில்லையா?...உங்கள் தூக்கத்தினால் கொஞ்சமே கொஞ்சம் மிஞ்சியிருக்கும் என் மணித்துளிகள் விரயமாகிறதே????எனக் கவலைப் பட்டான்.

இந்த சுவாசம் இன்றே கடைசியோ??ஏன் இப்படி மூச்சு வாங்குகிறது?கண்கள் ஏன் இப்படிக் கொட்டுகின்றன? கடவுளே இன்னும் ஒரே ஒரு நாள் கொடு...தொலைத்த நொடிகளையெல்லாம் அந்த ஒரு நாளில் வாழ்ந்து முடித்துவிடுகிறேன்.....என வேண்டிக் கொண்டான்....அந்த மௌனத்தின் இருட்டுக்குள் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற பிரக்ஞை கூட இல்லாமல் வீழ்ந்து கிடந்தான்.....

யார்மேலும் ஒரு தனிப்பட்ட விருப்பு வெறுப்பின்றி இன்னும் ஒரே ஒரு நாள் அதிகம் கொடுக்காத கடவுளிடம் மட்டும் கோபித்துக் கொண்டே அந்த உயிர்ப் பறவை தன் சிறகுகளை உதிர்த்துவிட்டு தன் மரணக் குறிப்புகளைப் பிரதியெடுக்கக் கூட நேரமில்லாமல் நட்சத்திரக் கூட்டங்களை நோக்கிப் பறக்க ஆரம்பித்தது......

இன்னும் ஒரே ஒரு நாள் இவனுக்குக் கொடுத்திருந்தால் தன் சுவடுகளை அழுத்தமாகப் பூமியில் பதித்திருப்பானோ எனக் கடவுள் யோசிக்க ஆரம்பித்திருந்தார்....

நம்மிடம் இன்னும் எத்தனை நாட்கள் இருக்கின்றன இந்த பூமியில் சுவடுகளைப் பதிப்பதற்கு????நான் யோசிக்க ஆரம்பித்தேன்....

68 comments:

ராமலக்ஷ்மி said...

அருமை அருணா.

//நம்மிடம் இன்னும் எத்தனை நாட்கள் இருக்கின்றன இந்த பூமியில் சுவடுகளைப் பதிப்பதற்கு????நான் யோசிக்க ஆரம்பித்தேன்.... //

கூடவே எல்லோரையும்....

+Ve Anthony Muthu said...

பாதி படித்துக் கொண்டிருக்கும்போதே அரண்டு போய்விட்டேன்.

உங்கள் எழுத்துக்களிலேயே இதுதான் Master Piece என்று சொல்லத் தோன்றுகிது.

சொல்ல வந்திருப்பது அவ்வளவு ஆழமான... மிக ஆழமான... விஷயம்.

அதிலும் சொன்ன விதம் இருக்கிறதே....
அப்பா...

தேர்ந்தெடுக்கப்பட்ட வார்த்தைகள்...

இலக்கியத் தரமான நடை....

முத்தாய்ப்பாய் முடித்திருந்த விதம்....

சத்தியமாய்ச் சொல்கிறேன்....

முதல் முதலாக ஒரு பதிவைப் பார்த்து...

இவ்விதம் என்னால் எழுத இயலுமா..? என்று நினைத்து பொறாமைப்பட்டேன்.

பொழுது போக்குக்காக எழுதவில்லை என்பதற்கு இந்த ஒரு பதிவே சாட்சி.

மனம் நிறைந்து... உளமாறச் சொல்கிறேன்.

நீங்கள் இது போல் இன்னும் நிறைய எழுத வேண்டும்.

பல விருதுகள் பெற வேண்டும்.

அன்புடன்
அந்தோணி முத்து.

Divyapriya said...

//தன் சிறகுகளை உதிர்த்துவிட்டு தன் மரணக் குறிப்புகளைப் பிரதியெடுக்கக் கூட நேரமில்லாமல் நட்சத்திரக் கூட்டங்களை நோக்கிப் பறக்க ஆரம்பித்தது......//

அருமை...

Anonymous said...

யோசிக்க வச்சிட்டிங்க...

Divya said...

An excellent write up:))

மேவி... said...

நல்ல இருக்குங்க..... ரொம்ப யோசிக்க வைக்குது

மேவி... said...

"சில மணித்துளிகளுக்கான இந்த இரவல் உயிரைக் காலன் திருப்பிக் கேட்டுக் காவல் காக்கிறானே????ஏன் எல்லோரும் தூங்கிக் கொண்டேயிருக்கிறார்கள்??? காலத்தின் அருமை புரியவில்லையா?...உங்கள் தூக்கத்தினால் கொஞ்சமே கொஞ்சம் மிஞ்சியிருக்கும் என் மணித்துளிகள் விரயமாகிறதே????"

இந்த கேள்விகள் தான் என் வாழ்க்கைல ஒரு சமயம் என்னை ரொம்ப யோசிக்க வச்சுது.........
அப்ப எல்லாம் ஒரு விதமான பயம் வரும் என்னக்கு..... அப்புறம் என்ன என்னால் முடிந்த நல்லதை செய்து கொண்டு இருக்கிறேன்........

மேவி... said...

"இந்த சுவாசம் இன்றே கடைசியோ??"
ஆமாங்க...... எந்த நிமிஷமும் மர்கயா தான்.......
ஒரு புது நாள் பிறக்கும் போது..... நாம் வாழ்வில் ஒரு நாள் இறந்து இருக்கிறோம்...
நமது இறப்பை நோக்கி ஒரு நாள் கடந்து வந்து கொண்டு வந்தாச்சு

மேவி... said...

"இன்னும் ஒரே ஒரு நாள் இவனுக்குக் கொடுத்திருந்தால் தன் சுவடுகளை அழுத்தமாகப் பூமியில் பதித்திருப்பானோ எனக் கடவுள் யோசிக்க ஆரம்பித்திருந்தார்...."

சுருக்கமா சொல்ல வேண்டுமானால் ......
சுவடு / சுவர் இல்லாத சித்ரம் தான் நாம் வாழ்க்கை.......

மேவி என்று ஒரு ஆள் இருந்தான் என்று என் இறப்புக்கு பின் யாருக்கும் பெரிய அளவில் தெரிய போவது இல்லை.....

புதியவன் said...

//அந்த உயிர்ப் பறவை தன் சிறகுகளை உதிர்த்துவிட்டு தன் மரணக் குறிப்புகளைப் பிரதியெடுக்கக் கூட நேரமில்லாமல் நட்சத்திரக் கூட்டங்களை நோக்கிப் பறக்க ஆரம்பித்தது......//

மிகச் சிறப்பான முறையில் இதுவரை படித்திராத நடையில் அருமையான பதிவு...

நிஜமா நல்லவன் said...

ரொம்பவே யோசிக்க வச்சீட்டீங்க!

சி தயாளன் said...

//நம்மிடம் இன்னும் எத்தனை நாட்கள் இருக்கின்றன இந்த பூமியில் சுவடுகளைப் பதிப்பதற்கு????நான் யோசிக்க ஆரம்பித்தேன்....//

நாம் எதையும் சாதிக்கவில்லை என்று வருத்தப்படாமல், எதையாச்சும் சாதிச்சிருப்போம் என்று நம்புங்கள்..எல்லாம் நல்லபடியாக நடக்கும்...

அருமையான கவித்துவமான படைப்பு அருணா..வாழ்த்துகள்..

Princess said...

//அந்த மௌனத்தின் இருட்டுக்குள் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற பிரக்ஞை கூட இல்லாமல் வீழ்ந்து கிடந்தான்..... //


என்ன அழகான நடை....யோசிக்க வைக்கும் பொருளும் தான்..
இன்னும் உங்கள் எழுத்தைப் பற்றி சிந்தித்க்கொண்டே இருப்பதால் சரியான் பின்னுட்டம் எழுத இயலவில்லை...
ரொம்ப ஆழமான எழுத்தாற்றல் உங்களுக்கு இருக்கிறது, அருணா..இன்னும் எழுதுங்கள்..காத்திருக்கிறோம்

Princess said...

//அந்த மௌனத்தின் இருட்டுக்குள் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற பிரக்ஞை கூட இல்லாமல் வீழ்ந்து கிடந்தான்..... //

என்ன அழகான நடை....யோசிக்க வைக்கும் பொருளும் தான்..
இன்னும் உங்கள் எழுத்தைப் பற்றி சிந்தித்க்கொண்டே இருப்பதால் சரியான் பின்னுட்டம் எழுத இயலவில்லை...
ரொம்ப ஆழமான எழுத்தாற்றல் உங்களுக்கு இருக்கிறது, அருணா..இன்னும் எழுதுங்கள்..காத்திருக்கிறோம்

na.jothi said...

நம்மிடம் இன்னும் எத்தனை நாட்கள் இருக்கின்றன
இந்த பூமியில் சுவடுகளைப் பதிப்பதற்கு????
நான் யோசிக்க ஆரம்பித்தேன்....

உண்மை தான் , இந்த பதிவு யோசிக்க வைக்குது

Karthik said...

வாவ், சூப்பர்ப்பா எழுதியிருக்கீங்க.

ஏனோ, முத்துக்குமார் ஞாபகத்துக்கு வந்தாருங்க.

//இலக்கியத் தரமான நடை....

ரிப்பீட்டேய்!

காமராஜ் said...

//.திடீரென்று முதல் வகுப்பு டீச்சர்,எப்பவும் சண்டை போடும் அருள்மதி,அழகாகச் சிரித்துப் பேசும் ஹெலென்,நண்பர்கள் கூட்டமாக நனைந்த மழை,12-ம் வகுப்பு பிரிவு விழா,முதல் இன்டர்வியு, முதல் காதல் இப்படியாக வாழ்வின் எல்லா முதலும் நினைவுக்கு வர..... //

யாரையும் விட்டுவைக்காத "முதல்"
எல்லோருக்கும் சர்வ நிச்சயமான
கடைசி நேரத்தில். மிக மிக அலாதியானது.
பிரம்மிக்க வைக்கிறது.
வாழ்த்துக்கள் மேடம்.

தேவன் மாயம் said...

ஒரு நாளின் நடுநிசியில் தொடர்பு எல்லைகளுக்கு அப்பால் தூக்கியெறியப் படப் போகிறான் அவன்..

ஆரம்பமே அசத்தல்

தேவன் மாயம் said...

இத்தனை நாள் வாழ்ந்த நாட்குறிப்பைத் திருப்பிப் பார்த்துக் கொண்டான்.குறிப்பிட்டுச் சொல்லும்படியான மைல்கற்கள் எதுவும் நினைவுக்கு வரவில்லை.சேகரித்த நட்புக்களும் உறவுகளும் எண்ணிக்கையில் ரொம்பவும் குறைவாகவே இருந்தது.பணக் கற்றைகள் அதனினும் குறைவாகவே இருந்தது.///

எதையும் ஒழுங்காக சேகரிக்கவில்லை யாரும்!!

தேவன் மாயம் said...

இன்னும் ஒரே ஒரு நாள் இவனுக்குக் கொடுத்திருந்தால் தன் சுவடுகளை அழுத்தமாகப் பூமியில் பதித்திருப்பானோ எனக் கடவுள் யோசிக்க ஆரம்பித்திருந்தார்....///

முன்னாடியே யோசிக்கமாட்டாரே!!

பாச மலர் / Paasa Malar said...

ஆழமான விஷயத்தை அனாயாசமாகச் சொல்லியிருக்கிறீங்க அருணா.

ச. ராமானுசம் said...

Dear Madam,

the story is very nice.

I understood the theme of story, eventhough can u explain me that "why he has to die at young age?"

sorry for this innocent question.

Anbudan,
Ramanujam

T.V.ராதாகிருஷ்ணன் said...

அருமையான படைப்பு அருணா..

அன்புடன் அருணா said...

Anthony Muthu said...
//உங்கள் எழுத்துக்களிலேயே இதுதான் Master Piece என்று சொல்லத் தோன்றுகிது.//

நிஜம்மாவா????அவ்வ்ளோ நல்லாவா இருக்கு?thanx Antony!..

அன்புடன் அருணா said...

ராமலக்ஷ்மி said...
//அருமை அருணா.
கூடவே எல்லோரையும்....//
திவ்யாபிரியா said... //அருமை//
நன்றி ராமலக்ஷ்மி, திவ்யாபிரியா

M.Rishan Shareef said...

மனதுக்கு நெருக்கமான பதிவொன்று. நல்ல எழுத்து..தொடருங்கள் !

கலாட்டா அம்மணி said...

\\நம்மிடம் இன்னும் எத்தனை நாட்கள் இருக்கின்றன இந்த பூமியில் சுவடுகளைப் பதிப்பதற்கு????நான் யோசிக்க ஆரம்பித்தேன்.... \\

நானும் யோசிக்க ஆரம்பித்துவிட்டேன்..

சிந்திக்க வைக்கும் நல்ல பதிவு.

நாகை சிவா said...

:) நல்லா இருக்குங்க... ஆனாலும் இதை விட போன பதிவு செம கலக்கல்... (போஸ்டர்)

உங்க ஒவிய பதிவு செம கலக்கல். ஏன் அதில் சில மாதங்களாக ஏதும் பதிவு செய்யவில்லை. தொடர்ந்து செய்யுங்கள்.. :)

நாகை சிவா said...

:) நல்லா இருக்குங்க... ஆனாலும் இதை விட போன பதிவு செம கலக்கல்... (போஸ்டர்)

உங்க ஒவிய பதிவு செம கலக்கல். ஏன் அதில் சில மாதங்களாக ஏதும் பதிவு செய்யவில்லை. தொடர்ந்து செய்யுங்கள்.. :)

நாகை சிவா said...

:) நல்லா இருக்குங்க... ஆனாலும் இதை விட போன பதிவு செம கலக்கல்... (போஸ்டர்)

உங்க ஒவிய பதிவு செம கலக்கல். ஏன் அதில் சில மாதங்களாக ஏதும் பதிவு செய்யவில்லை. தொடர்ந்து செய்யுங்கள்.. :)

நாகை சிவா said...

//பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!//

பூங்கொத்து தேடிப் பார்த்தேன், கிடைக்கல... கிடைச்சதும் கொடுத்துடுறேன்... :))

தாரணி பிரியா said...

யோசிக்க வைத்த பதிவு. அருமையான எழுத்து நடையுடன் அட்டகாசமா எழுதி இருக்கிங்க.

அன்புடன் அருணா said...

கோபிநாத் said...
/யோசிக்க வச்சிட்டிங்க...//
அப்பிடியா? நன்றிங்க..

அன்புடன் அருணா said...

Divya said...
//An excellent write up:))//
Tank U Divya..

அன்புடன் அருணா said...

//மேவி என்று ஒரு ஆள் இருந்தான் என்று என் இறப்புக்கு பின் யாருக்கும் பெரிய அளவில் தெரிய போவது இல்லை.....//
அதுக்குள்ளே இப்படி சொன்னால் எப்படி mayvee??
இன்னும் நிறைய நாள் இருக்கே சுவடு பதிக்க?? இப்பவே ஆரம்பிங்க ..கண்டிப்பா சுவடு பதிப்பீங்க...

அன்புடன் அருணா said...

புதியவன் said...
//மிகச் சிறப்பான முறையில் இதுவரை படித்திராத நடையில் அருமையான பதிவு...//

நன்றி புதியவன்...அடிக்கடி வாங்க.

எம்.எம்.அப்துல்லா said...

//உங்கள் எழுத்துக்களிலேயே இதுதான் Master Piece என்று சொல்லத் தோன்றுகிது.

சொல்ல வந்திருப்பது அவ்வளவு ஆழமான... மிக ஆழமான... விஷயம்.

//

ரொம்பச் சரி :))

Aruna said...

’டொன்’ லீ said...
//நாம் எதையும் சாதிக்கவில்லை என்று வருத்தப்படாமல், எதையாச்சும் சாதிச்சிருப்போம் என்று நம்புங்கள்..எல்லாம் நல்லபடியாக நடக்கும்...//

அப்பிடியே நம்பிவிட்டேன் டோன்'லீ

அன்புடன் அருணா said...

நிஜமா நல்லவன் said...
//ரொம்பவே யோசிக்க வச்சீட்டீங்க!//
smile said...
//உண்மை தான் , இந்த பதிவு யோசிக்க வைக்குது//

யோசிப்போம்...யோசிப்போம்..

அன்புடன் அருணா said...

Karthik said...
//வாவ், சூப்பர்ப்பா எழுதியிருக்கீங்க.
ஏனோ, முத்துக்குமார் ஞாபகத்துக்கு வந்தாருங்க.//
அச்சோ ...அப்பிடியா...??

ny said...

xcellent!! flowin deep!!

Mathu said...

ரொம்ப நல்லா எழுதுறிங்க.....இதுதான் உங்க வலைப்பூவில் முதல் வருகை என்று நினைக்கிறேன்....ரொம்ப நல்லா இருக்கு உங்க எழுத்துக்கள் எல்லாம்....தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள் :)

அன்புடன் அருணா said...

காமராஜ் said...
//யாரையும் விட்டுவைக்காத "முதல்"
எல்லோருக்கும் சர்வ நிச்சயமான
கடைசி நேரத்தில். மிக மிக அலாதியானது.
பிரம்மிக்க வைக்கிறது.//

முதல் வருகை,வாழ்த்துக்கும் நன்றி...உங்களைப் பிரமிக்க வைத்திருக்கிறதா? எனக்குச் சந்தோஷம்தான்...

அன்புடன் அருணா said...

நன்றி பாசமலர்,T.V.Radhakrishnan...

அன்புடன் அருணா said...

ச. ராமானுசம் said...
Dear Madam,
//I understood the theme of story, eventhough can u explain me that "why he has to die at young age?"
sorry for this innocent question.//

That I've left to the imagination of the reader...you r welcome to ask such questions ramaanujam...no mprobs

அன்புடன் அருணா said...

எம்.ரிஷான் ஷெரீப் said...
//மனதுக்கு நெருக்கமான பதிவொன்று. நல்ல எழுத்து..தொடருங்கள் !//

அச்சோ...எவ்வ்ளோ பெரிய எழுத்தாளர்கிட்டேருந்து பாராட்டு???ரொம்ப சந்தோஷமாருக்கு...

geevanathy said...

///நம்மிடம் இன்னும் எத்தனை நாட்கள் இருக்கின்றன இந்த பூமியில் சுவடுகளைப் பதிப்பதற்கு????நான் யோசிக்க ஆரம்பித்தேன்....//

அருமையான,ஆழமான பதிவு


பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பூங்கொத்து + வாழ்த்துக்கள்

அன்புடன் அருணா said...

நாகை சிவா said...
//:) நல்லா இருக்குங்க... ஆனாலும் இதை விட போன பதிவு செம கலக்கல்... (போஸ்டர்)//

நன்றிங்க...அதை அங்கேயே பதிவு செய்திருக்கலாமே??

//உங்க ஒவிய பதிவு செம கலக்கல். ஏன் அதில் சில மாதங்களாக ஏதும் பதிவு செய்யவில்லை. தொடர்ந்து செய்யுங்கள்.. :)//

போடறேன்...போடறேன்...

அன்புடன் அருணா said...

தாரணி பிரியா said...
//யோசிக்க வைத்த பதிவு. அருமையான எழுத்து நடையுடன் அட்டகாசமா எழுதி இருக்கிங்க.//

நன்றி..... தாரணிப் பிரியா
அன்புடன் அருணா

அன்புடன் அருணா said...

நன்றி கலாட்டா அம்மணி...அடிக்கடி வாங்க..

Anonymous said...

well done aruna..........great..vazhum naalil manitha manam ithai nenaithaal veezhum naal niraivaai erukum...enna seiya nam manithargal aaetrey...

*இயற்கை ராஜி* said...

//நம்மிடம் இன்னும் எத்தனை நாட்கள் இருக்கின்றன இந்த பூமியில் சுவடுகளைப் பதிப்பதற்கு????//
fantastic:-)

நட்புடன் ஜமால் said...

அட்டகாசமான படத்தோடும்

நல்ல வரிகளோடும்

படித்த எங்களின் சிந்தனைகள் - ஓடும் ...

Anonymous said...

நல்லா இருக்கு கவிதை வரிகள். ஆனா 30 முறை படித்தும் 1முறை கூட புரியவில்லை

Anonymous said...

நல்லா இருக்கு கவிதை வரிகள். ஆனா 30 முறை படித்தும் 1முறை கூட புரியவில்லை
http://mahawebsite.blogspot.com/

அன்புடன் அருணா said...

மகா said...
//நல்லா இருக்கு கவிதை வரிகள். ஆனா 30 முறை படித்தும் 1முறை கூட புரியவில்லை//

அடடா ....புரியலை...ஆனால் நல்லா இருக்கு ....ஒருவேளை இது பின் அல்லது முன் நவீனத்துவ வகையைச் சார்ந்ததோ????

மந்திரன் said...

//மரணக் குறிப்புகளைப் பிரதியெடுக்கக் கூட//
எங்கும் எதிலும் படித்திராத புது வரிகள் ..

//வாழ்க்கைத் துணை .....சரண்யா...உன்னைப் பெயர் சொல்லி அழைத்துத்தான் எத்தனை நாளாகிறது//

அந்த பெயர் எனக்கு பிடித்து இருக்கிறது .
சிறு சிறு விசயங்களில்தான் எத்தனை சந்தோசம் ..
காதல் ,அன்பு எல்லாம் வார்த்தைகள் தான் அவை உணரப்படும் வரை .

மழலையின் முத்தம் , மனைவியின் சினுங்கள் , அப்பாவின் முறைப்பு , அம்மாவின் வாஞ்சை, திருடிய அந்த 50 பைசா .. இன்னும் இன்னும் ..
சில இழப்புகள் எப்போதும் ஈடு செய்ய முடிவதில்லை .

MSK / Saravana said...

வாவ்.. அழகா எழுதி இருக்கீங்க அக்கா..
நேற்று தான் கிட்டத்தட்ட இதே தீமில், நகைச்சுவை இழையோடும் click என்ற ஒரு படம் பார்த்தேன்..
:)

MSK / Saravana said...

ஆணிகள் காரணமாக ரொம்ப தாமதமாக வருகிறேன்..

VASAVAN said...

மரணத்தின் அழைப்பில்... அஞ்சி நடுங்கும் மனித மனதின் துடிப்பு....

//இன்னும் ஒரே ஒரு நாள் இவனுக்குக் கொடுத்திருந்தால் தன் சுவடுகளை அழுத்தமாகப் பூமியில் பதித்திருப்பானோ எனக் கடவுள் யோசிக்க ஆரம்பித்திருந்தார்....//. யோசிக்க வைக்கும் வரிகள்... அருமையான வெளிப்படுத்தல்....

அமிர்தவர்ஷினி அம்மா said...

அருமையா இருக்குன்னு ஒரு வரியில சொல்லிட்டு போகமுடியாதபடி கட்டிப்போட்ட பதிவு, ஒவ்வொரு வரிகளும், சாட்டையடி தான்.

எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.

அன்புடன் அருணா said...

thamilarasi said...
//well done aruna.....enna seiya nam manithargal aaetrey...//

Thanks thamilarasi...I think this is ur first visit....and comments

அன்புடன் அருணா said...

Thank U இயற்கை...

அன்புடன் அருணா said...

Saravana Kumar MSK said...
//ஆணிகள் காரணமாக ரொம்ப தாமதமாக வருகிறேன்..//

பரவாயில்லைப்பா.....லேட்டா வந்தாப் பரவாயில்லை....வேலை...first priority!!!
ok va???

அன்புடன் அருணா said...

VASAVAN said...
//மரணத்தின் அழைப்பில்... அஞ்சி நடுங்கும் மனித மனதின் துடிப்பு....யோசிக்க வைக்கும் வரிகள்... அருமையான வெளிப்படுத்தல்//

நன்றி வாசவன் ..முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும்...
அன்புடன் அருணா

அன்புடன் அருணா said...

அமிர்தவர்ஷினி அம்மா,
//எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.//

ம்ம்ம் பிடிச்சுருக்கா???? அப்போ அடிக்கடி வாங்க...

sri said...

Arumayana title, attagasamaana kadhai, :)

Muruganandan M.K. said...

அருமையான நடை
விறுவிறுப்பு
மனதைத் தொடுகிறது

Post a Comment

வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!

அன்புடன் அருணா