நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-
அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -
என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,
இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.
இனி என்னைப் புதிய உயிராக்கி -
எனக்கேதும் கவலையறச் செய்து -
மதி தன்னை மிகத் தெளிவு செய்து -
என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.
Sunday, January 18, 2009
"ஏண்டா எங்க தலைவன் போஸ்டரக் கிழிச்சே?
அவன் வேக வேகமாக வந்தான்..சைக்கிளை விட்டு இறங்கினான்...அந்த போஸ்டரை எடுத்து கவனமாகப் பசை தடவி ஒட்டினான்..போய்க் கொண்டே இருந்தான்.
அந்தப் பெரியவர் மெதுவாக நிதானமாக அதைக் கிழித்தெறிந்துவிட்டு அந்த பேர்ப்பலகை அருகில் படுத்துக் கொண்டார்.அவன் சாயங்காலமாக அதே வழியில் போகும்போது அந்தப் போஸ்டர் கிழிபட்டிருப்பதைப் பார்த்தான்..மறுபடியும் ஒரு போஸ்டரை உருவி மறுபடியும் கவனமாகப் பசை தடவி ஒட்டினான்.அந்தப் பெரியவர் அவன் போனதும் மறுபடியும் மெதுவாக நிதானமாக அதைக் கிழித்தெறிந்துவிட்டு அந்த பேர்ப்பலகை அருகில் படுத்துக் கொண்டார்.
காலையில் அந்தப் பேர்ப்பலகையப் பார்த்த அவனுக்கு வெறி தலைக்கேறியது...""யார்டா அது தலைவன் போஸ்டரக் கிழிக்கிறது?"" எதிர்க் கட்சிக்காரங்க வேலையாத்தான் இருக்கும்.......இருடா இன்னிக்கு ரெண்டுலே ஒண்ணு பார்த்துரலாம்னு மனசுலெ கறுவிக் கொண்டு போய் ஆளுங்களைக் கூட்டிக் கொண்டு வந்து மறுபடியும் போஸ்டரை ஒட்டிவிட்டு மறைவில் காத்திருந்தார்கள்..
அந்தப் பெரியவர் மறுபடியும் மெதுவாக நிதானமாக அதைக் கிழித்தெறிந்துவிட்டு அந்த பேர்ப்பலகை அருகில் படுத்துக் கொண்டார்.
டாய் என்றலறியவாறு கூட்டம் ஓடிவந்து பெரியவரைப் போட்டு அடித்து நொறுக்கியது...."ஏண்டா எங்க தலைவன் போஸ்டரக் கிழிச்சே? எவண்டா அனுப்புனது உன்னைய ?" என்று காட்டுக் கத்தல் கத்தியது.அடித்துத் துவைத்தது...
பெரியவர் அசையாமல் இருப்பதைப் பார்த்ததும் "விடுங்கடா செத்துடப் போறான்....ஒட்டுடா மறுபடியும்...இனி எவன் வருவான் கிழிக்கன்னு பார்த்துரலாம்" என்றபடி மறுபடி ஒட்டிவிட்டுப் போனார்கள்....
பெரியவர் மீண்டும் மெல்ல எழுந்து அவர்கள் போனவுடன் மறுபடியும் கிழிக்க ஆரம்பித்தார்.....அங்கிருந்த பெட்டிக் கடைக்காரன் கூவினான் "ஏன் பெரிசு உசுரோட இருக்கவேண்டாமா ? எதுக்குய்யா அதைக் கிழித்து வம்பை விலைக்கு வாங்குறே??.......பெரியவர் அதைக் கிழித்து முடித்துவிட்டு அந்தப் பேர்ப்பலகையில் எழுதியிருந்த பெயரை வாஞ்சையுடன் தடவினார்....கார்கில் போரில் உயிரிழந்த தியாகிகளுக்காகக் கட்டப் பட்டது.........என எழுதியிருந்ததை கடைக்காரன் சத்தமாக வாசித்தான்......
அதில் ஆனந்த் என்ற பெயரைத் தடவிக் கொண்டே......
ம்ம்ம் என் பையன்...என்று முனகினார் பெரியவர் உதட்டில் வழிந்திருந்த ரத்தத்தைத் துடைத்துக் கொண்டே.
at
4:04 PM
Subscribe to:
Post Comments (Atom)
84 comments:
மனதை தொடுகிறது. நம் நாட்டில் இருக்கும் உண்மையான நிலைமை இது தான். நன்றாக எழுதி உள்ளீர்கள். வாழ்த்துக்கள்.
மனதை தொடுகிறது. நம் நாட்டில் உள்ள நிலைமை இதுதான். நன்றாக எழுதி உள்ளீர்கள். வாழ்த்துக்கள்.
:(((
நெகிழ்ச்சியான பதிவு!
அருமை மேடம். மூன்று விசயங்கள், போர்த்தியாகியின் தந்தையின் நிலை, தந்தை மகன் பாசம், அரசியல் தொண்டர்களின் இன்றைய யதார்த்த மனோபாவம் கதையில் காட்டி இருக்கிறீர்கள்
ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க அக்கா.. நெஞ்சை தொட்டது..
இதுதான் இன்றைய நிலமை...மனதைத் தொடுமாறு எழுதியுள்ளீர்கள்....வாழ்த்துகள்..
அருணா,
பதிவை படித்து முடித்த பிறகும் மனசு பாராமா இருக்கு:(
அந்த படத்தை இன்னொருமுறை என்னால பார்க்கவே முடில,
மனதை தொட்டது பதிவு.
ரொம்ப அருமையான நடையில் எழுதியிருக்கிறீங்க அருணா, வாழ்த்துக்கள்.
மனதை தொடும்படி எழுதியுள்ளீர்கள்..
நல்ல ,உருக்கமான பதிவு
:(((((((
நெகிழ வைத்து விட்டீர்கள் அருணா!
வணக்கம்.
முகம் தெரியாவிடினும்..தமிழால் தங்கள் அகம் அறிந்தேன்.வீழ நினைத்தவர்களுக்கு.."உனக்கும் கீழே உள்ளவர் கோடி.."-என ஆற்றுப்படுத்தினான்..கண்ணதாசன்.
வளர நினைப்பவர்க்கு.."உனக்கும் மேலே..உள்ளவர் கோடி.."-என சொல்ல வைக்கிறது உங்கள் படைப்புகள்.முழுவதும் மூழ்கி முத்தெடுத்து சத்தான கருத்துகளோடு..சதிக்கிறேன்.என் சங்கபலகையையும் மதித்து..உள்நுழைந்து உலாவியமைக்கு நன்றி.தங்களின் அறிவும் தொழமையும் என்னை இன்னும் வளர்க்ககூடும் எனும் நம்பிக்கை மிகுதியில் வாழ்த்துகளோடு விடைபெறுகிறேன்.நன்றி
உண்மையை மிக எளிமையாக எழுதி அசத்திட்டிங்க ;)
நெஞ்சைத்தொட்ட அருமையாண கதை.... நடந்து கொண்டிருக்கின்றது நாட்டில் இதுபோல்...
அல்லக்கைகள் பெருகிவிட்டனர் நம்நாட்டில்
நேற்று தான் நினைத்தேன்
7 ஆம் தேதிக்கு ஆப்புறம் ஒரு பதிவு
உங்களிடம் இல்லையே ன்னு
நிறைய இடங்களில் இப்படி தான் அக்கா
தெரு , ஊர் பேர் கூட தெரியாம போஸ்டர்
ஓட்டறாங்க
படித்து முடித்ததும்
இன்னவென்று சொல்ல முடியாத வலி
மனதில் தோன்றுகிறது...
அருமையான கதை!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!//
பூங்கொத்து கொடுத்திட்டேன்.
பாராட்டுக்கள்
Nice Post :) Read few of your posts... very nice and inspiring...
நெகிழ்ச்சியான பதிவு.
கண் கலங்கிடுச்சு அருணா....கதையை படிச்சுட்டு அந்த படத்தை பார்க்க முடியல
மை காட்!!
நெகிழ வைத்து விட்டீர்கள்!!
வாங்க கார்த்திகைப் பாண்டியன்....முதல் வருகை +வாழ்த்துக்கள்...
நன்றி.
அன்புடன் அருணா
thank u kaarkki:)
அன்புடன் அருணா
நன்றி திவ்யாபிரியா.
அன்புடன் அருணா
அருண்மொழிவர்மன் said...
//மனதை தொடும்படி எழுதியுள்ளீர்கள்..
நல்ல ,உருக்கமான பதிவு//
நன்றி அருண்...எப்பவாவது வர்றீங்க...அடிக்கடி வாங்க.
அன்புடன் அருணா
ரொம்ப நாளைக்கு அப்புறம் comment பண்ணியிருக்கீங்க வினையூக்கி.thanx.
அன்புடன் அருணா
romba touchinga irukku....
ya its true... today followers of political leader dont have a vision; thy just do tht to get popularised among th party men.....
மிக அருமையான பதிவு அன்பின் அருணா ...
மனதை தொட்டு விட்டீர்கள் இந்த பதிவில் ...
அன்புடன்
விஷ்ணு
மேடம் போட்டோ கொடூரமா இருக்கே.வெடி குண்டு
விக்டீமா?
படித்து முடித்ததும் இன்னவென்று சொல்ல முடியாத வலி மனதில். அருமையான பதிவு
அருணா,
இதுதான் நம்ம நாட்டுல இப்போ நடக்குது. ரொம்ப எதார்த்தமா இருக்குங்க உங்க எழுத்து.
வாழ்த்துக்கு நன்றி டொன் லீ...
அன்புடன் அருணா
என்னப்பா உற்சாகம் ரொம்பக் குறைவா இருக்கே???
வாழ்த்துக்கு நன்றி.
அன்புடன் அருணா
வாழ்த்துக்கு நன்றி திவ்யா.
அன்புடன் அருணா
என்ன செந்தில் வெறும் :(( தானா?
அன்புடன் அருணா
நன்றி ராமலக்ஷ்மி..அடிக்கடி வாங்க!
அன்புடன் அருணா
நெஞ்சை நெகிழவைத்த கதை அருணா . ! இன்றைய நிலையை அழகாக படம்பிடித்துள்ளீர்கள். நன்றி
நெஞ்சை நெகிழவைத்த கதை அருணா . ! இன்றைய நிலையை அழகாக படம்பிடித்துள்ளீர்கள். நன்றி
அன்புடன் அருணாவுக்கு கதை அருமை.
நல்லா எழுதியிருக்கீங்க.
ரொம்ப கஷ்டமாயிருந்திச்சி கடைசி வரிகளில்
goosebumps vandhuruchu
very good short story , and it contains many elements nicely put
great work
இது என் சங்கப்பலகை said...
//வளர நினைப்பவர்க்கு.."உனக்கும் மேலே..உள்ளவர் கோடி.."-என சொல்ல வைக்கிறது உங்கள் படைப்புகள்.//
உங்க வாழ்த்துக்கு நன்றிங்க...
அன்புடன் அருணா
நன்றி கோபினாத்,தமிழ்.சரவணன்,கபீஷ்.
அன்புடன் அருணா
புதுகைத் தென்றல் said...
//பூங்கொத்து கொடுத்திட்டேன்.
பாராட்டுக்கள்//
பூங்கொத்து வாங்கிக்கிட்டேன்...எப்பவாவது வர்றீங்க....அடிக்கடி வாங்க....
அன்புடன் அருணா
Raji said...
//Nice Post :) Read few of your posts... very nice and inspiring...//
thanx Raji for the first visit and comments...
Anbudan aruna
சந்தனமுல்லை said...
//மை காட்!!
நெகிழ வைத்து விட்டீர்கள்!!//
வாங்க சந்தனமுல்லை...முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.
அன்புடன் அருணா
கே.ரவிஷங்கர் said...
//மேடம் போட்டோ கொடூரமா இருக்கே.வெடி குண்டு
விக்டீமா?//
தெரிலங்க...கூக்ள் ஆண்டவர் தந்தது...
அன்புடன் அருணா
நான் ஆதவன் said...
//கண் கலங்கிடுச்சு அருணா....கதையை படிச்சுட்டு அந்த படத்தை பார்க்க முடியல//
நன்றி ஆதவன்.
அன்புடன் அருணா
குடுகுடுப்பை said...
//நெகிழ்ச்சியான பதிவு.//
அப்பிடியா?நன்றி குடுகுடுப்பை
அன்புடன் அருணா
Anonymous said...
//அன்புடன் அருணாவுக்கு கதை அருமை.//
எனக்கு வந்த முதல் Anonymous comment...பெயரைப் போட்டிருக்கலாமே?
அன்புடன் அருணா
சகாராதென்றல் said...
அருணா,
//இதுதான் நம்ம நாட்டுல இப்போ நடக்குது. ரொம்ப எதார்த்தமா இருக்குங்க உங்க எழுத்து.//
நன்றி சகாரா...அடிக்கடி வாங்க..
அன்புடன் அருணா
வீ. எம் said...
//நெஞ்சை நெகிழவைத்த கதை அருணா . ! இன்றைய நிலையை அழகாக படம்பிடித்துள்ளீர்கள்.//
நன்றி வீ. எம்
அன்புடன் அருணா
//
Raji said...
//Nice Post :) Read few of your posts... very nice and inspiring...//
thanx Raji for the first visit and comments...
Anbudan aruna //
உங்களின் மற்ற பதிவுகளும் அருமை ..
மிகவும் நெகிழ வைத்தது அருணா..
மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்குங்க.. :-(
Srivats said...
//goosebumps vandhuruchu
very good short story , and it contains many elements nicely put
great work//
Thanx Srivats...for ur visit and comment after a long time????
இராஜலெட்சுமி பக்கிரிசாமி said...
//உங்களின் மற்ற பதிவுகளும் அருமை ..//
Thanx Raji.
பாச மலர் said...
/மிகவும் நெகிழ வைத்தது அருணா..//
நன்றி...அடிக்கடி வாங்க. பாசமலர்....
இனியவள் புனிதா said...
//மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்குங்க.. :-(//
நன்றி புனிதா...
:-)0
sotry nalla irukku....
ரொம்ப அருமை!
விகடன் சிறுகதை போல இருந்தது...எழுதிப் போடுங்களேன் விகடன். குமுததுக்கு...பிரசுரிக்கும் போது நாங்களும் பெருமையா சொல்லிப்போம்ல இவங்கள எனக்கு தெரியும்னு..ம்ம்ம்..பண்ணுவீங்களா ? :))
அன்பு சினேகிதி
ஸாவரியா
MayVee said...
//sotry nalla irukku....//
you mean to say story nalla irukku??
Tank U
அக்கா வேலை அதிகமா?? நீண்ட நாட்களாக புதுப்பதிவு எதுவும் காணோமே?? உடல்நிலை நன்றாக இருக்கின்றதா??
ஸாவரியா said...
//ரொம்ப அருமை!
விகடன் சிறுகதை போல இருந்தது...எழுதிப் போடுங்களேன் விகடன். குமுததுக்கு...பிரசுரிக்கும் போது நாங்களும் பெருமையா சொல்லிப்போம்ல இவங்கள எனக்கு தெரியும்னு..ம்ம்ம்..பண்ணுவீங்களா ? :))//
அச்சோ அப்பிடியா??? பண்ணிட்டாப் போச்சு....
ஸாவரியா...
அன்புடன் அருணா
எம்.எம்.அப்துல்லா said...
//அக்கா வேலை அதிகமா?? நீண்ட நாட்களாக புதுப்பதிவு எதுவும் காணோமே?? உடல்நிலை நன்றாக இருக்கின்றதா??//
அட??? வேலை கொஞ்சம் அதிகம்தான்..உடல்நிலை நலமே...அக்கறைக்கு நன்றி தம்பி.புது பதிவு போடறேன்...போடறேன்...
அன்புடன் அருணா
"you mean to say story nalla irukku??"
ya
please aruna ji orae oru request...
antha padathai remove panna mudiyuma...
uyirai ullukul irunthu uruvugirathu antha padam..
kannukul mutti kondu varum alugaiyai maraikka ninaithu...manasu romba baramaa iruku....
பூங்கொத்து பிடிங்க..!
manasukkul melithaai vali...varthaigal valimai vaainthadhu mattum alla menmaiyanathum kuda nice ya....
kartin said...
//பூங்கொத்து பிடிங்க..!//
கொடுங்க...கொடுங்க..வேண்டாம்னா சொல்லப் போறேன்???
நித்தி .. said...
//please aruna ji orae oru request...
antha padathai remove panna mudiyuma...//
thanx for ur visit and comments Niththi...If thats hurting I'll find out an apt picture and remove Nithi.
சில கதைகள் ,சில வரிகள் எப்போதும் நம் நினைவில் இருக்கும் ...
அந்த ஒரு சில கதைகளில் இந்த கதைக்கு நிச்சயம் ஒரு இடம் ...
இப்பொது தான் உங்கள் பதிவுகளை படித்து கொண்டு இருக்கிறேன் .
உங்கள் பதிவை போல உங்கள் மதிப்பும் உயர்ந்து கொண்டு இருக்கிறது என் மனதில்
romba nala irundhathu
மந்திரன் said...
//உங்கள் பதிவை போல உங்கள் மதிப்பும் உயர்ந்து கொண்டு இருக்கிறது என் மனதில்...//
உங்களின் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி மந்திரன்....
அன்புடன் அருணா
thank you ulagam suRRum vaaliban!!!
anbudan aruNa
try to make a short film with this....
apt script for visual treat
vaazhthugal
A nice idea rajan RADHAMANALAN ...I'll think over it....
மனதை நெகிழ்த்திய கதை அருணா.. இத்தனை நாளா உங்க வலைப் பூவைப் பார்க்கலையே நு feel பண்ண வச்ச கதை... பிடியுங்கள் பூங்கொத்து... வாழ்த்துகள்
நியாயம் புரியாத விசுவாசியா நிறைய பேர் இருக்குறதாலத்தான் நம்ம நாட்டுல பல சிக்கல்கள்.
அருமையான கதை,,,,இதையும் படித்தேன் இதை திருடிய ஆசாமி பதிவையும் படித்தேன் அப்படியே எழுதி இருக்கார் போங்க !!!!
Post a Comment
வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!
அன்புடன் அருணா