நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.

Tuesday, October 14, 2008

மீண்டும் பாலகுமாரனின் ரசிகையாகிட்டோமில்லே.......!!!!!

எனக்கு நல்லா நினைவு இருக்கு பாலகுமாரனின் மெர்க்குரிப் பூக்களும்,இரும்புக் குதிரையும் ஒரே இரவுக்குள் படித்து முடித்தது...பாலகுமாரனின் கதைகளை இப்படித்தான் அவசர அவசரமாக முழுமூச்சாய் ஒருமுறையும்,பின்னர் ஆற அமர நிதானமாக பலமுறையும் படிப்பது என் வழக்கம்.

அப்படித்தான் அவரின் "பச்சை வயல் மனதை"யும் படித்தேன்...அவசர அவசரமாய்...படித்து முடித்தவுடன் சுறு சுறுவென்று கதை நாயகன் மேலுள்ள கோபத்தை இப்படி பாலகுமாரனிடம் காண்பித்தேன்..மிக அவசரமான ஒரு விமரிசனக் கடிதம்.....

அன்புள்ள ஆசிரியர் பாலகுமாரனுக்கு,
பாலகுமாரனின் பழைய ரசிகை
பச்சை வயல் மனதினைப் படித்து விட்டு
விமரிசராகப் படிதாண்டி
வந்திருக்கிறேன்.....

இலவச இணைப்பு இதழைப் படித்து
இதயம் வலிக்கும் இளம் பெண்களின்
குமுறல்களின் சார்பில் வலியைக்
குறைத்துக் கொள்ள எண்ணி எழுதுகிறேன்...

தவறுகளுக்குச் சூழ்நிலை காரணம் எனத்
தானே ஒத்துக் கொண்ட பத்மநாதன்
சூழ்நிலை காரண்மாகப் பொய் சொல்லி
சுத்தமாக் இருக்கும் கல்பனாவை
ஒதுக்கிவிட்ட முடிவில் இருந்து
ஒன்று மட்டும் புரிகிறது....

எழுத்தாளர் தானும் ஓர் ஆண்வர்க்கம்
எனவே அவர்களின் பக்கமிருந்துதான்
எதையும் தீர்மானிப்பதென்னும் அவரின்
எண்ணம் என்னுள்ளே எரிய வைக்கிறது...

பசுமையான என் மனதினைப்
பச்சை வயல் மனது அதிகமாகவே
பாதித்து விட்டது.....
பரிகாரமாக வேறொரு கதையைத் தேடுகிறேன்...
அருணா

இப்படி எழுதி அனுப்பிவிட்டேன்...என்ன ஆச்சரியம்??!!
ஒரே வாரத்தில் பதில்...

அந்த 24 வருஷப் பழைய கடிதம் இன்னும் என் பொக்கிஷப் பெட்டியில் பத்திரமாய்....மூடிய புத்தக மயிலிறகாய்......
அவ்வ்ளோதான் என் கோபமெல்லாம் பறந்து போய்....மீண்டும் பாலகுமாரனின் ரசிகையாகிட்டோமில்லே.......!!!!!

42 comments:

siva sinnapodi said...

மிக நல்ல கவிதை வாழ்த்துக்கள்
http://sivasinnapodi1955.blogspot.com/

அது சரி said...

//
எனக்கு நல்லா நினைவு இருக்கு பாலகுமாரனின் மெர்க்குரிப் பூக்களும்,இரும்புக் குதிரையும் ஒரே இரவுக்குள் படித்து முடித்தது...
//

அடேங்கப்ப்பா... இரும்புக் குதிரைகளை ஒரே நாள் இரவிலா?? எப்பிடிங்க முடிஞ்சது?

நான் மொத மொதல்ல படிச்ச பாலா புத்தகம் இரும்பு குதிரைகள் தான். அதுக்கு முன்னாடி ராணி காமிக்ஸும், சிறுவர் மலரும் தான் படிச்சிட்டு இருந்தேன்.. இரும்பு குதிரைகளை படிக்க ஆரம்பிச்சதும் அதெல்லாம் விட்டுட்டு பாலா புத்தகத்தை தேடி தேடி படிக்க ஆரம்பிச்சிட்டேன்..

Saravana Kumar MSK said...

பழைய நினைவுகள்..??

Saravana Kumar MSK said...

வாழ்த்துக்கள்.. :)

Saravana Kumar MSK said...

30.1.84 ??

ரொம்ப பழைய கடிதமா இருக்கே.. நான் பிறக்கவே இல்லை, இக்கடித காலத்தில்..

கடைசி பக்கம் said...

//மெர்க்குரிப் பூக்களும்,இரும்புக் குதிரையும் ஒரே இரவுக்குள் படித்து முடித்தது...//

tough to finish.

For me Bala's letters are more powerfull and way he write is so attractive. But it doesn't make you to think it means he pushes his opinion. Still I love to read few novels from him.

above said are among the few novels. :-))

Karthik said...

:)

குப்பன்_யாஹூ said...

பாலா பற்றிய பதிவு மிக அருமை.
பாலாவின் மற்ற எழுத்துக்கள் குறித்தும் எழுதுங்கள்.
15-20 வருடங்களுக்கு முன்னால் பாலாவும், சுஜாதாவும் நட்ட விதைகள் தான் இன்று வலை உலகத்தில் விருட்சமாக வளர்ந்து விளைச்சலை கொடுத்து கொண்டிருக்கிறோம்.

வாசகர்க்கு கதை, கதா பாத்திரம் , இலக்கணம், இலக்கியம் தாண்டி மனிதம், ஆண் பெண் உறவு மேம்படல், சக மனிதர்க்கு விட்டு கொடுத்தல், பரஸ்பரம் பார்ரட்டுதல் போன்றவற்றை கற்று கொடுத்த நண்பர்/ஆசான் பாலகுமாரன்.

நன்றி மற்றும் வாழ்த்துக்களுடன்
குப்பன்_யாஹூ

Aruna said...

siva sinnapodi கூறியது...
//மிக நல்ல கவிதை வாழ்த்துக்கள்//முதல் வருகைக்கும்.,வாழ்த்துக்கும் நன்றி சிவா.
அன்புடன் அருணா

Aruna said...

அது சரி கூறியது... //அடேங்கப்ப்பா... இரும்புக் குதிரைகளை ஒரே நாள் இரவிலா?? எப்பிடிங்க முடிஞ்சது?//

முடிஞ்சது....அப்போ இருந்த ஆர்வத்தினால் முடிஞ்சது..அதென்னங்க பேர்? அதுசரி??
அன்புடன் அருணா

Aruna said...

Saravana Kumar MSK கூறியது...
வாழ்த்துக்கள்.. :)பழைய நினைவுகள்..??

அமாமா மலரும் நினைவுகள்.....
30.1.84 ??

//ரொம்ப பழைய கடிதமா இருக்கே.. நான் பிறக்கவே இல்லை, இக்கடித காலத்தில்..//

அய்யோ...ரொம்பக் குட்டிப் பையனா நீ??அப்போ பாலகுமாரனை எங்கே படிச்சுருக்கப் போறே???
அன்புடன் அருணா

Aruna said...

கடைசி பக்கம் கூறியது...
//மெர்க்குரிப் பூக்களும்,இரும்புக் குதிரையும் ஒரே இரவுக்குள் படித்து முடித்தது...//

tough to finish.
அடடா....ஒரே இரவுக்குள் இரண்டையும் முடிக்கவில்லையப்பா....
மெர்க்குரிப் பூக்கள் ஒரு இரவிலும்,இரும்புக் குதிரைகள் ஒரு இரவிலும் முடிதேன் என்று சொல்ல வந்தேன்...
அன்புடன் அருணா

Aruna said...

Karthik கூறியது...
:)//

செமஸ்டர் பக்கத்துலே வருதுன்னு புரியுது....:)
அன்புடன் அருணா

கடைசி பக்கம் said...

//கடைசி பக்கம் கூறியது...
//மெர்க்குரிப் பூக்களும்,இரும்புக் குதிரையும் ஒரே இரவுக்குள் படித்து முடித்தது...//

tough to finish.
அடடா....ஒரே இரவுக்குள் இரண்டையும் முடிக்கவில்லையப்பா....
மெர்க்குரிப் பூக்கள் ஒரு இரவிலும்,இரும்புக் குதிரைகள் ஒரு இரவிலும் முடிதேன் என்று சொல்ல வந்தேன்...
அன்புடன் அருணா//

ஓஹோ,,,,,,

Aruna said...

கடைசி பக்கம் கூறியது...
//கடைசி பக்கம் கூறியது...
//மெர்க்குரிப் பூக்களும்,இரும்புக் குதிரையும் ஒரே இரவுக்குள் படித்து முடித்தது...//

tough to finish.
அடடா....ஒரே இரவுக்குள் இரண்டையும் முடிக்கவில்லையப்பா....
மெர்க்குரிப் பூக்கள் ஒரு இரவிலும்,இரும்புக் குதிரைகள் ஒரு இரவிலும் முடிதேன் என்று சொல்ல வந்தேன்...
அன்புடன் அருணா//

//ஓஹோ,,,,,,//

ஆஹாஹா...அதுவே!!!
அன்புடன் அருணா

Aruna said...

குப்பன்_யாஹூ கூறியது...
//வாசகர்க்கு கதை, கதா பாத்திரம் , இலக்கணம், இலக்கியம் தாண்டி மனிதம், ஆண் பெண் உறவு மேம்படல், சக மனிதர்க்கு விட்டு கொடுத்தல், பரஸ்பரம் பார்ரட்டுதல் போன்றவற்றை கற்று கொடுத்த நண்பர்/ஆசான் பாலகுமாரன்.

நன்றி மற்றும் வாழ்த்துக்களுடன்
குப்பன்_யாஹூ//

நீங்கள் சொல்வது 100 சதவிகிதம் உண்மை குப்பன்...முதல் வருகை குப்பன்..நன்றி.
அன்புடன் அருணா

Saravana Kumar MSK said...

//அய்யோ...ரொம்பக் குட்டிப் பையனா நீ??//

ஆமாம்.. ஆமாம்.. இக்கடிதத்துக்கும் எனக்குமே இரண்டேகால் வருட வித்தியாசம் இருக்கிறது..

//அப்போ பாலகுமாரனை எங்கே படிச்சுருக்கப் போறே???//

இல்லை. படிச்சதில்லை.. ஆனால் கேள்விபட்டிருக்கிறேன்.. :)

Saravana Kumar MSK said...

//வாசகர்க்கு கதை, கதா பாத்திரம் , இலக்கணம், இலக்கியம் தாண்டி மனிதம், ஆண் பெண் உறவு மேம்படல், சக மனிதர்க்கு விட்டு கொடுத்தல், பரஸ்பரம் பார்ரட்டுதல் போன்றவற்றை கற்று கொடுத்த நண்பர்/ஆசான் பாலகுமாரன்//

படிக்கணும்போல் தான் இருக்கிறது..

Aruna said...

//அப்போ பாலகுமாரனை எங்கே படிச்சுருக்கப் போறே???//

//இல்லை. படிச்சதில்லை.. ஆனால் கேள்விபட்டிருக்கிறேன்.. :)
படிக்கணும்போல் தான் இருக்கிறது..//

அச்சச்சோ....நிறைய மிஸ் பண்ணிட்டீங்களே!!!!...கண்டிப்பா படிங்க...
அன்புடன் அருணா

ராமலக்ஷ்மி said...

அருணா,
அந்த முதல் பத்தியில் ஒரே இரவுக்குள் என்பதை ஓரிரு தினங்களில் என மாற்றிக் கொண்டால் அது எனக்கும் பொருந்தும்.

பச்சை வயல் மனதில் அவர் சொன்னது போல வாசிக்கிற நாம் பெண் என்பதைத் தாண்டியும் பார்க்கலாம்தான். அந்தக் கதையின் கடைசியில் அவர் மேற்கோள் காட்டிய கண்ணதாசன் கவிதை நினைவிருக்கிறதா? அற்புதமா இருக்கும்:)!

மீண்டும் ரசிகையாயிட்டதில் மகிழ்ச்சி. ஆனால் நான் இப்பவும் பழைய ரசிகைதான்:)! எனது Profile-லில் குறிப்பிட்டிருப்பேன் பிடித்த புத்தகங்கள் வரிசையில் "பாலகுமாரனின் ஆரம்பக் கால நாவல்கள்" என. நாளடைவில் அவரது எழுத்துக்களில் தத்துவங்கள் தூக்கலாகி வாசிக்கையில் ஒரு ஆயாசம் ஏற்பட்டதென்னவோ உண்மை. இது எனக்கு மட்டுமே பொருந்தும் சொந்தக் கருத்து:)! ரசிக ரசிகைகள் சண்டைக்கு வந்து விடாதீர்கள்:)!

Saravana Kumar MSK said...

அக்கா.. உங்களை ஒரு தொடர் பதிவுக்கு அழைத்திருக்கிறேன்.. வந்து பாருங்க..

Divya said...

விமர்சன கடிதம் ரொம்ப நல்லா எழுதியிருக்கிறீங்க.....நல்ல எழுத்து நடை :))

Aruna said...

ராமலக்ஷ்மி கூறியது...
//அருணா,
பச்சை வயல் மனதில் ... அந்தக் கதையின் கடைசியில் அவர் மேற்கோள் காட்டிய கண்ணதாசன் கவிதை நினைவிருக்கிறதா? அற்புதமா இருக்கும்:)!

நினைவில்லையே??? உங்களுக்கு நினைவிருந்தால் அனுப்பி வைக்கவும்.

// நாளடைவில் அவரது எழுத்துக்களில் தத்துவங்கள் தூக்கலாகி வாசிக்கையில் ஒரு ஆயாசம் ஏற்பட்டதென்னவோ உண்மை.//

முற்றிலும் உண்மை ....எனக்கும் அப்படியே...
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.
அன்புடன் அருணா

Aruna said...

Divya கூறியது...
//விமர்சன கடிதம் ரொம்ப நல்லா எழுதியிருக்கிறீங்க.....நல்ல எழுத்து நடை :))//

திவ்யா ரொம்ப பிஸியா???
இடையிடையே காணாமல் போயிடுறீங்க???
நன்றி...
அன்புடன் அருணா

Aruna said...

Saravana Kumar MSK கூறியது...
//அக்கா.. உங்களை ஒரு தொடர் பதிவுக்கு அழைத்திருக்கிறேன்.. வந்து பாருங்க..//

வந்தேன்...பார்த்துட்டேன்..கொஞ்சம் லேட்டாகும் பரவால்லையா??
அன்புடன் அருணா

Karthik said...

//வந்தேன்...பார்த்துட்டேன்..கொஞ்சம் லேட்டாகும் பரவால்லையா??

லேட்டாகுமா? பரவாயில்ல..பரவாயில்ல..
அட நானும் கூப்பிடிருக்கேங்க.

Enna Kotumai Sarvanakumar ithu?

AMIRDHAVARSHINI AMMA said...

நானும் மெர்க்குரிபூக்களை ஒரே நாளில் தான் படித்து முடித்தேன். அப்போது நான் 10ஆவது படித்துக்கொண்டு இருந்தேன். அவரின் எந்த நாவலாக இருந்தாலும் அதை ஒரே மூச்சில் படித்துவிடுவேன் (பந்தயப்புறா, பயணிகள் கவனிக்கவும், கற்றுக்கொண்டால் குற்றமில்லை, அகல்யா இப்ப்டி சொல்லிக்கொண்டே போகலாம்) இப்பவும் நாவலின் பெயர் தெரியாவிட்டாலும் அந்த கேரக்டர்கள் பசுமரத்தாணி போல நெஞ்சில் நிற்கிறது. என்ன ஒரு அற்புதமான சிந்தனைகள், எழுத்துகள். அவரின் நாவல் படித்து முடித்தவுடன் ஒரு படபடப்பு உண்டாகும். நான் இதை அனுபவித்திருக்கிறேன். நீங்கள்.

எங்க மாமா நான் பாலகுமாரன் நாவல் படிப்பதை பார்த்து, ஏண்டி நீ இந்த மாதிரி புக்கெல்லாம் இப்பவே படிக்க ஆரம்பிச்சிட்ட. சீக்கிரம் உருப்பட்ருவ. அவருக்கு ஏற்கென்வே 2 பொண்டாட்டி. தினமும் நான் அவரை பாக்கிறேன் (எங்க வீடு லாயட்ஸ் ரோட்ல இருந்து ரொம்பவே பக்கம்) வேனும்னா சொல்லு நாளைக்கி அவரை பாக்கலாம்.

அவரை ஒரே ஒரு முறை முறைச்சேன்.அவர் திருப்பி எக்கேடாவது கெட்டுப் போ, எம் பசங்களை கெட்டுப் போக வெச்சுடாத (நாங்கள் அனைவரும் ஒன்றாக இருந்தோம்).

ஆனால் நான் கெட்டுப்போகவில்லை. கிட்டத்தட்ட அவரின் எல்லா நாவல்களையும் படிச்சிட்டேன். அவரின் "தாயுமானவன்" "பந்தயப்புறா" நாவல்கள் ரொம்ப பிடிக்கும் அவர் கேரக்டருக்கு வைக்கும் பெயர்கள் அதை விட பிடிக்கும். சிவசு, மனோன்மணி, திருநிறைச்செல்வி என்று அதிகம் தமிழ் பெயர்களே. போன வாரம் அவர் பல்சுவையில் எப்போதோ எழுதிய முந்தானை ஆயுதம் என்ற நாவலை படிக்க நேர்ந்தது. அருமை. இப்பொதெல்லாம் அவர் பல்சுவை நாவல்கள் எழுதுகிறாரா. தெரியவில்லை.

தெரிந்தால் சொல்லுங்கள். நீங்கள் அவரின் வாசகியாய் இருப்பது குறித்து மிக மகிழ்ச்சி.

நாளடைவில் அவரது எழுத்துக்களில் தத்துவங்கள் தூக்கலாகி வாசிக்கையில் ஒரு ஆயாசம் ஏற்பட்டதென்னவோ உண்மை

Yes

Saravana Kumar MSK said...

// Karthik கூறியது...
//வந்தேன்...பார்த்துட்டேன்..கொஞ்சம் லேட்டாகும் பரவால்லையா??

லேட்டாகுமா? பரவாயில்ல..பரவாயில்ல..
அட நானும் கூப்பிடிருக்கேங்க.

Enna Kotumai Sarvanakumar ithu?//

கண்டிப்பா அக்கா எழுதுவாங்க.. dont worry..

VIKNESHWARAN said...

அவருடைய பயணிகள் கவனிக்கவும் என்னை மிகவும் பாதித்தது... மிக இரசித்தேன்... ஆனால் உடையாரில் அந்த இன்பத்தாக்கத்தை எதிர்பார்க்க முடியவில்லை :((

பாச மலர் said...

பாலகுமாரனின் பச்சை வயல் மனது..இரும்புக்குதிரையும் மறக்க முடியுமா..அதெல்லாம் விழுந்து விழுந்து படிச்சது ஒரு காலம்..

Aruna said...

Karthik கூறியது...
//வந்தேன்...பார்த்துட்டேன்..கொஞ்சம் லேட்டாகும் பரவால்லையா??

//லேட்டாகுமா? பரவாயில்ல..பரவாயில்ல..
அட நானும் கூப்பிடிருக்கேங்க.

Enna Kotumai Sarvanakumar ithu?//

என்ன கொடுமை கார்த்திக் இது?
அன்புடன் அருணா

Aruna said...

//தாயுமானவன்" "பந்தயப்புறா" நாவல்கள் ரொம்ப பிடிக்கும் அவர் கேரக்டருக்கு வைக்கும் பெயர்கள் அதை விட பிடிக்கும். சிவசு, மனோன்மணி, திருநிறைச்செல்வி என்று அதிகம் தமிழ் பெயர்களே//

இதெல்லாம் எனக்கும் கூட ரொம்பப் பிடிக்கும் அமிர்தவர்ஷினி அம்மா...
அன்புடன் அருணா

Aruna said...

AMIRDHAVARSHINI AMMA கூறியது...
//நாளடைவில் அவரது எழுத்துக்களில் தத்துவங்கள் தூக்கலாகி வாசிக்கையில் ஒரு ஆயாசம் ஏற்பட்டதென்னவோ உண்மை//

முற்றிலும் உண்மை அமிர்தவர்ஷினி அம்மா....நானும் கூடப் பின்னாளில் அவர் புத்தகத்தைப் படிக்க ஒரு மாதம் எடுத்துக் கொண்டிருக்கிறேன்.
அன்புடன் அருணா

Aruna said...

Saravana Kumar MSK கூறியது...
// Karthik கூறியது...
//வந்தேன்...பார்த்துட்டேன்..கொஞ்சம் லேட்டாகும் பரவால்லையா??
லேட்டாகுமா? பரவாயில்ல..பரவாயில்ல..
அட நானும் கூப்பிடிருக்கேங்க.

Enna Kotumai Sarvanakumar ithu?//

//கண்டிப்பா அக்கா எழுதுவாங்க.. dont worry..//

கண்டிப்பா எழுதுவேன் சரவணா..
அன்புடன் அருணா

Aruna said...

VIKNESHWARAN கூறியது...
//அவருடைய பயணிகள் கவனிக்கவும் என்னை மிகவும் பாதித்தது... மிக இரசித்தேன்... ஆனால் உடையாரில் அந்த இன்பத்தாக்கத்தை எதிர்பார்க்க முடியவில்லை :((//

உண்மைதான் விக்னேஷ்வரன்.
எனக்கும்தான்..முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.
அன்புடன் அருணா

Aruna said...

பாச மலர் கூறியது...
//பாலகுமாரனின் பச்சை வயல் மனது..இரும்புக்குதிரையும் மறக்க முடியுமா..அதெல்லாம் விழுந்து விழுந்து படிச்சது ஒரு காலம்..//

அதெல்லாம் சரி...எங்கே போயிட்டீங்க திடீர்னு?
திரும்பி வந்ததிலெ ரொம்ப சந்தோஷம்...
அன்புடன் அருணா

Sharepoint the Great said...

அருமைங்க. அருமை. அருமை.

Aruna said...

Sharepoint the Great கூறியது...
//அருமைங்க. அருமை. அருமை.//

நன்றி...தமிழ் நெஞ்சம்.
அன்புடன் அருணா

தமிழ்நெஞ்சம் said...

பாலகுமாரன் - அவரது எழுத்துத் திறமையின் காரணமாக அவருக்கே உரிய கல்விச் செருக்குடன் இருக்கிறார்.

அந்தச் செருக்கு இருப்பதால் இன்னும் அழகுடன், தினமும் மெருகேற்றி எழுதுகிறார்.

இது மறுக்க இயலாத உண்மை.

ஜோதிகிருஷ்ணா said...

இனிய அருணா அவர்களுக்கு, உங்கள் எழுத்தையும் அதைத்தொடர்ந்து பாலகுமாரன் அவர்களின் கடிதமும் படித்தேன்.
பாலகுமாரன் நமக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம்.
அவர் வாழும் காலத்தில் நாமும் வாழ்கிறோமே என்று நாமெல்லாம் பெறுமை கொள்ள வேண்டும்

Post a Comment

வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!

அன்புடன் அருணா