நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-
அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -
என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,
இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.
இனி என்னைப் புதிய உயிராக்கி -
எனக்கேதும் கவலையறச் செய்து -
மதி தன்னை மிகத் தெளிவு செய்து -
என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.
Tuesday, September 8, 2009
நாம்தான் எவ்வளவு சுயநலவாதிகள்????
அந்தப் பறவையின் பெயர் தெரியவில்லை.....ரொம்பச் சின்னூண்டாய் இறக்கைகளை நிமிடம் விடாமல் பட படவென்று அடித்துக் கொள்வதாய் இருந்தது...இரண்டு மூன்று நாட்களாய்த்தான் எனக்குப் பழக்கம்..என் பயணத்தில் என் கூடவே நெடுந்தூரம் வந்து என்னை வழியனுப்புவது போல வந்து திரும்பும்....இலக்கில்லாமல் தானே பறவைகள் பறக்கும்?...இது ஏன் என் கூடவே வருகிறது...........????????
ஒரே பறவைதானா? நேற்றும் அதற்கு முன்தினமும் கூட இந்தப் பறவையேதான் வந்ததா?நான் உன்னைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறேன் ...குட்டிப் பறவையே...நீயும் என்னைப் பற்றி யோசிக்கிறாயா???
நாம்தான் எவ்வளவு சுயநல வாதிகள்?ஒரு பறவையிடம் கூட எந்தவித எதிர்பார்ப்புமின்றி இருக்க் முடிவதில்லை.இந்தக் கொடுக்கல் வாங்கல் இல்லையென்றால் உலகமே நின்று விடுமோ?
அந்தப் பறவையும் கூட என்னிடம் எதையோ எதிர்பார்த்துத்தான் வருகிறதோ?....ம்ம்ம் சே! இந்த மனித புத்தி...! அந்தப் பறவை மெல்ல என்னருகில் வந்து திடுக்கென சிறகுகளை ஒரு உதறு உதறிச் சென்றதில் சில இறகுகளை என்னருகில் உதிர்த்துவிட்டு எதுவும் எதிர்பார்க்காமல் பறந்து சென்றது.....
சுருக்கிவைத்த உலகத்தை நானும் ஒரு உதறலில் உதறி விரித்து விட்டு காரணங்கள் ஏதுமில்லாத உற்சாகத்தில் அகன்ற வான்வெளியில் பறக்க ஆரம்பித்தேன்...........
Subscribe to:
Post Comments (Atom)
43 comments:
thats the sprit. Follow nature
நல்லா இருக்கு குருவியும்... புனைவும்.பாராட்டுக்கள்
Kadaisee moonru varikal nachunu aaalama padinchiruchinga!! (copy paste panna mudiyala)
Unmaiyiley, namma thaan evlo suyanalavaathikal?? chinna vishayam thaan, aana thaharatha sammatiyaala adikra mathiriyaana oru unarvu....
pahirnthatharku nandri :)
என்ன சொல்வதுன்னு தெரியலை அருணா,
அருமைன்னு சொல்வது மட்டும் சரியில்லைன்னு தோணுது.
கை நிறைய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் பூங்கொத்துக்கள்
எழுத்தாளர் சுஜாதா எழுதிய விஞ்ஞான கதைகள் போலாகிவிடும் போலிருக்கு வரும் உலகம்... இதுபோன்ற குருவிகளையெல்லாம் இனி பார்க்க முடியமா என்பது போன்று உலகம் மாறிக் கொண்டிருப்பது உண்மை. செல்போன் டவர்கள் அமைப்பதால் அந்த காந்த அலைகளால் பல குருவிகள் இறந்து போவதாக அறிவியல் தகவல் தெரிவிக்கிறது...நாகரீகம் வளர வளர... இயற்கையை அழித்துக் கொண்டிருக்கிறோம் என்பது மட்டும் உண்மையோ உண்மை. என்ன செய்யப் போகிறோம்...
குருவிகளை பார்க்க முடிவதே நல்ல விஷயம் மேம். நானெல்லாம் பார்ப்பதே இல்லை.
ஒருவேளை நான் தான் கவனிப்பதில்லையோ? என்னையும் ஏதாவது பறவை பிந்தொடர்ந்திருக்குமோ?
//நாம்தான் எவ்வளவு சுயநல வாதிகள்?ஒரு பறவையிடம் கூட எந்தவித எதிர்பார்ப்புமின்றி இருக்க் முடிவதில்லை//
உண்மைதான் அருணா madam .
யாசவி said...
/thats the sprit. Follow nature/
thanx.I understand yaasavi!
பாராடடுக்கு நன்றி கருணாகரசு!
athivas said...
/ Kadaisee moonru varikal nachunu aaalama padinchiruchinga!!/
அவ்வ்ளோ நல்லாவா இருக்கு? நன்றி athivas!
புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
http://www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….
இவண்
உலவு.காம்
..அழகான குருவி...அடுத்த முறை வரும் போது சாப்பாடு ஏதாவது வைச்சு பாருங்கோ..அப்ப அடிக்கடி வந்து பழகி நட்பாகும்..:-))
ரெண்டுகை நிறைய்ய்ய்ய்ய வாங்கீட்டேன் பூஙகொத்து........புதுகைத் தென்றல்...
அற்புதமான பதிவு. பலவித எதிர்பார்ப்புகளுடன் வாழப்பழகிக் கொண்ட மனிதர்கள் நாம், அதனால் நமக்கு ஆறறிவோ. ஒருசில எதிர்பார்ப்புகளுடன் வாழப் பழகிக்கொண்ட மற்ற உயிரினங்கள், அதனாலே அவைகளுக்கு ஆறுக்கும் குறைந்த அறிவோ.
//சுருக்கிவைத்த உலகத்தை நானும் ஒரு உதறலில் உதறி விரித்து விட்டு காரணங்கள் ஏதுமில்லாத உற்சாகத்தில் அகன்ற வான்வெளியில் பறக்க ஆரம்பித்தேன்..........//
அகன்ற வான்வெளியில் விரிந்த உலகம் இருக்குமென எதிர்பார்ப்பே இப்படி உற்சாகம் தந்துவிடுகிறது. அருமையான வரிகள்.
மிக்க நன்றி
வாவ் அழகான பதிவு அருணா. பறவையின் சிறகு போல் மனதை வருடுகின்றது!
// ஒரு உதறலில் உதறி விரித்து விட்டு காரணங்கள் ஏதுமில்லாத உற்சாகத்தில் அகன்ற வான்வெளியில் பறக்க ஆரம்பித்தேன் //
அழகான ரசனை...
அருணா madam
அருமை
குடந்தை அன்புமணி said...
/ என்ன செய்யப் போகிறோம்.../
அதுதான் இப்போதைய கேள்வி!
Karthik said...
/என்னையும் ஏதாவது பறவை பிந்தொடர்ந்திருக்குமோ?/
கண்டிப்பா தொடர்ந்திருக்கும் கார்த்திக்...கவனித்துப் பாருங்க!
முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கல்யாணி...
என்னது இது? கவுஜையா? எதுக்கும் சொல்லிடறது பெட்டர் இல்லையா?
அருமை இதுதான் நம் வாழ்க்கை.... நன்றாக இருக்கிறது! இயற்கை நமக்கு கற்று கொடுக்காத விஷயங்களா?
பிரின்ஸ் குருவிக்காதலா?
யோசனை செய்ய வைக்கிறது....
மிக அருமை
நல்லா இருக்கு அருணா
//சுருக்கிவைத்த உலகத்தை நானும் ஒரு உதறலில் உதறி விரித்து விட்டு காரணங்கள் ஏதுமில்லாத உற்சாகத்தில் அகன்ற வான்வெளியில் பறக்க ஆரம்பித்தேன்....//
அருமை... கர்ப்பனையோடு சொல்லும் விதமும் அழகு
’டொன்’ லீ said...
/ ..அழகான குருவி...அடுத்த முறை வரும் போது சாப்பாடு ஏதாவது வைச்சு பாருங்கோ..அப்ப அடிக்கடி வந்து பழகி நட்பாகும்..:-))/
அப்பிடி வச்சு ஏற்கெனவே ஒரு குருவிக்கூட்டம் கைவசம் வச்சுருககேன்....
கருத்துக்கு நன்றி வெ.இராதாகிருஷ்ணன்.
பறவை மனதை வருடியதி்ல் சந்தோஷம் யாழினி!
நன்றி சாரதி, நேசமிதரன்!
ஆதிமூலகிருஷ்ணன் said...
/என்னது இது? கவுஜையா? எதுக்கும் சொல்லிடறது பெட்டர் இல்லையா?/
என்னது கவிதை எழுதினால் கதையான்னு கேக்குறதும்,
கதை எழுதினால் கவிதையான்னு கேக்குறதும்????இனிமேல் சொல்லி்ட்டாப் போச்சு
MJV said...
/ இயற்கை நமக்கு கற்று கொடுக்காத விஷயங்களா?/
அழிக்கவும் இயற்கைதான் கற்றுக் கொடுத்ததா MJV?
பிரியமுடன்...வசந்த் said...
/யோசனை செய்ய வைக்கிறது..../
யோசிங்க..யோசிங்க!
நன்றி டி.வி ராதாகிருஷ்ணன்.,பாலகுமார்.
என்ன சொல்வது அருணா மேடம்..
விஞ்ஞான வளர்ச்சி அசுர வேகத்தில் நடைபெறுகிற இந்த சூழலில், நான் பலவற்றை இழக்கிறோம்... அதில் இதுவும் ஒன்று....
இதோ பிடியுங்கள் ஒரு பூங்கொத்து...மற்றொரு ஒரு நல்ல பதிவிற்காக...
வாழ்த்துக்கள்...
நன்றி ஞானசேகரன்...
வாழ்த்துக்கு நன்றி கோபி!
inthaanga poongothu,...superaa irukku ungal sinthanai
- Saawariya
இந்த அதிகாலையில்
நிறைய்ய யோசிக்கவும் பறக்கவும்
முடுக்கி விடப்பட்ட விசை இந்தப்பதிவு.
அவர்கள் நம்மைப் பற்றி
என்ன நினைக்ககூடும்.
கட்டாயம், பூந்தோட்டம் தான்.
ரொம்ப நாளைக்கப்புறம் சாவரியா!!! Welcome Back!
KAMARAJ said...
பூந்தோட்டததுக்கு ரொம்ப நன்றி காமராஜ்!
பிரமாதம் மேடம்
//நான் உன்னைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறேன் ...குட்டிப் பறவையே...நீயும் என்னைப் பற்றி யோசிக்கிறாயா???//
நினைச்சதுண்டு
//நாம்தான் எவ்வளவு சுயநல வாதிகள்?//
யாரோ அடிச்சுட்டு போன மாதிரி ஒரு ஃபீலிங் :)
லேட்டாந்தாலும் லேட்டஸ்டா வந்துருக்கீங்க பாசகி...நன்றி !
Post a Comment
வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!
அன்புடன் அருணா