நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Friday, September 25, 2009

நானென்ன அறிவுரை சொல்வது???


கண்ணாடித்தொட்டி மீனுக்கு
கடல் கனவாகவே வருகிறது

காலைக் கட்டிப் போட்டு மாலையாயிருக்கும்
மலருக்குச் செடிக் கனவுகள்

கழற்றி விடப் பட்ட மழைத் துளிகளுககு
வானத்தைப் பற்றிய கனவுகள்

உதிர்ந்த சிறகிற்குக் கூட
பறவைக் கனவுகள்தான்

என் தோட்டத்தைத் தாண்டிப் போகப்
பிடிவாதம் பிடிக்கும் ஒற்றைக்
கிளைப்பூவுக்கு நானென்ன
அறிவுரை சொல்வது???

இருக்குமிடம் எதுவும்
நிரந்தரமில்லை தானே???????

44 comments:

Anonymous said...

Irukum idamum niratharamillai; irupathum nirantharamillai!! Poovukum arivurai solla iyalaathu; poovai paripavurkum puriya vaika mudiyaathu!!

Nalla sindhanai Aruna! Poongothu!

ஆயில்யன் said...

கவிதை அருமை !
முதல் பின்னூட்டமும் மிக அருமை !

சந்தனமுல்லை said...

/என் தோட்டத்தைத் தாண்டிப் போகப்
பிடிவாதம் பிடிக்கும் ஒற்றைக்
கிளைப்பூவுக்கு நானென்ன
அறிவுரை சொல்வது???/

ரொம்ப அழகான கவிதை..மிகவும் ரசித்தேன்!!

யாசவி said...

nice

:)

பாசகி said...

//நானென்ன அறிவுரை சொல்வது//

என்னவேணா சொல்லுங்க, நாங்க கேட்டாத்தான :)

//காலைக் கட்டிப் போட்டு மாலையாயிருக்கும்//

காலை... மாலை... சிலேடை? கவிதை கவிதை :)

//கழற்றி விடப் பட்ட மழைத் துளிகளுககு
வானத்தைப் பற்றிய கனவுகள்//

Good one!

கார்க்கிபவா said...

நான் தறேன் பூங்கொத்து

ராகவன் said...

அன்பு அருணா,
மிக இயல்பான, எளிமையான கவிதை. கழற்றி விடப்பட்ட மழை, இருப்பதை விட்டுவிட்டு ஏங்கும் வானத்திற்கும், மழை பற்றிய கனவுகள் சாத்தியமே! எனக்கு உங்கள் கவிதையில் இழப்பு பெரிதாய்த் தெரிகிறது, (மலரை இழந்த செடி, மழையை இழந்த வானம், மீன்களை இழக்கும் கடல், சிறகை இழந்த பறவை)

பூச்செடி உங்களுக்கு, பூக்களை செடியில் இருந்து பறிக்க மனமில்லை எனக்கு.

அன்புடன்
ராகவன்

அன்புடன் அருணா said...

ரொம்ப சரி Athivas...நன்றி!

அன்புடன் அருணா said...

அப்பிடியா ஆயில்யன்? நன்றி!

அன்புடன் அருணா said...

அட...ஆச்சிக்குப் பிடிச்சிருக்கா?

அன்புடன் அருணா said...

பாசகி said...
/என்னவேணா சொல்லுங்க, நாங்க கேட்டாத்தான :)/
இது ரொம்ப சரி!!

kaamaraj said...

//கழற்றி விடப் பட்ட மழைத் துளிகளுககு
வானத்தைப் பற்றிய கனவுகள்//

அருணா மேடம் அருமை...
இந்தக் கவிதைக்கு பூந்தோட்டமே தான்.

Karthik said...

வாவ், செம கவிதை!

நான் தலைப்பை பார்த்து வேற மாதிரி பதிவை எதிர்பார்த்தேன். நைஸ் ஒன்!

+Ve Anthony Muthu said...

க... க... கக... கலக்கி விட்டீர்கள்..!

கவிதையில்..!

படிங்க புடிங்க பூங்கொத்து புடிங்க.

:-)

+Ve Anthony Muthu said...

//இருக்குமிடம் எதுவும்
நிரந்தரமில்லை தானே??????? //

அதுவும் மிகச் சரியே!

ஆமாம்..!

திடீர்னு ஞானி ஆயிட்டீங்களா என்ன?

மாலன் மாலதி said...

நல்லா இருக்குங்க அருணா

பின்னோக்கி said...

என்ன செய்வது மனம் இருப்பதை ரசிக்காமல் வராமல் இருப்பதைப் பற்றியே எண்ணுகிறது. அழகான வரிகள்.

ராமலக்ஷ்மி said...

//கண்ணாடித்தொட்டி மீனுக்கு
கடல் கனவாகவே வருகிறது//

அழகான ஆரம்பம்.

அருமையாகச் சொல்லி முடித்திருக்கிறீர்கள்!

அன்புடன் அருணா said...

அட.....கார்க்கிக்கிட்டேயிருந்து பூங்கொத்தா???...வாங்கீட்டேன்.

அன்புடன் அருணா said...

இதுக்குப் போய் பூந்தோட்டம் கொடுக்கிறது உங்க பெருந்தன்மையைக் காட்டுது...காமராஜ்!

அன்புடன் அருணா said...

Karthik said...
/நான் தலைப்பை பார்த்து வேற மாதிரி பதிவை எதிர்பார்த்தேன். /
ப்ரின்ஸிபல் எப்பவும் அறிவுரைதான் சொல்லணுமா கார்த்திக்???

ப்ரியமுடன் வசந்த் said...

//கழற்றி விடப் பட்ட மழைத் துளிகளுககு
வானத்தைப் பற்றிய கனவுகள்//

ம்ம் ரசனையான வரிகள் தாம்...

இருந்தாலும்

//என் தோட்டத்தைத் தாண்டிப் போகப்
பிடிவாதம் பிடிக்கும் ஒற்றைக்
கிளைப்பூவுக்கு நானென்ன
அறிவுரை சொல்வது???//

இந்த வரிகள் தாம் கலங்கடிக்குது

அன்புடன் அருணா said...

VE Anthony Muthu said...
/திடீர்னு ஞானி ஆயிட்டீங்களா என்ன?/
பூங்கொத்து வாங்கீட்டேன்....அப்பப்போ ஞாநி ஆவோமில்லே!

R.Gopi said...

உல‌கினில் எதுவுமே நிரந்த‌ர‌மில்லையே அருணா மேட‌ம்...

ஏக்க‌ம், பிரிவு என்று கலந்து க‌ட்டி அடித்து இருக்கிறீர்க‌ள்...

ஒன்றை இழந்து மற்றொன்றை பெறுவதில், இது போன்று இழப்பு ஏற்படுகிறது...

செடியில் இருக்கும் பூக்களை கவர்ந்து வந்து, நேர்த்தியாக கோர்த்தால், அழகான மாலை ஆகிறது...

நிரந்தரமின்மையை பற்றி ந‌ல்லா எழுதி இருக்கீங்க‌...

பூங்கொத்து க‌ண்டிப்பாக‌ உண்டு... வாங்கி கொள்ளுங்க‌ள்...

கல்யாணி சுரேஷ் said...

//இருக்குமிடம் எதுவும்
நிரந்தரமில்லை தானே//

ரொம்ப சரி madam. (இந்த கவிதையில் மெல்லிய சோகம் இழைகிறார் போல தெரியுதே, சரிதானா?)

+Ve Anthony Muthu said...

கல்யாணி சுரேஷ் said...
//இந்த கவிதையில் மெல்லிய சோகம் இழைகிறாற் போல தெரியுதே, சரிதானா?//

அதே!

+Ve Anthony Muthu said...

//அப்பப்போ ஞாநி ஆவோமில்லே!//

'ஞானி'யா? 'ஞாநி'யா

சுரேகா.. said...

//கண்ணாடித்தொட்டி மீனுக்கு
கடல் கனவாகவே வருகிறது//

அழகான வரிகள்..
வலியுடன் ஒரு கனவு!

நீங்க ஒரு நல்ல படைப்பாளிங்க!

அன்புடன் அருணா said...

பிரியமுடன்...வசந்த் said...
/இந்த வரிகள் தாம் கலங்கடிக்குது/
சமயத்தில் இந்த வரிகள்...இப்படி வந்து விழுந்துவிடுகி்ன்றன வசந்த்!

அன்புடன் அருணா said...

நன்றி..பூங்கொத்து வாங்கீட்டேன் கோபி!

அன்புடன் அருணா said...

கல்யாணி சுரேஷ் said...
(இந்த கவிதையில் மெல்லிய சோகம் இழைகிறார் போல தெரியுதே, சரிதானா?)
+VE Anthony Muthu said...
/அதே!/
அப்பிடியா? அப்பிடி எதுவும் இல்லையே கல்யாணி சுரேஷ் & Antony!

அன்புடன் அருணா said...

நன்றி யாசவி!

அன்புடன் அருணா said...

வாங்க பின்னோக்கி...நன்றி!

அன்புடன் அருணா said...

Ragavan said...
/ பூச்செடி உங்களுக்கு, பூக்களை செடியில் இருந்து பறிக்க மனமில்லை எனக்கு./
இந்த எண்ணம் எனக்குப் பிடித்திருக்கிறது ராகவன்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

:-)))

யாழினி said...

அழகான கவிதை! பூங்கொத்து :)

அன்புடன் அருணா said...

ரொம்ப நன்றி ராமலக்ஷ்மி!

துளசி said...

//காலைக் கட்டிப் போட்டு மாலையாயிருக்கும்
மலருக்குச் செடிக் கனவுகள்//
கவிதை ரொம்ப நல்லா இருக்கு. ஆனால் பூங்கொத்து தரமாட்டேன். பூங்கொத்துவில் இருக்கும் மலருக்கும் 'செடிக் கனவுகள்'தானே இருக்கும். நான் வேண்டுமானால் பூச்செடி தருகிறேனே...

நேசமித்ரன் said...

//கழற்றி விடப் பட்ட மழைத் துளிகளுககு//

புடிங்க பூந்தோட்டம் அழகு வரிகள்

அன்புடன் அருணா said...

நன்றி யாழினி,டி.வி ராதாகிருஷ்ணன்....

அன்புடன் அருணா said...

வாங்க துளசி....அதற்கென்ன பூச்செடி வாங்கிக் கொண்டால் போயிற்று.....

அன்புடன் அருணா said...

பூந்தோட்டத்துக்கு நன்றி....நேசமித்ரன்!

அன்புடன் அருணா said...

வாங்க சுரேகா....எப்போவாது வர்றீங்க....அடிக்கடி வாங்க!

Anonymous said...

நிரந்திரம் இல்லம் வாழும் நாம் எப்போதும் எண்ணும் ஒன்று 'நிரந்திரம்'...

Post a Comment

வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!

அன்புடன் அருணா