பரமபதம் விளையாடும் போது பாம்புக் கடிக்குப் பயந்து நடுங்குவதும் ஏணி ஏற்றத்துக்கு குஷியாகுவதும் அந்த விளையாட்டு ஒருவிதமான போதை தருவதும் உண்டு.
அது விளையாட்டு என்பதைக் கூட மறந்து கண்ணீர் மல்க அழுது புரண்டு...ஒரு தாயம் போட்டால் பாம்பு...இரண்டு போட்டால் சொர்க்கம்......என்ற நிலையில் கடவுளே ரெண்டு ரெண்டு....ரெண்டு ரெண்டு........கடவுளே...தாயம் வேண்டாம்.....தாயம் வேண்டாம்.....என்று இப்பிடிச் சில்லறை விஷயங்களுக்கெல்லாம் கடவுளை அவர் வேலையை விட்டுவிட்டு விளையாட்டை வேடிக்கை பார்க்க அழைத்துத் துன்புறுத்தியதுண்டு....தாயம் விழுந்து பாம்பு கடித்துவிட்டால் அதிர்ஷ்டக் கட்டை எனறும் ரெண்டுவிழுந்து சொர்ககம் அடைந்தால் அதிர்ஷ்டக்காரி என்றும் மயங்கியதுண்டு...............
இப்போ ரொம்ப நாளைக்கு அப்புறம்தான் அது வாழ்க்கை விளையாட்டுன்னு புரிய ஆரம்பிச்சிருக்கு...பாம்பு எத்தனை தடவை கடிச்சாலும் விடாமல் கலங்காமல் சிரித்துக் கொண்டே மேலேற வேண்டும் என்பதுதான் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்....எத்தனை ஏணி ஏற்றிவிட்டாலும் உழைப்பு ஒன்றுதான் நிலையான நிஜமான சந்தோஷத்தைத் தரும் என்பதுதான் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்.......
பாம்புகளும் ஏணிகளும் இல்லாத பரமபதம் .............வெறும் கோட்டுக் கட்டங்கள்....
வாழ்க்கை வெறும் கோட்டுக் கட்டங்களினால் நிரம்பியிருந்தால் வாழ்க்கை ருசிக்காது.....
36 comments:
:-) எனக்கு பிடிச்ச விளையாட்டு
வேடிக்கை விளையாட்டல்ல இது வாழ்க்கை உணர்த்தும் விளையாட்டு என அருமையாய் எழுதி உள்ளீர்கள்.அருமை அருணா.
"முயற்சி முதலில் தோல்வி தொட்டாலும்
வெற்றிக்கு வித்திடும் விடாமுயற்சி."
கிறுக்கன்.
//பாம்பு எத்தனை தடவை கடிச்சாலும் விடாமல் கலங்காமல் சிரித்துக் கொண்டே மேலேற வேண்டும் என்பதுதான் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்.//
தட்ஸ் ஆல் !
டாப் பொசிசன் ரீச் ஆகறதுதான் டார்கெட் :))
//எத்தனை ஏணி ஏற்றிவிட்டாலும் உழைப்பு ஒன்றுதான் நிலையான நிஜமான சந்தோஷத்தைத் தரும் என்பதுதான் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்.......//
உண்மையான கருத்து பிரின்ஸ்
//பாம்பு எத்தனை தடவை கடிச்சாலும் விடாமல் கலங்காமல் சிரித்துக் கொண்டே மேலேற வேண்டும் என்பதுதான் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்//
கரெக்ட்டு...
என்ன moral பாடவேளையா ?
அசத்துறீங்க.
நல்ல இருக்கு மேடம்.
விளையாட்டுப் பாடம்.
வாங்க டோன்'லீ ரொம்ப நாளா ஆளையே காணோம்???எனக்கும் பிடித்த விளையாட்டு இது...
உணமைதான் கிறுக்கன்....முயற்சி தோ்லவியடையவே முடியாதுங்கிறது என் அசைக்க முடியாத நம்பிக்கை....
வாங்க ஆயில்யன்.....எப்பவாது வர்றீங்க?அடிக்கடி வாங்க..
எல்லா விளையாட்டுக்களிலும் ஏதோ ஒரு பாடம் இருக்கத்தான் செய்கிறது. அருமை அருணா.
கருத்துக்கு நன்றி வசந்த்.
ஆமாமா....மாரல் பாடவேளைதான்!!!!நன்றி காமராஜ் சார்...
//பாம்பு எத்தனை தடவை கடிச்சாலும் விடாமல் கலங்காமல் சிரித்துக் கொண்டே மேலேற வேண்டும் என்பதுதான் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்....எத்தனை ஏணி ஏற்றிவிட்டாலும் உழைப்பு ஒன்றுதான் நிலையான நிஜமான சந்தோஷத்தைத் தரும் என்பதுதான் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்.......//
நிஜமான வார்த்தைகள். வாழ்வில் ஒவ்வொருவரும் கடைபிடிக்க வேண்டிய பாடம்.
//பாம்புகளும் ஏணிகளும் இல்லாத பரமபதம் .............வெறும் கோட்டுக் கட்டங்கள்....
வாழ்க்கை வெறும் கோட்டுக் கட்டங்களினால் நிரம்பியிருந்தால் வாழ்க்கை ருசிக்காது.....//
ஆம். சத்தியமான உண்மை.
Meendum oru arumaiyaana sindhanai,Aruna!!Poongothu!! Muyarchiyum, ulaipum mattum vitra koodaathu,illa?
//பாம்புகளும் ஏணிகளும் இல்லாத பரமபதம் .............வெறும் கோட்டுக் கட்டங்கள்....
வாழ்க்கை வெறும் கோட்டுக் கட்டங்களினால் நிரம்பியிருந்தால் வாழ்க்கை ருசிக்காது.....//
அழகான...ஆழமான...சுருக்கமான வார்த்தைகளில் வாழ்கை தத்துவம்...சூப்பர்!
உண்மைதான் ராமலக்ஷ்மி.
வருகைக்கு நன்றி Antony!
என்னா கார்க்கி?வெறும் :))தானா???
//பரமபதம் விளையாடும் போது பாம்புக் கடிக்குப் பயந்து நடுங்குவதும் ஏணி ஏற்றத்துக்கு குஷியாகுவதும் அந்த விளையாட்டு ஒருவிதமான போதை தருவதும் உண்டு.//
அருணா மேடம்... படிக்கறச்சவே அதை விளையாடும் ஒரு மனநிலைக்கு வந்து விட்டேன்... எவ்ளோ வருஷம் ஆச்சு, இதெல்லாம் விளையாடி...
//ஒரு தாயம் போட்டால் பாம்பு...இரண்டு போட்டால் சொர்க்கம்......என்ற நிலையில் கடவுளே ரெண்டு ரெண்டு....ரெண்டு ரெண்டு........கடவுளே...தாயம் வேண்டாம்.....தாயம் வேண்டாம்.....என்று இப்பிடிச் சில்லறை விஷயங்களுக்கெல்லாம் கடவுளை அவர் வேலையை விட்டுவிட்டு விளையாட்டை வேடிக்கை பார்க்க அழைத்துத் துன்புறுத்தியதுண்டு....தாயம் விழுந்து பாம்பு கடித்துவிட்டால் அதிர்ஷ்டக் கட்டை எனறும் ரெண்டுவிழுந்து சொர்ககம் அடைந்தால் அதிர்ஷ்டக்காரி என்றும் மயங்கியதுண்டு...........//
நாங்களும் அதே அதே... அது ஒரு தனி சந்தோஷம்...
//பாம்பு எத்தனை தடவை கடிச்சாலும் விடாமல் கலங்காமல் சிரித்துக் கொண்டே மேலேற வேண்டும் என்பதுதான் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்....எத்தனை ஏணி ஏற்றிவிட்டாலும் உழைப்பு ஒன்றுதான் நிலையான நிஜமான சந்தோஷத்தைத் தரும் என்பதுதான் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்.......//
வாவ்... இதுதான் அருணா மேடத்தின் ஸ்பெஷல்... எவ்ளோ அழகா சொல்லி இருக்கீங்க மேடம்...அதானே...பாம்பிடம் கடிபடாமல் எவ்வாறு ஏணியில் ஏறுவது?
//பாம்புகளும் ஏணிகளும் இல்லாத பரமபதம் .............வெறும் கோட்டுக் கட்டங்கள்.... வாழ்க்கை வெறும் கோட்டுக் கட்டங்களினால் நிரம்பியிருந்தால் வாழ்க்கை ருசிக்காது..... //
எவ்வளவு அருமையா சொல்லி முடிச்சு இருக்கீங்க... வாழ்த்துக்கள் அருணா மேடம்... ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க... வாழ்வியல் தத்துவத்தை அழகா வர்ணனை செய்து, பொருத்தமா பரமபதத்தோட பொருத்தியது மிக மிக நன்று...
//எத்தனை ஏணி ஏற்றிவிட்டாலும் உழைப்பு ஒன்றுதான் நிலையான நிஜமான சந்தோஷத்தைத் தரும் என்பதுதான் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்//
உண்மைதான் madam.
பூங்கொத்துக்கு நன்றி athivas!
கருத்துக்கு நன்றி Anto!!
தாயம் ஆட்டம் பத்தி நான் எழுதலாம்னு நினைச்சிட்டு இருக்கும் வேளையில் 2 பேர் எழுதிட்டிங்க.. ஆனாலும் கிராமத்து தாயம் ஆட்டம் பத்தி எழுதறேன்..
நான் பரமபதம் விளையாடினதே இல்ல... கிராமத்து தாயம் ஆட்டம் தான். இந்த வாட்டி ஊர்ல இருந்த 2 வாரமும் இது தான் பொழுதுபோக்கு..
//பாம்புகளும் ஏணிகளும் இல்லாத பரமபதம் .............வெறும் கோட்டுக் கட்டங்கள்.... வாழ்க்கை வெறும் கோட்டுக் கட்டங்களினால் நிரம்பியிருந்தால் வாழ்க்கை ருசிக்காது.....//
ப்ரின்சிபலுக்கு வயசாய்ட்டே போகுதுன்னு பதிவுக்கொரு முறை நிரூபிக்கிறாங்கப்பா.. ;))
thank you for visiting my blog! :)
Do visit again...
கலக்கல் பதிவு. ஆனா ஸாரி மேம், பஸ் லேட். ;)
ஒரு பதிவுக்குண்டான செய்தியுடன் பின்னூட்டம்...நன்றி கோபி.
நன்றி கல்யாணி!
தாயம் பற்றி எழுதலாமே சஞ்செய்!
Sure Sujatha!
Karthik said...
/ ஆனா ஸாரி மேம், பஸ் லேட். ;)/
சாரி எதுககுப்பா? லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்திருக்கியே !!!
என்ன அருணாக்கா, தாயம் விளையாட ஆரம்பிச்சிட்டீங்க...
//பாம்புகளும் ஏணிகளும் இல்லாத பரமபதம்....// இதுக்குள்ள இத்தனை பெரிய சித்தாந்தம் ஒழிஞ்சிருக்கா! ம்ம்
நான் வேற, நிறய நாளுக்கு பிறகு சந்திச்சிருக்கிறோம்,
அக்கா எப்பிடி இருக்கிறீங்க!
//சாரி எதுககுப்பா? லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்திருக்கியே !!!
வாவ், மேம் நான் உங்க கிளாஸ்ல படிச்சிருக்கணும். :)
அட்டெண்டன்ஸ் போட்டுக்கறேன் அக்கா.. :)
Karthik said...
/ வாவ், மேம் நான் உங்க கிளாஸ்ல படிச்சிருக்கணும். :)/
ஆஹா...இப்படி ஒரு ஸ்டுடன்டா?????????:)படிச்சிருக்கலாமே!
Saravana Kumar MSK said...
/ அட்டெண்டன்ஸ் போட்டுக்கறேன் அக்கா.. :)/
வருஷத்திலே ஒரு நாள் எட்டிப் பார்த்தா பாஸாக முடியாதுப்பா...அடடெண்டன்ஸ் கம்மியினாலே ஃபெயில் ஆகப் போறே...பாரு.
Post a Comment
வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!
அன்புடன் அருணா