நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Tuesday, September 1, 2009

அதுக்குப் பதிலா....இது....(எங்க ஊரு பசங்க-2)

அரசாங்கம் என்னென்ன இன்னும் பண்ணலாம்னு நம்ம பசங்களைக் கேடட போது...............நம்ம பசங்க கொட்டிய முததுக்கள்!!!!!

சிகரெட் பிடிக்காதேன்னு சொல்றதை விட்டு.......சிகரெட்டைத் தயாரிப்பதைத் தடை பண்ணலாம்.......

பாலித்தீன் பைகள் உபயோகிக்காதீங்கன்னு சொல்றதை விட்டுட்டு பாலித்தீன் பைகள் தயாரிப்பதைத் தடை பண்ணலாம்.........

குடி குடியைக் கெடுக்கும்னு சொல்றதை விட்டுவிட்டுக் குடியை ஒழிக்கலாம்......

"ஒன்வே"லெ போகாதேன்னு சொல்றதுக்குப் பதிலா எல்லா இடததையும் "டூ வே" ஆக்கிடலாம்............

பான்பராக் சாப்பிடாதேன்னு சொல்றதை விட்டுவிட்டு பான்பராக் தயாரிப்பதைத் தடை பண்ணலாம்.........

நோ பார்க்கிங்னு போர்ட் வைக்கிறதுக்குப் பதிலா பார்க் பண்ண இடம் தரலாம்......

முத்துக்கள் இன்னும் கொட்டலாம்............

31 comments:

சந்தனமுல்லை said...

ரசித்தேன்..அத்தனையும் முத்துகள்!!

//
"ஒன்வே"லெ போகாதேன்னு சொல்றதுக்குப் பதிலா எல்லா இடததையும் "டூ வே" ஆக்கிடலாம்............//

:-)) என்னமா யோசிக்கறாங்கப்பா!!

Anonymous said...

அட இது ஒரு நல்ல பதிவா இருக்கே. வாழ்த்துக்கள் அருணா

Anbu said...

:-)

ஆயில்யன் said...

//"ஒன்வே"லெ போகாதேன்னு சொல்றதுக்குப் பதிலா எல்லா இடததையும் "டூ வே" ஆக்கிடலாம்//

அப்புறம் கவர்ன்மெண்ட்டுக்கு/போலீஸுக்கு நோ வே ஆகிடுமே :(

:))))

R.Gopi said...

//அரசாங்கம் என்னென்ன இன்னும் பண்ணலாம்னு நம்ம பசங்களைக் கேடட போது //

பசங்க நெறைய ஐடியா சொல்லி இருப்பாங்களே... பார்ப்போம்.. என்னென்ன சொல்றாங்கன்னு...

//சிகரெட் பிடிக்காதேன்னு சொல்றதை விட்டு.......சிகரெட்டைத் தயாரிப்பதைத் தடை பண்ணலாம்.......

கேக்க‌ற‌துக்கு ந‌ல்லாதான் இருக்கு... ந‌ட‌க்குமா என்ன‌? இன்னிக்கு ஐ.டி.சி. & டாஸ்மாக்தான் வ‌ருமான‌மே...

//பாலித்தீன் பைகள் உபயோகிக்காதீங்கன்னு சொல்றதை விட்டுட்டு பாலித்தீன் பைகள் தயாரிப்பதைத் தடை பண்ணலாம்.........//

இதுவும் சாத்திய‌மான்னு பார்த்தால், க‌டின‌மான‌ சாத்திய‌ம் என்றே தோன்றுகிற‌து...

//குடி குடியைக் கெடுக்கும்னு சொல்றதை விட்டுவிட்டுக் குடியை ஒழிக்கலாம்......//

அரசாங்கத்தின் அடிம‌டியில் கைவைப்ப‌தை எவ‌ர் ஒப்புக்கொள்வ‌ர் அருணா மேட‌ம்??

//"ஒன்வே"லெ போகாதேன்னு சொல்றதுக்குப் பதிலா எல்லா இடததையும் "டூ வே" ஆக்கிடலாம்............//

முத‌ல்வ‌ன், அந்நிய‌ன் ட‌ய‌லாக் மாதிரியே இருக்குங்கோ..

//பான்பராக் சாப்பிடாதேன்னு சொல்றதை விட்டுவிட்டு பான்பராக் தயாரிப்பதைத் தடை பண்ணலாம்.........//

பான்ப‌ராக் க‌ம்பெனியின் வ‌ருடாந்திர‌ ட‌ர்ன் ஓவ‌ர் (கோத்தாரி க‌ம்பெனி) சுமார் ரூ.1500 / 1750 கோடி... த‌டை ப‌ண்ண‌ முடியுமா??

//நோ பார்க்கிங்னு போர்ட் வைக்கிறதுக்குப் பதிலா பார்க் பண்ண இடம் தரலாம்......//

இதெல்லாம் ப‌ட‌த்துல‌ தான் ந‌ட‌க்கும்னு சிம்பிளா சொல்ற‌துக்கு ப‌திலா... அர‌சாங்க‌ம் ப‌ண்ணினா ந‌ல்லாதான் இருக்கும்...

நான் சொல்வ‌து என்ன‌வென்றால் : இவையெல்லாம் ப‌ண்ணுவ‌து சுல‌ப‌ம‌ல்ல‌... ஆனால், ப‌ண்ணினால் ந‌ன்றாக‌ இருக்கும்... நாள்ப‌ட‌ ப‌ண்ண‌லாமே...!!

இது எல்லாரோட‌ ஆத‌ங்க‌மும் கூட‌....

நட்புடன் ஜமால் said...

ஒன்வே மற்றும் பார்க்கிங் - இது கொஞ்சம் சிரமம்

மற்றவை செய்ய இயன்றவையே.

Osai Chella said...

அது சரி தோழி.. அப்புறம் எப்படி தொட்டிலையும் ஆட்ட முடியும்! (பழமொழி! பழமொழி!)

Anonymous said...

அருணாஜி, அதனாலேதான் பெண்ணாசை தப்புன்னு சொல்றதை விட்டுட்டு மதுரைக்காரங்க பெண் குழந்தைகளை....

ஷார்ட் அண்ட் ஸ்வீட்டா எழுதறதிலே நீங்க எக்ச்பர்ட்டுன்னு நினைக்கிறேன்...

http://kgjawarlal.wordpress.com

kamaraj said...

பசங்க, மிக வேகமாக சிந்திக்கவும் செய்கிறார்கள்.
மேடம், ஒரு ரெண்டு மணிநேர மேடைப்பேச்சை
சுவாரஸ்யமான பதிவாக்குக்கிறார்கள்.
நல்லாருக்கு மேடம்.

Beski said...

1, 2, 3, 4, 5, 6 - இதெல்லாம் நல்லா இருக்கு.

ப்ரியமுடன் வசந்த் said...

அத்தனையும் அருமை....

ஆ.ஞானசேகரன் said...

எல்லாமே அருமை யோசிக்கபட வேண்டியவை

வால்பையன் said...

ஒன்வே மேட்டரைத்தவிர எல்லாவற்றையும் வழிமொழிகிறேன்!

pudugaithendral said...

ம்ம் நல்லாத்தான் யோசிக்கறீங்க

"உழவன்" "Uzhavan" said...

நல்லாத்தாய்ன்யா சொல்றாங்க நம்ம ஊரு பசங்க..

Thamira said...

ம்ம் நல்லாத்தான் யோசிக்கறீங்க..

அன்புடன் அருணா said...

சந்தனமுல்லை said...
/:-)) என்னமா யோசிக்கறாங்கப்பா!!/
இதெல்லாம் ஜுஜுபி, இன்னும் நல்லாவெ யோசிப்பாங்க!

அன்புடன் அருணா said...

adaleru said...
/ அட இது ஒரு நல்ல பதிவா இருக்கே. /
அட...இதுமட்டும்தானா??:(

அன்புடன் அருணா said...

Anbu said...
/ :-)/
அன்பு உங்க கமென்ட் ஸ்டைல்
வெறு் ஸ்மைலிதானா?

அன்புடன் அருணா said...

ஆயில்யன் said...
/ அப்புறம் கவர்ன்மெண்ட்டுக்கு/போலீஸுக்கு நோ வே ஆகிடுமே :(/
அதுசரி ஆயில்யன்!!!

அன்புடன் அருணா said...

கோபி எப்பவு்ம் போல விரிவான அலசல்!நன்றி!

அன்புடன் அருணா said...

நட்புடன் ஜமால் said...
/மற்றவை செய்ய இயன்றவையே./
கொஞ்சம் கஷ்டப்பட்டாலும் செய்யலாம்தான்!

அன்புடன் அருணா said...

OSAI Chella said...
/ அப்புறம் எப்படி தொட்டிலையும் ஆட்ட முடியும்! (பழமொழி! பழமொழி!)/
அதுசரி....முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

அன்புடன் அருணா said...

kgjawarlal said...
/அருணாஜி, அதனாலேதான் பெண்ணாசை தப்புன்னு சொல்றதை விட்டுட்டு மதுரைக்காரங்க பெண் குழந்தைகளை..../

ம்ம்ம் கண்டிக்கப்பட வேண்டிய விஷயம்தான்.

/ஷார்ட் அண்ட் ஸ்வீட்டா எழுதறதிலே நீங்க எக்ச்பர்ட்டுன்னு நினைக்கிறேன்.../
சமயத்திலே அறுக்கிறதிலேயும்....

அன்புடன் அருணா said...

நன்றி வசந்த்,காமராஜ்,எவனோ ஒருவன்...

அன்புடன் அருணா said...

ஆ.ஞானசேகரன் said...
/எல்லாமே அருமை யோசிக்கபட வேண்டியவை/
அதுக்குத்தானே எழுதறது...!

அன்புடன் அருணா said...

வால்பையன் said...
/ஒன்வே மேட்டரைத்தவிர எல்லாவற்றையும் வழிமொழிகிறேன்!/

வழிமொழிங்க!!வழிமொழிங்க!!

அன்புடன் அருணா said...

நன்றி...புதுகை,ஆதி,உழவன்....

Shakthiprabha (Prabha Sridhar) said...

//"ஒன்வே"லெ போகாதேன்னு சொல்றதுக்குப் பதிலா எல்லா இடததையும் "டூ வே" ஆக்கிடலாம்............//

இது தான் ப்ரைஸ் வின்னர் :D

பின்னோக்கி said...

//பாலித்தீன் பைகள் உபயோகிக்காதீங்கன்னு சொல்றதை விட்டுட்டு பாலித்தீன் பைகள் தயாரிப்பதைத் தடை பண்ணலாம்.........

இப்பொழுது 1 வருடம் கழித்து தானே மறையக் கூடிய பாலித்தீன் பைகள் தயார். இன்னம் சில மாத/வருடங்களில் இந்தியாவில் இருக்கும்.


//"ஒன்வே"லெ போகாதேன்னு சொல்றதுக்குப் பதிலா எல்லா இடததையும் "டூ வே" ஆக்கிடலாம்............

இப்போ ஒன்வேல இருந்து நோவே ஆகிகிட்டு இருக்கு :-)

Naresh Kumar said...

பெரியவங்க சின்னபுள்ளைத்தனமா நடந்துக்கறதும், சின்னபுள்ளைங்க பெரிய மனுசனுக்கு யோசனை சொல்லும் அளவுக்கு உயர்ந்து நிக்குறதும் சாதாரணமாயிட்டு வருது போல...

சொன்னவங்க சின்ன பசங்களா இருந்தாலும், யோசனைகள் சின்ன புள்ளத் தனமா இல்லவே இல்லை...

நரேஷ்
www.nareshin.wordpress.com

Post a Comment

வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!

அன்புடன் அருணா