1 . உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?
ஏரலில் உள்ள அருணாசலேஸ்வரக் கடவுளின் மேல் அம்மம்மாவிற்கு உள்ள அதீத விருப்பத்தினால்.....
ரொம்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப!
2. கடைசியாக அழுதது எப்பொழுது?
நான் ரொம்ப அழுமூஞ்சி!!! ரொம்ப சென்சிடிவ்...........நேற்றுக் கூட அழுதேன்...
காரணம் எல்லாம் கேக்காதீங்க.....அடச்சே!ன்னு சொல்லிடுவீங்க!
3. உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
ரொம்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப
4. பிடித்த மதிய உணவு என்ன?
வேற யாராவது சமைச்சுப் போட்டா எதுன்னாலும் ரொம்பப் பிடிக்கும்!!!!
5. நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
இல்லை.....வாங்க பழகலாம்ங்கிற டைப்!!!....கொஞ்சம் பழகிப்ப் பார்த்தபின்தான் நட்பு எல்லாம்............
6. கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?
அருவி
7. முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
கண்கள்.
8. உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?
பிடிச்ச விஷயம் - என்னுடைய கடின உழைப்பு,
பிடிக்காத விஷயம் - அழுகை, கோபம்
9. உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?
பிடித்த விஷயம் - அவரின் பொறுமை
பிடிக்காத விஷயம் - அதே அதீதமான பொறுமைதான்
10. யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?
அப்பா......அம்மா அக்கா தம்பி தங்கை எல்லோரும்.........எப்போதும் நான் மட்டும் ஜெய்ப்பூரில் தனியாக இருப்பது போல ஒரு உணர்வுண்டு எனக்கு......
11. இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?
அட இப்பிடில்லாம் எப்பிடிப்பா கேக்க முடியுது????
12. என்ன பார்த்து//கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?
பார்ப்பது கணினியின் திரையை....
கேட்பது "விழிகளின் அருகினில் வானம்".....பாட்டு
13. வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?
கருப்பு.
14. பிடித்த மணம்?
மழை மண் வாசனை, மல்லிகை
15. நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?
1.ராஜேஸ்வரி....எது எழுதினாலும் ஒரு ரசனையோடு
எழுதுவாங்க...அதனாலெ..!!!
2.டோன்'லீ......ரொம்ப நாளா எதுவும் எழுதாமல் இருப்பதால்!!!
16. உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு ?
இரண்டு பேர் என்னை அழைத்துள்ளனர்.
சஞ்சய் - நிறைய டமாசா எழுதுவார்.....எனக்குப் பிடித்தது இதுதான்
வழிப் போக்கன்----குட்டிப் பையன்...இப்போ மார்ச் மாதத்திலிருந்துதான் எழுதுகிறார்.அதில் எனக்குப் பிடித்தது இதுதான்
17. பிடித்த விளையாட்டு?
tennikoit ரிங்க் (இப்போ நிறைய பேருக்கு இது என்னன்னு கூடத் தெரியாது) . காலேஜ் டேஸ்ல காலேஜ் ப்ளேயராக்கும்
18. கண்ணாடி அணிபவரா?
அட!! போடலைன்னா வெறும் கோடுதான் தெரியும்!!
19. எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?
மனதைப் பாதிக்கும் படங்களும்.......த்ரில்லர் படங்களும்,
20. கடைசியாகப் பார்த்த படம்?
தியேட்டரில்...... சிங் இஸ் கிங்! வீட்டில்.......அந்தாஸ் அப்னா அப்னா!
21. பிடித்த பருவ காலம் எது?
மழைக் காலம், ஆரம்ப காலக் குளிர் காலம்
22. என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?
Killing me softly by Nicci french
23. உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு
நாள் மாற்றுவீர்கள்?
எப்பவாவதுதான்...அந்த வேலையை என் குட்டீஸ்பார்த்துக் கொள்கிறார்கள்
24. பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?
பிடித்த சத்தம் சிட்டுக் குருவிகளின் கீச்!!! கீச்!!! கீச்!!!
பிடிக்காத சத்தம் குறட்டைச் சத்தம்
25. வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?
ஜம்மு வைஷ்ணவி தேவி கோவில்
26. உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
தனித்திறமைன்னு எதுவும் தெரிலை.....வரைதல்,பெயின்டிங்,எழுத்து,டான்ஸ் கோரியோக்ராஃப், ட்ராமா தயாரிப்பதுன்னு எல்லாம் கொஞ்சம் கொஞ்சம் தெரியும்..........எந்த வேலைன்னாலும் ஒழுங்கா கொடுத்த நேரத்துக்குள்ளே செய்து கொடுத்து விடுவது தனித்திறமைன்னா.....ஹி ஹி.... உண்டு
27. உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
எனக்குப் பிடிச்சவங்க எங்கிட்டே பொய் சொன்னால்..............
28. உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
கோபம்
29. உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?
அருவி,கடல்,ஆறு,பனி இப்படி தண்ணீர் இருக்கும் எல்லா இடமும்
30. எப்படி இருக்கணும்னு ஆசை?
எந்த இடத்துலே இருந்தாலும் "The Best" ஆக இருக்கணும்னு ஆசை....
31.கணவர்(மனைவி) இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?
தோழிகள் கூட ஷாப்பிங்!!!!
32. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?
எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா!!!!!
55 comments:
மீ த பர்ஸ்ட்டேய்ய்ய்ய்???!!!
//நேற்றுக் கூட அழுதேன்...
காரணம் எல்லாம் கேக்காதீங்க.....அடச்சே!ன்னு சொல்லிடுவீங்க!
//
சரி அடச்சே சொல்லமாட்டோம் சொல்லுங்க! :))
//18. கண்ணாடி அணிபவரா?
அட!! போடலைன்னா வெறும் கோடுதான் தெரியும்!! //
:))
ஆமாமா நீங்கதான் ஃப்ர்ஸ்ட்!!!.....இன்னிக்கு ஒண்ணூம் வேலையில்லை போல??? தொடர் பதிவு எழுதற பதிவுலெல்லாம் போய் சும்மாக் கலக்கிட்டு இருக்கீங்க????
நல்லா பதில் சொல்லியிருக்கீங்க!!
//பிடிக்காத சத்தம் குறட்டைச் சத்தம் //
:-))
/18. கண்ணாடி அணிபவரா?
அட!! போடலைன்னா வெறும் கோடுதான் தெரியும்!! /
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
எப்படிங்க
nallairukku.
ponmalar
ராஜேஸ்வரி எப்பவோ எழுதிட்டாங்க
டொன் லீயையும் நாங்க எப்பவோ கூப்பிட்டோமுங்க
எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா!!!!!
very sweet..
//நான் ரொம்ப அழுமூஞ்சி!!! ரொம்ப சென்சிடிவ்...........நேற்றுக் கூட அழுதேன்...
காரணம் எல்லாம் கேக்காதீங்க.....அடச்சே!ன்னு சொல்லிடுவீங்க!//
ஹி ஹி ஹி சேம் பின்ச்
வேற யாராவது சமைச்சுப் போட்டா எதுன்னாலும் ரொம்பப் பிடிக்கும்!!!!
அக்கா நம்ம கட்சியா
கையை குடுங்க
நானும் உங்க அணி தான்...
திகழ்மிளிர் said...
18. கண்ணாடி அணிபவரா?
அட!! போடலைன்னா வெறும் கோடுதான் தெரியும்!! /
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
எப்படிங்க//
அது அப்பிடித்தாங்க!
tennikoit ரிங்க் (இப்போ நிறைய பேருக்கு இது என்னன்னு கூடத் தெரியாது) . காலேஜ் டேஸ்ல காலேஜ் ப்ளேயராக்கும் //
நான் கூட சின்ன கிளாஸ்ல படிக்கும்பொது விலையாடி இருக்கேன்
பிடிக்காத விஷயம் - அதே அதீதமான பொறுமைதான்
//
அது இல்லைன்னா உங்க கூட எப்படி மேடம் குப்பை கொட்டறது?:-)))
சூப்பரா இருக்கு! :)
//18. கண்ணாடி அணிபவரா?
VP கிட்ட கேட்கவே வேண்டியதில்லை. :)
4- இது என்ன சமையிலிலி்ருந்து தப்பிப்பதற்கான வழியா???
30- அருமை.
//நான் ரொம்ப அழுமூஞ்சி!!! ரொம்ப சென்சிடிவ்...........நேற்றுக் கூட அழுதேன்...
காரணம் எல்லாம் கேக்காதீங்க.....அடச்சே!ன்னு சொல்லிடுவீங்க! //
எதோ ஞாபகத்துல மாமா சாம்பார்ல உப்பு ஜாஸ்தியா போட்டுட்டார்னு எல்லாம் அழறது நல்லாவா இருக்கு? :)
//நான் ரொம்ப அழுமூஞ்சி!!! ரொம்ப சென்சிடிவ்...........நேற்றுக் கூட அழுதேன்...
காரணம் எல்லாம் கேக்காதீங்க.....அடச்சே!ன்னு சொல்லிடுவீங்க! //
ஏன் நேத்து அத செஞ்சிங்களா இத செஞ்சிங்ளான்னு எதுமே கேக்க முடியாம போச்சா?
//பிடித்த மதிய உணவு என்ன?
வேற யாராவது சமைச்சுப் போட்டா எதுன்னாலும் ரொம்பப் பிடிக்கும்!!!!
//
எப்போவாச்சும் நீங்க சமைச்சிருக்கிங்களாக்கா? :)
//யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?
எங்க குடும்பம்.......அம்மா அக்கா தம்பி தங்கை எல்லோரும்.........எப்போதும் நான் மட்டும் ஜெய்ப்பூரில் தனியாக இருப்பது போல ஒரு உணர்வுண்டு எனக்கு...... //
எங்கூரு அம்மணிக்கு இது தெரியுமா? அவங்கள விட்டுட்டிங்களே.. :)
//சஞ்சய் - நிறைய டமாசா எழுதுவார்.....எனக்குப் பிடித்தது இதுதான் //
ஹிஹிஹி.. இன்னும் அது ஞாபகம் இருக்கா?..:))
//tennikoit ரிங்க் (இப்போ நிறைய பேருக்கு இது என்னன்னு கூடத் தெரியாது) //
ரைட் விடுங்க. அதான் அடுத்த பதிவு இதைப் பத்தி எழ்தப் போறிங்களே.. தெரிஞ்சிக்கிறோம். :)
//உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா? //
நான் சொல்றேன்.. கிட்சன் எப்டி இருக்கும்னு கூட தெரியாதவனுக்கு அழகா புரியர மாதிரி சமயல் கத்து தர தெரியும். :)
//பிடிக்காத சத்தம் குறட்டைச் சத்தம்
//
ஹிஹி.. காப்பி கேட்.. :)
என்னையும் மதிச்சி எழுதினதுக்கு நன்றிக்கா.. :)
இயற்கை said...
//பிடிக்காத விஷயம் - அதே அதீதமான பொறுமைதான்
அது இல்லைன்னா உங்க கூட எப்படி மேடம் குப்பை கொட்டறது?:-)))//
ரொம்ப சரி!:))
நட்புடன் ஜமால் said...
//ராஜேஸ்வரி எப்பவோ எழுதிட்டாங்க
டொன் லீயையும் நாங்க எப்பவோ கூப்பிட்டோமுங்க//
அச்சோ இப்போ நான் என்னா பண்றது???போங்கப்பா யாராவது எழுதாதவங்க எழுதிக்கோங்க:)))
Gowripriya said...
//ஹி ஹி ஹி சேம் பின்ச்//
நிறைய விஷயங்களில் நாம் சேம் ப்ளட்!
$anjaiGandh! said...
//யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?
// எங்க குடும்பம்.......அம்மா அக்கா தம்பி தங்கை எல்லோரும்.........எப்போதும் நான் மட்டும் ஜெய்ப்பூரில் தனியாக இருப்பது போல ஒரு உணர்வுண்டு எனக்கு...... //
// எங்கூரு அம்மணிக்கு இது தெரியுமா? அவங்கள விட்டுட்டிங்களே.. :)//
அம்மணி இப்போ பக்கத்துலே இருக்கறதுனாலெ விட்டுட்டேன்!!!!
//என்னையும் மதிச்சி எழுதினதுக்கு நன்றிக்கா.. :)//
தன்னடக்கத்துக்கு அளவில்லையாப்பா...பதிவுலகம் உன்னைக் கேக்காமே எதுவும் செய்யறதில்லையாமேப்பா!!!:))
//தன்னடக்கத்துக்கு அளவில்லையாப்பா...பதிவுலகம் உன்னைக் கேக்காமே எதுவும் செய்யறதில்லையாமேப்பா!!!:))//
அடுத்த பதிவு போடுவிங்கல்ல.. இதுக்கு பழிவாங்காம விட மாட்டேன்.. ;(
//கண்ணாடி அணிபவரா?
அட!! போடலைன்னா வெறும் கோடுதான் தெரியும்!! //
எத்தனை கோடுன்னு சொல்லவே இல்லையேக்கா.. :))
$anjaiGandh! said...
//தன்னடக்கத்துக்கு அளவில்லையாப்பா...பதிவுலகம் உன்னைக் கேக்காமே எதுவும் செய்யறதில்லையாமேப்பா!!!:))//
//அடுத்த பதிவு போடுவிங்கல்ல.. இதுக்கு பழிவாங்காம விட மாட்டேன்.. ;(//
பழி வாங்கவே முடியாத பதிவாப் போட்டாப் போச்சு!!!
கலக்கல் பதில்கள் அக்கா..
அதிலும்
//வேற யாராவது சமைச்சுப் போட்டா எதுன்னாலும் ரொம்பப் பிடிக்கும்!!!! //
சூப்பர்..
நன்றாக இருக்கு உங்க பதில்கள்..தெளிவுடன் ;)
//எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா!!!!!//
அழகு...
Saravana Kumar MSK said...
//கலக்கல் பதில்கள் அக்கா..//
வாப்பா ரொம்ப நாளுக்கு அப்புறம் எட்டிப் பார்த்திருக்கே111
கோபிநாத் said...
// நன்றாக இருக்கு உங்க பதில்கள்..தெளிவுடன் ;)//
Tank U கோபிநாத்!!
புதியவன் said...
//எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா!!!!!//
அழகு...//
நன்றி புதியவன்!
நாங்களும் உங்களைக் கண்டு பிடித்தோம்:)!
அத்தனை பதில்களையும் ரசித்தோம். அதிலும் கடைசி பதில் ஆகா ஆகாதான். அருமை அருணா.
Karthik said... //18. கண்ணாடி அணிபவரா?
VP கிட்ட கேட்கவே வேண்டியதில்லை. :)//
கேட்டுட்டாங்களே கார்த்திக்!!!
பொன்மலர் said...
// nallairukku.//
வாங்க பொன்மலர் முதல் வருகைக்கு நன்றி!
//25. வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?
ஜம்மு வைஷ்ணவி தேவி கோவில்//
கோவிலின் கருவறையில் கடவுளின் சிலை அருகில் சென்றவுடன் ஒரு வித ஈர்ப்புவிசையை (சக்தி) உங்களால் உணரமுடிந்ததா ?
என் நண்பர்கள் பலரும் கூற கேட்டுகிறேன் நானும் உணர்ந்திருக்கிறேன் வேறு எந்த கோவிலிலும் இந்த அளவிற்கு நான் உணர்ந்ததில்லை.
//எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா!!!!!//
உண்மை அதோட துன்பத்தையும் சேத்துக்கோங்க அதுவும் உண்மை -:)
எங்கே என் பின்னூட்டம்
போலீஸ்கிட்ட கம்ப்லேயிண்ட் பண்ண போறேன்
பிரியமுடன்.........வசந்த் said...
//எங்கே என் பின்னூட்டம்
போலீஸ்கிட்ட கம்ப்லேயிண்ட் பண்ண போறேன்//
போன பதிவுலே போய் இந்தப் பதிவுக்கு கமென்ட் பண்ணினா இங்கே எப்பிடிக் கிடைக்கும்?
அய்யயோ பிண்ணூட்டம் மாறிப்போய்டுச்சா இல்ல பிளாக்கர் காலைல இருந்து ஒழுங்கா வேலை செய்யலியே அதனாலயா
இல்ல நமக்கும் கண்ணு போச்சா?
20. கடைசியாகப் பார்த்த படம்?
தியேட்டரில்...... சிங் இஸ் கிங்! வீட்டில்.......அந்தாஸ் அப்னா அப்னா! //
தமிழே வரலயே???
:)))
பதில்கள் எல்லாம் நல்லாருக்கு...
//வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?
எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா!!!!! //
அருமை!
//வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?
எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா!!!!! //
அருமை!
வழிப்போக்கன் said...
20. கடைசியாகப் பார்த்த படம்?
தியேட்டரில்...... சிங் இஸ் கிங்! வீட்டில்.......அந்தாஸ் அப்னா அப்னா! //
//தமிழே வரலயே?//
இங்கே தியேட்டர்லே தமிழ் படம் வராது!
டி.வி லெ குட்டீஸ்கள் தமிழ் படம் பார்க்க விட மாட்டாங்க!
பிரியமுடன்.........வசந்த் said...
// அய்யயோ பிண்ணூட்டம் மாறிப்போய்டுச்சா இல்ல பிளாக்கர் காலைல இருந்து ஒழுங்கா வேலை செய்யலியே அதனாலயா
இல்ல நமக்கும் கண்ணு போச்சா?//
இல்ல நமக்கும் கண்ணு போச்சா?...இப்படில்லாம் உள்குத்து வைக்கக் கூடாது!!!
நாகை சிவா said...
//வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?
எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா!!!!! //அருமை!//
எனக்கு இந்த வரிகள் நிரம்பப் பிடிக்கும்!!
எல்லா பதிலுமே நச்"ன்னு இருக்கு!
//கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?
அருவி //
எப்படியோ குளிச்சா சந்தோஷந்தான்.( குளிக்கறேன் , பல் வெளக்கறேன்னு யாராவது சொன்னாலே... ஒரே ஜெலஸாயிடுது எனக்கூ..
//இந்தப் பதிவு விகடன் good blog listலெ!!!!! //
வாழ்த்துக்கள் :-)
Post a Comment
வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!
அன்புடன் அருணா