நீண்ட தூர ரயில் பயணங்களில் இப்போல்லாம் சைட்லெ இருக்கும் ரெண்டு பெர்த்தை மூன்றாக மாற்றியிருக்கிறார்கள்.......அதனால் பட்ட கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமில்லை.........ஏறும் போதே டிக்கெட்லே உள்ள நம்பரும் சார்ட்லெ உள்ள நம்பரும் வேற வேற..ட்ரெயின் நம்பர் ப்ளேட்லெ ஒரு வரிசை...பக்கத்துலேயே வேற ஒரு வரிசை கருப்பு மார்க்கரினால் எழுதியிருந்தது...சரி ஏதுக்கும் சார்ட்லெ உள்ள நம்பர் படியே உட்கார்ந்து கொள்ளலாம்னு உட்கார்ந்தோம் ....பத்தே நிமிஷத்திலே ஒரு குடும்பம்......
"இது எங்க சீட்"
"இல்லைங்க சார்ட் படி எங்க சீட்"
"அட டிக்கெட்லெ இந்த நம்பர் எங்க சீட்ங்க"
"இல்லீங்க மூன்று பெர்த் மாற்றினதுனதுனாலே வந்த குழப்பம்ங்க...T.T.E வந்த பின்னாலெ மாற்றிக் கொள்ளலாம்ங்க"
இல்லைங்க பின்னாடி பிரச்னை வரும் நாங்க டிக்கெட் நம்பர் படியே உட்கார்ந்துக்கிறோம்...நீங்க உங்க சீட்டுக்குப் போங்க!...
மறுபடி மூட்டை முடிச்சுக்களைத் தூக்கிக்கிட்டு....ம்ம்ம்
T.T.E வந்தார்...
என்னங்க சார்ட்லெதான் நம்பர் தெளிவா இருக்கே...அதுபடி உட்காரலாமே??
உங்க சீட் ஐந்து சீட் தள்ளி...அங்கே ...அங்கே போங்க....
"நாங்க சரியாதான் உட்கார்ந்தோம் சார்...ஆனால் ......"
எங்க காதிலே வாங்கறார்???
" பார்த்தா படிச்சவங்களா இருக்கீங்க!! இப்படி..." ஏதோ முணுமுணுத்துக் கொண்டே போனார்....
மறுபடி மூட்டை முடிச்சுக்களைத் தூக்கிக்கிட்டு....ம்ம்ம்
ஒருவழியா T.T.E யின் வாக்கை வேத வாக்கா நினைச்சு அந்தக் குடும்பமும் மாறி உட்கார்ந்தது....
கோட்டா வந்தது சுமார் 12:30 மணிக்கு....அசந்து தூங்கிட்டு இருந்தோம்
ஒருவர் வந்து "சார் இது எங்க சீட்...எழுந்திருங்க......."
சார்ட் படியா.....டிக்கெட் படியா???
டி.டி அலாட் பண்ணியிருக்கார்ங்க"
"எந்த T.T.E ??"
"இது எங்க சீட்டுப்பா"
அவர் ஓடிப் போய் டி.டி கடவுளைக் கூட்டி வந்தார்.பதறிய படி வந்த T.T.E கடவுள் அடடா பழைய நம்பர் படி அலாட் பண்ணிட்டேன்....சாரி சாரி...... கொஞ்சம் குழம்பிட்டேன் "என்றபடி ஈஈஈஈஈஈஈஈஈஈஈன்னு இளித்தார்............................T.T.E கடவுளுக்கே குழப்பம்னா சாதரண பக்தர்கள் குழம்ப மாட்டாங்களா??????
33 comments:
இந்த பெர்த்தை இப்ப எடுத்திட்டாங்க அருணா .நாங்களும் போன மாசம் திருநெல்வேலி போய் ரொம்ப சிரமப்பட்டோம் .கூட்டம் அதிகமா இருக்கதால உபயோகிக்கறோம் ன்னு சொன்னாங்க .எப்படி யோசிச்சாங்களோ இதை ?
இந்தக்குழப்பதுக்கும், லல்லு, மம்தா பதவி மாறினதுக்கும் ஏதாவது சம்மந்தம் இருக்கா..?
ஆரம்பத்தில் பெரிய சண்டையே நடக்குங்க.. டிக்கெட்டில் இருக்கும் பெர்த் மறும். அதை டிடி வந்து சொல்வதகுள் பயங்கர காமெடி நடக்கும்
நீண்ட தூர புகை வண்டிகளில் புதிதாக சேர்த்த ஸைட் பெர்த்தை நீக்கி விட்டதாக கேள்வி பட்டேன். தவறான தகவலா?
எப்ப்டி இருந்தாலும் TTE க்கும் அடி சறுக்கும் போல சமயத்தில்.
இதல்லாம் சாதாரண்ம்ங்க....நான் பெர்த் டிக்கெட் இருந்தே உட்கார்ந்துதான் போயிருக்கேன்..
அந்த வகையில நீங்க கொடுத்து வச்சவங்க
விளங்குச்சு..
:-((
என்ன கொடுமை சார் இது!
டி.டி.ஆர் சீட்ட புடுங்கிட்டா எல்லாம் சரியா போயிரும்!
Even if it is amusing to read, the uncertainty hanging till the matter is resolved finally is unbearable.Three side berths is unthinkable.You have highlighted in humorous way.
அல்வா
டி டி இ க்கு மட்டுமா குடுக்குறீங்க?
இது போன்ற குளறபடிகள் அடிக்கடி நடக்கின்றன.
பூங்குழலி said...
// இந்த பெர்த்தை இப்ப எடுத்திட்டாங்க அருணா .நாங்களும் போன மாசம் திருநெல்வேலி போய் ரொம்ப சிரமப்பட்டோம்//
அதே! அதே!
’டொன்’ லீ said...
// இந்தக்குழப்பதுக்கும், லல்லு, மம்தா பதவி மாறினதுக்கும் ஏதாவது சம்மந்தம் இருக்கா..?//
இல்லியா பின்னே????
கார்க்கி said...
//ஆரம்பத்தில் பெரிய சண்டையே நடக்குங்க.. //
அதே அதே கார்க்கி!!!
ஜானி வாக்கர் said...
//நீண்ட தூர புகை வண்டிகளில் புதிதாக சேர்த்த ஸைட் பெர்த்தை நீக்கி விட்டதாக கேள்வி பட்டேன்//
15 நாள் முன்னே கூட இருந்துச்சேப்பா!!
Rajeswari said...
//இதல்லாம் சாதாரண்ம்ங்க....நான் பெர்த் டிக்கெட் இருந்தே உட்கார்ந்துதான் போயிருக்கேன்..//
அடப் பாவமே???
வால்பையன் said...
//டி.டி.ஆர் சீட்ட புடுங்கிட்டா எல்லாம் சரியா போயிரும்!//
அதையும் கூட காசாக்கிடுவார் டி.டி.ஆர்!!!
ithelaam ticket vaangittu payanam seiyara payanigal yosikka vendiya visayam.. :)
அப்படியே எங்க எரியாவுக்குள்ளும் வந்து போங்க....
http://safrasvfm.blogspot.com
தொடருங்கள் உங்கள் பயணத்தை......
நன்றி ராமலக்ஷ்மி,சென்ஷி!!!
KParthasarathi said...
//You have highlighted in humorous way.//
Thanx sir!
ஆதிமூலகிருஷ்ணன் said...
//விளங்குச்சு..//
:(
மழைவிட்டும் தூவாணம் விடலைங்கற மாதிரி பெர்த்தை எடுத்தும் மேல் பர்த்தை அதே உயரத்தில் வைத்திருப்பதால் ஏறி இறங்க கஷ்டமா இருக்கு.
:((((
ஹி ஹி...
பிரியமுடன்.........வசந்த் said...
//அல்வா
டி டி இ க்கு மட்டுமா குடுக்குறீங்க?//
அச்சோ வேற யாருக்கும் அல்வா கொடுத்ததா நினைவில்லியே!!
நீங்க பரவாயில்ல.. நான் காலாவதியான டிக்கெட்ட வெச்சு பயணம் செய்த கொடுமய ஒரு பதிவுல எழுத முயற்சிக்கிறேன்..
என்ன கொடுமை அருனா
லாலு பிரசாத் யாதவ் நல்லா ரூம் போட்டு யோசிச்சு யோசிச்சு இந்த ஐடியாவ கொண்டாந்து நம்ம உசுர எடுத்துட்டான்.
நானும், சமீபத்தில் ரயில் பயணம் மேற்கொண்டபோது, சில குடும்பங்கள் இதுபோன்று அவதிப்பட்டதை கண்டேன்.........
ஆமாம்,, இதை எடுக்க போகிறேன் என்று சொன்னார்களே, எடுத்துட்டங்களா??
டைம் கிடைக்கற போது, கொஞ்சம் இங்கேயும் வந்து பாருங்கோ.....
மத்திய கிழக்கு நாடுகள் பற்றி ஒரு விரிவான தொடர் இங்கே இருக்கு. (www.edakumadaku.blogspot.com).
அப்புறம், கொஞ்சம் சிரிக்க வைக்க முயற்சித்த சில எழுத்துக்கள் இங்கே இருக்கு (www.jokkiri.blogspot.com).
நன்றி........
//மேல் பர்த்தை அதே உயரத்தில் வைத்திருப்பதால் ஏறி இறங்க கஷ்டமா இருக்கு.//
அதே..அதே!
சிம்பா said...
//ithelaam ticket vaangittu payanam seiyara payanigal yosikka vendiya visayam.. :)//
ஓ இதிலே இப்படி ஒரு சிக்கல் இருக்கா சிம்பா???
பாசகி said...
//ஹி ஹி...//
என்னா நீங்க T.T.E ஆ???இப்பிடி அசடு வழியுது!!!
எனக்கு தெரிஞ்சு போன ஒரு வருஷமா எந்த டிரயின்லேயும் நம்பர் சரியா இல்ல. ரொம்ப அவஸ்தையா இருக்கு அருணா.
அது எடுத்தாச்சுன்னு சொல்லிட்டு..எல்லோரும் தூங்கினப்பிறகு..நடு ஸ்டேஷன்களில் ஏறுபவர்களுக்கு அந்த பர்த்துக்களை அலாட் செய்து டி.டி.ஈ.,க்கள் பணம் பண்ணுவதாகவும் தெரிகிறது.
Post a Comment
வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!
அன்புடன் அருணா