"எப்போ வருவீங்க?"
"லேட்டாகும்..."
"லேட்டாகுமா????"
"அதான் சொல்றேன்லே லேட்டாகும்னு.."
"ஏன் லேட்?"
"லேட்டாயிருச்சு...."
"அதான் ஏன் லேட்?"
"கொஞ்சம் லேட்டாயிருச்சு.."
"5 மணிக்கு ஏன் மொபைல் ஸ்விட்ச் ஆஃப் பண்ணி வச்சீங்க?மீட்டிங்க்லெ இருந்தேம்மா..."
"அதென்ன உங்க ஆஃபீஸ்லெ காலையிலெல்லாம் மீட்டிங்க் வைக்காம சாயங்காலம் வைக்கிறாங்க????"
இந்த டையலாக் எல்லாத் தங்கமணியும் ரங்கமணியும் பரிமாறிக் கொண்டவையாகத்தான் இருக்கும்....
இதுக்கு அர்த்தம் ஒருவரையொருவர் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்வதாகவோ...அல்லது சந்தேகப் படுவதோ அல்ல...
ரெண்டு பேருக்குமே தெரியும் இறுக்கிப் பிடிக்கும் அந்தக் கயிற்றின் ஒரு நுனி ரங்கமணிகிட்டேயும் இன்னொரு நுனி தங்கமணிகிட்டேயும் இருக்குன்னு....
அப்பப்போ இரண்டு பேரும் அதை இழுத்துப் பார்த்து நல்லா இறுக்கமாதான் பிடிச்சுருக்காங்களான்னு பார்த்துக்கத்தான் அந்த இழுவை?
ரெண்டு பேருக்குமே தெரியும்......அந்தக் கயிறு ஒரு நேசத்தின் இழை என்பது.......அதில் ஒரு நுனி பிடியில் இருந்து நழுவினாலும் மறு நுனியில் பல்ப் எரியும்.........கொஞ்ச நாள் இழுக்காமே இருந்து பாருங்க வாழ்க்கை செம போர் அடிக்கும்...இதெல்லாம் ஒரு டெக்னிக்குங்க!.
23 comments:
அந்தக் கயிறு ஒரு நேசத்தின் இழை என்பது.......அதில் ஒரு நுனி பிடியில் இருந்து நழுவினாலும் மறு நுனியில் பல்ப் எரியும்]]
டெக்னில் தூள்
-----------------------
அதுலையும் பல்ப் விடமாட்டீங்களா :)
:-)
:-))
உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிது
மிக்கற்றால் நீள விடல்
//கொஞ்ச நாள் இழுக்காமே இருந்து பாருங்க வாழ்க்கை செம போர் அடிக்கும்...இதெல்லாம் ஒரு டெக்னிக்குங்க!.//
சரியான அனுபவம்.... நல்லாயிருக்குங்க
//"எப்போ வருவீங்க?"
"லேட்டாகும்..."
"லேட்டாகுமா????"
"அதான் சொல்றேன்லே லேட்டாகும்னு.."
"ஏன் லேட்?"
"லேட்டாயிருச்சு...."
"அதான் ஏன் லேட்?"
"கொஞ்சம் லேட்டாயிருச்சு.."//
அருணா மேடம்... நான்கூட இது ஏதோ மணிரத்னம் பட டயலாக் மாதிரி இருக்கேன்னு பார்த்து கொண்டே மேலே படித்த போது, இது அது இல்ல, வேறன்னு ரூட் மாத்துனது தெரிஞ்சது...
//இதுக்கு அர்த்தம் ஒருவரையொருவர் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்வதாகவோ.. அல்லது சந்தேகப் படுவதோ அல்ல...//
சில சமயம் அப்படிதான் இருக்குமோன்னு நெனக்கறேன்...
//ரெண்டு பேருக்குமே தெரியும் இறுக்கிப் பிடிக்கும் அந்தக் கயிற்றின் ஒரு நுனி ரங்கமணிகிட்டேயும் இன்னொரு நுனி தங்கமணிகிட்டேயும் இருக்குன்னு....//
சரிதான்... இது பாச பிணைப்பு... ரொம்ப ஸ்ட்ராங்...
//அப்பப்போ இரண்டு பேரும் அதை இழுத்துப் பார்த்து நல்லா இறுக்கமாதான் பிடிச்சுருக்காங்களான்னு பார்த்துக்கத்தான் அந்த இழுவை?//
கயிறு அறுகாக பார்த்துக்கொள்வது நம் கடமை...
//ரெண்டு பேருக்குமே தெரியும்......அந்தக் கயிறு ஒரு நேசத்தின் இழை என்பது.//
ஆமாம்...
//அதில் ஒரு நுனி பிடியில் இருந்து நழுவினாலும் மறு நுனியில் பல்ப் எரியும்.........கொஞ்ச நாள் இழுக்காமே இருந்து பாருங்க வாழ்க்கை செம போர் அடிக்கும்...இதெல்லாம் ஒரு டெக்னிக்குங்க!.//
வாழ்க்கையில் எல்லாம் இருந்தால்தான் சுவாரசியம்... ஆனால், அளவுக்கு மிஞ்சாம பாத்துக்கணும்...
nice one
:-))
//ரெண்டு பேருக்குமே தெரியும்......அந்தக் கயிறு ஒரு நேசத்தின் இழை என்பது.......அதில் ஒரு நுனி பிடியில் இருந்து நழுவினாலும் மறு நுனியில் பல்ப் எரியும்.........கொஞ்ச நாள் இழுக்காமே இருந்து பாருங்க வாழ்க்கை செம போர் அடிக்கும்...//
இது டாப்பு..முதலில் இருந்த கொஞ்ச டியாலக்குகளை பார்த்து யாரையோ நக்கல் பண்ண வரீங்கன்னு நினைச்சேன்..நல்லா எழுதி இருக்கீங்க..
அன்புடன்,
அம்மு.
இதுல இவ்வளவு விஷயம் இருக்கோ?!
அட...! கலக்கிட்டீங்க போங்க...
நட்புடன் ஜமால் said...
/அதுலையும் பல்ப் விடமாட்டீங்களா :)/
பல்ப் நம்ம தேர்தல் சின்னமாச்சே! எப்புடி விடுறது???
நன்றி....Anbu
நன்றி....சந்தனமுல்லை
நர்சிம் said...
/உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிது
மிக்கற்றால் நீள விடல்/
ம்ம்ம் பெரியவங்க எல்லாம் வந்திருக்கீங்க....நன்றி வருகைக்கும் கருத்துக்கும்!
நன்றி ஞானசேகரன்!
கோபி...உங்களின் பொறுமைக்கு ஒரு பெரிய பூங்கொத்து! எப்பிடி இவ்வ்ளோ பெரிய பின்னூட்டம் எழுத முடிகிறது!நன்றி!
Ammu Madhu said...
/இது டாப்பு..முதலில் இருந்த கொஞ்ச டியாலக்குகளை பார்த்து யாரையோ நக்கல் பண்ண வரீங்கன்னு நினைச்சேன்../
ஐயே...எனக்கு நக்கல் எல்லாம் பண்ண வரவே வராதுப்பா!!
Karthik said...
/இதுல இவ்வளவு விஷயம் இருக்கோ?!/
அட இன்னும் நிறைய இருக்கே!!!
Romba Naala padichittu padichittu, nalla irukkennu yosichi yoschi comment poda maranthu pottu irunthathu.......ranagmani, thangamani padichappo.........ada enna oru thathuvamnnu thoninaalum......udane comment podanumnnu type adikka aarabinchitten...
சுத்தம்.. நீங்களே சொல்லிக் கொடுத்திருவீங்க போலிருக்கே..!
நன்றி குடந்தை அன்புமணி
நன்றி யாசவி!
Maddy said...
/..udane comment podanumnnu type adikka aarabinchitten.../
இதையே எல்லா தடவையும் கடைப் பிடிங்கோ!
உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
/சுத்தம்.. நீங்களே சொல்லிக் கொடுத்திருவீங்க போலிருக்கே..!/
யாராவது ஆரம்பிச்சு வைக்கணுமேப்பா!
Post a Comment
வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!
அன்புடன் அருணா