கண்ணாடியில் ஒட்டும் பொட்டுக்களும்
கையில் பேனாக் கிறுக்கல்களுடன்
தொலை பேசி உரையாடல்களுமாய்
என்னைப் போல்....
வண்டியை ஓட்டும் சிரத்தையிலும்
பத்திரப்படுத்தும் காகிதப் பழக்கத்திலும்
அப்பாவைப் போல்...
அடுத்தடுத்து சேனல் மாற்றுவதிலும
நாள் முழுவதும் தலை பின்னுவதிலும்
விடாது பாட்டுக் கேட்கும் குணத்திலும்
அக்காவைப் போல்....
நாட்கள் மரங்கள் உதிர்ந்த இலை
போல உதிர்ந்து கொண்டேயிருக்கின்றன...
குட்டிம்மாவைப் பெரியளாக்கிக் கொண்டே...
பொக்கிஷமாய் வைத்து
விளையாடிய செப்புச் சாமான்களும்
பார்பி பொம்மைகளும்
பரணில் குடியேற்றப்பட்டன....
ஷின்சான் ,டோரெமோன்,
டாம் அண்ட் ஜெர்ரி
அனாதையாக்கப் பட்டார்கள்...
பிறந்த நாளை எதிர்பார்த்து
நாட்களை எண்ணும் வைஷு
எங்கேயோ ஓடி ஒளிந்து கொண்டாள்...
ஓயாமல் மணல் அள்ளிக் கொட்டும்
கடல் அலை போல ஓடி ஓடி
எதையேனும் இழுத்து வந்து
போட்டுக் கொண்டேயிருக்கிறது மனம்.
பொண்ணுங்க இப்படித்தான்
திடீர்னு நமக்குச் சொந்தமில்லாமல்
போய்விடுகிறார்கள் ......
எங்கே பறித்து வைத்தாலும்
மணம் வீசும் மலராகவும்
எங்கேனும் தன் வேரை ஊன்றிக் கொள்ளவும்.
மழை குடித்துக் கொள்ளவும்.
காற்றைச் சுவாசிக்கவும்....
வெயிலை உடுத்திக் கொள்ளவும்....
வைஷுவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!!!
13 comments:
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் வைஷூ..
எங்கே வேரூன்றினாலும் பாசமான வேர்களை மறக்காது பெண்மலர் :-)
உங்கள் ப்ளாக் பக்கம் வந்து ரொம்ப நாட்களாகி விட்டது.வைஷுவின் இனிய பிறந்த நாள் அன்று அதிர்ஷ்ட வசமாக வந்தேன்.அவளுக்கு இத்துடன் என்னுடைய ஆசிகளும் பிறந்த நாள் வாழ்த்துகளும்.
வைஷுவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்:)! பாசத்தில் நனைந்திருக்கும் அன்னையின் வரிகளும் வாழ்த்தும் அழகு. நெகிழ்வு.
வைஷுவிற்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்.....
பூங்கொத்தும்!
நானும் வாழ்த்துகிறேன்!
வைஷுவிற்கு என்னுடைய இதயம் நிறைந்த இனிய பிறந்த தின நல்வாழ்த்துக்கள்! வாழ்க்கையின் ஒவ்வொரு அசைவிலும் சந்தோஷம் அவளோடு துணைவரட்டும்!
வைஷுவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
கைபிடிச்சுத்தானே குழந்தை வந்துக்கிட்டு இருக்கான்னு நினைக்ககுள்ள நம்ம விட்டு விலகினா மாதிரி தோணுது. அவங்க வளர்ச்சின்னு புரியும்போது பிரமிப்பாத்தான் இருக்கு. அழகா சொல்லியிருக்கீங்க.
வைஷூவுக்கு தாமதமான பிறந்தநாள் வாழ்த்துக்கள்
இனிய கவிதை!
அழகு! அருமை!...
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!!
என்றும் இனிதுவாழ
என் அன்பான வாழ்த்துக்கள்...
வாழ்த்துகள்.
அன்புடையீர்,
வணக்கம்.
நேற்று 17.03.2013 ஞாயிறு 'தினகரன்' செய்தித்தாளின் இணைப்பான 'வசந்தம்' இதழின் ஆறாம் பக்கத்தை பார்க்க நேர்ந்தது.
அதில் “இணையத்தைக் கலக்கும் இலக்கியப் பெண்கள்” என்ற தலைப்பில் தங்களின் வலைத்தளம் பற்றி சிறப்பாக எழுதியிருக்கிறார்கள்.
படித்ததும் பெருமகிழ்ச்சி அடைந்தேன்.
தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்களும் அன்பான இனிய நல்வாழ்த்துகளும்.
அன்புடன்
வை. கோபாலகிருஷ்ணன்
gopu1949.blogspot.com
அனைவருக்கும் நன்றி!!!
வை.கோபால்ஜி ஒரு ஸ்பெஷல் நன்றி!!!
அன்புத்தோழி அருணா வணக்கம்.
உங்களை வலைச்சர அறிமுகத்தில்கண்டு இங்கு வந்தேன். வாழ்த்துக்கள்!
இதற்கு முன்னர் உங்கள் பக்கம் நான் வராததினால் உங்கள் வலைத்தளப்பிரச்சனையை நான் கண்டதில்லை.
எனக்கு இது அழகாகப் பிரச்சனை ஏதுமின்றித் திறந்துள்ளது.
உங்கள் பதிவுகளைப்படிக்க விரைவில் வருகிறேன். மீண்டும் வாழ்த்துக்கள்!
Post a Comment
வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!
அன்புடன் அருணா