நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Monday, May 10, 2010

எப்போதாவாது யாரேனும் உணரலாம்....

எப்போதாவது முற்றத்தில்
வந்து விழும்
தூங்கணாங் குருவிக் கூடு
சொன்ன கதையும்.

தினம் உதிர்ந்து
குப்பைக்குப் போகும்
பூக்களும் இலைகளும்
சொன்ன கதையும்

வேறு வேறாயிருந்தாலும்

தார்ரோட்டில் தெரியாமல்
விழுந்து ஒட்டிக் கொண்ட
காலடித் தடங்கள்
சிக்கி கொண்டு சொன்ன கதையும்

வெட்டப் பட்ட மரம்
மண்ணுக்கடியில்
விட்டுச் சென்ற வேர்கள்
சொன்ன கதையும்

வேறு வேறாயிருந்தாலும்

மரித்துப் போன பட்டாம்பூச்சியை
இடம் பெயர்த்துத் தூக்கிப் போன
எறும்புக் கூட்டம் சொன்ன கதையில்

யாரேனும் உணரக் கூடும்
எல்லாக் கதைகளையும்.....

25 comments:

நேசமித்ரன் said...

ரொம்ப நல்லா இருக்குங்க

பூங்கொத்து!

பூங்கொத்துகள் காய்ந்தபின் சுள்ளிகள் சுற்றிய
காகிதம் சொல்லும் கதையும் உணரக் கூடும்

:)

க ரா said...

ரொம்ப நல்லாருக்குங்க.

பத்மா said...

எல்லா மிச்சங்களுக்கும் பின்னாலும் எதோ ஒரு கதை கவிதை
அழகா வந்துருக்குங்க கவிதை

முனைவர் இரா.குணசீலன் said...

அருமை!

புலவன் புலிகேசி said...

அருமை அருணா..இந்த வாரப் பதிவராக உங்களை அறிமுகப் படுத்தியிருக்கிறேன் (டரியலில்).

Sanjai Gandhi said...

சூப்பர்.. தொடர்ந்து மரங்களைப் பற்றி எழுதறிங்க..

Chitra said...

கவித்துவம் மிக்க கருத்து. அருமை.

ஈரோடு கதிர் said...

கண்டிப்பாக உணரலாம்

சந்தனமுல்லை said...

Hi Aruna,

you are tagged here

http://sandanamullai.blogspot.com/2010/05/blog-post_10.html

-Mullai

சுந்தரா said...

ரொம்ப நல்லாருக்கு கவிதை.

பிடிங்க பூங்கொத்தை!

Radhakrishnan said...

அருமையாக இருக்கிறது. :)

Priya said...

Good one!

செ.சரவணக்குமார் said...

நன்று

VELU.G said...

//
மரித்துப் போன பட்டாம்பூச்சியை
இடம் பெயர்த்துத் தூக்கிப் போன
எறும்புக் கூட்டம் சொன்ன கதையில்

யாரேனும் உணரக் கூடும்
எல்லாக் கதைகளையும்.....
//

எல்லோருமே உணர முடியும்

அழகான கவிதை

அன்புடன் அருணா said...

நன்றி இராமசாமி கண்ணண்
நன்றி padma
நன்றி முனைவர்.இரா.குணசீலன்

அன்புடன் அருணா said...

புலவன் புலிகேசி said...
/அருமை அருணா..இந்த வாரப் பதிவராக உங்களை அறிமுகப் படுத்தியிருக்கிறேன் (டரியலில்). /
மீண்டும் டரியலிலா???நன்றிங்கோ!

அன்புடன் அருணா said...

நன்றி SanjaiGandhi™ !
நன்றி Chitra !
நன்றி ஈரோடு கதிர் !

Madumitha said...

உணர்ந்தவர்கள்
சொல்வார்கள்
இப்படித்தான்
கவிதையாய்.

ஜெய்லானி said...

சூப்பர்.

அன்புடன் அருணா said...

thank you for that tag சந்தனமுல்லை!
பூங்கொத்தைப் பிடிச்சாச்சு சுந்தரா!
நன்றி V.Radhakrishnan
நன்றி Priya

Anitha Manohar said...

//வெட்டப் பட்ட மரம்
மண்ணுக்கடியில்
விட்டுச் சென்ற வேர்கள்
சொன்ன கதையும்//

அன்பின் அருணா,

கல்ங்கிப்போயிட்டேன்.

இரசிகை said...

:)..........nallaayirukku!

சாந்தி மாரியப்பன் said...

அழகான உணர்வுள்ள கவிதை. நல்லாருக்கு.

அன்புடன் அருணா said...

நன்றி செ.சரவணக்குமார்
நன்றி VELU.G

கண்ணகி said...

பூங்கொத்துக்கள் அருணா...

Post a Comment

வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!

அன்புடன் அருணா