யூனிஃபார்ம் ஏண்டா சரியா போடலை ????இது கேள்வி...
பசங்க சும்மா பூந்து விளையாடுற ஏரியாவாச்சே????விடுவாங்களா????
பதில்கள்....
"மேம்....காலைலே கிளம்பும் போது பார்த்து சட்டை டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்னு கிழிஞ்சுருச்சு மேம்.........."
"காலைலே டேபிள் மேலதான் வச்சேன் கிளம்பும் போது பார்த்துக் காணோம் மேம்............."
"மேம் ஷூ காலை நறுக்க்னு கடிச்சுடுச்சு மேம்..."
"டையை அப்பா கேஸ் சிலிண்டர் கட்டி எடுத்துட்டுப் போனாங்க மேம்...அப்புறமா திரும்பிக் கொண்டாரவேயில்லை!:
"ஸ்கூல் பேட்ஜ்தானே மேம்...இப்போ காட்டுறேன்....ஊக்கு கிடைக்கலியா பேட்ஜைத் திருப்பிப் போட்டு சட்டைக்கு ஊக்காக்கிட்டேன்!"
"ஐடி கார்ட்தானே மேம்...எங்க அப்பா அவரோட ஐ.டி கார்டைத் தொலைச்சுட்டாங்க.... அதான் ரெண்டு நாளா என்னோடதைப் போட்டுட்டுப் போறாங்க!"
Why nails are long?இது கேள்வி!
இதென்ன மேம் பெரிசு...எங்கம்மா நெயில் பார்க்கணுமே இத மாதிரி மூணு மடங்கு
நீளமாக்கும்.
Why didn't you go for a haircut ?
மேம் திங்கள் அம்மா போகக் கூடாதுன்னுட்டாங்க....செவ்வாய் அப்பா போகக் கூடாதுன்னுட்டாங்க....புதன் வியாழன் தாத்தா பாட்டிக்காக போகலை....வெள்ளி எனக்கே போகப் பிடிக்கலை!சனிக்கிழமை கடைக்காரனுக்கு நான் வர்றது பிடிக்கலை...கடையை மூடிட்டுப் போயிட்டான் ...ஞாயிற்றுக் கிழமை நான் எந்த வேலையும் செய்யறதில்லே!
ஙே!!
27 comments:
அட்டகாசம் .நம்ம பசங்க நம்ம பசங்க தான் .
இது போல் நம்ம இடுகைய ஏன் படிக்கலன்னு கொஞ்சம் நண்பர்கள்கிட்ட கேட்டு பாத்தா அப்போ வரும் பாருங்க பதில் ?
எல்லாரும் மன்னன்க தான் பா
நம்ம ஊருப்பசங்க உன்மையிலே புகுந்து விளையாட்றாங்க அருணா.சிலிண்டரைக்கட்டித்தூக்குவதற்கு,அந்த கழுத்துப்பட்'டை'
பயன்படுங்ற த கண்டுபிடிச்சது நம்ப பசங்க தான.
ஒரு சோலோ பூ.
வாழ்த்துக்கள் மேம்.
Why didn't you go for a haircut ?
மேம் திங்கள் அம்மா போகக் கூடாதுன்னுட்டாங்க....செவ்வாய் அப்பா போகக் கூடாதுன்னுட்டாங்க....புதன் வியாழன் தாத்தா பாட்டிக்காக போகலை....வெள்ளி எனக்கே போகப் பிடிக்கலை!சனிக்கிழமை கடைக்காரனுக்கு நான் வர்றது பிடிக்கலை...கடையை மூடிட்டுப் போயிட்டான் ...ஞாயிற்றுக் கிழமை நான் எந்த வேலையும் செய்யறதில்லே!
.....அசத்தல் reply - ஹா,ஹா,ஹா,ஹா,ஹா....
ம்ம்.. இதே மாதிரி ஏண்டா லேட் ஆச்சுன்னு ஒரு கேள்வி இருக்கு... எதேதோ சொல்லி நம்மள சுத்தல்ல விட்டுடுவாங்க:-)
பசங்க அட்டகாசம் சூப்பர். மிக ரசித்தேன். உங்க ஆசிரியர் வாழ்க்கையை அழகாக்குறதே இந்தப் பசங்கதானே மேம்?
ஹிஹிஹி..
முடி வெட்ட கூடாது. “தலயே” வெட்டனும் :))
நேத்து ஏண்டா லீவுன்னு கேட்டுப்பாருங்க, விதவிதமா பதில் வரும் :-)))))
//"ஐடி கார்ட்தானே மேம்...எங்க அப்பா அவரோட ஐ.டி கார்டைத் தொலைச்சுட்டாங்க.... அதான் ரெண்டு நாளா என்னோடதைப் போட்டுட்டுப் போறாங்க!"//
:-)))))))))
நம்மகிட்டேவா ? அசத்திட மாட்டோம் அசத்தி.
:-))))))))))))))
padma said...
/
இது போல் நம்ம இடுகைய ஏன் படிக்கலன்னு கொஞ்சம் நண்பர்கள்கிட்ட கேட்டு பாத்தா அப்போ வரும் பாருங்க பதில் ?
எல்லாரும் மன்னன்க தான் பா /
இப்பிடில்லாம் வேற கேப்பீங்களா?????!
:) nalla comedy
பசங்க பசங்கதான்...
அசத்தராங்க :)
பசங்க பசங்கதான்...
ஐ.டி கார்டு.., டை..,
சூப்பர் பதில்கள்.
சும்மா சும்மா கேள்வி கேட்காதீங்க
உண்மையெல்லாம் சொல்ல வேண்டி வருதில்ல
பசங்கக்கிட்டப்
பத்து நிமிஷம்
பேசினா
நிச்சயம்
நூறு கதைக்
கிடைக்கும்.
pasanga........:))
பசங்க பசங்கதான்... அவங்ககிட்ட பேசி ஜெயிக்க முடியுமா!
ஒரு சோலோ பூவுக்கு நன்றி காமராஜ்.
நன்றி T.V.ராதாகிருஷ்ணன்
நன்றி Chitra
ஆமாமா*இயற்கை ராஜி* !
செ.சரவணக்குமார் said...
/ உங்க ஆசிரியர் வாழ்க்கையை அழகாக்குறதே இந்தப் பசங்கதானே மேம்?/
அழகா????ஸ்வாரஸ்யமாகுறதே அவங்கதான்!
கார்க்கி said...
/முடி வெட்ட கூடாது. “தலயே” வெட்டனும் :))/
ஆஹா...கார்க்கி இங்கேயும் தலயா????ஏதோ உள்குத்து போலத் தெரியுதே!!!!!!!
உங்க வேலை ரொம்ப சுவாரசியமானதுதான் இல்ல.? :-))
நன்றி அமைதிச்சாரல்
நன்றி ஜெய்லானி
நானும் ஙே ஆயிட்டேன் அருணா,,,:))
hahahahaha..
அன்பின் அருணா
அருமையன கேள்வி பதில் - வி.வி.சி - அட்டகாசம் போங்க
நல்வாழ்த்துகள் அருணா
நட்புடன் சீனா
ஙே!!
எல்லாரும் என்னை மாதிரியே சமத்துப் பசங்க போல :))
நம்ம பயலுவோ விவரமானவனுவோ
Post a Comment
வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!
அன்புடன் அருணா