இங்கே ஜெய்ப்பூரில் எனக்குத் தெரிந்த தமிழ்க் குடும்பம்.கணவன்,மனைவி,இரு குழந்தைகள்.அந்தப் பெண்ணின் தம்பிக்கு இருநாட்கள் முன்னால் ரத்தப் புற்று நோய் என்று தகவல் வந்தது.வாரம் ஐந்து லட்சம் செலவாகும், முடியாத பட்சம் சென்னைப் பொது மருத்துவமனையில் சேருங்கள் என்ற மருத்துவரின் மிரட்டல்.அவ்வளவு செலவளிக்க முடியாத நிலமை.நிலம் நகைகளை விற்று ஒரு லட்சம் புரட்டிக் கொண்டு உடனடியாக சென்னை வந்து பொது மருத்துவமனையை அடைந்தால்......இன்று அரைநாள் விடுமுறை..நாளை சித்திரைத் திருநாள் விடுமுறை...15ம் தேதி காலையில் வாருங்கள் என்ற பதில்.கிராமத்து வெள்ளந்தி மனிதர்கள்.என்ன செய்ய...என்று எதுவும் புரியாமல் தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் நோயாளிக்கும் கஷ்டம் என இங்கே இவர்களிடம் தொடர்பு கொள்ளக் குடும்பம் இடிந்து போனது.
அந்தப் பெண் அழுது பதறிப் போய் அவர்களுக்குத் தெரிந்த ஒரே தமிழ்க் குடும்பமான எங்களுடன் என்ன செய்ய ...என்று தொடர்பு கொள்ள.....எனக்கும் ஒன்றும் புரியவில்லை.சென்னையில் அக்கா இருந்தாலும் பொது மருத்துவமனையில் யாரும் தெரியாத நிலையில் என்ன செய்ய என்று திகைத்துப் போன போது .............
நினைவு வந்தது....பதிவுலகம்...என்னென்னமோ படிக்கிறோமே உதவி கிடைக்குமா என்று சிறிது யோசித்துக் கொண்டே கோவை சஞ்செய் காந்திக்கு ஒரே ஒரு ஃபோன்தான் செய்தேன்.......ஒரே முறை பேசியிருக்கிறேன்...மற்றபடி அப்பப்போ எப்பவாது
Hi !how r u?..chatting....அவ்வ்ளோதான் அறிமுகம். என்னென்னவோ செய்து உடன் மருத்துவரும் பதிவருமான ப்ரூனோவின் தொலைபேசி நம்பர்.....உடன் என்ன செய்யவேண்டும் என்று அடுத்தடுத்து தகவல் வர..இன்று அந்தப் பெண்ணின் தம்பி பொது மருத்துவமனையில் சேர்க்கப் பட்டுச் சிகிச்சை பெற்று வருகிறார்......
நிறைய நேரங்களில் இந்த இடத்திலா நாம் இருக்கிறோம் என வருத்தப்பட்டு எழுதுவதை நிறுத்தலாமா என்று கூட நினைத்திருக்கிறேன்.
இன்று இங்கே இருப்பதற்காகப் பெருமைப் படுகிறேன்...
ம்ம்ம்.....தொலைபேசி மூலம் கூட நிமிடத்தில் கடவுளாகலாம்...
மனம் நிறைந்திருக்கிறது.
சஞ்செய்க்கும் மருத்துவர் ப்ரூனோவுக்கும் வெறும் நன்றி என்ற வார்த்தை மட்டும் சொல்வது சரியாகுமா???தெரியாது....ஆனாலும் நன்றி!
43 comments:
பதிவுலகத்தில் உள்ள அனைவரும் படிக்க வேண்டிய பதிவு.
ம்ம்ம்.. நல்லவர்கள் நிறைந்ததுதான் பதிவுலகம் என்பதற்கு மற்றுமோர் சாட்சி
சஞ்செய் காந்தி
ப்ரூனோ
பதிவுகள்
கருத்துகள்
அரசியல்
மதம்
சண்டை
சங்கம்....
எல்லாவர்றையும் தாண்டி எப்பொழுதும் விழ்ப்புடனும் உயிர்ப்புடனும் இருபப்பது இயல்பான மனிதம்தான்.
பலமுறை பலர் உதவி செய்கிறார்கள் பதிவுகளில்.
மருத்துவர் புருனோவால் பலனடைந்தவர்கள் பலர். அது போல சஞ்செய்யும்..
பதிவுகள் வழியாகவே இவர்களின் செயல்களும் இன்னும் பலரின் செயல்களும் தெரியவருகிறது.
இவர்களைப் போன்றவர்கள் இருக்கிறார்கள் என்பதே ஆறுதலான விசயம்.
நன்றி சஞ்செய் , ப்ரூனோ
அவர் குணமடைய பிரார்த்தனைகள்
சஞ்சய நல்லவர்ன்னு சொல்ல வச்சிட்டீங்களே.. :-( :-))
மனதை தொடும் வரிகள் .நன்றி ப்ருனோ சஞ்சய்
அற்புதம்.
மனதை தொடுகிறது பதிவு. டாக்டர்.புரூனோ,சஞ்சய் இருவருக்கும் நன்றிகள்.
அருணா, சஞ்சய் மற்றும் டாக்டர் ப்ரூனோ எல்லோருக்கும் வாழ்த்துக்கள், அன்பான பூங்கொத்துக்களுடன்
சஞ்செய் காந்திக்கும் ப்ரூனோவுக்கும் பாராட்டுக்கள்!
அந்த பெண்ணின் தம்பி, சீக்கிரம் குணமடைய பிரார்த்தனைகள்.
பதிவுலக நட்பும் மனித நேய உணர்வும் என்றும் வாழ்க!
Hello,
Pls see this blog and help those people.
Free medicine for cancer.
http://thangavelmanickadevar.blogspot.com/2010/04/blog-post.html
Thanks
Ravi
உங்களுக்கும் சஞ்சய் மற்றும் டாக்டர் ப்ரூனோ எல்லோருக்கும் வாழ்த்துக்கள். சஞ்சய் போன்ற நல்லவர்களை நிறைய கொண்டதுதான் வலையுலகம் :)
பிடியுங்கள் மலர்க் கொத்தை!
அன்பான தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்.
அன்போடு
வி.என்.தங்கமணி
nantri sanjay..and dr.
அருணா,
ஆபத்து நேரத்தில் உதவிய அனைவரும் ‘அவனுடைய’ அவதாரங்களே.
என்ன சொல்லவென்று சொல்லமுடியாத திக்குமுக்காடல்.மனதை நெகிழவைத்தது அருணா.நட்பைப் போற்றுவோம்.
\\தாரணி பிரியா said...
உங்களுக்கும் சஞ்சய் மற்றும் டாக்டர் ப்ரூனோ எல்லோருக்கும் வாழ்த்துக்கள். சஞ்சய் போன்ற நல்லவர்களை நிறைய கொண்டதுதான் வலையுலகம் :)\\
பதிவுலகில் இருப்பதை சந்தோஷமாஇ உணர்கிறேன்
நாங்களும் இந்தப் பின்னூட்டம் வழியாக இன்னொருமுறை மருத்துவர் ப்ரூனோ அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
தாராபுரத்தான் said...
/பதிவுலகத்தில் உள்ள அனைவரும் படிக்க வேண்டிய பதிவு./
உண்மைதான் தாராபுரத்தான்!
என்னக்கா இது? இதுக்கெல்லாமா பதிவு? ஒருவருக்கு உதவ வாய்ப்பு கொடுத்த உங்களுக்கு தான் நன்றி சொல்லனும்.. யாரை அழைப்பதுன்னு யோசிச்சதும் என் நினைவு வந்ததை நினச்சாலே சந்தோஷமா இருக்கு.. அந்த நம்பிக்கையை காப்பாற்ற வேண்டியது என் கடமை.. டாக்டர் புருனோ என் பதிவுல தான் அடாவடி பண்ணுவார்.. ஆனா தங்கமான மனுஷன்.. எப்போ உதவின்னு கேட்டாலும் முடிந்ததை தயங்காமல் செய்வார்.. உங்க நம்பிக்கைக்கு நன்றிக்கா..
என்னை கோவை சஞ்சய்னு 3ஆம் மனுஷனாட்டம் எழுதி இருக்கிறது தான் பிடிக்கலை போங்க.. உங்க கூட டூ.. :(
நெகிழ வைக்கும் நிகழ்வு. சஞ்சய்க்கும் மருத்துவர் புருனோவுக்கும் நன்றிகள்.
இதைப் படிக்கவும் எனக்கு ஈரோடு பதிவர் சங்கமத்தில் பழமைபேசி பேசியதே நினைவுக்கு வருகிறது. யூதர்களைப் போல நாமும் இந்த வலைத் தொடர்பு மூலம் தொலைவிலிருந்தாலும் ஒருங்கிணைந்த சமுதாயத்தை உருவாக்குவோம்.
சஞ்சய்க்கும், மருத்துவர் புருனோவுக்கும் கோடான கோடி நன்றிகள்.
சஞ்செய் புருனோவுக்கு மட்டுமில்லை அருணாவுக்கும் நன்றிகள்.
அருணா, சஞ்சய் மற்றும் டாக்டர் ப்ரூனோ எல்லோருக்கும் வாழ்த்துக்கள்,
*இயற்கை ராஜி* said...
/ம்ம்ம்.. நல்லவர்கள் நிறைந்ததுதான் பதிவுலகம் என்பதற்கு மற்றுமோர் சாட்சி/
/சஞ்சய நல்லவர்ன்னு சொல்ல வச்சிட்டீங்களே.. /
இப்பிடியும் சொல்றீங்க! அப்பிடியும் சொல்றீங்க!என்னா பண்றது?
வாவ் ரொம்ப பெரிய விஷயம். வாழ்த்துக்கள் மூணு பேருக்கும். :)
மருத்துவமனையில் இருப்பவர் நலம் பெற பிரார்த்தனைகள்!
தாரணி பிரியா said...
சஞ்சய் போன்ற நல்லவர்களை நிறைய கொண்டதுதான் வலையுலகம்//
ரிப்பீட்டேய்ய்ய்
கல்வெட்டு said...
/பதிவுகள்
கருத்துகள்
அரசியல்
மதம்
சண்டை
சங்கம்....எல்லாவர்றையும் தாண்டி எப்பொழுதும் விழ்ப்புடனும் உயிர்ப்புடனும் இருபப்பது இயல்பான மனிதம்தான்./
இது நான் உணர்ந்து கொண்ட ஒன்று!
/இவர்களைப் போன்றவர்கள் இருக்கிறார்கள் என்பதே ஆறுதலான விசயம்./
அதேதான்!
நன்றி !padma
நன்றி !【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║
அமைதிச்சாரல் நன்றி !
நன்றி !Vidhoosh(விதூஷ்
நன்றி !Chitra
Anonymous said...
/Hello,
Pls see this blog and help those people.
Free medicine for cancer.
http://thangavelmanickadevar.blogspot.com/2010/04/blog-post.html
Thanks
Ravi/
thanks ravi! I've forwarded the message to them.
நன்றி தாரணி பிரியா!
வி.என்.தங்கமணி, said...
/பிடியுங்கள் மலர்க் கொத்தை!/
நன்றி மலர்க்கொத்துக்கு!
நன்றி இரசிகை!
அருணா, சஞ்சய் மற்றும் டாக்டர் ப்ரூனோ எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.
சத்ரியன் said...
/ ஆபத்து நேரத்தில் உதவிய அனைவரும் ‘அவனுடைய’ அவதாரங்களே./
நீங்கள் சொல்வது 100% சரி சத்ரியன்!
ஹேமா
அம்பிகா
பாலராஜன்கீதா
உங்களுக்கு நன்றிகள்!
SanjaiGandhi™ said...
/ என்னை கோவை சஞ்சய்னு 3ஆம் மனுஷனாட்டம் எழுதி இருக்கிறது தான் பிடிக்கலை போங்க.. உங்க கூட டூ.. :(/
அச்சோ ஜெய்ப்பூர் தம்பி சஞ்செய்னு வேணும்னா சொல்லவா???அட!இதுக்கெல்லாமா டூ விடுவாங்க???
முகிலன் said... / யூதர்களைப் போல நாமும் இந்த வலைத் தொடர்பு மூலம் தொலைவிலிருந்தாலும் ஒருங்கிணைந்த சமுதாயத்தை உருவாக்குவோம்./
ரொம்ப சரி!
Olá, amiga!
Passei para mais uma visitinha...
Um ótimo fim de semana!
Beijinhos.
Itabira - Brasil
நன்றி இராமசாமி கண்ணண்!
நன்றி kamaraj !
நன்றி நேசமித்ரன் !
தமிழினி said...
/ உங்கள் வலைதளத்தை மேலும் பிரபலப்படுத்த , மற்றும் அதிக வாசகர்களைப் பெற உங்கள் பதிவுகளை தமிழ்10 .காம் தளத்துடன் இணைத்துக் கொள்ளுங்கள் ./
நன்றி தமிழினி...இணைக்கிறேன்.
நன்றி Karthik !
அந்த இளைஞருக்கு சேர்ந்த அன்றே சிகிச்சை ஆரம்பிக்கப்பட்டு உள்ளது
--
இந்த விஷயத்தில் நான் என் கடமையைத்தான் செய்திருப்பதாக நினைக்கிறேன்.
//. டாக்டர் புருனோ என் பதிவுல தான் அடாவடி பண்ணுவார்.. ஆனா தங்கமான மனுஷன்.. எப்போ உதவின்னு கேட்டாலும் முடிந்ததை தயங்காமல் செய்வார்..//
சஞ்சய்,
உங்கள் பதிவில் வேறு யாரும் அடாவடி செய்வதில்லையே. நானாவது அந்த குறையை போக்க வேண்டுமல்லவா :) :)
//பதிவுகள்
கருத்துகள்
அரசியல்
மதம்
சண்டை
சங்கம்....//
பதிவுகள், கருத்துகள், அரசியல், மதம், சண்டை எல்லாம் சரி - நீங்களும் நானும் மறுமொழிகளில் போடாத சண்டையா - ஆனால் கடைசியாக ஒன்று சொல்லியிருக்கிறீர்களே, சங்கம் - உங்கள் நுண்ணரசியம் அபாரம் :) :)
நன்றி ஜெய்லானி
நன்றி Magia da Inês
உங்கள் கருத்துகளுக்கு நன்றி டாக்டர் ப்ரூனோ!
Post a Comment
வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!
அன்புடன் அருணா