என் கிளைகளில்
என்றேனும் பூக்க்கள் ஊஞ்சலாடியிருக்கும்...
என் வேர்களில் ஈரம் இணைந்திருந்திருக்கும்
என் மடியில் கவிழ்பூக்கள் நூறு முத்தமிட்டிருக்கலாம்.....
என் நிழலில் ஒரு குடும்பம் சிரித்துப் பேசியிருக்கலாம்.....
இலைகளையும் பூக்களையும் உதிரவிடாமல்
காவல் காக்கவுமில்லை
நான் பசுமையாய் இருந்த
நிமிடங்களைச் சேகரிக்கவும் இல்லை.....
இப்போதிந்த இளைப்பாறும்
பறவைகளில்லாக் கிளைகளும்
பூவாசமில்லாத் தனிமையும்
பூக்களின் போதையில்லாத
இலையசையா நிசப்தமும்....
பயமாயிருக்கிறது.............
என் செய்ய? கூடியிருக்க.........
எங்களுக்கில்லை முதியோர் இல்லங்கள்.......
40 comments:
அந்தக் கடைசி வரிகளுடன் கவிதை வெகுஅருமை அருணா.
//என் செய்ய? கூடியிருக்க.........
எங்களுக்கில்லை முதியோர் இல்லங்கள்....... //
அழகாய் உணர்த்திவிட்டிருக்கிறீர்கள்!
[[ராமலக்ஷ்மி said...
அந்தக் கடைசி வரிகளுடன் கவிதை வெகுஅருமை அருணா.
//என் செய்ய? கூடியிருக்க.........
எங்களுக்கில்லை முதியோர் இல்லங்கள்....... //
அழகாய் உணர்த்திவிட்டிருக்கிறீர்கள்!]]
ரிபீட்ட்ட்ட்
நல்லா அழகா சொல்லியுள்ளீர்கள் அருணா
//இலைகளையும் பூக்களையும் உதிரவிடாமல்
காவல் காக்கவுமில்லை
நான் பசுமையாய் இருந்த
நிமிடங்களைச் சேகரிக்கவும் இல்லை.....//
//என் செய்ய? கூடியிருக்க.........
எங்களுக்கில்லை முதியோர் இல்லங்கள்....... //
ரொம்ப ரொம்ப நல்லா இருக்குங்க. அசத்தல் கவிதை.ஆனால் மரத்தின் மகிமையை உணராமல் தான் இருக்கிறோம் இன்னும்..
//
இப்போதிந்த இளைப்பாறும்
பறவைகளில்லாக் கிளைகளும்
பூவாசமில்லாத் தனிமையும்
பூக்களின் போதையில்லாத
இலையசையா நிசப்தமும்....
பயமாயிருக்கிறது...........
//
அழகிய ஆழமான வரிகள்
மரங்களை மறந்து நடக்கும் மறம் இருக்கும் வரையில்
எத்தனை மரங்கள் அழப் போகின்றனவோ.
அருமையான கவிதை வரிகள்.
கவிதை அருமை.
மரத்தின் ஏக்கத்தின் வாயிலாக மனிதர்க்கும் மனத்தைரியம் கொடுக்கும் நல்ல கருத்தைக் கையாண்டுள்ளீர்கள்.
நல்லா இருக்கு.
அனுஜன்யா
இப்போதிந்த இளைப்பாறும்
பறவைகளில்லாக் கிளைகளும்
பூவாசமில்லாத் தனிமையும்
பூக்களின் போதையில்லாத
இலையசையா நிசப்தமும்....
பயமாயிருக்கிறது.............
கவிதை நல்லா இருக்கு......
நல்ல சொல்லிருக்கீங்க டீச்சர்...!
கடைசி வரிகள் உலுக்கிவிட்டன. அருமை மேடம்.
பூங்கொத்து.
பூங்கொத்து நூறு.
கண்டிப்பாக அந்த மரங்கள் அப்படி வருந்தவே வருந்தாது..என்பது என் எண்ணம்!!
நல்ல கவிதை..கடைசி வரிகள் இதயத்தை காயப்படுத்திவிட்டது..!!
ரொம்ப நல்லாயிருக்குது.
வயதைத் தொலைப்பதின் பயம் மனிதரைப்போல மரத்துக்கும் இருக்கும்தானே !
நன்றி ராமலக்ஷ்மி & ஞானசேகரன்.
/என் செய்ய? கூடியிருக்க.........
எங்களுக்கில்லை முதியோர் இல்லங்கள்....... /
அருமை
நன்றி தியாவின் பேனா,அனுஜன்யா!
நன்றி வல்லிம்மா,மாதேவி!
நன்றி Sangkavi ,லெமூரியன்...
மிகவும் அருமை!! எல்லாவற்றிலும் கலக்குகிறீர்கள்!! கவிதை, ஓவியம்....!!
என் நிழலில் ஒரு குடும்பம் சிரித்துப் பேசியிருக்கலாம்.....
நல்ல அழகான வரிகள்...
அழகான கவிதையும் கூட...
வாழ்த்துக்கள்...
பஞ்ச் சூப்பர் :D
பூங்குன்றன்.வே said...
/ரொம்ப ரொம்ப நல்லா இருக்குங்க. அசத்தல் கவிதை.ஆனால் மரத்தின் மகிமையை உணராமல் தான் இருக்கிறோம் இன்னும்../
என் கவலையும் அதுவேதான்...
ரங்கன் said...
/கண்டிப்பாக அந்த மரங்கள் அப்படி வருந்தவே வருந்தாது..என்பது என் எண்ணம்!!/
வருந்தக் கூடாது என்பதுதான் என் எண்ணமும் ரங்கன்..
ஆதிமூலகிருஷ்ணன் said...
/ரொம்ப நல்லாயிருக்குது./
நன்றி ஆதிமூலகிருஷ்ணன்!
ஹேமா said...
/ வயதைத் தொலைப்பதின் பயம் மனிதரைப்போல மரத்துக்கும் இருக்கும்தானே !/
அட....அதுவும் சரிதான்!
கலக்கல். :))
மரங்களின் நேற்றைய ஞாபகங்கள் நிச்சயம் இப்படித்தான் இருக்கும். அற்புதமான கவிதை.
interestingly it invokes a different meaning too u know why? scientists believe that no matter what happens the plants would survive and be awefully alone without the presence of us :)
Interestingly it makes lot of sense in different way, Scientists believe that plants would survive no matter what happens on earth and they would be left awefully alone after we are long gone ;)
I have typed comments and it keeps saying some blogger error, either none of them would appear or all of them would appear including this ;)
would try tomorrow as it is awefully late here. Good post
உண்மை எப்போதுமே கசக்கும்.., நல்ல கவிதை..,
அருமை அருணா!!!
முதியோர் இல்ல பதில்
சங்கடமல்ல இது
தனியாக இருந்தாலும்
தன் காலில் தான் நிற்கிறாய்
பட்டு போனாலும்
வெட்டு படவில்லை
நிதாரவாய் நின்றாலும்
நிமிர்ந்து நிற்கிறாய்
வாழ்ந்த இடத்தில்
வீழ்ந்தும் போவாய்
நாங்கள் கூடியிருந்தாலும்
குன்றிபோய் இருக்கிறோம்
--
கிறுக்கன்
நன்றி திகழ், சந்தனமுல்லை!
Karthik said...
/கலக்கல். :))/
வாப்பா கார்த்திக்!
tamiluthayam said...
மரங்களின் நேற்றைய ஞாபகங்கள் நிச்சயம் இப்படித்தான் இருக்கும். அற்புதமான கவிதை.
நன்றி tamiluthayam
நன்றி கமலேஷ் முதல் வருகைக்கும் கருத்துக்கும்!
சேவியர் said...
/பஞ்ச் சூப்பர் :D/
ரொம்ப நாளைக்கு அப்புறம் சேவியர்!நன்றி!
Srivats said...
/interestingly it invokes a different meaning too /
Rightly said Sri. Thanx for those unexpected three comments!:)
அழகான கவிதை!!!
கவிதை அழகு
அழகான கருத்து, கவிதை நயத்துடன் சொல்லியிருகிறீகள். வாழ்த்துகள்.
ஒரு சந்தேகம்
//என் கிளைகளில்
என்றேனும் பூக்க்கள் ஊஞ்சலாடியிருக்கும்...
என் வேர்களில் ஈரம் இணைந்திருந்திருக்கும்
என் மடியில் கவிழ்பூக்கள் நூறு முத்தமிட்டிருக்கலாம்.....
என் நிழலில் ஒரு குடும்பம் சிரித்துப் பேசியிருக்கலாம்.....//
தன் வாழ்க்கையைப் பற்றி தானே கூறுகையில் அந்த ‘இருக்கலாம்’ என்ற சந்தேக தொனி எதற்கு ?
Post a Comment
வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!
அன்புடன் அருணா