ரயில் பயணங்களில்....
ஜன்னலில் கூடவே
ஓடி வரும்
நிலவு
ஓடி வரும்
நிலவு
கூந்தல் கலைத்து
வருடி வரும்
காற்று
வருடி வரும்
காற்று
கன்னம் சிலிர்க்க
சிரித்துத் தெளிக்கும்
சாரல் மழை
சிரித்துத் தெளிக்கும்
சாரல் மழை
கையசைத்து விடை கொடுத்து
வழியனுப்பாமல் கூடவே
வந்ததால்
வழியனுப்பாமல் கூடவே
வந்ததால்
எனக்குப் புரிந்தது
நிலவுக்கு
காற்றுக்கு
மழைக்கும்
என்னைப் பிடிக்கும் என்று!!!!
நிலவுக்கு
காற்றுக்கு
மழைக்கும்
என்னைப் பிடிக்கும் என்று!!!!
31 comments:
யப்பா. வந்துட்டீங்களா. கொஞ்ச நாளா காணோமேன்னு கவலையா இருந்தது. சரி.. பல்பை எடுத்து மாட்டிட்டீங்களா?
க்ளாசிக் டச்சில் கவிதை எழுதுறீங்க. நல்லா இருக்கு.
அழகுக் கவிதை.
ஆனாலும் அது என்னங்க? கூடவே வராவிட்டாலும் //கையசைத்து விடை கொடுத்து// விடுமுறையை கொண்டாடி வாருங்கள் என அனுப்பி வைத்த எங்களுக்கும் உங்களைப் பிடிக்குமுங்க:)!
hi hi...
அந்த நிலா, காற்றை ஏன் தலைப்புல சேக்காம
வஞ்சித்துட்டீங்க!!!
எளிமையான வார்த்தைகளில்
இயல்பான வரிகள்
கவிதையாய் அதுவும் உங்களை இரசித்தவைகள் பற்றி
அய்.. பல்பு பல்பு..
இப்போ நல்லா பிரைட்டா எரியுதே...
எனக்குப் புரிந்தது
நிலவுக்கு
காற்றுக்கு
மழைக்கும்
என்னைப் பிடிக்கும் என்று!!!!
ரசனையான கவிதை
வாழ்த்துக்கள்
தமிழ்நெஞ்சம் said...
//யப்பா. வந்துட்டீங்களா. கொஞ்ச நாளா காணோமேன்னு கவலையா இருந்தது.//
ஆமாமா வந்தாச்சு!!!கவலையை விடுங்க!!
//சரி.. பல்பை எடுத்து மாட்டிட்டீங்களா?//
ஆமாமா...மாட்டியாச்சு பல்பை!!!!
//க்ளாசிக் டச்சில் கவிதை எழுதுறீங்க. நல்லா இருக்கு.//
ஆனால் யாருக்கும் பிடிக்கலை போல காத்தாடுது!!!!
ராமலக்ஷ்மி said...
அழகுக் கவிதை.
// எங்களுக்கும் உங்களைப் பிடிக்குமுங்க:)!//
அடடா பிடிக்குமா ராமலக்ஷ்மி??? Tank U!!! Tank U!!!
kartin said...
//hi hi...
அந்த நிலா, காற்றை ஏன் தலைப்புல சேக்காம
வஞ்சித்துட்டீங்க!!!//
ஏன்னா நிலா,காற்றை விட மழையை எனக்கு ரொம்பப் பிடிக்குமுங்கோ!!!
நாகை சிவா said...
//அழகு!//
நன்றி சிவா!!!
வளமான கற்பனை,அழகான கவிதை
அடாடா கவிதை.. கவிதை.!
bulb is back :))
azhagaa irukku kavithai
அடடா..எப்படி இப்படி ரசிச்சு எழுதியிருக்கீங்க...வரிகள் அனைத்தும் நல்லா இருக்கு.வாழ்த்துக்கள்
உங்கள் கவிதைகள் அருமையாக இருக்கிறது வாழ்த்துக்கள்...
உங்கள் கவிதைகளை அடிக்கடி வந்து ரசிப்பவனில் நானும் ஒருவன்..
//ரயில் பயணங்களில்....//
அழகான ரசனையான ரயில் பயணம்...
நன்றி பார்த்தசாரதி!
நன்றி நட்புடன் ஜமால் ....
கார்க்கி said...
//அய்.. பல்பு பல்பு..
இப்போ நல்லா பிரைட்டா எரியுதே...//
அப்பிடியா....இப்போ மின்சாரத் தட்டுப்பாடு இல்லியோ???
poongothu!!!
நன்றி T.V.Radhakrishnan
ஆதிமூலகிருஷ்ணன் said...
//அடாடா கவிதை.. கவிதை.!//
என்ன ஆதிமூலகிருஷ்ணன்??? நிஜம்மாவே கவிதைன்னு ஒத்துக்கிட்டீங்களா????
Gowripriya said...
//bulb is back :))//
Ya rightly said Gowri! Bulb is back!!!!
நன்றி ராஜேஸ்வரி!
சந்ரு said...
//உங்கள் கவிதைகளை அடிக்கடி வந்து ரசிப்பவனில் நானும் ஒருவன்..//
அட அப்பிடியா சந்துரு...நன்றி!
rajan RADHAMANALAN said...
//poongothu!!!//
மீண்டும் பூங்கொத்தா???
நன்றி rajan RADHAMANALAN
sakthi said...
//ரசனையான கவிதை //
நன்றி சக்தி!
புதியவன் said...
//அழகான ரசனையான ரயில் பயணம்...//
ரயில் பயணமே ரசனையானதுதானே புதியவன்???
அருமை !
நாம் நிற்க
நம்மைச் சுழலும் உலகம்
காட்டும் ஜன்னல்களில்
காதலுக்கு பக்கத்தில் நிற்பது புகைவண்டி ஜன்னல்கள்தான்
அதை ஆரவாரமில்லாமல் அழகாக பதிவு செய்திருக்கிறது உங்கள் கவிதை
வாழ்த்துக்கள்..!
நீங்களும் தமிழர்ஸ் டாட்காமின் இவ்வார தமிழராக தேர்ந்தெடுக்கப்படலாம்... இவ்வார தமிழர் பட்டை உங்கள் தளத்தின் டிராபிக்கை உயர்த்த சரியான தேர்வு.
இவ்வார தமிழராக நீங்கள் தேர்ந்து எடுக்கப்படும் போது, அனைத்து பதிவர்களின் பதிவுகளிலும் மின்னுவீர்கள். இது உங்களது பதிவுலக வட்டத்தை தாண்டி உங்களுக்கு புதிய நண்பர்களையும், டிராபிக்கையும் வர வைக்கும்
இவ்வார தமிழர் பட்டையை எப்படி இணைப்பது என்ற விவரங்களுக்கு
இந்த சுட்டியை சொடுக்குங்கள்
தமிழர்ஸ் பிளாக்
அருமையான கண்ணோட்டத்தின் வரிகள்.. "அடடே நாம இதை எப்படி எழுத மறந்தோம்" அப்படினு என்னை யோசிக்க வைத்தது :-)
Post a Comment
வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!
அன்புடன் அருணா