
அப்போ எனக்கு ஒரு எட்டு அல்லது ஒன்பது வயது இருக்கும்.அப்போதான் நான் அலாவுதினும் அற்புத விளக்கும் கதை படிச்சேன்.
அப்போ அக்காகிட்டே போய் பாவம் போல, "அக்கா நமக்கும் இப்பிடி ஒரு விளக்கு இருந்தால் நல்லாருக்குமேக்கா"..... அப்பிடின்னு கேட்டேன்....அதுக்கு அக்கா, "யார் கண்டா?? நம்ம வீட்டிலே இருக்கிற விளக்கிலே கூட இப்படி ஒரு சக்தி இருந்தாலும் இருக்கும்....நம்மதான் விளக்கையெல்லாம் தடவிப் பார்க்கிறதேயில்லை"...... அப்படீன்னு சொன்னாங்க.
அன்னிக்குப் பிடிச்சது இந்தக் கிறுக்கு.....மெல்ல பூஜை அறையில் இருந்த விளக்கையெல்லாம் தடவித் தடவி...
"வா பூதமே வா..." அப்படீன்னு மானசீகமா வேண்டிக்குவேன்.
அப்போ நாங்க ரொம்பக் கஷ்டத்திலே இருந்தோம்....கொண்டு போகச் சாப்பாடு இல்லாததினாலே ஸ்கூலுக்கு லீவ் போட்டதெல்லாம் உண்டு....
எப்பிடியாவது கஷ்டத்துக்கு விடிவு காலம் வராதா? என்பதுதான் ஒரே எண்ணமாக இருந்தது...
ஸ்கூல் சினேகிதிகள் யார் வீட்டுக்குப் போனாலும் அவங்க பூஜையறைக்குப் போகாமல் இருந்ததில்லை.....எந்த உறவுக்காரங்க வீட்டுக்குப் போனாலும் அவங்க வீட்டு விளக்கைத் தடவிப் பார்க்காமல் வந்ததில்லை...
பரிசுப் பொருள் வாங்க எந்தக் கடைக்குப் போனாலும் விளக்குகளை ஒரு ரவுண்ட் அடித்து தடவிப் பார்த்து விட்டுத்தான் மறுவேலை....
இந்தப் பூதக் கதையை என் தோழிக்கும் சொல்லியிருக்கேன்...
அவ சொன்னா.. "எங்க அண்ணன் கல்யாணத்துக்கு ஒரு கலைநயம் உடைய விளக்கு ஒண்ணு வந்திருக்கு....பூதம் தேட வர்றியா"-ன்னு கூப்பிட்டா....
என்னவோ இன்டரஸ்ட் இல்லாத மாதிரிக் காட்டிக்கிட்டே போனேன்.....
அவள் சமையலறையில் இருக்கும் போது மெல்ல அந்த விளக்குப் பக்கத்துலே போய் தடவிப் பார்த்தேன்.....
திடீர்னு ஒரு பயங்கரமான குரல்..... "நான் உங்கள் அடிமை ஆகா!!!!" என்றது!
அவ்வ்ளோதான் ஓவென்று அலறி மயக்கமடைந்ததுதான் தெரியும்.....
அப்புறம்தான் தெரிந்தது இது என் தோழியும் அவள் அண்ணனும் சேர்ந்து நடத்திய நாடகம்னு.....
இதென்னங்க ? திருமணமாகிப் புகுந்த வீட்டுலே விளக்கேற்றும் போது கூட இந்தப் பூதத்தைத் துணைக்குக் கூப்பிட்டுருக்கேன்னா பார்த்துக்கோங்க…இன்னும் கூட விளக்கைப் பார்க்கும் போது அவ்வப்போது அலாவுதீனா ஆவறது உண்டுங்கோ!!!!
27 comments:
நினைவுகளை மிக அழகான வார்த்தைகளால் அலகரித்து எழுதியிருக்கிறிர்கள்....
தினேஷ்
பூதத்துக்கிட்ட கேக்க வேண்டியது எல்லாம் கணவர்க்கிட்ட கேளுங்க ,கிடைக்கும்
You too Aruna???
I have a similar story.
Really Nice.
:)
// பாபு கூறியது...
பூதத்துக்கிட்ட கேக்க வேண்டியது எல்லாம் கணவர்க்கிட்ட கேளுங்க ,கிடைக்கும்//
என்ன அருணா சந்தடிசாக்கில பாபு உங்க கணவரை பூதம்கிறாரு பாத்துகிட்டிருக்கீங்க:)
நல்லாயிருக்கு பதிவு புனைவுகள் இல்லாத வெள்ளந்தித் தனமான நிஜங்கள் அழகானவைதான் சிறுபிள்ளைத் தனமெனினும்
தினேஷ் கூறியது...
//நினைவுகளை மிக அழகான வார்த்தைகளால் அலங்கரித்து எழுதியிருக்கிறிர்கள்....//
நன்றி தினேஷ்....அப்பப்போ வர்றீங்க...வாங்க..வாங்க..
அன்புடன் அருணா
பாபு கூறியது...
//பூதத்துக்கிட்ட கேக்க வேண்டியது எல்லாம் கணவர்க்கிட்ட கேளுங்க ,கிடைக்கும்//
அதைத்தானே பண்ணிக்கிட்டிருக்கேன் இப்போ......சந்தடி சாக்கில் அவங்களைப் பூதமாக்கிட்டீங்களே!!!!
அன்புடன் அருணா
Karthik கூறியது...
//You too Aruna???
I have a similar story.
Really Nice.
:)//
you too Karthik???
Waiting to hear that soon..
Tank U,
anbudan aruNaa
த.அகிலன் கூறியது...
//என்ன அருணா சந்தடிசாக்கில பாபு உங்க கணவரை பூதம்கிறாரு பாத்துகிட்டிருக்கீங்க:)//
அதானே?? என்ன பனிஷ்மென்ட் கொடுக்கலாம் சொல்லுங்க??
நல்லாயிருக்கு பதிவு புனைவுகள் இல்லாத வெள்ளந்தித் தனமான நிஜங்கள் அழகானவைதான் சிறுபிள்ளைத் தனமெனினும்//
நன்றி...அகிலன்..
அன்புடன் அருணா
கிட்டதட்ட எல்லோருக்கும் வர்ற ஆசை, ஆனா அழகான ஆசை. நானும் சத்திமான் பார்த்து எத்தனையோ முறை பறக்க முயற்சி செஞ்சு, சுத்தி அடிச்சு மண்ணை கவ்விருகோம்ள.
//திருமணமாகிப் புகுந்த வீட்டுலே விளக்கேற்றும் போது கூட இந்தப் பூதத்தைத் துணைக்குக் கூப்பிட்டுருக்கேன்//
கடைசியா உங்க ஆசை நிறைவேறிடுச்சு.
அழகான பதிவு.
நல்லாஇருக்கு.
சிம்பா கூறியது...
//கிட்டதட்ட எல்லோருக்கும் வர்ற ஆசை, ஆனா அழகான ஆசை. நானும் சத்திமான் பார்த்து எத்தனையோ முறை பறக்க முயற்சி செஞ்சு, சுத்தி அடிச்சு மண்ணை கவ்விருகோம்ள.
அழகான பதிவு.
நல்லாஇருக்கு.//
முதல் வருகை சிம்பு....நன்றி.....
பார்த்து....அடி ஒண்ணும் படலையே???
அன்புடன் அருணா
fine....
inum neriya padinga innum alaga solalamnu nenaikaren....
நல்லா இருக்கு உங்க எழுத்து!
sathya கூறியது...
//fine....
inum neriya padinga innum alaga solalamnu nenaikaren....//
Tank U...Tank U..for ur advice.I'll take care.
anbudan aruna
ஜீவன் கூறியது...
//நல்லா இருக்கு உங்க எழுத்து!//
முதல் வருகைக்கும்,வாழ்த்துக்கும் நன்றி ஜீவன் ....
அன்புடன் அருணா
அருணா..
எனக்கும் ஜீனி [Genie] மீதி ஒரு அலாதி பிரியமுண்டு..
அவ்வளவு ஏன், இப்போது என் கணினியின் வால் பேப்பர் கூட ஜீனி[Genie] தான்..
//கொண்டு போகச் சாப்பாடு இல்லாததினாலே ஸ்கூலுக்கு லீவ் போட்டதெல்லாம் உண்டு....//
ரொம்ப வலிச்சிது அருணா, இந்த வரிகளை படிக்கும் போது..
//நல்லாயிருக்கு பதிவு புனைவுகள் இல்லாத வெள்ளந்தித் தனமான நிஜங்கள் அழகானவைதான் சிறுபிள்ளைத் தனமெனினும்//
அகிலனின் வார்த்தைகளுக்கு ஒரு ரிப்பீட்டு..
//பாபு கூறியது...
பூதத்துக்கிட்ட கேக்க வேண்டியது எல்லாம் கணவர்க்கிட்ட கேளுங்க ,கிடைக்கும்//
அலாவுதீனின் ஜீனி, ஒரு அருமையான நண்பன்.. பூதம் என்ற எண்ணமே வராது..
உங்கள் கணவரும் அப்படியே இருக்கட்டும் ஒரு மிக சிறந்த நண்பனாக..
பாபு சொன்னது எப்போதும் நிறைவேற வாழ்த்துக்கள்..
Saravana Kumar MSK கூறியது...
அருணா..
//எனக்கும் ஜீனி [Genie] மீதி ஒரு அலாதி பிரியமுண்டு..//
அட அப்பிடியா???????
//கொண்டு போகச் சாப்பாடு இல்லாததினாலே ஸ்கூலுக்கு லீவ் போட்டதெல்லாம் உண்டு....//
//ரொம்ப வலிச்சிது அருணா, இந்த வரிகளை படிக்கும் போது..//
இப்போ எழுதிய போது கூட அனுபவித்த போது இருந்த அந்த....அதே வலி இருந்தது சரவணன்.....
//அலாவுதீனின் ஜீனி, ஒரு அருமையான நண்பன்.. பூதம் என்ற எண்ணமே வராது..
உங்கள் கணவரும் அப்படியே இருக்கட்டும் ஒரு மிக சிறந்த நண்பனாக..//
அவர் ஒரு மிக சிறந்த நண்பனாகத்தான் இருக்கிறார் சரவணன்.
அன்புடன் அருணா
//அப்போ எனக்கு ஒரு எட்டு அல்லது ஒன்பது வயது இருக்கும்//
உங்க ப்ரொஃபைல இருக்கும் பொம்ம படத்த படத்த பார்த்தா இப்பவும் அந்த வயசுமாதிரிதான் இருக்கு..
நல்லா எழுதியிருக்கீங்க..
நர்சிம்
narsim கூறியது...
//அப்போ எனக்கு ஒரு எட்டு அல்லது ஒன்பது வயது இருக்கும்//
உங்க ப்ரொஃபைல இருக்கும் பொம்ம படத்த படத்த பார்த்தா இப்பவும் அந்த வயசுமாதிரிதான் இருக்கு..
நல்லா எழுதியிருக்கீங்க..//
பொம்மைக்கு இப்பவும் அதே வயசுதான்....வாழ்த்துக்கு நன்றி...
அன்புடன் அருணா
////அன்னிக்குப் பிடிச்சது இந்தக் கிறுக்கு....///
சின்ன வயதில் ஏற்படும் கிறுக்குகள் சுவாரிசம் வாய்ந்தவை......
அழகான வார்த்தைகளைக் கோர்த்து எழுதியிருக்கிறீர்கள்....
வாழ்த்துக்கள்.
தங்கராசா ஜீவராஜ் கூறியது...
//சின்ன வயதில் ஏற்படும் கிறுக்குகள் சுவாரிசம் வாய்ந்தவை......
அழகான வார்த்தைகளைக் கோர்த்து எழுதியிருக்கிறீர்கள்....
வாழ்த்துக்கள்//
முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி..சின்ன வயசுக் கிறுக்குகள் சுவாரஸ்யம் வாய்ந்தவைதான்..
அன்புடன் அருணா
அப்போ எனக்கு ஒரு எட்டு அல்லது ஒன்பது வயது இருக்கும்.
//
எனக்கு ஓரு டவுட்டு!!!!
அதெப்பிடி ஓரே நேரத்துல ரெண்டு வயசும் இருக்கும்?
:))))))
//அப்போ நாங்க ரொம்பக் கஷ்டத்திலே இருந்தோம்....கொண்டு போகச் சாப்பாடு இல்லாததினாலே ஸ்கூலுக்கு லீவ் போட்டதெல்லாம் உண்டு....
எப்பிடியாவது கஷ்டத்துக்கு விடிவு காலம் வராதா? என்பதுதான் ஒரே எண்ணமாக இருந்தது...
//
அட நம்ப கதைமாதிரி இருக்கு???
NICE
பதிலடிகள் ரொம்பப் பிடிச்சிருக்கு
Post a Comment
வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!
அன்புடன் அருணா