நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Sunday, January 27, 2008

மண்ணுக்குள் புதைந்தும் புதைத்தும் விடாதே...

பனிக்கும் புயலுக்கும்
நெருப்புக்கும் மழைக்கும்
தப்பிய பூவே
பூஜைக்கு இல்லையென்றாலும் பரவாயில்லை...
மண்ணுக்குள் புதைந்து விடாதே....

சூரியனுக்குத் தப்பிய
நிலவே!
இருட்டுக்குத் தப்பிய
நட்சதிரமே!
வானத்தில் ஒரு இடம் இல்லையென்றாலும் பரவாயில்லை..
மண்ணுக்குள் புதைந்து விடாதே....

கண்ணுக்குத் தப்பிய
கனவே!
கனவுக்குத் தப்பிய
காதலே!
மனதில் இடமில்லையென்றாலும் பரவாயில்லை..
என்னை மண்ணுக்குள் புதைத்து விடாதே....

8 comments:

Dreamzz said...

//கண்ணுக்குத் தப்பிய
கனவே!
கனவுக்குத் தப்பிய
காதலே!
மனதில் இடமில்லையென்றாலும் பரவாயில்லை..
என்னை மண்ணுக்குள் புதைத்து விடாதே..../
சூப்பரு.. சான்ஸே இல்லை.. கலக்கலா கவிதை எழுதறீங்க :)

நடத்துங்க!

நிவிஷா..... said...

Hi,
உங்க பதிவு நல்லா இருக்கு. உங்க கவிதை is nice.

Do Visit my page when time permits.
நட்புடன்..
நிவிஷா

Divya said...

ஹாய் அருணா,
கவிதை ரொம்ப ரொமப நல்லாயிருக்கு.

\\கண்ணுக்குத் தப்பிய
கனவே!
கனவுக்குத் தப்பிய
காதலே!\

இந்த லைன்ஸ் ரொம்ப அசத்தல் அருணா!!


[எந்த ப்ளாக்குக்கு போனாலும் Dreamzz யின் முதல் கமெண்ட் இருக்கு???.......கமெண்ட் போடுறது உங்க ஃபுல் டைம் job ஆ? கரெக்டா ஆஜர் ஆகிடுறீங்க dreamzz!]

Anonymous said...

dreamz said...
//சூப்பரு.. சான்ஸே இல்லை.. கலக்கலா கவிதை எழுதறீங்க :)

நடத்துங்க!//

நன்றி! நன்றி!! முதல் பின்னூட்டத்திற்கும் நன்றி!!
அன்புடன் அருணா

Anonymous said...

வருகைக்கும்,வாழ்த்துக்கும் நன்றி...நிவிஷா
Nivisha said....
Do Visit my page when time permits.
கண்டிப்பா வருவோமில்லே!!
அன்புடன் அருணா

Anonymous said...

Divya said...
//\கண்ணுக்குத் தப்பிய
கனவே!
கனவுக்குத் தப்பிய
காதலே!\

இந்த லைன்ஸ் ரொம்ப அசத்தல் அருணா!!//

எனக்கு கூட பிடித்த வரிகள் இவைதான் திவ்யா...
அன்புடன் அருணா

Anonymous said...

Divya said...
[எந்த ப்ளாக்குக்கு போனாலும் Dreamzz யின் முதல் கமெண்ட் இருக்கு???.......கமெண்ட் போடுறது உங்க ஃபுல் டைம் job ஆ? கரெக்டா ஆஜர் ஆகிடுறீங்க dreamzz!]

எனக்குக் கூட இதே கவலைதான் திவ்யா!! பையன் வேலையை ரிசைன் பண்ணிட்டு
கமெண்ட் போட்டுகிட்டு இருக்கானோன்னு பயம்மா இருக்கு!!!!! எப்போ படிக்கிறது???எப்போ எழுதுறது???எப்போ கமெண்ட் எழுதுறது????எப்போ வேலைக்குப் போறது??ம்ம்ம் ஒண்ணும் புரியலை...
அன்புடன் அருணா

பாச மலர் / Paasa Malar said...

நல்ல கவிதை அருணா..

Post a Comment

வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!

அன்புடன் அருணா