வீடு மாற்ற வேண்டும் என்று சொன்னவுடன் மறுபடியும் மலைப்பாக இருந்தது.எதையெல்லாம் எப்படிப் பாதுகாத்துக் கொண்டு போய்ச் சேர்ப்பது என்று மனக்கணக்கு ஆரம்பித்தது.சாமான்களைக் கொஞ்சம் கொஞ்சமாக கொண்டு சேர்ப்பதா??ஒட்டு மொத்தமாக ஒரே நாளிலா?சின்ன ட்ரக்கா???பெரிய லாரியா?ஒரு ட்ரிப்பா?ரெண்டா?மண்டை காய்ந்தது.
மனைவி அதைவிட மண்டையைக் குழப்பினாள்.கறுவேப்பிலைச் செடியை முதலில் காப்பாற்றவேண்டும் என்றாள்.ஸ்கூல் பக்கமா?ஆஃபீஸ் பக்கமா?பஸ் ரூட் எப்பிடி?காய்கறிக்கடை?பக்கத்துலே மளிகைக் கடை இருக்கா?இப்படி ஒவ்வொன்றுக்காக ஒருதடவையாகப் பத்து தடவை புது வீட்டைப் பார்த்து வந்தாள்.நாய்க்குட்டிக்கு இடம் வசதிப் படுமா என்று ஒரு தடவை போய்ப் பார்த்து வந்தாள்.
சரி ஞாயிற்றுக் கிழமையன்னிக்கு மாறிடலாம்னு முடிவு செஞ்சாச்சு.
வீடு முழுக்க சாமான்கள் இறைந்து கிடந்தது.
"அய்யோ இதைக் கீழே போட்டுறாதீங்க...இது வேணும்"
"இது முதல்லெ நான் வாங்கின பூ ஜாடி..வேணும்"
அச்சோ இதை எப்பிடி மறந்தேன்?
"இந்த ரோஜாப்பூச் செடி மைசூர் போயிருக்கும் போது வாங்கியது...வேரோடு எடுத்து வைங்க"
"இந்தக் கடிகாரத்தைக் கீழே போடும்மா ஓடாது..."
"அய்யோ போட்டுடாதீங்க...அது என் சென்டிமென்ட் கடிகாரம்"
இப்பிடி ஓடி ஓடிச் சாமானைச் சேர்த்துக் கொண்டிருந்தாள் சாரதா.
குட்டிம்மா அவள் பங்குக்கு மயிலிறகு,செப்புச் சாமான்களையும், மிட்டாய் சுற்றிய சரிகைத் தாள்களையும்,பொம்மைகளையும் சேர்த்துக் கொண்டிருந்தாள்.
பழையவைகளை நினைவுக் கூட்டிலே சேர்த்து வைப்பதில் குழந்தைகள் பெரியவர்கள் என ஒன்றும் வித்தியாசம் இல்லை போல.எங்களுக்குப் போட்டியாய்ச் சேகரித்துக் கொண்டிருந்தாள் குட்டிம்மா.என் சிறிய வயது சித்திரக் கலை நோட்டையும்,படக்கதை பைண்டிங்க் புத்தகங்களையும் கூட விட மனதில்லை.நான் அதை எடுத்து வைத்துக் கொண்டால் அவள் வீடு,சூரியன் படம் வரைந்த காகிதத்தை எடுத்து வைத்தாள்.
கலைந்து கிடக்கும் பொருட்களில் தேடித் தேடிச் சேகரிக்க,பழைய நினைவுகளில் மூழ்க வீடு மாற்றும் போதுதான் தோதுப் படுகிறது.இதற்கென்று தனியாக நேரமெல்லாம் ஒதுக்க முடிவதில்லை.12-ம் வகுப்பு ஃபேர்வெல் போட்டோ ஒன்று அகப்பட்டது.அதில் என்னைப் பார்த்தவுடன் எனக்கே சிரிப்பாக வந்தது.எவ்வளவு அசடாக இருந்திருக்கிறோமென்று....அந்த முன்நெற்றியில் விழும் சுருள் முடிக்காக காலையில் இருந்து கஷ்டப்பட்டதெல்லாம் நினைவுக்கு வந்தது.கூடவே கொஞ்சம் அந்த நேரத்து உணர்வுகளும் வந்து ரொம்ப சந்தோஷமாக இருந்தது.
ஆச்சு...சாமான் எல்லாம் வண்டியில் ஏற்றியாச்சு.
என்னம்மா பக்கத்து வீட்டுலே,எதிர் வீட்டுலே எல்லாம் சொல்லிட்டு வரலாமா? "
"ஒண்ணும் வேணாம்....ஏற்கெனவே கரிஞ்சுக்கிட்டு இருந்தா...இப்போ பெரிய வீட்டுக்குப் போறோம்னு சொன்னா இன்னும் கரிச்சுக் கொட்டுவா.....சத்தம் போடாமெக் கிளம்புங்க"
குட்டிம்மாவைக் காணோம்....
"எங்கேடி போனே?" அதட்டினாள் சாரதா.
"பாபுகிட்டே,ரகுகிட்டே,விஜிகிட்டே,ராணிகிட்டே அப்புறம் செல்வா ,புஜ்ஜிகிட்டே சொல்லிட்டு வரப் போனேம்மா"என்றபடி குதித்து ஏறினாள் குட்டிம்மா!
பழையவைகளை நினைவுக் கூட்டிலே சேர்த்து வைப்பதில் குழந்தைகளும் பெரியவர்களும் ஒன்றல்ல... வேறு வேறு!
நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-
அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -
என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,
இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.
இனி என்னைப் புதிய உயிராக்கி -
எனக்கேதும் கவலையறச் செய்து -
மதி தன்னை மிகத் தெளிவு செய்து -
என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.
Wednesday, January 5, 2011
Friday, December 31, 2010
இது போதுமா???
வேண்டும் என்னும் போது மழை தூற மழை நிரம்பிய ஒரு மரம்...
வேண்டுவதெல்லாம் தர ஒரு குப்பியிலடைபட்ட ஒரு பூதத்தின் விடுதலை உங்களால்....
வாசிக்க வாசிக்க முடியவே முடியாத ஒரு பிடித்த நாவலாசிரியரின் ஒரு நாவல்....
எண்ணுகிற திசையில் வாழ்வைத் திருப்பிக் கொள்ளும் சவுகரியம்....
மனதைத் துள்ள வைக்கும் மனதுக்கினிய இசை எந்நேரமும் .....
திரும்புகிற பக்கமெல்லாம் ஆத்மார்த்தமான நட்புகள்.......
இது தவிர வேறென்ன வேண்டும் வாழ்த்துக்களாய்!!!
இவையத்தனையையும் பெற்றுக் கொள்ளுங்கள் இந்தப் புது வருஷத்திலும்...அடுத்தடுத்து வரும் வருடங்களிலும்!!!
படம்:Google:Thanks!
வேண்டுவதெல்லாம் தர ஒரு குப்பியிலடைபட்ட ஒரு பூதத்தின் விடுதலை உங்களால்....
வாசிக்க வாசிக்க முடியவே முடியாத ஒரு பிடித்த நாவலாசிரியரின் ஒரு நாவல்....
எண்ணுகிற திசையில் வாழ்வைத் திருப்பிக் கொள்ளும் சவுகரியம்....
மனதைத் துள்ள வைக்கும் மனதுக்கினிய இசை எந்நேரமும் .....
திரும்புகிற பக்கமெல்லாம் ஆத்மார்த்தமான நட்புகள்.......
இது தவிர வேறென்ன வேண்டும் வாழ்த்துக்களாய்!!!
இவையத்தனையையும் பெற்றுக் கொள்ளுங்கள் இந்தப் புது வருஷத்திலும்...அடுத்தடுத்து வரும் வருடங்களிலும்!!!
படம்:Google:Thanks!
Labels:
வாழ்த்து
Monday, December 27, 2010
சும்மாயிருப்பதுவும் சுகம்தன்னே....முடிந்தால்!
சும்மாவாச்சுக்கும் சும்மாயிருப்பதைத்
தேர்ந்தெடுத்திருக்கிறேன் இன்று...
மனதொன்றி எதிலும்
மனம் லயிக்கவில்லை
எப்போதும் கைகொடுக்கும்
இசையும்,புத்தகமும்,
தேனீரும்,மழையும் கூடக்
கைவிட்டு விட்டது....
சும்மாயிருக்கும் போது
வீடு அப்படியே சுருட்டி
உள்ளிழுத்துக் கொண்டது...
கொடிக் கயிறு துணிமணிகள்
கழுத்தை நெறித்தது...
ஒழுங்கற்ற அலமாரிகள் என்னையும்
உள்ளிழுத்து அடைத்துக் கொண்டது....
குப்புறப் படுத்திருந்த புத்தகங்களும்
பத்திரிகைகளும், தரை விரிப்பும்
கைப்பிடித்துக் கொண்டன...
எத்தனை கவனமாயிருந்தாலும்
சும்மாயிருக்க முடியாமல்
சிறகசைத்துக் கொண்டேயிருக்கும்
வண்ணத்துப் பூச்சியைப்
பார்த்துக் கொண்டே
கொஞ்சம் எழுத்துக்களைச்
சேர்த்தும் பிரித்தும்...
கொஞ்சம் வார்த்தைகளைச்
சேர்த்தும் பிரித்தும்...
சும்மாயிருக்கவும் முடியாமல்
தன்னையே உருவாக்கிக்
கொண்டது இந்தக் கவிதை ...
தேர்ந்தெடுத்திருக்கிறேன் இன்று...
மனதொன்றி எதிலும்
மனம் லயிக்கவில்லை
எப்போதும் கைகொடுக்கும்
இசையும்,புத்தகமும்,
தேனீரும்,மழையும் கூடக்
கைவிட்டு விட்டது....
சும்மாயிருக்கும் போது
வீடு அப்படியே சுருட்டி
உள்ளிழுத்துக் கொண்டது...
கொடிக் கயிறு துணிமணிகள்
கழுத்தை நெறித்தது...
ஒழுங்கற்ற அலமாரிகள் என்னையும்
உள்ளிழுத்து அடைத்துக் கொண்டது....
குப்புறப் படுத்திருந்த புத்தகங்களும்
பத்திரிகைகளும், தரை விரிப்பும்
கைப்பிடித்துக் கொண்டன...
எத்தனை கவனமாயிருந்தாலும்
சும்மாயிருக்க முடியாமல்
சிறகசைத்துக் கொண்டேயிருக்கும்
வண்ணத்துப் பூச்சியைப்
பார்த்துக் கொண்டே
கொஞ்சம் எழுத்துக்களைச்
சேர்த்தும் பிரித்தும்...
கொஞ்சம் வார்த்தைகளைச்
சேர்த்தும் பிரித்தும்...
சும்மாயிருக்கவும் முடியாமல்
தன்னையே உருவாக்கிக்
கொண்டது இந்தக் கவிதை ...
Labels:
கவிதை
Friday, December 17, 2010
நானும்......!
ஆற்றோரம் ஒதுங்கிக் கிடக்கும் இறந்த மீனைப்
பார்த்தும் பாராதது போல் .....
கைகோர்த்து நடக்கும் போதும்.....
செடியிலிருந்து உதிர்ந்து கிடக்கும்
கவிழ் பூக்களின் மேல் பாதம்
பதிக்க நேரும் போதும்....
மரத்தினடியில் கசக்கிப் போட்ட காகிதம்
ஒரு மரம் தன் வரலாறைக்
கூறும் போதும்
கிறீச்சிடும் கதவு போடும்
கூப்பாட்டைக் கேட்டும் கேட்காமலும்
எட்டி உதைத்து மூடும் போதும்....
கண்ணாடிக் குடுவைக்குள்
முட்டி மோதும் மீனின்
குட்டி வாய்க்குத் தேவை
உணவெனத் தூவும் போதும்....
இருட்டுக்கு ஒளியேற்றும்
மெழுகுவர்த்தியின் சோகம் அறியாமல்
விரல் நீட்டி விளையாடும் போதும்....
நீங்களும் என்றேனும் எங்கேனும்
ஒரு சோகப் பாடலை மனதுள்
ஒரு நாள் பாடியிருக்கலாம்....
நானும்......
பார்த்தும் பாராதது போல் .....
கைகோர்த்து நடக்கும் போதும்.....
செடியிலிருந்து உதிர்ந்து கிடக்கும்
கவிழ் பூக்களின் மேல் பாதம்
பதிக்க நேரும் போதும்....
மரத்தினடியில் கசக்கிப் போட்ட காகிதம்
ஒரு மரம் தன் வரலாறைக்
கூறும் போதும்
கிறீச்சிடும் கதவு போடும்
கூப்பாட்டைக் கேட்டும் கேட்காமலும்
எட்டி உதைத்து மூடும் போதும்....
கண்ணாடிக் குடுவைக்குள்
முட்டி மோதும் மீனின்
குட்டி வாய்க்குத் தேவை
உணவெனத் தூவும் போதும்....
இருட்டுக்கு ஒளியேற்றும்
மெழுகுவர்த்தியின் சோகம் அறியாமல்
விரல் நீட்டி விளையாடும் போதும்....
நீங்களும் என்றேனும் எங்கேனும்
ஒரு சோகப் பாடலை மனதுள்
ஒரு நாள் பாடியிருக்கலாம்....
நானும்......
Labels:
கவிதை
Subscribe to:
Posts (Atom)
