
அவன் செத்துவிட்டான்...ரெண்டு எமதூதர்கள் வந்தாங்க.....கையோட அவனைக் கூட்டிக் கொண்டு போனாங்க...எப்போதுமே உலகத்தைவிட்டுக் கிளம்புற நேரம் முரண்டு பிடிக்கும் இறந்தவர்களைப் போலல்லாமல் அவன் சிரித்துக் கொண்டெ கிளம்பினான்....
எமதூதர்களுக்கு வித்தியாசமாகத் தெரிந்ததால் "என்னப்பா உனக்கு வருத்தமா இல்லையான்னு" கேட்டார்கள்....
அதுக்கு அவன் சொன்னான்"இல்லை..."என் உயிரின் மேலான அம்மாவைப் பார்க்கப் போகிறேன் அதனால் சந்தோஷமாகவே இருக்கிறேன்" என்றான்
அவனை சொர்க்கத்திற்குக் கூட்டிக் கொண்டு போனார்கள்...அங்கே தேடோ தேடென்று தேடினான்.அவன் அம்மாவைக் காணவில்லை.....அவன் கடவுளைக் கூப்பிட்டு "என் அம்மா எங்கே????" எனக் கேட்டான்.
அதற்கு கடவுள் "உங்க அம்மா நரகத்தில் இருக்கிறார்கள்"
என்றார்....................
அவனோ "ப்ளீஸ் என் அம்மா ரொம்ப நல்லவங்க...அவங்களையும் சொர்க்கத்திற்கு அனுப்புங்க..அப்படியில்லைன்னா என்னை நரகத்துக்கு அனுப்பிடுங்க."அப்படின்னு அழுதான்
அதற்குக் கடவுள் உங்க அம்மாவுக்கு சொர்க்கத்திற்கு வரத் தகுதியில்லை.....உனக்கு நரகத்துக்குப் போகிற தகுதியில்லை" அப்படீன்னு சொன்னார்...........
அவன் ரொம்பத் தொல்லை கொடுக்கவும்...கடவுள் சொன்னார்" சரி ஒரு தடவை உங்க அம்மாவுக்கு ஒரு சான்ஸ் கொடுக்கிறேன்....இந்த நூலேணியைப் போடுகிறேன்....உங்க அம்மா இதைப் பிடித்து மேலேறி சொர்க்கத்துக்கு வந்துவிடுவார்கள் " என்றார்.
கடவுள் நூலேணியை எடுத்து வீசினார்.....
"அட அம்மா"....அவனுக்கு சந்தோஷத்தில் அழுகையாய் வந்தது...
அவன் கத்தினான்.."பார்த்தும்மா....சீக்கிரமா வாம்மா"
அவன் அம்மாவும் சந்தோஷமாக அதைப் பிடித்து ஏறினாள்...அம்மாவுக்கும் சொர்க்கத்துக்கும் இரண்டடி தூரம்தான் இருந்தது........
அம்மா திரும்பிப் பார்த்தாள்....இன்னுமொரு பெண்மணியும் நூலேணியைப் பிடித்து ஏறிக் கொண்டிருந்தாள்....அம்மா இங்கிருந்தே கேட்டாள்......."நீங்க ஏன் இதில் ஏறி வர்றீங்க?"
அதுக்கு அவங்க "என் மகனும் அங்கே சொர்க்கத்துலேதான் இருக்கான்.....நானும் அங்கே வந்துடறேன்" என்றார்கள்..
அம்மா மெதுவாகத் திரும்பி "என் மகன் எனக்கு அனுப்பிய ஏணியில் நீங்க எப்பிடி வரலாம்?????" என்றவாறு அந்தப் பெண்மணியைக் காலால் எட்டி உதைத்துத் தள்ளி விட்டாள்.....
கடவுள் அவனைப் பார்த்துப் புன்னகைத்தார்........" உங்க அம்மா ஏன் நரகத்திலிருக்கிறார் என்று புரிகிறதா? எனபது போலிருந்தது....கடவுள் நூலேணியை உருவிக் கொண்டார்....
டிஸ்கி:1.சொந்தமா எழுதினதில்லீங்கோ......
டிஸ்கி:2எப்பவோ சின்ன வயசில எங்கேயோ கேட்ட கதைங்க....