நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Monday, July 19, 2010

1 for sorrow, 2 for joy!!!

1 for sorrow, 2 for joy, 3 for a girl, 4 for a boy, 5 for silver, 6 for gold,7 for secret never to be told,8 is a wish and 9 for a letter 10 is a bird you must not miss.....
                                                             குட்டி மைனா பார்த்திருப்பீங்களே. மஞ்சள் கண்களோடு..........அதை வைத்துத்தான் இந்தப் பாட்டு. பள்ளிப் பருவத்தில் பள்ளிக்குப் போகும் போது பார்க்கும் மைனாக்களின் எண்ணிக்கையை வைத்து ஆருடம் சொல்லும் பாடல்.அநேகமாக இரண்டு மைனாக்கள் சேர்ந்து பார்த்து விடமுடியும்....எப்போ பார்த்தாலும் ஹையா 2 for joy! அப்படீன்னு குதித்துக் கொண்டு போவதுண்டு!அது எப்படி இப்போ வரைக்கும் தொடருதுன்னு தெரியாது.இப்போ மைனா பார்க்க முடிவதில்லையென்பதுதான் வருத்தம்.
                        எங்கே போச்சுதுங்க இந்த குருவி மைனாக்களெல்லாம்?கூடு விட்டு விட்டுப் போகும் போதும்,நாடு விட்டுப் போகும் போதும் நினைவில் வைத்துக் கொள்வதற்காய் எதை எடுத்துச் சென்றிருக்கும்?இது என் கூடு என்பதற்காய் கூட்டில் எதை விட்டுச் சென்றிருக்கும்???அவைகளுக்கும் தாய் நாடு என்ற உணர்வெல்லாம் இருக்குமோ??வேற்றிடம் போய்க் கூடுகட்ட அவைகளும் கஷ்டப் பட்டிருக்குமோ?அல்லது கூடுகளில் இல்லாமல் கூட்டமாக எங்கேனும் அடைந்து கிடக்கின்றனவோ??அவைகளைக் கூடு கட்டி வாழ விடாமல் ஓட ஓடப் பறக்கத் துரத்தி அடித்து நம் வீட்டைக் கட்டிக் கொள்கிறோமே என்ற குற்ற உணர்ச்சி இல்லையே???ஏன்?
              தானியம் போட்ட ஜன்னல் வெளி இப்போதெல்லாம் தானியங்களும் தண்ணீர்க் கிண்ணங்களும் தொடப் படாமல்இருப்பதன் காரணம் புரிந்தாலும் கண்டு கொள்ளாமல் தானே இருக்கிறோம்.இந்தப் பூமியின் பறவை தேசம் இதுவென்று கொஞ்சத்தையாவது வரையறுத்துக் கொடுத்து வாழ விடுவோம்.மின்சாரக்கம்பிகளும்,ட்ரன்ஸ்ஃபார்ம்களும்,மின்விசிறிகளும்,கைத் தொலைபேசிகளும் இல்லாத உலகம் ஒன்றைச் சிருஷ்டித்துக் கொடுத்து விடலாமே!பிரபஞ்சத்தின் எங்கோ ஒரு மூலையில் அவைகள் சிறகடித்து ஆனந்தமாகப் பறக்க விட்டு  விடுவோமே.                            

                           காலையில் என் அறைக்குள் மின்சாரவிசிறியில்  அடிபட்டு விழுந்து கிடந்த ஒற்றைக்குருவி நொண்டி நொண்டி நடந்து கேட்டது.one for sorrow தானே ....???

23 comments:

+Ve Anthony Muthu said...

//மின்சாரவிசிறியில் அடிபட்டு விழுந்து கிடந்த ஒற்றைக்குருவி நொண்டி நொண்டி நடந்து கேட்டது.one for sorrow தானே ....???//

மனம் நெகிழ வைக்கும் வரிகள்.

Anonymous said...

Me the First..
உங்களுக்கு இரண்டு பூங்கொத்துக்கள்..

Anonymous said...

Me the first illa..
வட போச்சே :(

Thamira said...

எத்தனையோ நெகிழ்வுகள் நம்மைச்சுற்றிலும்.

priya.r said...

ஒரு மைனா மைனா குருவி மனசார பாடுது
மாயங்கள் காட்டுது ஹூய் ஹூய் என்ற பாடல் தான் முதலில் நினைவுக்கு வந்தது .
அப்புறம் தான் பதிவில் உள்ள வருத்தத்தையும் ,ஆதங்கத்தையும் புரிந்து கொள்ள முடிந்தது .
எங்கள் ஊரான மேட்டூர் அணையை சுற்றி உள்ள பகுதிகளில் மைனாக்கள் நிறைய பார்த்து ரசிக்க முடிகிறது என்பது தான் சற்று ஆறுதலான விசயங்க அருணா ! மீண்டும் உங்களுக்கு பூங்கொத்து ;இந்த தடவை மைனாக்களிடம் கொடுத்து அனுப்பட்டுமா !

அன்புடன் அருணா said...

நன்றி+Ve Anthony Muthu !
நன்றி Balaji saravana !

அன்புடன் அருணா said...

நன்றி ஆதிமூலகிருஷ்ணன் !
நன்றி சந்தனமுல்லை !

Deepa said...

// கூடு கட்டி வாழ விடாமல் ஓட ஓடப் பறக்கத் துரத்தி அடித்து நம் வீட்டைக் கட்டிக் கொள்கிறோமே என்ற குற்ற உணர்ச்சி இல்லையே???ஏன்? ??
:-(

VELU.G said...

//அது எப்படி இப்போ வரைக்கும் தொடருதுன்னு தெரியாது.இப்போ மைனா பார்க்க முடிவதில்லையென்பதுதான் வருத்தம்.
//

ரொம்ப வருத்தமான விஷயம் குருவி மைனா இவையெல்லாம் இருக்கிறதா என்றே தெரியவில்லை

வார்த்தை said...

அப்டியே ஒரு மைனா படத்தையும் பதிவுல போட்டிருக்கலாமே. அடுத்த தலைமுறை, "மைனான்னா ?"னு கேள்வி கேக்குற நெலமைல தான இருக்கோம்.

:(

http://vaarththai.wordpress.com

அன்புடன் அருணா said...

priya.r said...
/ மீண்டும் உங்களுக்கு பூங்கொத்து ;இந்த தடவை மைனாக்களிடம் கொடுத்து அனுப்பட்டுமா ! /
பூங்கொத்து அதுவும் மைனா மூலம்!!!கண்டிப்பா கொடுத்தனுப்புங்க!

அன்புடன் அருணா said...

நன்றி!Deepa
நன்றி!VELU.G

அன்புடன் அருணா said...

நன்றி வார்த்தை !!

புலவன் புலிகேசி said...

உண்மையில் நெகிழ வைத்து விட்டீர்கள்

Anonymous said...

மனிதர்களிடத்தில் பறவையையும்,பறவைகள் இடத்தில் மனிதனையும் வைத்து யோசிக்க வைக்கிற பதிவு இது.
கோடையில் ஒரு மண்பாண்டத்தில் தண்ணீர் வைக்க இப்போது கூடுதல் பறவைகளின் சத்தம் அருகில் கேட்கிறது.விரட்டிய குற்றம் நம்மை வந்து சேரும்.
ஒரே ஒரு பூ.இதப்படிச்சாப்றம் ரொம்பப் பறிக்க மனசில்லை.

skaamaraj

வினையூக்கி said...

// one for sorrow தானே ....???
//

ம்ம்ம்

அன்புடன் அருணா said...

நன்றி புலிகேசி!

வேலன். said...

சகோதரிக்கு.

கல்வி சம்பந்தமாக நிறைய சாப்ட்வேர்கள் உள்ளன.தங்கள் இ-மெயில் முகவரி தரவும் அனுப்பி வைக்கின்றேன்.எனது இ-மெயில் முகவரி vazthalamvanga@gmail.com..

நன்றி..
வாழ்க வளமுடன்,
வேலன்.

அன்புடன் அருணா said...

skaamaraj said..
/விரட்டிய குற்றம் நம்மை வந்து சேரும்./
உண்மைதான் காமராஜ்!

அன்புடன் அருணா said...

Thanx vinayookki!

மணிவேலன் said...

/மின்சாரவிசிறியில் அடிபட்டு விழுந்து கிடந்த ஒற்றைக்குருவி நொண்டி நொண்டி நடந்து கேட்டது.one for sorrow தானே ....???/

:-(
:-(

அன்புடன் அருணா said...

வேலன். said...
/சகோதரிக்கு.
கல்வி சம்பந்தமாக நிறைய சாப்ட்வேர்கள் உள்ளன.தங்கள் இ-மெயில் முகவரி தரவும் அனுப்பி வைக்கின்றேன்./
ரொம்ப நன்றி வேலன்!அனுப்பி வைங்க!

ஆ.ஞானசேகரன் said...

//காலையில் என் அறைக்குள் மின்சாரவிசிறியில் அடிபட்டு விழுந்து கிடந்த ஒற்றைக்குருவி நொண்டி நொண்டி நடந்து கேட்டது.one for sorrow தானே ....???//


ம்ம்ம் ச்ச்ச்ச்..... என்ன சொல்ல

Post a Comment

வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!

அன்புடன் அருணா