நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Wednesday, May 12, 2010

நானும் என் கடவுள்களும்!

சின்ன வயசுல கடவுள் நம்பிக்கை ஒருவித பயத்தோடவே இருந்தது.
அப்பிடி செய்யாதே... இப்பிடி செய்யக் கூடாது, சாமி தண்டிக்கும் சாமி கண்ணைக் குத்தும் .....இந்த வார்த்தைகளில் இருந்து நானும் தப்பிக்கவில்லை.

அப்புறம் என் ஷெல்ப் சுவரில் என் இஷ்ட தெய்வங்கள் அவ்வப்போது மாறுவதுண்டு.

மாற்றங்களுக்குப் பெரிய Strategy எதுவும் இருந்ததில்லை.

துணைவன் படம் பார்த்த மறுநாள் முருகன் படமும்,
திருமால் பெருமை பார்த்த பின் பெருமாள் படமும்,
சபரிமலை ஐயப்பன் பார்த்தபின் ஐயப்பன் படமும்,
ஜீஸஸ் பார்த்த பின் கர்த்தர் படமும்,
அன்னை வேளாங்கன்னி பார்த்த பின் வேளாங்கன்னியுமாக...
மாறிய படியே இருந்திருக்கிறது என் இஷ்ட தெய்வங்களின் வரிசை.

பின் சில காலங்களுக்கு சாமியிடம் வெறும் வியாபாரம் மட்டுமே நடத்தியிருக்கிறேன்.

80% மேல மார்க் தந்து விடு உனக்கு, ஒரு மாலை,
காணாமல் போன பேனாவைக் கண்டுபிடித்துக் கொடு, உனக்கு ஒரு ரூபாய்,
லேட்டா வீட்டுக்குப் போறதுக்கு அம்மா திட்டக் கூடாது, ஒரு விளக்கு.
இந்த ரேஞ்ச்லேதான் இருக்கும்.

இப்போ கொஞ்சம் மனது விரிந்து எண்ணங்கள் தெளிந்து கடவுள் உண்டு ...
அதற்கு கெட்டது செய்யவே தெரியாதுன்னும் நல்லது மட்டும்தான் செய்யும்னு தெளிவு வந்துருக்கு....

ரொம்ப எளிமையான வரிகளில் சொல்லணும்னா...
எனக்குக் கடவுள் உண்டு ஆனால் அதற்கு மதமும் பெயரும் கிடையாது! (இது என் நட்பின் பேட்டியிலிருந்து சுட்டது)

பின்னே நமக்கு நடக்கிற கெட்டதற்கெல்லாம் காரணம்...???

அட நாம் தாங்க!!!
அதுக்குப் போய் வீணாக் கடவுள் மேல பழியைப் போட்டுக்கிட்டு!!!!
இது ஒரு மீள் பதிவு...
படம் இணையத்திலிருந்து....

24 comments:

பத்மா said...

good madam

Chitra said...

simple and clear. Very nice. :-)

dheva said...

//துணைவன் படம் பார்த்த மறுநாள் முருகன் படமும்,
திருமால் பெருமை பார்த்த பின் பெருமாள் படமும்,
சபரிமலை ஐயப்பன் பார்த்தபின் ஐயப்பன் படமும்,
ஜீஸஸ் பார்த்த பின் கர்த்தர் படமும்,
அன்னை வேளாங்கன்னி பார்த்த பின் வேளாங்கன்னியுமாக...
மாறிய படியே இருந்திருக்கிறது என் இஷ்ட தெய்வங்களின் வரிசை.//


நல்ல வேள..... ஜெகன் மோகினி பாத்துட்டு ஏதும் முடிவு பண்ணாம இருந்தீங்களே.....அதுவரைக்கும் சந்தோசமுங்க....!


மகிழ்ச்சியான பதிவு அருணா...வாழ்த்துக்கள்!

kamaraj said...

எனக்கும் கடவுள் உண்டு.
அதற்கு உருவம் உண்டு.அதற்குமேலும் அவர்களோடு எனக்கு உறவுமுறையும் உண்டு.பெற்றோர்,நட்பு,தோழமை இப்படி.

ஹுஸைனம்மா said...

படமே உங்கள் மனதைப் படம்பிடித்துக் காட்டுகிறது!!

பதிவைவிட படத்தை மிகவும் ரசித்தேன் டீச்சர்!!

கமலேஷ் said...

நல்ல ரசிக்கும் படியான பதிவு...வாழ்த்துக்கள்...

அன்புடன் அருணா said...

நன்றி padma !
நன்றி Chitra !

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

Short and sweet Aruna.

பா.ராஜாராம் said...

நல்லா எழுதியிருக்கீங்க டீச்சர்!

//kamaraj said...
எனக்கும் கடவுள் உண்டு.
அதற்கு உருவம் உண்டு.அதற்குமேலும் அவர்களோடு எனக்கு உறவுமுறையும் உண்டு.பெற்றோர்,நட்பு,தோழமை இப்படி.//

அருமை தோழா!

அன்புடன் அருணா said...

நன்றி dheva
kamaraj said...
/எனக்கும் கடவுள் உண்டு.
அதற்கு உருவம் உண்டு.அதற்குமேலும் அவர்களோடு எனக்கு உறவுமுறையும் உண்டு.பெற்றோர்,நட்பு,தோழமை இப்படி./
ஆஹா அருமை காமராஜ்!

நேசமித்ரன் said...

நல்லா எழுதியிருக்கீங்க

தாராபுரத்தான் said...

அழகா சொல்லி இருக்கிறாய்ம்மா..

Thamira said...

உங்க கான்செப்ட் அழகு. (தேவாவின் கமெண்ட்.. கலக்ஸ் :-))

அன்புடன் அருணா said...

நன்றி ஹுஸைனம்மா !
நன்றி கமலேஷ் !

அம்பிகா said...

உங்க கடவுள்கள் ரொம்ப பிடிச்சிருக்கு.
படமும் அழகு.

Priya said...

நன்றாக சொல்லி இருக்கிங்க..

Anonymous said...

அல்லா
என்னை காப்பாற்று


நன்றி
மீண்டும் வருகிறேன்
வருத்தபடாத வாசிப்போர் சங்க
நிர்வாக தளபதி
காம்ப்ளான் சூர்யா

அன்புடன் அருணா said...

நன்றி!ஜெஸ்வந்தி
நன்றி!பா.ராஜாராம்

ராமலக்ஷ்மி said...

என்ன அழகாய் பகிர்ந்து கொண்டுள்ளீர்கள். மீள் பதிவுக்கு நன்றி.

ஆகா, படமும் மிக அருமை அருணா.

நசரேயன் said...

நல்லா இருக்கு

காற்றில் எந்தன் கீதம் said...

எனக்குக் கடவுள் உண்டு ஆனால் அதற்கு மதமும் பெயரும் கிடையாது!//
நானும் இந்த கட்சி தான் டீச்சர்
பின்னே நமக்கு நடக்கிற கெட்டதற்கெல்லாம் காரணம்...???

அட நாம் தாங்க!!!
அதுக்குப் போய் வீணாக் கடவுள் மேல பழியைப் போட்டுக்கிட்டு!!!!//
:)))))))))))

அன்புடன் அருணா said...

நேசமித்ரன்
தாராபுரத்தான்
ஆதிமூலகிருஷ்ணன்
ஷர்புதீன்
அனைவருக்கும் நன்றி!

அன்புடன் அருணா said...

நன்றி அம்பிகா
நன்றி Priya
complan surya said...
/வருத்தபடாத வாசிப்போர் சங்க
நிர்வாக தளபதி
காம்ப்ளான் சூர்யா /
இதெப்போதிருந்து?????

வைகறை நிலா said...

very nice article..

Post a Comment

வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!

அன்புடன் அருணா